என் மலர்
தொழில்நுட்பம்
ரியல்மி நிறுவனம் தனது புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி ஜிடி 5சி ஸ்மார்ட்போன் ஜூன் மாதத்தில் சர்வதே சந்தையில் வெளியாகும் என ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதன் விற்பனை முதலில் ஐரோப்பாவில் துவங்கும் என்றும் ரியல்மி அறிவித்தது. முன்னதாக மார்ச் மாத வாக்கில் இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ரியல்மி 5ஜி நிகழ்வில் ஜூலை மாத வாக்கில் ரியல்மி ஜிடி கேமரா பிளாக்ஷிப் மாடல் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. இந்த நிகழ்வு துவங்கும் முன் ரியல்மி ஜிடி 5ஜி மாடல் விரைவில் அறிமுகமாகும் என ரியல்மி இந்தியா வலைதளத்தில் பதிவிடப்பட்டு இருந்தது. எனினும், தற்போது இந்த பதிவு நீக்கப்பட்டு ஐரோப்பாவுக்கான ரியல்மி தளத்தில் மட்டும் இடம்பெற்று இருக்கிறது.
அந்த வகையில், ரியல்மி ஜிடி 5ஜி மாடல் இம்மாதம் இந்தியாவில் அறிமுகமாகாது என தெரிகிறது. கடந்த ஆண்டு மட்டும் உலகின் 21 நாடுகளில் ரியல்மி 14 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகப்படுத்த ரியல்மி திட்டமிட்டுள்ளது. அதன்படி உலகின் 50 நாடுகளில் சுமார் 20-க்கும் அதிக மாடல்களை அறிமுகம் செய்ய ரிய்லமி திட்டமிட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் 5ஜி உபகரணங்களை உற்பத்தி செய்கின்றன.
ஜியோ மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து 5ஜி நெட்வொர்கிங்கை கட்டமைப்பதற்கு தேவையான உபகரணங்களை உற்பத்தி செய்ய இருப்பதாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தெரிவித்து உள்ளது. முன்னதாக இரு நிறுவனங்கள் இணைந்து 5ஜி சார்ந்து இயங்கும் இன்டர்பேஸ் ஒன்றை உருவாக்கின.
இதன் மூலம் ஜியோ 5ஜி சேவையில் 1Gbps வரையிலான இணைய வேகம் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டது. இத்துடன் குவால்காம் நிறுவனம் ஜியோ பிளாட்பார்ம்ஸ்-இல் சுமார் 97 மில்லியன் டாலர்களை முதலீடு செய்தது. ஜியோ மட்டுமின்றி குவால்காம் நிறுவனம் பாரதி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்துவதில் இந்தியா முன்னோடியாக உள்ளது. டிஜிட்டல் தளங்களை வெளியிடுவது, உள்நாட்டில் உற்பத்தியாகும் அடுத்த தலைமுறை 5ஜி சேவை வெளியிடும் பணிகள் மும்முரமார நடைபெறுகிறது. இதன்மூலம் எல்லா இடங்களிலும் குறைந்த விலையில் 5ஜி சேவையை வழங்கப்பட இருக்கிறது.
5ஜி தொழில்நுட்பத்தின் மூலம் இந்திய சந்தாதாரர்கள் அதிக டேட்டா ரேட், குறைந்த லேடென்சியில் தகவல் பரிமாற்றம், மேம்பட்ட டிஜிட்டல் அனுபவங்களை பல்வேறு கனெக்டெட் சாதனங்கள், 5ஜி ஸ்மார்ட்போன்கள், லேப்டாப் மற்றும் பல்வேறு சாதனங்கள் மூலம் பெற முடியும்.
அமேசான் நிறுவனம் துவங்க இருக்கும் புது சேவை இந்தியாவில் பிராட்பேண்ட் கட்டணத்தை குறைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
அமேசான் நிறுவனம் இந்தியாவில் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவையை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் வான்வெளியில் இருந்தபட் இணைய சேவையை அதிவேகமாக வழங்க முடியும்.
ஏற்கனவே எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் பாரதி ஏர்டெல் குழுமத்தின் ஒன் வெப் போன்ற நிறுவனங்கள் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவையை வழங்க திட்டமிட்டு அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளன. செயற்கைக்கோள் சார்ந்த இணைய சேவை மூலம் தற்போதுள்ள இணைய கட்டணங்களை பெருமளவு குறையும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுவித இணைய சேவையை வழங்க அரசிடம் இருந்து பெற வேண்டிய அனுமதி, செயற்கைக் கோள் பேண்ட்வித் பயன்பாட்டு கட்டணம், இதர உரிமைகள் குறித்து அரசாங்கத்துடன் விவாதிக்க அமேசான் திட்டமிட்டுள்ளதாக இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தொலைதொடர்பு துறை மற்றும் வான்வெளி துறை அதிகாரிகளுடன் அமேசான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. முறையான அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அமேசானின் பிராஜக்ட் குயிபெர் திட்டத்தின் கீழ் இந்தியாவில் அதிவேக பிராட்பேண்ட் சேவை துவங்கப்படும்.
பிராஜக்ட் குயிபெர் திட்டத்தில் அமேசான் 10 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 7,31,32,10,00,000) முதலீடு செய்கிறது. இதை கொண்டு பூமி சுற்றுப்பாதையின் குறைந்த உயரத்தில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த அமேசான் திட்டமிட்டுள்ளது. எனினும், இதுகுறித்து அமேசான் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் பயனர்கள் புது அப்டேட் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
ஐஒஎஸ் 14.6 அப்டேட் செய்ததில் இருந்து ஐபோன் பேட்டரி வெகு விரைவில் தீர்ந்து போவதாக பயனர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த அப்டேட் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. புது அப்டேட் ஆப்பிள் கார்டு பேமிலி, ஆப்பிள் பாட்காஸ்ட் சந்தா, ஏர்டேக் மற்றும் பல்வேறு அம்சங்களை வழங்கியது.

புது அம்சங்கள் தவிர சில பிழை திருத்தங்களையும் இந்த அப்டேட் வழங்கியது. எனினும், சமீபத்திய அப்டேட் ஐபோனின் பேட்டரியை விரைவில் தீர்ந்து போக செய்கிறது. பேட்டரி பிரச்சினையை ஐபோன் பயனர்கள் ஆப்பிள் சப்போர்ட் போரம் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.
ஐபோன் XS பயனர் ஒருவர் தனது மொபைலில் உறங்கும் முன் முழு சார்ஜ் செய்த போதும், காலையில் பேட்டரி அளவு 30 சதவீதம் வரை குறைந்ததாக தெரிவித்துள்ளார். ஐபோனினை பயன்படுத்தாத நிலையிலும் 70 சதவீத சார்ஜ் காலியானதாக அவர் தெரிவித்தார்.
நாங்க அந்த சேவையை வழங்குவதில்லை, இதனால் அதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூகுள் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த கூகுள் நிறுவனம் புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் எங்களுக்கு பொருந்தாது என தெரிவித்துள்ளது. இணையத்தில் உள்ள தரவை நீக்க டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு கூகுள் இவ்வாறு பதில் அளித்து இருக்கிறது.

பெண் ஒருவரின் ஆபாச புகைப்படங்கள் ஆபாச வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும், புகைப்படங்கள் இணையத்தில் இருந்து நீக்கமுடியாத சூழல் நிலவுகிறது. இதுகுறித்து நீதிபதி ஜோதி சிங் மத்திய அரசு, டெல்லி அரசு, இணைய சேவை வழங்குநர் ஆணையம், பேஸ்புக் உள்ளிட்டவைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த விவகாரத்தில் கூகுள் தெரிவித்து இருக்கும் கருத்துக்கு பதில் அளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூகுள் சமூக வலைதள நிறுவனம் இல்லை என தெரிவித்ததால், நீதிமன்றம் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. கூகுள் சமூக வலைதள நிறுவனங்களுக்கு பாலமாக விளங்குவதாக நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது.
போக்கோ பிராண்டின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகிறது.
போக்கோ நிறுவனம் இந்தியாவில் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை ஜூன் 8 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 10 5ஜி பெயரில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஐரோப்பாவில் இதன் துவக்க விலை 179 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 15,995 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி 8 5ஜி மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

போக்கோ எம்3 ப்ரோ 5ஜி அம்சங்கள்
- 6.5 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்
- மாலி G57 MC2 GPU
- 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி (UFS 2.2) மெமரி
- 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
- மெமரியை கடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12
- டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
- 8 எம்பி செல்பி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
ரியல்மி நிறுவனத்தின் டிசோ பிராண்டின் கீழ் புது பீச்சர் போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ரியல்மி நிறுவனத்தின் துணை பிராண்டாக டிசோ கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டிசோ பிராண்டின் கீழ் ஐ.ஒ.டி. எனப்படும் இண்டர்நெட் ஆப் திங்ஸ் சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ரியல்மி அறிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து டிசோ கோபாட்ஸ் மற்றும் டிசோ வாட்ச் விவரங்கள் அந்நிறுவன வலைதளத்தில் இடம்பெற்று இருந்தன.
இரண்டும் ரியல்மி பட்ஸ் ஏர் 2 மற்றும் ரியல்மி வாட்ச் சாதனங்களின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடல்கள் என தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், டிசோ ஸ்டார் 500 மற்றும் ஸ்டார் 300 பெயரில் புது பீச்சர் போன் மாடல்கள் சீனாவின் 3சி மற்றும் எப்சிசி சான்றுகளை பெற்று இருக்கின்றன.

டிசோ ஸ்டார் 500 மாடலில் பெரிய திரை, கீபேட் காணப்படுகிறது. இதில் டூயல் சிம் வசதி, டூயல் பேண்ட் 2ஜி கனெக்டிவிட்டி, ஒற்றை பிரைமரி கேமரா, மொபைலின் பின்புறம் டிசோ பிராண்டிங் மற்றும் 1830 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
டிசோ ஸ்டார் 300 மாடலில் சிறிய ஸ்கிரீன், கீபேட் காணப்படுகிறது. பின்புறம் ஒற்றை கேமரா, எல்இடி பிளாஷ், பெரிய ஸ்பீக்கர் கிரில், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட், 2500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் குறைந்த விலை பிரீபெயிட் சலுகை மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 98 பிரீபெயிட் சலுகையை மீண்டும் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். இதில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ. 98 பிரீபெயிட் சலுகையை ரிலையன்ஸ் ஜியோ நிறுத்தியது. இம்முறை இதன் வேலிடிட்டி பாதியாக குறைக்கப்பட்டு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அன்றாடம் வழங்கப்படும் அதிவேக டேட்டா தீர்ந்ததும், டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்பட்டுவிடும்.
ஜியோ ரூ. 101 சலுகையில் அதிகபட்சம் 12 ஜிபி டேட்டா, 1362 ஐயுசி நிமிடங்களுக்கான டாக்டைம் வழங்கப்படுகிறது. ஜியோவின் புது அறிவிப்பை தொடர்ந்து, ஏர்டெல், வி மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் ரூ. 98 விலையில் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சேவையை வழங்குகின்றன.
சியோமி நிறுவனத்தின் புதிய 40 இன்ச் FHD டிவி இந்திய சந்தையில் நாளை விற்பனைக்கு வர இருக்கிறது.
சியோமி நிறுவனம் எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன் 40 இன்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 40 இன்ச் FHD ஸ்கிரீன், ஹாரிசான் டிஸ்ப்ளே, மெல்லிய டிஸ்ப்ளே, விவிட் பிக்சர் என்ஜின் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த டிவி பேட்ச் வால் கொண்டிருக்கிறது. இது 25-க்கும் அதிக ஒடிடி தளங்களில் இருந்து பயனர் பார்த்து ரசிக்க விரும்பும் தரவுகளை ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியோடு பரிந்துரை செய்யும். மேலும் இதில் பில்ட் இன் குரோம்காஸ்ட், கூகுள் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.

எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன் 40 இன்ச் அம்சங்கள்
- 40 இன்ச் 1920x1080 பிக்சல் FHD டிஸ்ப்ளே
- 1.5GHz குவாட்கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ் ஏ 53 பிராசஸர்
- 750MHz மாலி-450 MP3 GPU
- ஆண்ட்ராய்டு டிவி 9.0 மற்றும் பேட்ச்வால்
- 1 ஜிபி DDR4 டூயல் சேனல் ரேம்
- 8 ஜிபி மெமரி (eMMC 5.1)
- MIUI டிவி சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்
- எம்ஐ குயிக் வேக்
- வைபை, ப்ளூடூத், 3 x HDMI, AV, USB 2.0 x 2, ஈத்தர்நெட்
- 2 x 10W ஸ்பீக்கர், DTS-HD
எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன் 40 இன்ச் மாடல் விலை ரூ. 23,999 ஆகும். இதன் விற்பனை ப்ளிப்கார்ட், எம்ஐ வலைதளம், எம்ஐ ஹோம், எம்ஐ ஸ்டூடியோ மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் நாளை துவங்குகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு கொண்டு பணம் செலுத்துவோருக்கு ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஹானர் நிறுவனத்தின் புதிய பிட்னஸ் டிராக்கர் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஹானர் பிராண்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹானர் பேண்ட் 6 பிட்னஸ் டிராக்கரை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. பின் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் பேண்ட் 6 அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த பிட்னஸ் டிராக்கர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கிறது.
ஹானர் பேண்ட் 6 மாடலில் 1.47 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இது வழக்கமான பிட்னஸ் டிராக்கர்களில் இருப்பதை விட 148 சதவீதம் பெரிய டிஸ்ப்ளே ஆகும். இதன் வலதுபுறத்தில் சிவப்பு நிற பட்டன் உள்ளது. இடதுபுறத்தில் ஹானர் பிராண்டிங் கொண்டிருக்கிறது.

வாட்ச் பேஸ் ஸ்டோரில் கிடைக்கும் வாட்ச் பேஸ்களில் பயனர் விரும்புவதை தேர்வு செய்து வைத்துக் கொள்ளும் வசதி ஹானர் பேண்ட் 6 மாடலில் உள்ளது. இத்துடன் ஆல்பம் போட்டோவையும் வாட்ச் பேஸ் ஆக வைத்துக் கொள்ளலாம். சராசரி பயன்பாடுகளின் போது இந்த பிட்னஸ் டிராக்கர் 14 நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது.
இந்த பிட்னஸ் டிராக்கரில் SpO2 ஆக்சிஜன் டிராக்கர், 24 மணி நேர இதய துடிப்பு சென்சார், ஸ்லீப் மாணிட்டர், பத்துவித உடற்பயிற்சிகளை டிராக் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. மேலும் சில உடல் நடவடிக்கைகளை தானாக கண்டறியும் வசதி இதில் உள்ளது.
ஐகூ நிறுவனத்தின் புதிய இசட்3 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 768ஜி பிராசஸருடன் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் முதல் ஸ்மார்ட்போன் ஐகூ இசட்3 என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இசட்3 மாடலுக்கென மைக்ரோசைட் அமேசான் உருவாக்கப்பட்டு உள்ளது.
புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்வது மட்டுமின்றி சிறப்பு போட்டி ஒன்றை நடத்துகிறது. இதில் வெற்றி பெறுவோருக்கு ஐகூ இசட்3 ஸ்மார்ட்போன் பரிசாக வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

அமேசான் தளத்தில் ஐகூ இசட்3 மைக்ரோசைட் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியிடப்படுகிறது. புதிய ஐகூ இசட்3 ஸ்மார்ட்போன் ஜூன் 8 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.
அம்சங்களை பொருத்தவரை ஐகூ இசட்3 மாடலில் 6.58 இன்ச் FHD+ 1080x2408 பிக்சல் LCD டிஸ்ப்ளே, 120Hz ஸ்கிரீன், ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 768ஜி பிராசஸர், அட்ரினோ 620 GPU, அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி சென்சார், 16 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5ஜி, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப் சி, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 4400 எம்ஏஹெச் பேட்டரி, 55 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.
சியோமி நிறுவனம் ஹைப்பர்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சியோமி 200 வாட் ஹைப்பர்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இது 4000 எம்ஏஹெச் பேட்டரியை 8 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். இத்துடன் 120 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.
Charge up to 100% in just 8 minutes using wired charging and 15 minutes wirelessly! #XiaomiHyperCharge
— Xiaomi (@Xiaomi) May 31, 2021
Too good to be true? Check out the timer yourself! #InnovationForEveryonepic.twitter.com/muBTPkRchl
இது 4000 எம்ஏஹெச் பேட்டரியை 15 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். முன்னதாக சியோமி அறிமுகம் செய்த எம்ஐ 10 அல்ட்ரா மாடலில் 80 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டது. புது அறிவிப்பின் மூலம் 100 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அறிமுகம் செய்த முதல் நிறுவனமாக சியோமி இருக்கிறது.
200 வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை சியோமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது. பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கும் வீடியோவையும் சியோமி வெளியிட்டு இருக்கிறது. வீடியோவில் 4000 எம்ஏஹெச் பேட்டரி 10 சதவீதம் சார்ஜ் ஆக 44 நொடிகளே ஆகிறது. மேலும் மூன்று நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் ஆகிவிடும்.






