என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஜெபிஎல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஜெபிஎல் பிராண்டின் புதிய சி115 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய இயர்பட்ஸ் இன்-இயர் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இந்த இயர்போனுடன் மெல்லிய சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது.

    இத்துடன் புதிய ஜெபிஎல் சி115 இயர்பட்ஸ் 5.8எம்எம் டிரைவர் மற்றும் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இதில் ஆட்டோனோமஸ் கனெக்டிவிட்டி, மோனோ மற்றும் ஸ்டீரியோ மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதனால் அழைப்புகளை மேற்கொள்ளும் போது ஒரு இயர்பட் மட்டும் பயன்படுத்த முடியும். 

    இதன் இயர்பட்ஸ் மட்டும் ஆறு மணி நேர பிளேபேக் வழங்குகின்றன. மேலும் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் பட்சத்தில் 15 மணி நேரத்திற்கு கூடுதல் பிளேபேக் கிடைக்கிறது. அந்த வகையில் புதிய ஜெபிஎல் சி115 இயர்பட்ஸ் மொத்தம் 21 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.

     ஜெபிஎல் சி115

    அழைப்புகள், வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் மியூசிக் அம்சங்களை இயக்க டச் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் கூகுள் அசிஸ்டண்ட், அமேசான் அலெக்சா சேவைகளை இயக்கும் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் கேபிள் வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் புதிய ஜெபிஎல் சி115 விலை ரூ. 4999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பிளாக், மின்ட், ரெட் மற்றும் வைட்
    போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 
    பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பாரத் பைபர் சலுகை கட்டண முறையில் புது வசதி வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பாரத் பைபர் சலுகைகளின் கட்டணத்தை வருடாந்திர அடிப்படையில் செலுத்தும் வசதியை வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வசதி தற்சமயம் ரூ. 599, ரூ. 799, ரூ. 999 மற்றும் ரூ. 1499 போன்ற மாதாந்திர சலுகைகளுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. 

    புதிய வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட பாரத் பைபர் ரூ. 449 சலுகையில் வருடாந்திர கட்டண முறை வழங்கப்படவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் கட்டணம் செலுத்த வேண்டும். புதிய கட்டண முறை ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

     கோப்புப்படம்

    முன்னதாக இவை மாதாந்திர அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தன. தற்சமயம் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் அல்லது 12 மாதங்களுக்கு சேர்த்தும் கட்டணம் செலுத்தும் வசதி கிடைக்கிறது. 12 மாதங்களுக்கு ஒரே தவணையில் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத சேவை கூடுதலாக வழங்கப்படுகிறது.

    தற்சமயம் இந்த கட்டண முறை பற்றிய விவரங்கள் பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இடம்பெறவில்லை. முன்னதாக பாரத் பைபர் சலுகைகள் விளம்பர நோக்கில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டன. தற்சமயம் இவற்றின் வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டு ஏப்ரல் 3 ஆம் தேதி வரை வழங்கப்படுகின்றன.
    சியோமியின் ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    சியோமி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. எனினும், கடந்த ஆண்டு ரெட்மி நோட் 9 சீரிஸ் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு சியோமி புதிய நோட் 10 மாடல்களின் விலையை போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யும் என கூறப்படுகிறது.

    முதற்கட்டமாக இந்தியாவில் ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ 4ஜி வேரியண்ட் மட்டும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களும் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகமாகும் என தெரிகிறது. இரு மாடல்களும் கிரே, வைட் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    ரெட்மி நோட் 10 சீரிஸ் மட்டுமின்றி சியோமி நிறுவனம் எம்ஐ 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களையும் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு புதிய ஒஎஸ் அப்டேட் வழங்கப்படுகிறது.


    ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 7 மற்றும் 7டி சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஆக்சிஜன் ஒஎஸ்11 அப்டேட் வழங்க துவங்கி இருக்கிறது. முன்னதாக இந்த அப்டேட்டில் குறைகள் இருந்த நிலையில், தற்சமயம் அவை சரி செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.

    கடந்த ஆண்டு ஆக்சிஜன் ஒஎஸ்11 ஒன்பிளஸ் 8 சீரிஸ் மாடல்களுக்கு வெளியிடப்பட்டது. அந்த வரிசையில் தற்சமயம் ஒன்பிளஸ் 7 மற்றும் 7டி சீரிஸ் மாடல்களுக்கு இந்த அப்டேட் வழங்கப்படுகிறது. தற்சமயம் பீட்டா வெர்ஷன் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஸ்டேபில் வெர்ஷன் வெளியிடப்படலாம்.

    ஓபன் பீட்டா அப்டேட் என்பதால் இதில் ஏராளமான குறைகள் இருக்கலாம் என்பதால், அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் இதனை இன்ஸ்டால் செய்வது பரிந்துரைக்கப்பட இயலாது. ஸ்மார்ட்போன்களை அப்டேட் செய்யும் முன் அதில் உள்ள தரவுகளை பேக்கப் செய்வது நல்லது.
    விவோ நிறுவனத்தின் இரண்டு புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    விவோ நிறுவனத்தின் புதிய வை20ஜி மற்றும் வை31 ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இதில் விவோ வை20ஜி மாடலில் 6.51 இன்ச் ஹெச்டி பிளஸ் ஹாலோ ஐவியூ டிஸ்ப்ளே, 13 எம்பி + 2 எம்பி + 2 எம்பி கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    விவோ வை31 ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2408 பிக்சல் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது.

     விவோ வை31

    இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி + 2 எம்பி சென்சார் மற்றும் 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் விவோ வை31 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 கொண்டிருக்கிறது.

    விவோ வை31 மாடலிலும் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் புதிய விவோ வை31 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 16,490 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஓசன் புளூ மற்றும் ரேசிங் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

    விவோ வை20ஜி மாடல் அப்சிடியன் பிளாக் மற்றும் பியூரிஸ்ட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 14,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    வு நிறுவனத்தின் புதிய சினிமா டிவி ஆக்ஷன் சீரிஸ் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    வு நிறுவனம் 55 இன்ச் மற்றும் 65 இன்ச் அளவுகளில் புதிய ஆண்ட்ராய்டு டிவிக்களை சினிமா டிவி ஆக்ஷன் சீரிஸ் பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இரு டிவி மாடல்களில் 4K UHD டிஸ்ப்ளே மற்றும் ஹெச்டிஆர்10, டால்பி விஷன் மற்றும் MEMC வசதி வழங்கப்பட்டு உள்ளன.

    இத்துடன் ஐஆர் பிளஸ் ப்ளூடூத் ரிமோட் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது. இந்த ரிமோட் யூடியூப், நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் மற்றும் கூகுள் பிளே சேவைகளுக்கான ஹாட்கீ வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் கூகுள் அசிஸ்டண்ட், டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் சரவுண்ட் சவுண்ட், டால்பி ஆடியோ மற்றும் ஸ்போர்ட்ஸ் சவுண்ட் மோட் வசதிகளை கொண்டுள்ளது.

     வு சினிமா டிவி ஆக்ஷன்

    இரண்டு வு டிவி மாடல்களிலும் 100 வாட் சவுண்ட்பார் மற்றும் 6 ஜெபிஎல் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு உள்ளது. இவை டைட்டானியம் கிரே டோன் மற்றும் பெசல்-லெஸ் ஸ்கிரீன், பேப்ரிக் பினிஷ் கொண்டிருக்கிறது. 

    வு சினிமா டிவி ஆக்ஷன் 55 இன்ச் மாடல் விலை ரூ. 49,999 என்றும் 65 இன்ச் வேரியண்ட் விலை ரூ. 69,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு டிவி மாடல்களும் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
    இந்திய சந்தையில் 2021 ஆண்டு மட்டும் ஆறு புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ஒப்போ திட்டமிட்டு இருக்கிறது.


    ஒப்போ நிறுவனம் 2021 ஆண்டு மட்டும் இந்திய சந்தையில் தனது 5ஜி ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ரெனோ5 ப்ரோ ஸ்மார்ட்போனினை முதல் 5ஜி மாடலாக இந்தியாவில் ஒப்போ அறிமுகம் செய்தது.

    2021 ஆண்டில் மட்டும் ஒப்போ நிறுவனம் குறைந்தபட்சம் ஆறு 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ஒப்போ திட்டமிட்டு உள்ளது. அனைத்து விலை பிரிவுகளிலும் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய ஒப்போ திட்டமிட்டுள்ளது. 

     ஒப்போ ஸ்மார்ட்போன்

    சமீபத்தில் சீனா தவிர வெளிநாட்டு சந்தையில் தனது முதல் 5ஜி இன்னோவேஷன் ஆய்வகத்தை இந்தியாவில் ஒப்போ துவங்கி இருக்கிறது. சீனாவுக்கு அடுத்தப்படியாக ஐதராபாத் நகரில் ஒப்போ ஆய்வு மையம் கட்டமைத்து இருப்பது இதுவே முதல் முறை ஆகும். 

    இந்தியாவில் செயல்பட்டு வரும் ஒப்போ ஆய்வு குழுவினர் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், குவால்காம், மீடியாடெக் போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பணியாற்றி வருகிறது. தற்சமயம் உலகம் முழுக்க 20-க்கும் அதிகமான நாடுகளில் ஒப்போ தனது 5ஜி தொழில்நுட்பத்தை கட்டமைக்கும் பணிகளில் ஒப்போ ஈடுபட்டு வருகிறது.
    பிரைவசி பாலிசி விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் கோரிக்கைக்கு வாட்ஸ்அப் அளித்த பதில் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    வாட்ஸ்அப் புது பிரைவசி பாலிசியை அமலாக்கும் நடைமுறையை மறு பரிசீலனை செய்யக் கோரி மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வாட்ஸ்அப் தலைமை செயல் அதிகாரிக்கு கடிதம் எழுதி இருந்தது. அதன்படி மத்திய அரசு விடுத்த கோரிக்கைக்கு வாட்ஸ்அப் பதில் அளித்துள்ளது.

     கோப்புப்படம்

    இது குறித்து வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, 

    “புது அப்டேட் பேஸ்புக்குடன் தரவுகளை பகிர்வது தொடர்பாக எந்த வசதியையும் வழங்கவில்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். எங்களின் நோக்கம் வியாபாரங்கள் தங்களது வாடிக்கையாளர்கள் சிறப்பான  சேவையை வழங்கி வளர்ச்சி பெறுவதற்கான வசதியை வழங்குவது தான்.”

    “வாட்ஸ்அப் எப்போதும் தனிப்பட்ட குறுந்தகவல்களை முழுமையான என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கும். இதனால் வாட்ஸ்அப் அல்லது பேஸ்புக் அவற்றை பார்க்க முடியாது. தவறான தகவல் பரவுவதை சரி செய்யவும், எந்த விதமான கேள்விகளுக்கும் பதில் அளிக்க நாங்கள் எப்போதும் காத்திருக்கிறோம்,” 

    என அவர் தெரிவித்து இருக்கிறார்.  

    போக்கோ எம்3 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் சீன சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. 

    புதிய போக்கோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், மூன்று பிரைமரி கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது. சீனாவில் இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 11 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி போக்கோ இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.

     போக்கோ எம்3

    எனினும், இந்தோனேசியா சந்தையில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் ஜனவரி 21 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    இதன் இந்திய வேரியண்ட் M2010J19CI எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இது 4 ஜிபி + 64 ஜிபி மற்றும் 4 ஜிபி + 128 ஜிபி என இரு வேரியணட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 12,500 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
    அமேசான் சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு விற்பனை துவங்கப்பட்டு இருக்கிறது.


    அமேசான் நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு விற்பனையை (கிரேட் ரிபப்ளிக் டே விற்பனை) அறிவித்து இருக்கிறது. அதன்படி, இன்று (புதன் கிழமை) முதல் ஜனவரி 23 ஆம் தேதி வரை இந்த விற்பனை நடைபெற உள்ளது. இந்த விற்பனையை அமேசான் பிரைம் உறுப்பினர்கள் 24 மணி நேரத்துக்கு முன்னதாகவே பெற முடியும்.

    ஸ்மார்ட்போன்கள், மின்சாதன பொருட்கள், பேஷன் மற்றும் அத்தியாவசிய அழகு சாதனங்கள், வீடு மற்றும் சமையல் அறை உபகரணங்கள், அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் ஆகியவற்றை பெரிய பிராண்டுகளில் இருந்து பெரிய சேமிப்புகளை இந்த விற்பனை மூலம் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம்.

    அந்த வகையில் சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் அசத்தல் சலுகை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    ஐபோன் 11

    ஐபோன் 12 மினி 64 ஜிபி மாடல் விலை ரூ. 59,990 என துவங்குகிறது. இத்துடன் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ. 4500 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஒப்போ பைண்ட் எக்ஸ்2 ஸ்மார்ட்போனிற்கு ரூ. 13 ஆயிரம் சலுகை அறிவிக்கப்பட்டு ரூ. 51,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஐபோன் 11 64 ஜிபி மாடல் ரூ. 48,999 விலையில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் 8டி 5ஜி 12 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 43,499 விலையில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் 8டி 5ஜி 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 40,499 விலையிலும், ஒன்பிளஸ் 7டி ப்ரோ 8 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 38,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோன்று சாம்சங், நோக்கியா மற்றும் ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் சிறப்பு சலுகை மற்றும் அசத்தல் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் சலுகைகளை தொடர்ந்து பார்ப்போம்.


    ப்ளிப்கார்ட் தளத்தில் Big Saving Days சிறப்பு விற்பனை துவங்கி இருக்கிறது. இந்த விற்பனை ஜனவரி 24 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் மற்றும் பல்வேறு அக்சஸரீக்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகின்றன.

    அதன்படி ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020 மாடல் துவக்க விலை ரூ. 27,999 என மாறி இருக்கிறது. ஐபோன் எக்ஸ்ஆர் 64 ஜிபி மாடல் ரூ. 36,999 என்றும் ஐபோன் 12 மினி ரூ. 64,900 என்றும் ஐபோன் 11 (64ஜிபி) மாடல் விலை ரூ. 48,999 என மாறி உள்ளது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     ஐபோன்

    எல்ஜி ஜி8எக்ஸ் தின்க் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 44 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 25,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அசுஸ் ரோக் போன் 3 (12ஜிபி + 128ஜிபி ) மாடல் ரூ. 47,999 விலையிலும், அசுஸ் ரோக் போன் 3 ( 8ஜிபி + 128 ஜிபி) ரூ. 43,999 விலையில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 2 ஆயிரம் மற்றும் ரூ. 3 ஆயிரம் குறைக்கப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ் 12ஜிபி + 256ஜிபி மாடல் ரூ. 54,999 விலையில் கிடைக்கிறது. போக்கோ பிராண்டு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ. 500 துவங்கி அதிகபட்சம் ரூ. 1500 வரையிலான விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இதேபோன்று ரியல்மி, மோட்டோரோலா, ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கும், லேப்டாப், டேப்லெட் மற்றும் அக்சஸரீக்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் வங்கி சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    ஸ்கல்கேண்டி நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ஸ்கல்கேண்டி நிறுவனம் இந்திய சந்தையில் ஜிப் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் 22 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும். இத்துடன் புதிய இயர்பட்ஸ் IPX4 ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

    புதிய இயர்பட்ஸ் டூயல் மைக்ரோபோன் கொண்டிருப்பதால் மேம்பட்ட வாய்ஸ் காலிங் அனுபவத்தை வழங்கும். இத்துடன் வயர்லெஸ் மியூசிக் தரத்தையும் சிறப்பாக வழங்குகிறது. இரு இயர்பட்களை ஒன்றாகவும், ஒரு இயர்பட் மட்டும் என இருவிதங்களில் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

     ஸ்கல்கேண்டி ஜிப்

    ஸ்கல்கேண்டி ஜிப் இயர்பட்ஸ் 40 எம்எம் டிரைவர்களை கொண்டிருக்கிறது. வால்யூம், அழைப்புகள், வாய்ஸ் அசிஸ்டண்ட், பாடல்களை மாற்றுவதற்கு என அனைத்து கண்ட்ரோல்களும் போனினை கையில் எடுக்காமலேயே இயக்கும் வசதி வழங்கப்படுகிறது.

    ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி வசதி வழங்கப்பட்டு இருப்பதால் இந்த இயர்பட்களை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனுடன் பயன்படுத்த முடியும். ஸ்கல்கேண்டி ஜிப் இயர்பட்ஸ் ஒருமுறை சார்ஜ் செய்தால் ஆறு மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. சார்ஜிங் கேஸ் சேர்த்தால் கூடுதலாக 16 மணி நேர பேக்கப் கிடைக்கிறது.

    இந்தியாவில் புதிய ஸ்கல்கேண்டி ஜிப் இயர்பட்ஸ் ஒன்பிளஸ் பட்ஸ் இசட், ரெட்மி இயர்பட்ஸ் எஸ் மற்றும் ரியல்மி பட்ஸ் கியூ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. ஸ்கல்கேண்டி ஜிப் இயர்பட்ஸ் விலை ரூ. 2999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது புளூ மற்றும் ட்ரூ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
    ×