என் மலர்
தொழில்நுட்பம்
டாமினோஸ் இந்தியா சர்வெரில் இருந்த சுமார் 18 கோடி பயனர் விவரங்கள் திருடப்பட்டு இருக்கின்றன.
கடந்த மாதம் டாமினோஸ் இந்தியா சர்வெரில் இருந்த 13 டிபி அளவு விவரங்கள் திருடப்பட்டன. இதில் பெயர்கள், மொபைல் போன் நம்பர்கள், மின்னஞ்சல் முகவரி, பேமண்ட் விவரங்கள் மற்றும் சுமார் பத்து லட்சம் கிரெடிட் கார்டு விவரங்கள் இடம்பெற்று இருந்தது.

தற்போது டாமினோஸ் இந்தியாவின் பீட்சா ஆர்டர் விவரங்கள் திருடப்பட்டுள்ளன. இவற்றில் பெயர், மின்னஞ்சல் முகவரி, ஜிபிஎஸ் லொகேஷன் மற்றும் பல்வேறு விவரங்கள் தற்போது ஹேக்கர்கள் வசம் உள்ளன. சுமார் 18 கோடி பயனர் விவரங்கள் இம்முறை திருடப்பட்டு இருக்கிறது.
திருடப்பட்ட தகவல்கள் அனைத்தும் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக சைபர்செக்யூரிட்டி ஆய்வாளர் தெரிவித்து இருக்கிறார். இந்த சம்பவத்தில் வாடிக்கையாளர்களின் நிதி சார்ந்த விவரங்கள் எதுவும் திருடப்படவில்லை என இந்தியாவுக்கான டாமினோஸ் பிரான்சைஸ் வைத்திருக்கும் ஜூபிலன்ட் புட்வொர்க்ஸ் தெரிவித்து இருக்கிறது.
சியோமி நிறுவனம் தனது எம்ஐ ஹாரிசான் எடிஷன் ஸ்மார்ட் டிவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
சியோமி நிறுவனம் எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன் மாடல்களை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த சீரிசில் 32 இன்ச் ஹெச்டி ரெடி மற்றும் 43 இன்ச் புல் ஹெச்டி மாடல்கள் இடம்பெற்று இருந்தது.

இந்த நிலையில், தற்போது புதிய 40 இன்ச் அளவில் ஹாரிசான் எடிஷன் மாடலை ஜூன் 1 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது. புதிய ஸ்மார்ட் டிவி ஹாரிசான் டிஸ்ப்ளே மற்றும் பெசல் லெஸ் டிசைன் கொண்டிருக்கும் என சியோமி உறுதிப்படுத்தி இருக்கிறது.
முந்தைய ஹாரிசான் எடிஷன் மாடல்களில் விவிட் பிக்ச்சர் என்ஜின் வழங்கப்பட்டு இருந்தது. புது மாடலிலும் இந்த அம்சம் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் அதிக ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, 20 வாட் ஸ்பீக்கர்கள், டிடிஎஸ் ஆடியோ மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படலாம்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி பில்ட் இன் குரோம்காஸ்ட், கூகுள் பிளே மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஒன்பிளஸ் சீரிஸ் Y1 40 இன்ச் புல் ஹெச்டி டிவி மாடலை அறிமுகம் செய்தது. புது ஸ்மார்ட் டிவி ஒன்பிளஸ் சினிமேடிக் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு டிவி 9.0, பில்ட் இன் குரோம்காஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் கூகுள் பிளே, கூகுள் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய ஒன்பிளஸ் டிவி பெசல்-லெஸ் டிசைன், 93 சதவீதத்திற்கும் அதிக ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டிருக்கிறது.

ஒன்பிளஸ் Y1 40 இன்ச் அம்சங்கள்
- 43 இன்ச் 1920×1080 பிக்சல் LED டிஸ்ப்ளே
- காமா என்ஜின்
- குவாட்கோர் கார்டெக்ஸ் ஏ53 64-பிட் பிராசஸர்
- மாலி-470MP3 GPU
- 1 ஜிபி ரேம்
- 8 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு டிவி 9.0 மற்றும் ஆக்சிஜன் பிளே
- பில்ட்-இன் கூகுள் அசிஸ்டண்ட்
- வைபை 802.11 a/b/g/n, 2.4GHz, ப்ளூடூத் 5.0 LE, 2x HDMI, 2x யுஎஸ்பி, ஆப்டிக்கல், ஈத்தர்நெட்
- 20W ஸ்பீக்கர், டால்பி ஆடியோ
இந்திய சந்தையில் புதிய ஒன்பிளஸ் Y1 40 இன்ச் மாடல் அறிமுக விலை ரூ. 21,999 ஆகும். மே 29 ஆம் தேதிக்கு பின் இந்த டிவி ரூ. 23,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. முன்னணி வங்கிகளின் கிரெடிட், டெபிட் கார்டு பரிமாற்றங்களுக்கு 12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.
சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த எம்ஐ 11, எம்ஐ 11 ப்ரோ மற்றும் எம்ஐ 11 அல்ட்ரா மாடல்கள் விற்பனை விவரம் வெளியாகி இருக்கிறது.
சியோமி நிறுவனத்தின் எம்ஐ 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச விற்பனையில் 30 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. எம்ஐ 11 சீரிசில் எம்ஐ 11, எம்ஐ 11 ப்ரோ மற்றும் எம்ஐ 11 அல்ட்ரா என மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
ஒட்டுமொத்த விற்பனையில் சீனாவில் மட்டும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் நடைபெற்ற விற்பனை விவரங்கள் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு இருக்கின்றன.

மூன்று மாடல்களும் தனித்தனியே எத்தனை யூனிட்கள் விற்பனையாகின என்ற தகவலை சியோமி வெளியிடவில்லை. சீன சந்தையில் பல்வேறு உயர் ரக மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்யும் சியோமி, விற்பனையிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுதவிர சீனா மட்டுமின்றி ஐரோப்பா உள்பட பல பகுதிகளில் வியாபாரத்தை நீட்டிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவில் சியோமி எம்ஐ 11 சீரிஸ் எம்ஐ 11 எக்ஸ் 5ஜி, எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ 5ஜி மற்றும் எம்ஐ 11 அல்ட்ரா 5ஜி பெயர்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 29,999, ரூ. 39,999 மற்றும் ரூ. 69,999 என துவங்குகிறது.
ரியல்மி நிறுவனத்தின் எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் விரைவில் தனது எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் கொண்டிருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது.
புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த மாடல் ஜூன் மாத முதல் வாரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்தியாவில் ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 27,999 என துவங்கும் என கூறப்படுகிறது.

இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி வேரியண்ட் ரூ. 30,999 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதன் பேஸ் வேரியண்ட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என தெரிகிறது.
அம்சங்களை பொருத்தவரை ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், டூயல் 5ஜி சிம் வசதி கொண்டிருக்கும் என இதுவரை உறுதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர ஆஸ்பால்ட் 9 லெஜண்ட்ஸ் உடன் இணைந்து ந்த ஸ்மார்ட்போனினை ரியல்மி அறிமுகம் செய்கிறது.
உலகின் எந்த பகுதியில் இருந்தாலும், இந்த செயலியை கொண்டு ஒருவர் இருக்கும் பகுதியை மிக துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.
இங்கிலாந்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்கு சென்ற ஜெஸ் டின்ஸ்லி மற்றும் அவர்களின் நண்பர்கள் ஐந்து கிலோமீட்டர்கள் வட்ட பாதையில் தனியாக சென்று மீண்டும் இணைய திட்டமிட்டனர். ஞாயிற்றுக் கிழமையின் மாலை வேளையில் திட்டம் தீட்டிய நிலையில், இரவு நேரம் நெருங்கும் போது நியூடன் அகில்ப் மட்டும் காட்டினுள் தனியாக சிக்கிக் கொண்டார்.
காட்டினுள் சிக்கிக் கொண்ட நிலையில், போன் சிக்னல் கிடைக்கும் பகுதியை நியூடன் அடைந்தார். அங்கிருந்து தனது போனில் அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு உதவி வேண்டும் என தெரிவித்தார். மறுபுறம் அழைப்பை எடுத்தவர் நியூடனிடம் மொபைலில் what3words எனும் செயலியை இன்ஸ்டால் செய்ய கூறினார்.
செயலி இன்ஸ்டால் செய்த சில நிமிடங்களில் காவல் துறையினர் நியூடன் மற்றும் அவர்களது நண்பர்கள் இருந்த பகுதியை கண்டறிந்து அவர்களை மீட்டனர். what3words செயலி ஒருவர் இருக்கும் இடத்தை மிகத்துல்லியமாக மற்றவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த செயலியை உருவாக்கிய டெவலப்பர்கள் பூமி பந்தை 57,00,000 கோடி சதுரங்கங்களாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் பிரத்யேக பெயர் சூட்டி இருக்கின்றனர். அதாவது ஒவ்வொரு பகுதியும் பரப்பளவில் பத்துக்கு பத்து சதுர அடி நிலம் ஆகும். இவை ஒவ்வொன்றுக்கும் மூன்று வார்த்தைகள் கொண்ட பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு பூமி பந்து முழுக்க பத்துக்கு பத்து சதுர அடி வீதம் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டப்பட்டு இருப்பதால், ஒருவர் எங்கிருந்தாலும் மிக எளிமையாக கண்டுபிடிக்க முடியும். இந்த சேவை தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது 40 மொழிகளில் கிடைக்கிறது.
செயலியை பயன்படுத்துவது எப்படி?
- செயலியை இன்ஸ்டால் செய்ததும், அதனை திறந்து சர்ச் பாக்ஸ் பகுதியில் தெருவின் பெயரை பதிவிட வேண்டும்.
- தெருவின் பெயரை பதிவிட்டதும் அந்த பகுதிக்கான மூன்று வார்த்தைகள் கொண்ட முகவரி தெரியும்.
- பின் அங்கு சென்றடைய நேவிகேட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- ஒவ்வொரு முறை பயன்படுத்தும் மூன்று வார்த்தைகள் கொண்ட முகவரி செயலியின் டேஷ்போர்டு பகுதியில் சேமிக்கப்படும்.
- ஒருவர் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள செயலியை திறந்து திரையில் காணப்படும் சதுரங்களில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் சதுரங்கத்தை க்ளிக் செய்ய வேண்டும்.
- இவ்வாறு செய்ததும், அந்த பகுதிக்கான மூன்று வார்த்தைகள் அடங்கிய பெயரை காண முடியும்.
- இந்த செயலியை ஆப்லைன் மோடில் பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.
பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
ஸ்மார்ட் அக்சஸரீ விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமான நாய்ஸ் இந்திய சந்தையில் நாஸ்பிட் ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. இந்த வாட்ச் 1.28 இன்ச் கலர் டச் டிஸ்ப்ளே, 24x7 இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டர், ஸ்டிலெஸ் மாணிட்டர் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
இத்துடன் கைடெட் பிரீத்திங், 14 ஸ்போர்ட்ஸ் மோட்கள், ஆட்டோ ஸ்போர்ட் ரிகக்னீஷன், 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 320 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

நாய்ஸ்பிட் ஆக்டிவ் அம்சங்கள்:
- 1.28 இன்ச் 240x240 பிக்சல் LCD ஸ்கிரீன்
- ப்ளூடூத் 5.0
- கஸ்டமைஸ் மற்றும் கிளவுட் சார்ந்த வாட்ச் பேஸ்
- குறைந்த எடை, பாலிகார்பனைட் ஷெல் மற்றும் சிலிகான் ஸ்டிராப்
- 14 ஸ்போர்ட்ஸ் மோட், கூகுள் பிட் சின்க்
- அக்செல்லோமீட்டர் சென்சார், 24×7 இதய துடிப்பு மாணிட்டரிங்
- SpO2 மாணிட்டர், ஸ்டிரெஸ் மாணிட்டர், பிரீத் மோட்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (5 ATM)
- 320 எம்ஏஹெச் பேட்டரி
- அதிகபட்சம் 7 நாட்கள் பேக்கப்
நாய்ஸ்பிட் ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்ச் ரோபுஸ்ட் பிளாக், ஸ்போர்டி ரெட், பவர் புளூ மற்றும் செஸ்டி கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3499 ஆகும். இது ப்ளிப்கார்ட் மற்றும் கோநாய்ஸ் வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 மாடல் சர்வதேச சந்தையில் புது அங்கீகாரத்தை பெற்று இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 Q1 2021 காலக்கட்டத்தில் உலகின் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. இந்த தகவல் தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. யூனிட்கள் மற்றும் வருவாய் என இரு அடிப்படைகளிலும் ஐபோன் 12 முதலிடம் பிடித்து இருக்கிறது.
சர்வதேச ஸ்மார்ட்போன் விற்பனையில் ஐபோன் 12 மட்டும் 5 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 4 சதவீதமும், ஐபோன் 12 ப்ரோ 3 சதவீதமும், ஐபோன் 11 மாடல் 2 சதவீதமும் பிடித்து இருக்கின்றன.

மற்ற மாடல்களான சியோமி ரெட்மி 9ஏ ஐந்தாவது இடத்திலும், ரெட்மி 9 ஆறாவது இடத்தையும் பிடித்து இருக்கின்றன. சாம்சங் கேலக்ஸி ஏ12 ஏழாவது இடமும், ரெட்மி நோட் 9 எட்டாவது இடமும், கேலக்ஸி ஏ21எஸ் மற்றும் கேலக்ஸி ஏ31 முறையே ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களை பிடித்து இருக்கின்றன.
வருவாய் அடிப்படையில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 12 சதவீத வருவாய் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 11 உள்ளிட்ட மாடல்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா இருக்கிறது.
ஏர்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரி தனது சந்தாதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
இந்தியாவில் ஆன்லைன் பரிமாற்றங்கள் வரலாறு காணாத அளவு அதிகரித்து வருவதால், சைபர் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக ஏர்டெல் தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல், அந்நிறுவன பயானர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.
ஏர்டெல் சந்தாதாரர்களுக்கு இதுகுறித்து அவர் மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில் தற்போது இந்தியாவில் இரண்டு முக்கிய வழிகளில் ஆன்லைன் திருட்டு நடைபெறுவதாக குறிப்பிட்டு இருக்கிறார். முதலில் ஏமாற்றுவோர் ஏர்டெல் ஊழியர்கள் என கூறி பயனர்களுக்கு அழைப்பு மேற்கொள்கின்றனர். மற்றொரு புறம் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பேமன்ட் செய்யும் போது சைபர் குற்றங்கள் அரங்கேற்றப்படுகின்றன.
`கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக ஆன்லைன் பரிவரத்தனைகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதே போன்று சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகிறது,' என விட்டல் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஏர்டெல் ஊழியர்கள் என கூறிக்கொண்டு பயனர்களின் KYC விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என கூறி, டீம் வீவர் மூலம் குவிக் சப்போர்ட் எனும் செயலியை இன்ஸ்டால் செய்து பயனரின் சாதனத்தை இயக்கும் வசதியை திருடர்கள் பெற்று விடுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
இத்துடன் ஏர்டெல் ஊழியர் என கூறி அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் மூலம் மிகமுக்கிய விஐபி எண்களை குறைந்த விலையில் வழங்குவதாக பயனர்களிடம் தெரிவித்து, முன்பணம் செலுத்த கூறுகின்றனர்.
ஏர்டெல் விஐபி எண்களை அழைப்புகளின் மூலம் விற்பனை செய்வதில்லை. மேலும் மூன்றாம் தரப்பு செயலிகளை இன்ஸ்டால் செய்ய ஏர்டெல் எப்போதும் வலியுறுத்தாது என விட்டல் தெரிவித்தார்.
ட்விட்டர் தளத்தில் சமீப காலங்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த புளூ டிக் அம்சம் மீண்டும் வழங்கப்படுகிறது.
சமூக வலைதள சேவைகளில் வெரிபைடு அக்கவுண்ட் பெற ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனி வழிமுறைகளை கொண்டிருக்கின்றன. முன்னதாக ட்விட்டர் தளத்தில் வெரிபிகேஷன் சேவை வழங்கப்பட்டு வந்தது. எனினும், சில பிரச்சினைகள் காரணமாக இந்த சேவை நிறுத்தப்பட்டது.

தற்போது இந்த சேவை மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை வெரிபைடு அக்கவுண்ட் பெறுவதற்கான வழிமுறைகளை ட்விட்டர் மாற்றி அமைத்து இருக்கிறது. அதன்படி ட்விட்டரில் புளூ டிக் பெற கீழே கொடுக்கப்பட்ட அக்கவுண்ட்களில் ஒன்றை வைத்திருக்க வேண்டும்.
- அரசாங்கம்
- நிறுவனங்கள், பிராண்டுகள் மற்றும் அமைப்புகள்
- செய்தி நிறுவனங்கள் மற்றும் செய்தியாளர்கள்
- பொழுதுபோக்கு
- ஸ்போர்ட்ஸ் மற்றும் கேமிங்
- செயற்பாட்டாளர்கள் மற்றும் இதர ஆளுமைகள்
இதுபோன்ற அக்கவுண்ட்கள் மட்டுமின்றி ப்ரோபைல் பெயர், புகைப்படம், உறுதி செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் போன் நம்பர் வைத்திருக்க வேண்டும். மேலும் கடந்த ஆறு மாதங்களில் ட்விட்டர் சேவையை தொடர்ச்சியாக பயன்படுத்தி இருக்க வேண்டும். இத்துடன் ட்விட்டர் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எப்42 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் வைபை அலையன்ஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருகிறது. கேலக்ஸி எப்42 5ஜி மாடல் விவரங்கள் வைபை அலையன்ஸ் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் SM-E426B/DS எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது.

வைபை அலையன்ஸ் வலைதளத்தில் புது ஸ்மார்ட்போன் அம்சங்கள் பற்றி அதிக விவரங்கள் இடம்பெறவில்லை. எனினும், இந்த மாடலில் வைபை 802.11 b/g/n/ac வசதி, ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கிறது. இந்த மாடல் கேலக்ஸி எம்42 5ஜி மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் கேலக்ஸி எம்42 5ஜி மாடலில் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படும் என தெரிகிறது. இந்திய சந்தையில் இந்த மாடல் விலை ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் 2021 ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியாகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சியோமி நிறுவனம் 2021 ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. சர்வதேச சந்தையில் இதுவரை சுமார் 2.5 கோடிக்கும் அதிக ரெட்மி நோட் 8 யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் ரெட்மி நோட் 8 சீரிஸ் விற்பனை சுமார் 3 கோடி யூனிட்களை கடந்ததாக சியோமி தெரிவித்து இருக்கிறது. இந்திய சந்தையிில் ரெட்மி நோட் 8 சீரிஸ் மாடல்கள் 2019 அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்து இதன் மேம்பட்ட மாடல் அறிமுகமாக இருக்கிறது.
புதிய 2021 ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் M1908C3JGG எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. எப்சிசி வலைதளத்தின் படி இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி, 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.






