என் மலர்
தொழில்நுட்பம்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் வெளியீடு குறித்த புது தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் 2021 ஐபோன் சீரிஸ் மாடல்கள் திட்டமிட்டப்படி வெளியாகும் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் சிப் உற்பத்தியில் தாமதம் ஏற்படுவதால், ஐபோன் 13 சீரிஸ் வெளியீடு தாமதமாகும் என கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் வெளியீடு சில மாதங்கள் தாமதமாகின. ஆனால், இந்த ஆண்டு ஐபோன் 13 சீரிஸ் வெளியீடு தாமதமாகாது என தற்போது வெளியான தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் உற்பத்தி துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதே சிப்செட் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட இருக்கிறது. பிராசஸர் உற்பத்தி துவங்கிவிட்ட நிலையில், ஐபோன் 13 சீரிஸ் செப்டம்பர் மாத வாக்கில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் அமலுக்கு வந்துள்ள புதிய சமூக வலைதள விதிமுறைகள் குறித்து கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி கருத்து தெரிவித்தார்.
சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் சா்ச்சைக்குரியதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டும் பதிவுகளை 36 மணி நேரங்களுக்குள் நீக்குவது உள்பட பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மத்திய அரசு அமலாக்கி இருக்கிறது. இதற்கு சில நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுகுறித்து கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியதாவது..,
கூகுள் உள்ளூர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, அரசாங்கங்கள் உடன் இணைந்து பொறுப்பான முறையில் செயல்படுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அரசாங்கங்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்ப ஒழுங்குமுறை நடைமுறைகளை அமலாக்குகின்றன, என கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

"எங்களின் உள்ளூர் அதிகாரிகள் கூகுள் இயங்கி வரும் ஒவ்வொரு நாட்டிலும், அந்நாட்டின் உள்ளூர் விதிகளுக்கு உட்பட்டு அவற்றுக்கு மதிப்பு அளிப்போம். அரசு கோரிக்கைகளை ஏற்கும் விவகாரங்கள் குறித்து எங்களிடம் வெளிப்படையான அறிக்கைகள் உள்ளன. அவற்றை நாங்கள் சம்மந்தப்பட்ட அறிக்கைகளில் குறிப்பிடுவோம்," என அவர் மேலும் தெரிவித்தார்.
"நிறுவனம் என்ற முறையில், சுதந்திரம் மற்றும் வெளிப்படையான இணைய சேவை மற்றும் அது வழங்கும் பலன்களுக்கு மதிப்பளிக்கிறோம். உலகம் முழுக்க ஒழுங்குமுறை ஆணையங்களுடன் இணைந்து பொறுப்பான முறையில் செயல்பட்டு வருகிறோம்," என அவர் தெரிவித்தார்.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் சம்மர் வெளியீட்டு நிகழ்வு விரைவில் நடைபெற இருப்பதாக அறிவித்து உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் சம்மர் வெளியீட்டு நிகழ்வை நடத்த இருக்கிறது. இதற்கான டீசர்களை ஒன்பிளஸ் வெளியிட்டு உள்ளது. இந்த நிகழ்வில் ஒன்பிளஸ் நார்டு புது மாடல் வெளியிடப்படும் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுகுறித்து ஒன்பிளஸ் எந்த தகவலையும் வழங்கவில்லை.

முன்னதாக ஒன்பிளஸ் நார்டு 2 பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருந்தது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் சம்மர் வெளியீட்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம். புதிய நார்டு ஸ்மார்ட்போன் இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் நார்டு 2 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், AMOLED டிஸ்ப்ளே, அதிக ரிப்ரெஷ் ரேட், பாஸ்ட் சார்ஜிங் வசதி, 48 எம்பி அல்லது 64 எம்பி பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமியின் ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புது 5ஜி வேரியண்ட் 6.6 இன்ச் FHD + LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு கொண்டிருக்கிறது. இத்துடன் டிமென்சிட்டி 1100 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. IP53 சான்று பெற்ற ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி, 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி அம்சங்கள்
- 6.6 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD 20:9 டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்
- 2.6GHz ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1100 பிராசஸர்
- ARM G77 MC9 GPU
- 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
- 8 ஜிபி LPDDR4x ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12.5
- டூயல் சிம்
- 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
- 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
- 2 எம்பி 4cm மேக்ரோ கேமரா, f/2.4
- 16 எம்பி செல்பி கேமரா
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- யுஎஸ்பி டைப் சி ஆடியோ
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP53)
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 67W பாஸ்ட் சார்ஜிங், PD/QC சார்ஜிங்
ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கிரீன், வைட் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் விலை 1499 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 17,040 என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை 1999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 22,720 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக் மினி மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் சிலிகான் M1 பிராசஸரை அறிமுகம் செய்த போது, அதனை பயன்படுத்தும் முதல் மூன்று சாதனங்களில் ஒன்றாக மேக் மினி இருந்தது. தற்போது ஆப்பிள் மேம்பட்ட புது மேக் மினி மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய மேக் மினி M1X பிராசஸர், அதிக போர்ட்கள் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புது மேக் மினி ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ரென்டர்களின் படி புது மேக் மினி அளவில் மெல்லியதாக காட்சியளிக்கிறது.

பின்புறம் புதிய மேக் மினி மாடலில் 4 தண்டர்போல்ட் போர்ட்கள், 2 யுஎஸ்பி டைப் ஏ போர்ட்கள், ஈத்தர்நெட் போர்ட் மற்றும் HDMI போர்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் காந்த சக்தி கொண்ட பவர் கனெக்டர் வழங்கப்படும் என தெரிகிறது. இதே போன்ற கனெக்டர் சமீபத்திய ஐமேக் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஆப்பிள் மேக் மினி மாடல், மேம்பட்ட மேக்புக் ப்ரோ லேப்டாப்களுடன் ஜூன் 7 ஆம் தேதி துவங்கி நடைபெற இருக்கும் WWDC 2021 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுஎஸ்பி சி பெற்று இருக்கும் புது அப்கிரேடு மூலம் சாதனங்களை விரைவில் 240W வேகத்தில் சார்ஜ் செய்ய முடியும்.
யுஎஸ்பி டைப் சி போர்ட் முந்தைய தலைமுறை வெர்ஷனில் இருந்து வந்த பல்வேறு பிரச்சினைகளை சரி செய்தது. மேலும் பல்வேறு புது வசதிகளை வழங்கியது. யுஎஸ்பி சி கொண்டு அதிகபட்சம் 100W திறனில் சாதனங்களை சார்ஜ் செய்ய முடிகிறது.

தற்போது யுஎஸ்பி சி கனெக்டர் புது வெர்ஷன் அதிகபட்ச சார்ஜிங் திறனை 100W-இல் இருந்து 240W ஆக அதிகரித்து இருக்கிறது. புதிய 240W சார்ஜிங் திறன் EPR அதாவது Extended Power Range என அழைக்கப்படுகிறது. இதை கொண்டு அதிக திறன் தேவைப்படும் பல்வேறு பெரிய சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும்.
யுஎஸ்பி சி 2.1 வெர்ஷன் சார்ஜிங்கை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. எதிர்காலத்தில் 240W திறன் கொண்ட கேபில்களில், இதனை தெரிவிக்கும் பிரத்யேக ஐகான் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதை கொண்டு கேமிங் லேப்டாப்கள், 4K மாணிட்டர்கள், லேசர் ப்ரின்டர், பெரிய பவர் பேங்க் உள்ளிட்டவைகளை சார்ஜ் செய்யலாம்.
ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் நார்டு 2 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போன் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போனிற்கான சோதனை துவங்கும் என கூறப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் நார்டு 2 அந்நிறுவனத்தின் வலைதளத்தில் தவறுதலாக பட்டியலிடப்பட்டது.
இந்த ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் 8டி, ஒன்பிளஸ் 8 ப்ரோ, ஒன்பிளஸ் நார்டு மற்றும் ஒன்பிளஸ் 9 போன்ற மாடல்கள் இடம்பெற்று இருந்தது. ஒன்பிளஸ் நார்டு 2 சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இது ஜூன் மாத மத்தியில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பிஐஎஸ் சான்று பெற்று இருப்பதால், இது இந்திய சந்தையிலும் அறிமுகமாகும் என தெரிகிறது. மற்ற ஒன்பிளஸ் சாதனங்களுடன் ஒன்பிளஸ் நார்டு 2 இடம்பெற்று இருப்பதை தனியார் செய்தி நிறுவனம் கண்டறிந்து இருக்கிறது.
ஒன்பிளஸ் நார்டு 2 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், AMOLED டிஸ்ப்ளே, அதிக ரிப்ரெஷ் ரேட், பாஸ்ட் சார்ஜிங் வசதி, 48 எம்பி அல்லது 64 எம்பி பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி இந்த மாடல் சர்வதேச சந்தையிலும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
டெக்னோ நிறுவனத்தின் புதிய ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 48 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.
டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போனினை மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்தது. இதில் 6.6 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஹைஒஎஸ் 7.0, 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் கேமரா, ஏஐ லென்ஸ் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. டூ-டோன் பினிஷ் கொண்டிருக்கும் டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.
டெக்னோ ஸ்பார்க் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆல்ப்ஸ் புளூ, ஸ்ப்ரூஸ் கிரீன் மற்றும் மேக்னெட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மாடல் விலை ரூ. 9,999, 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மே 28 ஆம் தேதி முதல் இதன் விற்பனை அமேசானில் துவங்குகிறது.
மத்திய அரசு பிறப்பித்து இருக்கும் புது விதிகளை ஏற்பது குறித்து பேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் பதில் அளித்து இருக்கிறார்.
மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் சமூக வலைதள நிறுவனங்ங்கள், ஓடிடி தளங்களுக்கு புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை வெளியிட்டது. இதன்படி, சமூக வலைதளங்கள் மற்றும் ஓடிடி தளங்களில் சா்ச்சைக்குரியதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டும் பதிவுகளை 36 மணி நேரங்களுக்குள் நீக்க வேண்டும்.
மேலும், குறைகளை உடனக்குடன் நிவா்த்தி செய்ய சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவில் ஒரு அதிகாரி தலைமையில் குறைதீர்க்கும் முறையை செயல்படுத்த வேண்டும். அதுபோல, அவதூறான செய்தியை முதலில் பரப்பும் நபரை சமூக வலைதளங்கள் கண்டறிய வேண்டும்.

புதிய விதிமுறைகளை பின்பற்ற மத்திய அரசு சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மூன்று மாதங்கள் கால அவகாசம் அளித்தது. இதற்கான காலக்கெடு இன்று (மே 25) நிறைவுக்கு வருகிறது. விதிகளுக்கு இணங்காத நிறுவனங்கள் தடை செய்யப்படும் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என மத்திய அரசு எச்சரித்து இருந்தது.
எனினும், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்கள் மத்திய அரசின் புதிய விதிகளுக்கு இதுவரை இணங்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறும் போது, "தகவல் தொழில்நுட்ப துறையின் புதிய விதிகளுக்கு இணங்குவதை நோக்கமாக கொண்டுள்ளோம். எனினும், சில விஷயங்கள் குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறோம். இவை குறித்து அரசுடன் கூடுதலாக ஆலோசிக்க வேண்டியுள்ளது."
"தகவல் தொழில்நுட்ப விதிகளை பின்பற்றுவதோடு, செயல்பாட்டு நடைமுறைகளை அமல்படுத்துவது, செயல்திறனை மேம்படுத்துவது தொடர்பாக பணியாற்றி வருகிறோம். எங்களது தளத்தில் மக்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வெளிப்படுத்த வேண்டும் என்பதில் பேஸ்புக் உறுதியாக உள்ளது”என்றார்.
பயனர்கள் எங்களை புரிந்து கொண்டு பிரைவசி பாலிசையை ஏற்கும் வரை தொடர்ந்து நினைவூட்டுவோம் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
ஆண்டு துவக்கம் முதலே வாட்ஸ்அப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தவிக்கிறது. மேம்பட்ட பிரைவசி பாலிசி விவகாரத்தில் வாட்ஸ்அப் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. கடந்த வாரம் மத்திய அரசு புது பிரைவசி பாலிசி திட்டத்தை கைவிட வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்தது.

தற்போது வாட்ஸ்அப் மத்திய அரசுக்கு பதில் அளித்துள்ளது. மேலும் புது பிரைவசி பாலிசியை பின்பற்றுவதில் உறுதியாக இருப்பதாகவும், இதன் மூலம் அனைத்து சாட்களும் பாதுகாப்பாக இருக்கும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் பிரைவசி தான் எங்களின் மிகமுக்கிய குறிக்கோள் ஆகும்.
புது பிரைவசி பாலிசி மூலம் பயனர்களின் தனிப்பட்ட குறுந்தகவல்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் மூலம் பயனர் விரும்பினால் அவர்கள் எவ்வாறு வியாபார நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்ளலாம். மேலும் புது பிரைவசி பாலிசியை ஏற்காதவர்கள் தொடர்ந்து அனைத்து அம்சங்களை இயக்க முடியும்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய சர்பேஸ் லேப்டாப் பல்வேறு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது சர்பேஸ் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த லேப்டாப் 13.5 இன்ச் மற்றும் 15 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கிறது. இரு மாடல்களிலும் 11th Gen இன்டெல் கோர் பிராசஸர், ஐரிஸ் Xe கிராபிக்ஸ், ஏஎம்டி ரைசன்7 4000 சீரிஸ் மற்றும் ஏஎம்டி ரேடியான் கிராபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் அதிகபட்சம் 16 ஜிபி ரேம், அதிகபட்சம் 512 ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ், டோன்-ஆன்-டோன் அல்கான்ட்ரா மற்றும் மெஷின்டு அலுமினியம் ஆல்-மெட்டல் பினிஷ் செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் 3:2 பிக்சல்சென்ஸ் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளேக்கள், பில்ட்-இன் ஹெச்டி கேமரா, டால்பி அட்மோஸ் ஆம்னிசோனிக் ஸ்பீக்கர்கள் உள்ளன. 13.5 இன்ச் ஏஎம்டி ரைசன் மாடல் 19 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
இந்தியாவில் புதிய சர்பேஸ் லேப்டாப் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 1,02,999 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1,77,499 ஆகும். புதிய சர்பேஸ் லேப்டாப் அமேசான் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 8 2021 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் குளோபல் வலைதளத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 8 2021 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் FHD+LCD ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்டுள்ளது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் புது ரெட்மி ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

ரெட்மி நோட் 8 2021 அம்சங்கள்
- 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
- 1000MHz ARM மாலி-G52 2EEMC2 GPU
- 4 ஜிபி LPPDDR4x ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12.5
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, PDAF, EIS, 0.8μm, LED பிளாஷ், EIS
- 8 எம்பி 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
- 2 எம்பி மேக்ரோ லென்ஸ்
- 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
- 13 எம்பி செல்பி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i)
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப் சி
- 4000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
ரெட்மி நோட் 8 2021 ஸ்மார்ட்போன் நெப்டியூன் புளூ, மூன்லைட் வைட் மற்றும் ஸ்பேஸ் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சியோமி குளோபல் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.






