என் மலர்
தொழில்நுட்பம்
வாட்ஸ்அப் செயலியில் அறிவிக்கப்பட்ட புது பிரைவசி பாலிசி குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அந்நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
வாட்ஸ்அப் செயலியின் புது பிரைவசி பாலிசி சர்ச்சை தொடர்கதையாக இருக்கிறது. புதிய பிரைவசி பாலிசி திட்டத்தை கைவிட வலியுறுத்தி வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
புதிய பிரைவசி பாலிசி மற்றும் அதனை அறிமுகப்படுத்தும் வழிமுறைகள் தகவல் தனியுரிமை, டேட்டா பாதுகாப்பு, பயனர் விருப்பம் உள்ளிட்ட மதிப்புகளை குறைக்கிறது. மேலும் இது இந்திய குடிமக்களின் உரிமை மற்றும் விருப்பங்களை பாதிக்கிறது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மத்திய அமைச்சகத்தின் கடிதத்திற்கு பதில் அளிக்க வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. திருப்திகரமான பதில் கிடைக்காத பட்சத்தில் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மத்திய அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
வாட்ஸ்அப் அறிவித்து இருக்கும் புது பிரைவசி பாலிசி மாற்றங்கள் ஏற்கனவே அமலில் இருக்கும் பல்வேறு இந்திய சட்ட விதிகளை மீறும் வகையில் இருக்கிறது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பிரவுசர் சேவைக்கான ஆதரவை நிறுத்தப்போவதாக அறிவித்து இருக்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு முதல் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சேவைக்கான ஆதரவை நிறுத்த துவங்கியது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சேவை ஆரம்ப காலத்தில் அதிக பிரபலமான பிரவுசராக இருந்தது.

விண்டோஸ் 10 இயங்குதளத்தின் சில வெர்ஷன்களில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 டெஸ்க்டாப் செயலிக்கான ஆதரவு ஜூன் 15, 2022 முதல் நிறுத்தப்படும் என மைக்ரோசாப்ட் தெரிவித்து இருக்கிறது. மைக்ரோசாப்ட் எட்ஜ் அதிக திறன் கொண்டிருப்பதால் இந்த முடிவை அந்நிறுவனம் எடுத்ததாக தெரிகிறது.
2003 ஆம் ஆண்டு இணைய சேவையில் 95 சதவீதம் பேர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்தினர். எனினும், 2004 மற்றும் 2008 ஆண் ஆண்டுகளில் துவங்கப்பட்ட பயர்பாக்ஸ் மற்றும் கூகுள் க்ரோம் பிரவுசர்கள் அறிமுகமானதும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சேவைக்கான பயனர்கள் எண்ணிக்கை குறைய துவங்கியது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்21 5ஜி ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் ஜப்பான் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்பெஷல் எடிஷன் மாடல் பேண்டம் புளூ பேக் பேனல் மற்றும் கோல்டு அக்சென்ட்களை கொண்டிருக்கிறது.

இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒலிம்பிக் லோகோ இடம்பெற்று இருக்கிறது. தோற்றம் தவிர கேலக்ஸி எஸ்21 5ஜி ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் மாடலின் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.
எனினும், இதன் விற்பனை ஜூன் மாத வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வருமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இன்பினிக்ஸ் நிறுவனம் ஹாட் சீரிசில் புதிய ஸ்மார்ட்போன் மாடலினை பட்ஜெட் பிரிவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
இன்பினிக்ஸ் மொபிலிட்டி நிறுவனத்தின் புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஹாட் சீரிசில் அறிமுகமாகி இருக்கிறது. இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் 6.82 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.

இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் கேமரா, ஏஐ லென்ஸ் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 11 சார்ந்த எக்ஸ் ஒஎஸ் கொண்டிருக்கும் ஹாட் 10எஸ் மாடலில் டூயல் சிம் ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
மேலும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ டூயல் சிம் ஸ்லாட், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. புதிய இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போன் மொராண்டி கிரீன், 7° பர்பிள், ஹார்ட் ஆப் ஓசன் மற்றும் 95° பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 9,999 என்றும் 6 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 10,999 ஆகும். இதன் விற்பனை மே 27 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது. முதல் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
போக்கோ நிறுவனத்தின் எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
போக்கோ நிறுவனம் தனது போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் FHD+ 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, டிமென்சிட்டி 700, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார், டூயல் சிம் ஸ்லாட், 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது.

போக்கோ எம்பி 3 ப்ரோ 5ஜி அம்சங்கள்
- 6.5 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசசஸர்
- மாலி G57 MC2 GPU
- 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி (UFS 2.2) மெமரி
- 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12
- டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பவர் பிளாக், கூல் புளூ மற்றும் போக்கோ எல்லோ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை 179 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 15,995, 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை 199 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 17,780 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
லெனோவோ நிறுவனத்தின் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
லெனோவோ நிறுவனம் சமீபத்தில் தனது லீஜியன் 2 ப்ரோ கேமிங் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் புதிய 18 ஜிபி ரேம், 412 ஜிபி மெமரி வேரியண்ட் மே 20 ஆம் தேதி அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்த மாடல் சீன சந்தையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

புதிய லீஜியன் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, இரண்டு யுஎஸ்பி டைப் சி போர்ட்கள், இரட்டை பேன்கள் மற்றும் 5500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கின்றன.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் கேமிங்கிற்காக அல்ட்ராசோனிக் ஷோல்டர் ட்ரிகர்கள் மற்றும் கேபாசிட்டிவ் பேக் கீ கொண்டிருக்கிறது. பிரத்யேக வடிவமைப்பு கொண்டிருக்கும் லீஜியன் 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பாப்-அப் ரக கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய டிராவல் கீபோர்டு விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட் கீபோர்டு ட்ரியோ 500 மாடலின் விலை 45 யூரோக்கள் என அந்நிறுவனத்தின் ஜெர்மனி வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. முந்தைய தகவல்களில் இந்த கீபோர்டு மே மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என கூறப்பட்டது. எனினும், இதன் விற்பனை ஜூன் மாதம் தான் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

புதிய ட்ரியோ 500 கீபோர்டை ஒரே சமயத்தில் பல்வேறு சாதனங்களுடன் இணைக்க முடியும். இதனை ப்ளூடூத் மூலம் மூன்று வெவ்வேறு சாதனங்களுடன் இணைக்க முடியும். பின் மிக எளிதில் ஒவ்வொரு சாதனத்துடன் மாற்றி பயன்படுத்தலாம். மேலும் சாம்சங் டிராவல் கீபோர்டு பல்வேறு ஷார்ட்கட்கள் உள்ளன.
இந்த அம்சம் கொண்டு கீபோர்டில் உள்ள மூன்று பட்டன்களை கொண்டு அதிகம் பயன்படுத்தும் செயலிகளை ஒரே க்ளிக் மூலம் இயக்க முடியும். சாம்சங் கீபோர்டு ட்ரியோ 500 கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட் சாதனங்களுடன் டெக்ஸ் மோடில் இயக்கலாம். இந்த சாதனத்தை லேப்டாப் உடன் இணைக்க முடியும்.
ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வேண்டுமென்றே பாகுபாடு காட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் அந்நிறுவன சிஇஒ விளக்கம் அளிக்க இருக்கிறார்.
உலகளவில் மிகவும் பிரபலமான கேம்களில் ஒன்றாக போர்ட்நைட் இருக்கிறது. இதனை எபிக் கேம்ஸ் எனும் நிறுவனம் உருவாக்கியது. ஆப் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் சாதனங்களில் செயலிகளை பட்டியலிடுவதில் ஆப்பிள் நிறுவனம் பாகுபாடு காட்டுவதாக எபிக் கேம்ஸ் குற்றஞ்சாட்டியது மட்டுமின்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
வழக்கு விசாரணையில் பங்கேற்று ஆப்பிள் தரப்பில் விளக்கம் அளிக்க அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளான பில் ஸ்கில்லர் மற்றும் க்ரியக் பெடரிகி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதோடு ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் இந்த வாரமோ அல்லது அடுத்த வாரத்திலோ வழக்கு விசாரணையில் கலந்து கொண்டு பதில் அளிக்க இருக்கிறார்.

இந்த நிலையில், வழக்கு விசாரணையில் பதில் அளிக்க டிம் குக் பயிற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கென முன்னாள் வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவை டிம் குக் சட்ட வல்லுநர் குழு நியமித்து இருப்பதாக கூறப்படுகிறது. பயிற்சியின் போது பல கட்டங்களில் நடைபெறும் என தெரிகிறது.
விசாரணையின் போது ஆப் ஸ்டோர் நடவடிக்கைகளை டிம் குக் ஆதரித்து பதில் அளிப்பார் என கூறப்படுகிறது. இந்த விசாரணை மொத்தத்தில் 100 நிமிடங்களுக்கு நடைபெறும் என கூறப்படுகிறது.
அசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 5 ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
அசுஸ் நிறுவனம் ரோக் போன் 5 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் வைட் நிற வேரியண்ட்டை விற்பனைக்கு அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 49,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
புதிய ரோக் போன் மாடல் இரண்டு மாதங்களுக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இதன் 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விற்பனை விவரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. மேலும் ரோக் போன் 5 ப்ரோ மற்றும் அல்டிமேட் வெர்ஷன்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

அசுஸ் ரோக் போன் 5 அம்சங்கள்
- 6.78 இன்ச் 2448×1080 பிக்சல் FHD+ 144Hz OLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
- அட்ரினோ 660 GPU
- 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி
- 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரோக் யுஐ
- டூயல் சிம் ஸ்லாட்
- 64 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8
- 13 எம்பி 125˚ அல்ட்ரா வைடு கேமரா, f/2.4
- 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.0
- 24 எம்பி செல்பி கேமரா, 0.9µm, f/2.0
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
- யுஎஸ்பி டைப் சி
- 6000 எம்ஏஹெச் பேட்டரி
- 65 வாட் ஹைப்பர் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்
மும்பையை சேர்ந்த சிறுவன் உருவாக்கி இருக்கும் நிலவின் முப்பரிமாண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சிறுவன் நிலவின் முப்பரிமாண படத்தை உருவாக்கி இருக்கிறான். இதற்கு அந்த சிறுவன் சுமார் 50 ஆயிரம் படங்களை ஒருங்கிணைத்து இருக்கிறான்.
பூனேவை சேர்ந்த பிரதமேஷ் ஜாஜு எனும் சிறுவன் தன்னை வளரும் வானியலாளர் என கூறுகிறார். நிலவின் முப்பரிமாண படத்தை உருவாக்க அதிக புகைப்படங்களை இயக்கும் போது தனது லேப்டாப் கிட்டத்தட்ட பாழாகிவிட்டதாக பிரதமேஷ் தெரிவித்தார்.
ஒருங்கிணைக்கப்பட்ட படங்களின் ஒட்டுமொத்த அளவு 186 ஜிபி ஆகும். ஒருங்கிணைக்கப்பட்ட படம் 50 எம்பி அளவில் இருந்தது. பின் மொபைல் போனில் பார்க்க ஏதுவான புகைப்படத்தின் அளவை குறைக்கப்பட்டு இருக்கிறது. அதிக ரெசல்யூஷன் கொண்ட படத்தில் நிலவின் பரப்பளவு மிக சிறப்பாக காட்சியளிக்கிறது.
இந்த படம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பதை பிரதமேஷ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார். இதே புகைப்படம் சிறுவனின் ரெடிட் அக்கவுண்டிலும் பகிரப்பட்டு இருக்கிறது. சிறுவனின் முயற்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆப்பிள் மியூசிக் சேவை குறித்த புது அறிவிப்பை அந்நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் மியூசிக் செயலி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆப்பிள் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. டீசரில் ஆப்பிள் மியூசிக் லோகோ மட்டுமே இடம்பெற்று இருக்கிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் மியூசிக் செயலியில் லாஸ்லெஸ் மற்றும் ஹை ரெஸ் லாஸ்லெஸ் என இரு அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக ஐஒஎஸ் 14.6 தளத்தின் குறியீடுகளில் லாஸ்லெஸ் ஆடியோ அம்சத்தை குறிக்கும் குறியீடுகள் இடம்பெற்று இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
தற்போது ஆப்பிள் மியூசிக் செயலியில் ஏஏசி கோடெக் மூலம் அதிகபட்சம் 256kbps ஸ்டிரீமிங் செய்வதற்கான வசதி வழங்கப்படுகிறது. ஆப்பிள் மியூசிக் ஆண்ட்ராய்டு செயலியிலும் லாஸ்லெஸ் மியூசிக் வசதி வழங்கப்பட இருக்கிறது. லாஸ்லெஸ் தரத்தில் மூன்று நிமிட ஆடியோ 36 எம்பி அளவிலான டேட்டாவை பயன்படுத்தும் என கூறப்படுகிறது.
சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 10 சீரிஸ் இதுவரை பிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
எனினும், ரெட்மி நோட் 10 ப்ரோ மாடலுக்கு மட்டும் பிளாஷ் விற்பனையை நிறுத்த சியோமி முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் இனி ஓபன் சேல் விற்பனை செய்யப்படுகிறது. ஓபன் சேல் மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போனின் விலையும் குறைக்கப்பட்டு இருக்கிறது.
விலை குறைப்பின் படி ரெட்மி நோட் 10 ப்ரோ விலை ரூ. 17,999 இல் இருந்து தற்போது ரூ. 15,999 ஆக மாறி இருக்கிறது. இந்திய சந்தையில் ரெட்மி நோட் 10 ப்ரோ மாடல் 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

ரெட்மி நோட் 10 ப்ரோ புது விலை பட்டியல்:
ரெட்மி நோட் 10 ப்ரோ 6 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 15,999
ரெட்மி நோட் 10 ப்ரோ 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 16,999
ரெட்மி நோட் 10 ப்ரோ 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 18,999
அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 16 எம்பி செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 732 ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும் 5020 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.






