என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மாடல் முன்பதிவு இந்தியாவில் துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மாடல் 2021 கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு துவங்கியதை தொடர்ந்து தற்சமயம் இந்த வயர்லெஸ் இயர்போனிற்கான முன்பதிவு துவங்கி உள்ளது.
இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மாடல் விலை ரூ. 15,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்போனுக்கான முன்பதிவு சாம்சங் பிரத்யேக ஸ்டோர்கள், சில்லறை விற்பனை மையங்கள், சாம்சங் வலைதளம் மற்றும் முன்னணி ஆன்லைன் தளங்களில் நடைபெறுகிறது. இதன் விற்பனை ஜனவரி 29 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

புதிய கேலக்ஸி பட்ஸ் ப்ரோ முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ. 3699 விலையுள்ள வயர்லெஸ் பவர்பேங்க் யு1200 மாடலை ரூ. 499 விலைக்கு பெற முடியும். புதிய சாம்சங் கேலக்ஸி பட்ஸ் ப்ரோ இயர்போன் பிளாக், சில்வர் மற்றும் வைலட் நிறங்களில் கிடைக்கிறது.
இந்த இயர்பட்ஸ் டைனமிக், பேலன்ஸ்டு சவுண்ட் வழங்க ஏதுவாக இருவழி ஸ்பீக்கர் சிஸ்டம் கொண்டிருக்கிறது. மேலும் இதன் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங் வசதி சிறப்பாக செயல்பட இது உதவுகிறது. இந்த இயர்பட்ஸ் கேலக்ஸி ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களுடன் எளிதில் இணைந்து கொள்ளும் வசதி கொண்டுள்ளது.
கேலக்ஸி பட்ஸ் ப்ரோ மாடல் IPX7 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஸ்மார்ட்திங்ஸ் சேவை மூலம் எளிதில் இயர்பட்களை கண்டுபிடிக்கும் வசதி உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது.
ஒப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விலை இந்திய சந்தையில் மீண்டும் குறைக்கப்பட்டு இருக்கிறது.
ஒப்போ நிறுவனம் தனது ஏ12 ஸ்மார்ட்போனின் விலையை மீண்டும் குறைத்து இருக்கிறது. விலை குறைப்பு சில்லறை விற்பனை மையங்களில் அமலாகி இருக்கிறது. அந்த வகையில் ஆன்லைன் தளங்களில் இதன் விலையில் இதுவரை எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்தியாவில் ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ரூ. 9990 துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இதன் விலை ரூ. 1000 ஆயிரம் குறைக்கப்பட்டு ரூ. 8990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் விலை குறைப்பின் படி ஒப்போ ஏ12 (3 ஜிபி + 32 ஜிபி) மாடல் ரூ. 8490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் ரூ. 10,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி இரண்டாவது சென்சார், 5 எம்பி செல்பி கேமரா, கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 9 சார்ந்த கலர்ஒஎஸ், 4230 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஒரே சமயத்தில் அதிகளவு பயனர்கள் இன்ஸ்டால் செய்ததால் முடங்கிய மெசேஜிங் ஆப் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக திடீரென பிரபலமான சிக்னல் ஆப் உலகளவில் அதிக பயனர்கள் இன்ஸ்டால் செய்ததால் முடங்கி உள்ளது. நேற்று (ஜனவரி 15) முதல் முடங்கி இருக்கும் சிக்னல் செயலியை சரிசெய்யும் பணிகளில் அதன் டெவலப்பர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
விரைவில் சிக்னல் செயலி பயன்பாட்டுக்கு வந்துவிடும் என அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்து வருகிறது. ஒரே சமயத்தில் பல லட்சம் பேர் திடீரென சிக்னல் செயலியை பயன்படுத்த துவங்கியதே சேவை முடங்க காரணம் ஆகும்.
தற்சமயம் இந்த குறைபாட்டை சரி செய்து சேவை மீண்டும் சீராக இயங்க வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிக்னல் செயலி சிக்னல் பவுன்டேஷன் நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். கூகுள் பிளே ஸ்டோரில் சிக்னல் செயலியை ஐந்து கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
பிரைவசி பாலிசி விவகாரத்தில் வாட்ஸ்அப் எடுத்த திடீர் முடிவு பற்றிய முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
வாட்ஸ்அப் செயலியில் அறிவிக்கப்பட்ட புது பிரைவசி பாலிசி மாற்றத்தை அமலாக்கும் நடவடிக்கையை பரிசீலனை செய்வதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.
“சமீபத்திய அப்டேட் குறித்து பலருக்கு குழப்பம் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. புதிய பிரைவசி பாலிசி பற்றி கவலை எழுப்பும் தவறான தகவல் பரவி வருகிறது. அனைவரும் எங்களின் கொள்கைகள் மற்றும் உண்மையை புரிந்து கொள்வதற்கு நாங்கள் உதவுகிறோம்.” என வாட்ஸ்அப் தனது வலைதளத்தில் குறிப்பிட்டு இருக்கிறது.

முன்னதாக பிப்ரவரி 8 ஆம் தேதிக்குள் பயனர்கள் புதிய பிரைவசி பாலிசியை ஏற்றுக் கொள்ள சம்மதம் தெரிவிக்க வாட்ஸ்அப் கெடு விதித்து இருந்தது. தற்சமயம் இந்த காலக்கெடு மே 15 வரை நீட்டிக்கப்படுவதாக வாட்ஸ்அப் தெரிவித்து உள்ளது.
“உலகம் முழுக்க என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் வசதியை பயனர்களுக்கு வழங்க வாட்ஸ்அப் உதவியது. தற்சமயம் இந்த பாதுகாப்பான தொழில்நுட்பத்தை தொடர்ந்து பயனர்களுக்கு வழங்கும் குறிக்கோள் கொண்டிருக்கிறோம். எங்களிடம் கருத்துக்களை எடுத்துரைத்த அனைவருக்கும் நன்றி.”
“எங்களால் முடிந்தவரை வாட்ஸ்அப் தளத்தினை சிறந்த தகவல் பரிமாற்ற சேவையாக உருவாக்க தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வோம்.” என வாட்ஸ்அப் தனது வலைதளத்தில் பதிவிட்டு உள்ளது.
டூயல் செல்பி கேமரா கொண்ட டெக்னோ கேமான் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
டெக்னோ மொபைல்ஸ் நிறுவனத்தின் புதிய டெக்னோ கேமான் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.85-இன்ச் FHD+ டூயல் பன்ச் ஹோல் ஸ்கிரீன், ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, முன்புறம் 48 எம்பி செல்பி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என டூயல் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

டெக்னோ கேமான் 16 பிரீமியர் சிறப்பம்சங்கள்
- 6.85-இன்ச் 2460x1080 பிக்சல் 20.5:9 FHD+ LCD ஸ்கிரீன்
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ G90T பிராசஸர்
- 800MHz Mali-G76 3EEMC4 GPU
- 8 ஜிபி LPDDR4x ரேம்
- 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஹைஒஎஸ்
- 64 எம்பி பிரைமரி கேமரா
- 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 48 எம்பி செல்பி கேமரா
- 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 4500 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
டெக்னோ கேமான் 16 பிரீமியர் ஸ்மார்ட்போன் கிளேசியர் சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அமேசான் நிறுவனம் தனது பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் சேவையை ரூ. 89 மாதாந்திர கட்டணத்தில் வழங்குகிறது.
அமேசான் நிறுவனம் தனது பிரைம் வீடியோ சேவையின் பிரைம் வீடியோ மொபைல் எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த சேவை ஒருவர் பயன்படுத்தும் வகையிலான மொபைல்-ஒன்லி சலுகை ஆகும். இந்த சேவைக்கான மாதாந்திர கட்டணம் ரூ. 89 என அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் சேவை எஸ்டி தர வீடியோ ஸ்டிரீமிங் வசதியை வழங்குகிறது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் கிடைக்கிறது. புதிய சேவை ஸ்மார்ட்போன் பயனர்கள் அதிகம் நிறைந்த இந்திய சந்தையில் மட்டும் பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

அமேசானின் புதிய சலுகை நெட்ப்ளிக்ஸ் மொபைல் சலுகைக்கு போட்டியாக அமைகிறது. இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் மொபைல் சேவைக்கான மாதாந்திர கட்டணம் ரூ. 199 ஆகும். அமேசான் புது சலுகை குறைந்த விலையில் கிடைப்பதோடு, இதனை செயல்படுத்த அமேசான் நிறுவனம் ஏர்டெலுடன் இணைந்துள்ளது.
அதன்படி ஏர்டெல் பயனர்கள் தங்களது மொபைல் நம்பர் மூலம் ஏர்டெல் தேங்ஸ் செயலி வாயிலாக அமேசானில் சைன்-இன் செய்தால் 30 நாட்களுக்கு இலவசமாக பிரைம் வீடியோ மொபைல் சேவையை பெற முடியும்.
இலவச சந்தா நிறைவுற்றதும் பிரைம் வீடியோ மொபைல் எடிஷனிற்கு ரூ. 89 செலித்த வேண்டும். பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் ரூ. 89 விலை சலுகை 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 6 ஜிபி டேட்டா வழங்குகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 5ஜி மற்றும் கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்21 5ஜி மற்றும் கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களை கேலக்ஸி அன்பேக்டு ஆன்லைன் நிகழ்வில் அறிமுகம் செய்தது. இரு ஸ்மார்ட்போன்களில் முறையே 6.2/6.7 இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2x இன்பினிட்டி ஒ பிளாட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 888 / எக்சைனோஸ் 2100 பிராசஸர் வழங்கப்படுகிறது.
இத்துடன் இன் டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.1, கேலக்ஸி எஸ்21 5ஜி மாடலில் 12 எம்பி டூயல் பிக்சல் பிரைமரி சென்சார், 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 64 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி மாடலில் கூடுதலாக டெப்த் சென்சார் வழங்கப்பட்டு உள்ளது.
இரு ஸ்மார்ட்போன்களிலும் 10 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் முறையே 4000 எம்ஏஹெச் மற்றும் 4800 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங், 15 வாட் பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் அம்சம் வழங்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்மார்ட்போன் பேண்டம் வைட், பேண்டம் கிரே, பேண்டம் பின்க் மற்றும் பேண்டம் வைலட் நிறங்களிலும் கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பேண்டம் வைலட், பேண்டம் சில்வர் மற்றும் பேண்டம் பிளாக் நிறங்களிலும் கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி மற்றும் கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி இந்திய விலை விவரம்
கேலக்ஸி எஸ்21 5ஜி 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 69,999
கேலக்ஸி எஸ்21 5ஜி 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 73,999
கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 81,999
கேலக்ஸி எஸ்21 பிளஸ் 5ஜி 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 85,999
இரு ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 29 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட இருக்கிறது.
அதிகபட்சம் 16 ஜிபி ரேம், எஸ் பென் வசதியுடன் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து உள்ளது. இதில் 6.8 இன்ச் குவாட் ஹெச்டி பிளஸ் டைனமிக் AMOLED 2X இன்பினிட்டி ஒடிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 888 / எக்சைனோஸ் 2100 பிராசஸர், இன் டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.1, 108 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 10 எம்பி டெலிபோட்டோ கேமரா, 10 எம்பி பெரிஸ்கோப் லென்ஸ், 3D TOF சென்சார், 40 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஐபி68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங், 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 1,05,999
சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி 16 ஜிபி + 512 ஜிபி மாடல் விலை ரூ. 1,16,999
கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனில் எஸ் பென் வசதி வழங்கப்படுகிறது. எனினும், இதனை விரும்புவோர் தனியாக வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த ஸ்மார்ட்போன் பேண்டம் சில்வர் மற்றும் பேண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு துவங்கி நடைபெறுகிறது.
வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக தமிழர் உருவாக்கி இருக்கும் புதிய செயலி விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் பிரைவசி பாலிசியை மாற்றுவதாக அறிவித்த பின் இந்த செயலிக்கு மாற்றாக வேறு செயலியை பயன்படுத்த இருப்பதாக பலர் தெரிவித்து வந்தனர். வாட்ஸ்அப் பயனர்களில் பலர் சிக்னல், டெலிகிராம் போன்றவற்றை இன்ஸ்டால் செய்து வருகின்றனர்.
எனினும், பலர் இந்தியாவில் உருவான குறுந்தகவல் செயலியை பயன்படுத்தலாமா என பரிசீலனை செய்கின்றனர். இவர்களின் தேடலுக்கு பதில் கொடுக்கும் வகையில், ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அரட்டை செயலி உருவாகி இருக்கிறது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தை ஸ்ரீதர் வேம்பு என்பவர் துவங்கி இருக்கிறார். தற்சமயம் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலி டவுன்லோட்களில் 50 ஆயிரத்தை கடந்து இருப்பதோடு, 4.7 ரேட்டிங் பெற்று இருக்கிறது.
அரட்டை செயலி இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. இதனால் அரட்டை செயலியில் குறுந்தகவல்கள் முழுமையான என்க்ரிப்ஷன் வசதி பெறவில்லை. எனினும், செயலி வெளியாகும் போது இந்த அம்சம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. பயனர் அனுமதி இன்றி அவர்களின் தகவல் வெளியே செல்லாது என அரட்டை தெரிவித்து இருக்கிறது.
எனினும், சேவையை சீராக இயக்க சில தரவுகள் மட்டும் பகிரப்படலாம் என அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது. இத்துடன் பயனரின் சில விவரங்கள் அரசு விதிகளுக்கு உட்பட்டு அரசு நிறுவனங்கள் மற்றும் மூன்றாம் நபர்களுடன் பகிரப்பட நேரிடலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெலிகிராம் குறுந்தகவல் செயலியை பயன்படுத்த 72 மணி நேரத்தில் 2.5 கோடி புது பயனர்கள் இன்ஸ்டால் செய்துள்ளனர்.
வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி விவகாரத்தால் சிக்னல் மட்டுமின்றி டெலிகிராம் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் டெலிகிராம் செயலியை 72 மணி நேரத்தில் மட்டும் 2.5 கோடி பேர் இன்ஸ்டால் செய்துள்ளதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பேவல் டுரோவ் தெரிவித்தார்.
தற்சமயம் டெலிகிராம் செயலியின் மாதாந்திர பயனாளிகள் எண்ணிக்கை 50 கோடி என்றும் அவர் தெரிவித்தார். இது உலகளாவிய எண்ணிக்கை ஆகும். இதில் 38 சதவீத பயனர்கள் ஆசியாவில் இருந்தும், 27 சதவீதம் பேர் ஐரோப்பாவிலும், லத்தீன் அமெரிக்காவில் இருந்து 21 சதவீதம் பேர், மத்திய கிழக்கு மற்றும் 8 சதவீதம் பேர் வட ஆப்ரிக்க பயனர்கள் ஆவர்.

2021, ஜனவரி 6 முதல் ஜனவரி 10 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சிக்னல் செயலியை சுமார் 23 லட்சம் இந்தியர்கள் புதிதாக டவுன்லோட் செய்துள்ளதாக ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதே காலக்கட்டத்தில் டெலிகிராம் செயலியை 16 லட்சம் பேர் புதிதாக டவுன்லோட் செய்து இருக்கின்றனர்.
இரு செயலிகள் அதிக டவுன்லோட்களை பெற்று இருக்கும் நிலையில், வாட்ஸ்அப் செயலியை டவுன்லோட் செய்வோர் எண்ணிக்கை 35 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.
சோனி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிஎஸ்5 முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தது.
சோனி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிளேஸ்டேஷன் 5 (பிஎஸ்5) முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் முழுமையாக விற்றுத்தீர்ந்தது. பிஎஸ்5 முன்பதிவு அமேசான் இந்தியா, க்ரோமா, ப்ளிப்கார்ட், கேம்ஸ் தி ஷாப், ரிலையன்ஸ் டிஜிட்டல், சோனி சென்டர் மற்றும் விஜய் சேல்ஸ் உள்ளிட்ட மையங்களில் நடைபெற்றது.
முன்பதிவு சரியாக 12 மணிக்கு துவங்கிய நிலையில், 12.10 மணிக்கே அனைத்து யூனிட்களும் விற்றுத்தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுவிட்டது. முன்னதாக வெளிநாடுகளிலும் இதேபோன்று பிஎஸ்5 யூனிட்களுக்கு பெரும் தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்5 மட்டுமின்றி, டூயல்சென்ஸ் கண்ட்ரோலர், மீடியா ரிமோட் உள்ளிட்டவைகளையும் முன்பதிவு செய்ய முடியும். இவற்றின் விலை முறையே ரூ. 5,990 மற்றும் ரூ. 2,590 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இதுதவிர பல்ஸ் 3டி வயர்லெஸ் ஹெட்செட், பிஎஸ் ஹெச்டி கேமரா மற்றும் டூயல்சென்ஸ் சார்ஜிங் ஸ்டேஷன் உள்ளிட்ட அக்சஸரீகளின் முன்பதிவு இதுவரை துவங்கப்படாமல் உள்ளது.
சோனி நிறுவனம் உலகின் சிறிய டிரோனை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சோனி நிறுவனம் 2021 சிஇஎஸ் விழாவில் ஏர்பீக் டிரோன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த டிரோனில் ஆல்பா மிரர்லெஸ் கேமராவை பொருத்தி அதிக தரமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். புதிய சோனி ஏர்பீக் உலகின் சிறிய டிரோன் ஆகும்.
ஆல்பா சிஸ்டம் பொருத்தப்படும் பட்சத்தில் இதை கொண்டு பொழுதுபோக்கு துறையில் பல்வேறு புதுமைகளை முயற்சிக்க முடியும். ஏர்பீக் டிரோன் மற்றும் α7S III புல் பிரேம் மிரர்லெஸ் சிங்கில் லென்ஸ் கேமரா கொண்டு எடுக்கப்பட்ட வீடியோவை சோனி வெளியிட்டு இருக்கிறது.

முதற்கட்டமாக வியாபாரங்களுக்கான புதிய தொழில்முறை புகைப்படம் மற்றும் வீடியோ தயாரிப்புக்கான தளத்தை இந்த ஆண்டு வெளியிட சோனி திட்டமிட்டு இருக்கிறது. இந்த திட்டம் பற்றிய புது தகவல்களை அவ்வப்போது வெளியிடுவதாக சோனி தெரிவித்து உள்ளது.
மேலும் தொழில்முறை டிரோன் பயன்பாட்டாளர்களிடம் இருந்து கருத்துக்களை பெற சோனி நிறுவனம் அமெரிக்கா மற்றும் ஜப்பானை சேர்ந்தவர்களிடம் கூட்டு சேர இருப்பதாக அறிவித்து இருக்கிறது.






