என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனையை நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்தியாவில் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் விலை ரூ. 69,999 என துவங்குகிறது.

    புதிய பிளாக்ஷிப் சீரிஸ் வெளியீட்டை தொடர்ந்து கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி எஸ்20 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனையை சாம்சங் அவசர அவசரமாக நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. 

     கேலக்ஸி எஸ்20 பிளஸ்

    கேலக்ஸி எஸ்20, எஸ்20 பிளஸ் மற்றும் எஸ்20 அல்ட்ரா போன்ற ஸ்மார்ட்போன் மாடல்கள் விற்று தீர்ந்துவிட்டதாக சாம்சங் இந்தியா, ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் சீனாவுக்கான அதிகாரப்பூர்வ வலைதளங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.

    பழைய கேலக்ஸி எஸ் சீரிஸ் மாடல்களை குறைந்த விலையில் வாங்க திட்டமிட்டு இருந்தவர்களுக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரப்பூர்வ தளத்தில் விற்று தீர்ந்த போதும், மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் புதுப்பிக்கப்பட்ட கேலக்ஸி எஸ்20 சீரிஸ் யூனிட்களை விற்பனை செய்யலாம்.

    தற்சமயம் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கேலக்ஸி எஸ்20 எப்இ மாடல் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு சில மாதங்களே நிறைவுற்று இருப்பதால் இதன் விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

    வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    வாட்ஸ்அப் செயலியில் புதிய பிரைவசி பாலிசி மாற்றம் குறித்த அறிவிப்பு அதன் பயனர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை பெற்றது. பலர் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக சிக்னல், டெலிகிராம் என பல்வேறு செயலிகளை பயன்படுத்த போவதாக தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் வாட்ஸ்அப் பயனர்களில் வெறும் 18 சதவீதம் பேர் மட்டுமே செயலியை தொடர்ந்து பயன்படுத்த இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். இந்தியா முழுக்க 244 மாவட்டங்களில் சுமார் 24 ஆயிரம் பேரிடம் வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி மாற்றம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டது.

     கோப்புப்படம்

    ஆய்வில் பங்கேற்று கேள்விகளுக்கு பதில் அளித்தவர்களில் சுமார் 18 சதவீதம் பேர் தொடர்ந்து வாட்ஸ்அப் பயன்படுத்த விரும்புவதாகவும், தங்களின் தரவுகளை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ள அனுமதி அளிப்பதாகவும் தெரிவித்தனர். 26 சதவீதம் பேர் வாட்ஸ்அப் பயன்பாட்டை குறைத்து மற்ற செயலிகளை பயன்படுத்த இருப்பதாக தெரிவித்தனர்.

    வாட்ஸ்அப் சேவைக்கு போட்டியாக விளங்கும் டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகளின் பயனர் எண்ணிக்கை ஜனவரி 6 முதல் ஜனவரி 10 ஆம் தேதிக்குள் மட்டும் 40 லட்சம் வரை அதிகரித்து இருக்கிறது. இதே காலக்கட்டத்தில் வாட்ஸ்அப் டவுன்லோட் எண்ணிக்கை 35 சதவீதம் சரிவடைந்து உள்ளது.
    போக்கோ நிறுவனத்தின் எக்ஸ்3 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் ரூ. 2 ஆயிரம் குறைக்கப்படுகிறது.


    இந்திய சந்தையில் போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்படுகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனை ஜனவரி 20 ஆம் தேதி துவங்கி ஜனவரி 24 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. எனினும், ப்ளிப்கார்ட் பிளஸ் பயனர்கள் ஜனவரி 19 ஆம் தேதி முதல் இந்த சலுகையை பெற முடியும். 

     போக்கோ எக்ஸ்3

    போக்கோ எக்ஸ்3 புதிய விலை விவரம்

    போக்கோ எக்ஸ்3 (6 ஜிபி + 64 ஜிபி) மாடல் ரூ. 14,999
    போக்கோ எக்ஸ்3 (6 ஜிபி + 128 ஜிபி) மாடல் ரூ. 15,999
    போக்கோ எக்ஸ்3 (8 ஜிபி + 128 ஜிபி) மாடல் ரூ. 17,999

    முன்னதாக போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ. 16,999 எனும் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. 

    சிறப்பம்சங்களை பொருத்தவரை போக்கோ எக்ஸ்3 மாடலில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், லிக்விட் கூலிங் பிளஸ் தொழில்நுட்பம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12 வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
    ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன் பற்றிய முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி போல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யுஐ 3.0 அப்டேட் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இது சில பகுதிகளில் மட்டுமே வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    தற்போதைய தகவல்களின் படி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் கேலக்ஸி போல்டு எல்டிஇ வேரியண்ட்டிற்கும் ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் கேலக்ஸி போல்டு 5ஜி வேரியண்ட்டிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

     கேலக்ஸி போல்டு

    ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யுஐ 3.0 சாட் பபுள்கள், மேம்பட்ட யூசர் இன்டர்பேஸ், உரையாடல்களுக்கென தனி பகுதி என பல்வேறு புதிய அம்சங்களை வழங்குகிறது. முன்னதாக கேலக்ஸி இசட் போல்டு 2, கேலக்ஸி எஸ்20 சீரிஸ், கேலக்ஸி இசட் ப்ளிப் மற்றும் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்பட்டது.

    சாம்சங் தனது கேலக்ஸி போல்டு ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 2019 வாக்கில் ஆண்ட்ராய்டு 9 ஒஎஸ் உடன் அறிமுகம் செய்தது. பின் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்பட்டது. இந்திய பயனர்களுக்கு புதிய ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    ஒப்போ நிறுவனத்தின் என்கோ எக்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    ஒப்போ நிறுவனம் தனது ரெனோ5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுடன் என்கோ எக்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் கஸ்டம் அகௌஸ்டிக் டிசைன், மேம்பட்ட மென்பொருள் கொண்டுள்ளது.

    இந்த இயர்பட்ஸ் டூயல் மைக்ரோபோன் டிசைன் கொண்டிருக்கிறது. இது நாய்ஸ் கேன்சலிங் வசதியை நான்குவித மோட்களில் வழங்குகிறது. இதை கொண்டு பயனர்கள் இருக்கும் சூழலுக்கு ஏற்றவாரு இசையின் ஒலியை செட் செய்து கொள்ள முடியும். இந்த இயர்பட்ஸ் அனைத்து சூழல்களிலும் துல்லியமான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

     ஒப்போ என்கோ எக்ஸ்

    மேலும் இந்த இயர்பட்களில் ஒப்போ DBEE 3.0 சவுண்ட் சிஸ்டம் மற்றும் LHDC போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை சீரான ஆடியோ அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டிருக்கின்றன. 

    இவைதவிர ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி, டச் கண்ட்ரோல் வசதி, டூயல் மைக்ரோபோன்,  47m ப்ளூடூத் லோ-லேடென்சி டூயல் டிரான்ஸ்மிஷன், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியும்,  4 மணி நேர பேக்கப் வழங்கும் 44 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 மணி நேர பேக்கப் வழங்கும் வகையில் சார்ஜிங் கேசில் 535 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஒப்போ என்கோ எக்ஸ் இயர்பட்ஸ் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ரியல்மி நிறுவனத்தின் சி12 ஸ்மார்ட்போன் புது வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ரியல்மி நிறுவனம் தனது சி12 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம், 32 ஜிபி மெமரியுடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 3 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ கொண்டுள்ளது.

     ரியல்மி சி12

    இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மோனோ கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    ரியல்மி சி12 ஸ்மார்ட்போன் பவர் புளூ மற்றும் பவர் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரியல்மி சி12 புது வேரியண்ட் விலை ரூ. 9999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய வேரியண்ட்டை விட ரூ. 1000 அதிகம் ஆகும்.
    ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    சாம்சங், எல்ஜி மற்றும் பல்வேறு இதர ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்த ஆண்டு அதிகளவு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஐபோனினை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

    தற்சமயம் ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் மாடல்களுக்கான ப்ரோடோடைப்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதற்கென மடிக்கக்கூடிய டிஸ்ப்ளேக்களை வாங்கி, நீண்ட காலத்திற்கு அவை எவ்வாறு இருக்கும் என்பதை ஆய்வு செய்து வருவதாக தெரிகிறது.

     சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப்

    இந்த டிஸ்ப்ளேக்கள் சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் மாடலில் உள்ளதை போன்று கண்களுக்கு தெரியாத ஹின்ஜ் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆப்பிள் இதுவரை முழுமையான மடிக்கக்கூடிய ஐபோன் ப்ரோடோடைப் மாடலை உருவாக்கவில்லை. 

    ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய சாதனங்களை சோதனை செய்து வருவதால், இது விற்பனைக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம். மேலும் இந்த திட்டத்தை ஆப்பிள் எதிர்காலத்தில் ரத்து செய்யவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
    மீடியாடெக் டிமென்சிட்டி 1000 பிளஸ், 64எம்பி குவாட் கேமரா கொண்ட ஒப்போ ரெனோ5 ப்ரோ 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது.


    ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது ரெனோ5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் OLED ஸ்கிரீன், 32 எம்பி செல்பி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், மீடியாடெக் டிமென்சிட்டி 1000 பிளஸ் பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி மோனோ கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர்ஒஎஸ் 11.1, 4350 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் சூப்பர்வூக் 2.0 பிளாஷ் சார்ஜ் வழங்கப்பட்டு இருக்கிறது.

     ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி

    ஒப்போ ரெனோ5 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள்

    - 6.55 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் OLED HDR+ டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1000 பிளஸ் பிராசஸர்
    - 8 ஜிபி ரேம்
    - 128 ஜிபி மெமரி
    - 64 எம்பி பிரைமரி கேமரா
    - 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
    - 2 எம்பி மேக்ரோ கேமரா
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 32 எம்பி செல்பி கேமரா
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 4350 எம்ஏஹெச் பேட்டரி
    - 65 வாட் பாஸ்ட் சார்ஜிங்
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
    - யுஎஸ்பி டைப் சி

    ஒப்போ ரெனோ5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆஸ்ட்ரல் புளூ மற்றும் ஸ்டேரி பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 35,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 
    அதிக பயனர்களால் நீண்ட நேரம் முடங்கியிருந்த சிக்னல் ஆப் பல்வேறு சிக்கல்களுடன் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.


    சிக்னல் செயலி பல மணி இடையூறுக்கு பின் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. வாட்ஸ்அப் செயலியின் புது அறிவிப்பு காரணமாக பல லட்சம் பயனர்கள் திடீரென சிக்னல் செயலிக்கு மாறியதால் தொழில்நுட்ப குறைபாடு ஏற்பட்டதாக சிக்னல் தெரிவித்தது.

    வாட்ஸ்அப் தனது பயனர் விவரங்களை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமுடன் பகிர்ந்து கொள்வதாக அறிவித்ததை தொடர்ந்து சிக்னல் செயலி அதிக டவுன்லோட்களை பெற்றது. 

    தற்சமயம் இடையூறுக்கு பின் செயலி மீண்டும் செயல்பட துவங்கி இருந்தாலும், பலர் சேவை சீராக இயங்கவில்லை என தெரிவித்து வருகின்றனர். இதற்கு பதில் அளித்த சிக்னல், அடுத்த அப்டேட்டில் குறைகள் சரி செய்யப்படும் என தெரிவித்து இருக்கிறது.
    இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் வலைதளத்தில் ரூ. 44,900-க்கு மேல் சாதனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்பட இருக்கிறது. இந்த சலுகை ஜனவரி 21 ஆம் தேதி துவங்கி ஜனவரி 28 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

    இந்த கேஷ்பேக் சலுகை HDFC வங்கி கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மாத தவணைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இத்துடன் கேஷ்பேக் சலுகை ஆப்பிள் ஸ்டோர் எட்யூகேஷன் விலைக்கு பொருந்தாது. இதனால் கல்வி சலுகை விலையில் பொருட்களை வாங்குவோருக்கு கேஷ்பேக் சலுகை பொருந்தாது.

     ஐபோன்

    புதிய கேஷ்பேக் சலுகை பற்றிய தகவல் ஆப்பிள் ஸ்டோர் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது. வலைதள தகவல்களின் படி ரூ. 44,900 மற்றும் அதற்கும் அதிக தொகைக்கு பொருட்களை வாங்குவோர் ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் மற்றும் ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை வசதியை பெற முடியும்.

    கேஷ்பேக் சலுகை ஒரு ஆர்டருக்கு மட்டும் தான் பொருந்தும். இதனால் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்களை வாங்கி அதற்கு ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் கோர முடியாது. இத்துடன் வாடிக்கையாளர் வழங்கும் கார்டு கேஷ்பேக் சலுகையை பெறுமா என்ற தகவல் பொருளை தேர்வு செய்த பின் தெரிவிக்கப்படும்.

    பின் வாடிக்கையாளருக்கு பொருள் வினியோகம் செய்யப்பட்டும், இதைத் தொடர்ந்து ஏழு நாட்களுக்குள் கேஷ்பேக் வழங்கப்பட்டு விடும். இதேபோன்ற விதிமுறைகள் வட்டியில்லா மாத தவணை முறை சலுகைக்கும் பொருந்தும்.
    ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு வைபை ரவுட்டர் வழங்கப்படுகிறது.


    ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பைபர் வாடிக்கையாளர்களில் ரூ. 3999 சலுகையை தேர்வு செய்வோருக்கு நொடிக்கு 1 ஜிபி வேகம் வழங்கும் 4x4 வைபை ரவுட்டர் வழங்கப்படுகிறது. சமயங்களில் வாடிக்கையாளர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் ரவுட்டர்கள் ஜிகாபிட் தர இணைய அனுபவத்தை வழங்குவதில்லை.

    இதை கருத்தில் கொண்டு ஏர்டெல் தனது பைபர் சலுகையுடன் இலவச ரவுட்டர் வழங்குகிறது. ரூ. 3999 எக்ஸ்-ஸ்டிரீம் பைபர் சலுகையில் நொடிக்கு 1 ஜிபி வேகத்தில் இணைய வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பாக்ஸ் ஒன்றும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பைபர் ரூ. 3999 சலுகையை தேர்வும் செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 1 Gbps 4x4 வைபை ரவுட்டர் வழங்கப்படும். இதை கொண்டு வாடிக்கையாளர்கள் நொடிக்கு 1 ஜிபி இணைய வேகத்தை அனுபவிக்க முடியும். சீரான அதிவேக இணைய வசதி ஆன்லைன் கேமிங் அனுபவத்தை மேம்படுத்தும்.

     கோப்புப்படம்

    இந்த சலுகையில் அன்லிமிடெட் இணைய வசதி மட்டுமின்றி அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவையும் வழங்கப்படுகிறது. இத்துடன் வழங்கும் ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பாக்ஸ் வழங்கும் 550 தொலைகாட்சி சேனல்களை பார்க்கும் வசதி, ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஆப் லைப்ரரியின் ஒடிடி தரவுகளை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது.

    ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் ஆப் லைப்ரரியில் 10 ஆயிரத்திற்கும் அதிக திரைப்படங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. இத்துடன் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ஜீ5 சந்தா உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. 
    வயோ பிராண்டின் இரண்டு புதிய லேப்டாப் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கின்றன.


    இந்தியாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க இரண்டு புதிய லேப்டாப்களை வயோ பிராண்டு அறிமுகம் செய்து இருக்கிறது. இவை வயோ இ15 மற்றும் வயோ எஸ்இ14 லேப்டாப் என அழைக்கப்படுகின்றன. 

    இரண்டு புதிய வயோ லேப்டாப் மாடல்களிலும் ஃபுல் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, மைக்ரோசாப்ட் ஆபிஸ் 365, விண்டோஸ் 10 ஹோம் எடிஷன், டால்பி ஆடியோ மற்றும் ஸ்மார்ட் ஆம்ப்ளிபையர் வசதி கொண்ட ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

     வயோ லேப்டாப்

    வயோ எஸ்இ14 ஏற்கனவே மலேசியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் தற்சமயம் அவிட்டா நோட்புக் மாடல்களை விற்பனை செய்யும் நெஸ்ட்கோ நிறுவனம் தான் வயோ பிராண்டை இந்தியாவுக்கு மீண்டும் கொண்டு வந்து உள்ளது.

    இரண்டு புதிய வயோ லேப்டாப்களும் இந்திய சந்தையில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. வயோ இ15 மாடல் பிளாக் மற்றும் டின் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இந்த லேப்டாப் மாடல் விலை ரூ. 66,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    வயோ எஸ்இ14 மாடல் டார்க் கிரே மற்றும் ரெட் கூப்பர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 84,690 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக இரு வயோ லேப்டாப்களின் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.

    ×