என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    இந்தியாவின் 72-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ட்விட்டர் சார்பில் சிறப்பு எமோஜி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    இந்தியாவின் 72-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் சிறப்பு எமோஜி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய எமோஜி இந்தியாவின் விமான படை மற்றும் தேசிய கொடியின் நிறங்களை பிரதிபலிக்கும் வகையில் அசத்தலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. 

    இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த எமோஜி கொண்டு ட்வீட் செய்து மக்கள் தேசிய ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்தை கொண்டாட அழைக்கிறார். மேலும் இந்திய வான்படை சார்பிலும் இந்த எமோஜி பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர ட்விட்டரில் குடியரசு தின ஹேஷ்டேக் பயன்படுத்துவோருக்கு இந்த எமோஜி தானாக சேர்ந்து கொள்ளும்.

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    ட்விட்டரில் குடியரசு தின சிறப்பு எமோஜி ஜனவரி 30 ஆம் தேதி வரை கிடைக்கும். இது ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், இந்தி, உருது, பஞ்சாபி, மராத்தி, பெங்காலி மற்றும் குஜராத்தி போன்ற மொழிகளிலும் கிடைக்கும். இந்திய குடியரசு தின சிறப்பு எமோஜி ஆறாவது முறையாக வழங்கப்படுகிறது.

    `இந்தியாவில் கொரோனாவைரஸ் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் காலக்கட்டத்தில் அணிவகுப்பை விர்ச்சுவல் தளத்திற்கு கொண்டுவர திட்டமிட்டோம். இந்த ஆண்டின் எமோஜி கடந்த கால பெருமைகளை சிறப்பிப்பதோடு இது மக்களை கொண்டாட்டத்திற்கு ஒன்று சேர்க்கும் சிறந்த வழியாக இருக்கிறது.' என ட்விட்டர் இந்தியா தெரிவித்து உள்ளது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் பட்ஸ் இசட் லிமிடெட் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் பட்ஸ் இசட் ஸ்டீவன் ஹாரிங்டன் லிமிடெட் எடிஷன் வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. இதற்கென ஒன்பிளஸ் நிறுவனம் அமெரிக்க வடிவமைப்பாளர் ஸ்டீவன் ஹாரிங்டனுடன் கூட்டு சேர்ந்துள்ளது. 

    புதிய லிமிடெட் எடிஷன் இயர்பட்ஸ் ஸ்டீவன் ஹாரிங்டன் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் மற்றும் டிசைன்கள் இடம்பெற்று இருக்கின்றன. புதிய தோற்றம் தவிர லிமிடெட் எடிஷன் வயர்லெஸ் இயர்பட்ஸ் எந்த மாற்றமும் பெறாமல் வெளியாகி உள்ளது.

     ஒன்பிளஸ் பட்ஸ் இசட் லிமிடெட் எடிஷன்

    ஒன்பிளஸ் பட்ஸ் இசட் இயர்பட் 40 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது. இதன் சார்ஜிங் கேசில் 450 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 5 வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இது ஐபி55 தர ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதுதவிர பாஸ்ட் சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரத்திற்கு ஆடியோ பிளேபேக் கிடைக்கிறது.

    இந்தியாவில் புதிய ஒன்பிளஸ் பட்ஸ் இசட் ஸ்டீவன் ஹாரிங்டன் லிமிடெட் எடிஷன் மாடலின் விலை ரூ. 3699 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் மாடல் டூ-டோன் பர்ப்பிள் மற்றும் மிண்ட் நிறத்தில் கிடைக்கிறது. மேலும் இதற்கு ஏற்ற நிறத்தில் சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது.

    ரியல்மி நிறுவனத்தின் புதிய எக்ஸ்7 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    ரியல்மி நிறுவனம் புதிய எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டை கடந்த வாரம் உறுதிப்படுத்தியது. இந்நிலையில், புதிய ரியல்மி எக்ஸ்7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த சீரிசில் ரியல்மி எக்ஸ்7 மற்றும் எக்ஸ்7 ப்ரோ என இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய எக்ஸ் சீரிஸ் இந்திய வெளியீடு பற்றி ரியல்மி இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. 

    தற்போதைய தகவலில் ரியல்மி எக்ஸ்7 சீரிஸ் வெளியீட்டு தேதி கொண்ட அழைப்பிதழ் ட்விட்டரில் வெளியாகி உள்ளது. அழைப்பிதழின் படி பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் ரியல்மி எக்ஸ7 மற்றும் ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

     ரியல்மி எக்ஸ்7

    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரியல்மி எக்ஸ்7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், 6.4 இன்ச் ஸ்கிரீன், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 64 எம்பி குவாட் கேமரா சென்சார், 32 எம்பி செல்பி கேமரா உள்ளிட்டவை வழங்கப்படலாம்.

    ரியல்மி எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 1000 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 64 எம்பி குவாட் கேமரா, 32 எம்பி செல்பி கேமரா, 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி டேப் எஸ்7 லைட் மூன்று வேரியண்ட்களில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் எஸ்7 லைட் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த டேப்லெட் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இவை SM-T730, SM-T735 மற்றும் SM-T736B / SM-T736N எனும் மாடல் நம்பர்களில் முறையே வைபை, எல்டிஇ மற்றும் 5ஜி வேரியண்ட் என கூறப்படுகிறது. 

    இதுமட்டுமின்றி சாம்சங் நிறுவனம் மற்றொரு கேலக்ஸி டேப் எஸ்7 லைட் / டேப் எஸ்8இ வேரியண்ட்டை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இது பிளஸ் அல்லது எக்ஸ்எல் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் லைட் வேரியண்ட்டை விட பெரிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    முன்னதாக கடந்த ஆண்டு முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் மாடலை அறிமுகம் செய்தது. அந்த வகையில் புதிய கேலக்ஸி டேப் மாடல் வெளியாக இன்னும் சில மாதங்கள் ஆகும் என்றே தெரிகிறது. இதற்கிடையில் புதிய டேப் பற்றிய கூடுதல் விவரங்கள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஏர்டெல் நிறுவனம் இரண்டு புதிய சலுகைகளை விண்க் பிரீமியம் சந்தாவுடன் அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஏர்டெல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 78 மற்றும் ரூ. 248 விலையில் டேட்டா ஆட்-ஆன் சலுகைகளை அறிவித்து உள்ளது. இரு சலுகைகளுடன் விண்க் பிரீமியம் சந்தாவுடம் வழங்கப்படுகின்றது. 

    ரூ. 78 சலுகையுடன் ஒரு மாதத்திற்கான விண்க் பரீமியம் சந்தாவும் ரூ. 248 சலுகையில் ஒரு வருடத்திற்கான விண்க் பிரீமியம் சந்தாவும் வழங்கப்படுகிறது. இதுதவிர பயனர்கள் விண்க் பிரீமியம் சந்தாவை ஏர்டெல் தேங்ஸ் செயலி அல்லது டிஜிட்டல் ஸ்டோரில் நேரடியாகவும் வாங்க முடியும்.

     கோப்புப்படம்

    டேட்டா ஆட்-ஆன் சலுகை என்பதால் ஏர்டெல் ரூ. 78 சலுகையில் 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் சலுகை நிறை பெறும் வரை வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டாவுக்கான கட்டணம் நொடிக்கு 50 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ரூ. 248 சலுகையில் மொத்தம் 25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. முந்தைய சலுகையை போன்றே இதிலும் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் டேட்டாவுக்கான கட்டணம் நொடிக்கு 50 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சலுகையில் ஒரு வருடத்திற்கான விண்க் பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களுக்கு அதிரடி தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ், ஐபோன் 11 சீரிஸ் மற்றும் இதர ஐபோன் மாடல்களுக்கு ரூ. 16 ஆயிரம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகை மேபிள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. 

    சலுகையின் படி ஐபோன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மேபிள் உடனடி தள்ளுபடி அதிகபட்சம் ரூ. 8 ஆயிரமும், தனியார் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் ரூ. 9 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    ஒவ்வொரு ஐபோன் மாடலுக்கும் தனித்தனி தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடி மட்டுமின்றி எக்சேன்ஜ் சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் ஐபோன் வாங்குவோர் ரூ. 16 ஆயிரம் வரை சேமிக்க முடியும். எக்சேன்ஜ் சலுகை மேபிள் ஸ்டோர்களில் மட்டும் பொருந்தும். 

     ஐபோன்

    ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 128ஜிபி மாடலுக்கு ரூ. 8 ஆயிரம் தள்ளுபடி மற்றும் தனியார் வங்கி கார்டுகளுக்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஐபோன் 12 ப்ரோ மாடலுக்கு ரூ. 3 ஆயிரத்து 500 தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஐபோன் 12 மாடலுக்கு ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 6 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

    ஐபோன் 12 மினி மாடலுக்கு ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 9 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. மேலும் ஐபோன் 12 மினி வாங்குவோர் பழைய ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 48,900 வரையிலான தள்ளுபடி பெறலாம். இவைதவிர ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 11, ஐபோன் XR, ஐபோன் எஸ்இ 2020 போன்ற மாடல்களுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    எல்ஜி நிறுவனம் இந்தியாவில் ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் குவாட் கேமரா சென்சார் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.


    எல்ஜி நிறுவனம் இந்தியாவில் புதிய கே சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் கே42 என அழைக்கப்படுகிறது. எல்ஜி கே42 ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் புல்விஷன் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் எல்ஜி கே42 அமெரிக்க ராணுவ தர-MIL-STD-810G சான்று பெற்று இருக்கிறது. இதில் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் வழங்கப்பட்டு உள்ளது.

     எல்ஜி கே42

    எல்ஜி கே42 சிறப்பம்சங்கள்

    - 6.6 இன்ச் 1600x720 பிக்சல் 20:9 ஹெச்டி பிளஸ் புல் விஷன் டிஸ்ப்ளே
    - 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
    - 650MHz IMG PowerVR GE8320 GPU
    - 3 ஜிபி ரேம்
    - 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10
    - 13 எம்பி பிரைமரி கேமரா
    - 5 எம்பி 115° அல்ட்ரா வைடு சென்சார்
    - 2 எம்பி மேக்ரோ சென்சார்
    - 2 எம்பி டெப்த் சென்சார்
    - 8 எம்பி செல்பி கேமரா
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    - MIL-STD 810G சான்று
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி

    எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் எல்ஜி கே42 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஜனவரி 26 ஆம் தேதி துவங்குகிறது.
    ஆப்பிள் நிறுவனம் மெல்லிய, எடை குறைந்த மேக்புக் ஏர் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


    ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் ஏர் மாடலின் குறைந்த எடையில், மெல்லிய வடிவமைப்பில் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய மேக்புக் ஏர் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    புதிய மேக்புக் ஏர் ஆப்பிள் நிறுவனத்தின் மேக்சேப் சார்ஜிங் தொழில்நுட்பம் மற்றும் அடுத்த தலைமுறை மேக் பிராசஸர்களை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. 13 இன்ச் மேக்புக் ஏர் மாடலின் ஸ்கிரீனை சுற்றியுள்ள பகுதிகளின் அளவை குறைக்கவும் ஆப்பிள் திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

     மேக்புக்

    புதிய மாடலில் 4 யுஎஸ்பி போர்ட்கள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது தற்சமயம் விற்பனை செய்யப்படும் மேக்புக் ஏர் மாடலின் உயர் ரக வெர்ஷனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தற்போதைய வெர்ஷன் என்ட்ரி-லெவல் மாடலாக இருக்கும்.

    முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாத்தில் ஆப்பிள் தனது சாதனங்களில் இன்டெல் பிராசஸர்களுக்கு மாற்றாக தனது சொந்த எம்1 மேக் சிப்களை வழங்கியது. ஆப்பிள் வரலாற்றில் பழைய சாதனமாக மேக் இருக்கிறது. இதனை ஆப்பிள் சரியாக அப்டேட் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு நலவி வந்தது. 

    தற்சமயம் புது மேக்புக் ஏர் மாடலுன் ஆப்பிள் மேக்புக் ப்ரோ மாடலை மிகப்பெரிய அப்டேட் செய்ய இருக்கிறது. மேலும் புதிய மேக்புக் ப்ரோ மாடல்களில் முன்பை போன்றே எஸ்டி கார்டு ஸ்லாட்களை வழங்கவும் ஆப்பிள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
    அசத்தல் அம்சங்களுடன் உருவாகி வரும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ஹெச்எம்டி குளோபல் உருவாக்கும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் குவிக்சில்வர் எனும் குறியீட்டு பெயர் கொண்டுள்ளது. புது நோக்கியா ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி உள்ளது. 

    இந்த நோக்கியா ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் இது நோக்கியா 6.3 அல்லது 6.4 மாடலாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

    தற்போதைய ரென்டர்களின் படி புது நோக்கியா ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச், குவாட் கேமரா செட்டப், 6.45 இன்ச் பிளாட் டிஸ்ப்ளே, பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

     நோக்கியா ஸ்மார்ட்போன்

    இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 6 ஜிபி ரேம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 690ஜி பிராசஸர், அட்ரினோ 619 GPU கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 6.4 5ஜி என்றும் அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இது நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.

    புகைப்படங்களை எடுக்க புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் 24 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பவர் பட்டனுடன் பொருத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
    வி நிறுவனத்தின் டேட்டா ரோல்ஓவர் சலுகை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் தனது டேட்டா ரோல்ஓவர் சலுகையை ஏப்ரல் 17 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த சலுகை கடந்த ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட்டு ஜனவரி 17 ஆம் தேதி வரை வழங்கப்பட்டு இருந்தது.

    டேட்டா ரோல்ஓவர் சலுகை நீட்டிக்கப்பட்டு இருப்பதை வி தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அப்டேட் செய்து இருக்கிறது. முன்பு வழங்கப்பட்ட சலுகைகளுக்கான டேட்டா ரோல்ஓவர் வசதி தற்சமயம் நீட்டிப்பட்டு இருக்கிறது. வி வலைதளத்தின் படி இந்த சலுகை அக்டோபர் 19, 2020 துவங்கி ஏப்ரல் 17, 2021 வரை வழங்கப்படுகிறது.

     கோப்புப்படம்

    ரோல்ஓவர் வசதி வி ரூ. 249, ரூ. 299, ரூ. 399, ரூ. 449, ரூ. 595, ரூ. 599, ரூ. 699, ரூ. 795 மற்றும் ரூ. 2595 சலுகைகளுக்கு வழங்கப்படுகிறது. தற்சமயம் அனைத்து சலுகைகளும் வி வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது. இந்த சலுகைகளில் இருமடங்கு டேட்டா, 5ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் ஒரு வருடத்திற்கான ஜீ5 சந்தா வழங்கப்படுகிறது.  

    டேட்டா ரோல்ஓவர் வசதி வாரஇறுதி நாட்களில் பயன்படுத்தும் வகையில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வழங்கப்படுகிறது. இந்த சலுகை பலன்களில் மாற்றம், திரும்ப பெறுவது போன்றவை டிராய் விதிமுறைகளுக்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளப்படலாம் என வி வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    போக்கோ பிராண்டின் புதிய சி3 மாடல் ஸ்மார்ட்போன் விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    இந்திய சந்தையில் போக்கோ சி3 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் அறிமுகமான குறுகிய காலக்கட்டத்தில் போக்கோ சி3 ஸ்மார்ட்போன் விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை கடந்துள்ளது.

    புது மைல்கல்லை அறிமுகமான மூன்றே மாதங்களில் போக்கோ எட்டியுள்ளது. விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளதை ஒட்டி போக்கோ சி3 ஸ்மார்ட்போன் ஜனவரி 24 ஆம் தேதி வரை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

     போக்கோ சி3

    அதன்படி போக்கோ சி3 (3 ஜிபி + 32 ஜிபி) ரூ. 6999 விலையிலும், 4 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 7999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களின் விலையும் ரூ. 500 குறைக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர HDFC வங்கி கார்டுகளுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை போக்கோ சி3 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. டூ-டோன் டிசைன் கொண்டிருக்கும் போக்கோ சி3 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    ட்விட்டர் சேவையில் மீண்டும் வெரிபிகேஷன் சேவை துவங்கப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ட்விட்டர் சமூக வலைதள சேவையில் மீண்டும் வெரிபிகேஷன் துவங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர பயன்பாட்டில் இல்லாத, முழுமை பெறாத ட்விட்டர் கணக்குகளின் வெரிபிகேஷனை நீக்கவும் அந்நிறுவனம் துவங்கி உள்ளது. 

    ட்விட்டரில் வெரிபிகேஷன் பெறுவதற்கான விதிமுறைகளில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இவை பயனர்கள் வழங்கிய கருத்துக்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக ட்விட்டர் தெரிவித்து இருக்கிறது.

     கோப்புப்படம்

    அதன்படி இனிமேல், ட்விட்டரில் குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் பாளோவர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு வெரிபிகேஷன் வழங்கப்பட இருக்கிறது. முன்னதாக இது குறிப்பிட்ட நாட்டில் உள்ள பாளோவர்கள் எண்ணிக்கையை கொண்டு வழங்கப்பட்டு வந்தது.

    இத்துடன் வெரிபிகேஷன் வழங்க முன்பை விட அதிக பிரிவுகளை சேர்க்க ட்விட்டர் திட்டமிட்டு உள்ளது. அதன்படி கல்வி, ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மத தலைவர்கள் உள்ளிட்ட பிரிவுகள் சேர்க்கப்பட இருக்கின்றன. 

    தற்சமயம் இந்த பிரிவுகளை சேர்ந்தவர்கள் ட்விட்டரில் ஆர்வலர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இதர பிரிவுகளை தேர்வு செய்து வெரிபிகேஷனுக்கு விண்ணப்பிக்கலாம். 

    ட்விட்டர் வலைதளம் அல்லது செயலியின் அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்தில் இருக்கும் ‘Request Verification’ ஆப்ஷனை க்ளிக் செய்து, தேவையான ஆவணங்களை சமர்பித்து வெரிபிகேஷனுக்கு விண்ணபிக்க முடியும். 
    ×