என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு விளம்பர நோக்கில் புது சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 45 விலையில் முதல் ரீசார்ஜ் கூப்பன் (first recharge coupon) சலுகையை அறிவித்து இருக்கிறது. இது விளம்பர நோக்கில் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் பயனர்களுக்கு 10 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 45 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

     கோப்புப்படம்

    45 நாட்கள் வேலிடிட்டி நிறைவுற்றதும், பயனர்கள் தற்போது வழங்கப்படும் இதர சலுகைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். புதிய அறிமுக சலுகை ஆகஸ்ட் 6 வரை வழங்கப்படும் என பி.எஸ்.என்.எல். அறிவித்து இருக்கிறது. இதுதவிர ஜூலை 31 ஆம் தேதி வரை இலவச சிம் சலுகையை பி.எஸ்.என்.எல். வழங்கி வருகிறது.

    புதிய சலுகை மட்டுமின்றி பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 249 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இது 60 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புது மேக்புக் ப்ரோ மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    ஆப்பிள் மேக்புக் ப்ரோ புது மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், சந்தை வல்லுநரான மிங்-சி கியோ புது டிசைன், மினி-எல்.இ.டி. டிஸ்ப்ளே கொண்ட மேக்புக் ப்ரோ மாடலை ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யும் என தெரிவித்து இருக்கிறார்.

     மேக்புக் ப்ரோ

    மேலும் புதிய 14 இன்ச் மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களுக்கான உற்பத்தி மூன்றாவது காலாண்டு வாக்கில் துவங்கும் என அவர் தெரிவித்தார். இதுதவிர மினி-எல்.இ.டி. டிஸ்ப்ளே பேனல்களை பெற ஆப்பிள் அதிக முதலீடு செய்கிறது. எதிர்காலத்தில் இந்த பேனல்களை பெரும்பாலன சாதனங்களில் பயன்படுத்த ஆப்பிள் திட்டமிட்டு இருப்பதாக அவர் கூறுகிறார்.

    முன்னதாக மினி-எல்.இ.டி. பேனல் கொண்ட முதல் சாதனத்தை ஆப்பிள் அறிமுகம் செய்தது. ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்த 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல் மினி-எல்.இ.டி. பேனல் கொண்டிருக்கிறது. ஐபேட் மாடல்களை தொடர்ந்து மினி-எல்.இ.டி. பேனல்கள் விரைவில் மேக்புக் ப்ரோ சாதனத்திலும் வழங்கப்படலாம். 
    கூகுள் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் புதிய பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு இத்தனை ஆண்டுகள் தொடர் அப்டேட் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    கூகுள் நிறுவனம் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி அதன் அம்சங்களை வெளிப்படுத்தி இருக்கின்றன. 

    அவ்வாறு பிக்சல் 6 மாடலில் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, இரட்டை கேமரா சென்சார்களும் பிக்சல் 6 ப்ரோ மாடலில் 6.67 இன்ச் வளைந்த AMOLED டிஸ்ப்ளே, மூன்று கேமரா சென்சார்களும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் கூகுள் பிரத்யேகமாக உற்பத்தி செய்யும் வைட்சேப்பல் பிராசஸர் வழங்கப்பட இருக்கின்றன.

     பிக்சல் 6 ரென்டர்

    இரு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கும் என்றும் இவற்றுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மென்பொருள் அப்டேட் வழங்க கூகுள் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 4 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட், 5 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட் அல்லது 5 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    தற்போது விற்பனையில் இருக்கும் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு மூன்று ஆண்டுகள் மென்பொருள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகின்றன. 5 ஆண்டுகளுக்கு அப்டேட் வழங்கும் பட்சத்தில், அப்டேட் வழங்குவதில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு இணையான நிறுவனமாக கூகுள் இருக்கும்.

    மற்ற நிறுவனங்கள் வரிசையில் சாம்சங் நிறுவனமும் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன்கள் விலையை உயர்த்துகிறது.


    இந்திய சந்தையில் சியோமி, ஒப்போ மற்றும் மைக்ரோமேக்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்கள் விலையை கடந்த வாரம் உயர்த்தின. இந்த நிலையில், சாம்சங் நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன்கள் விலையை உயர்த்துகிறது.

    விலை உயர்வின் படி கேலக்ஸி எப்02எஸ், கேலக்ஸி எம்02எஸ் மற்றும் கேலக்ஸி ஏ12 போன்ற மாடல்களின் விலை மாறி இருக்கின்றன. மூன்று மாடல்களின் அனைத்து வேரியண்ட்கள் விலையும் உயர்த்தப்பட்டுள்ளன.

     சாம்சங் கேலக்ஸி எப்02எஸ்

    புதிய விலை விவரம்:

    கேலக்ஸி எப்02எஸ் 3 ஜிபி+32 ஜிபி ரூ. 9,499 

    கேலக்ஸி எப்02எஸ் 4 ஜிபி+64 ஜிபி ரூ. 10,499

    கேலக்ஸி எம்02எஸ் 3 ஜிபி+32 ஜிபி ரூ. 9,499

    கேலக்ஸி எம்02எஸ் 4 ஜிபி+64 ஜிபி ரூ. 10,499

    கேலக்ஸி ஏ12 4 ஜிபி+64 ஜிபி ரூ. 13,499

    கேலக்ஸி ஏ12 4 ஜிபி+128 ஜிபி ரூ. 14,499

    விலை உயர்வு தவிர, சாம்சங் விரைவில் தனது கேலக்ஸி இசட் போல்டு 3, கேலக்ஸி இசட் ப்ளிப் 3 மற்றும் கேலக்ஸி வாட்ச் 4 போன்ற சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இவற்றுடன் கேலக்ஸி எஸ்21 எப்.இ. மாடலும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 
    போக்கோ நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் டீசர் ஒன்பிளஸ் நிறுவனத்தை சீண்டும் வகையில் உள்ளது.


    போக்கோ நிறுவனம் ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு 2 ஸ்மார்ட்போன் டீசரை கேலி செய்யும் வகையில் புது டீசரை வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் ஒன்பிளஸ் நார்டு 2 ஸ்மார்ட்போன் ஜூலை 22 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது.

     போக்கோ F3 GT டீசர்

    இதுதவிர போக்கோ F3 GT ஸ்மார்ட்போனும் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது டீசர் மூலம் நார்டு 2 மாடலை விட போக்கோ F3 GT அதிக அம்சங்களை வழங்கும் என போக்கோ தெரிவித்து உள்ளது. அந்த வகையில் நார்டு 2 ஸ்மார்ட்போனிற்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் அம்சங்களுடன் போக்கோ F3 GT வெளியாகும் என தெரிகிறது.

    முன்னதாக ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு 2 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 ஏ.ஐ. பிராசஸரை வழங்க இருப்பதாக அறிவித்தது. தற்போது போக்கோ F3 GT மாடலிலும் இதற்கு இணையான பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய போக்கோ F3 GT சீனாவில் அறிமுகமான ரெட்மி கே40 கேம் என்ஹான்ஸ்டு எடிஷனின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடல் ஆகும். 
    லெனோவோ நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புது லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

    லெனோவோ நிறுவனம் இந்தியாவில் இரண்டு கழற்றக்கூடிய லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்தது. இவை யோகா டூயட் 7i மற்றும் ஐடியாபேட் டூயட் 3ஐ என அழைக்கப்படுகின்றன. 

    லெனோவோ யோகா டூயட் 7i மாடலில் கழற்றும் வசதி, பேக்லிட் ப்ளூடூத் 5 கீபோர்டு வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிக்-ஸ்டான்டு வழங்கப்படுகிறது. இதனை டேப்லட் மற்றும் லேப்டாப் என இருவிதங்களில் பயன்படுத்த முடியும்.

    இதில் லெனோவோ வாய்ஸ் அசிஸ்டண்ட், பேஷியல் லாக்-இன், 11th Gen இன்டெல் கோர் ஐ5 பிராசஸர், இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ், டால்பி ஆடியோ, டால்பி விஷன் போன்ற அம்சங்கள் உள்ளன. 

    லெனோவோ ஐடியாபேட் டூயட் 3i

    கழற்றக்கூடிய ப்ளூடூத் 5 கீபோர்டு கொண்ட முதல் ஐடியாபேட் லேப்டாப் மாடலாக ஐடியாபேட் டூயட் 3ஐ அறிமுகமாகி இருக்கிறது. இதில் இன்டெல் செலரான் பிராசஸர், இன்டெல் UHD கிராபிக்ஸ், 10.3 இன்ச் FHD IPS பேனல் டிஸ்ப்ளே, 4 ஜிபி மெமரி உள்ளது. இதில் உள்ள பேட்டரி அதிகபட்சம் 7 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.

    லெனோவோ யோகா டூயட் 7i விலை ரூ. 79,999 மற்றும் ஐடியாபேட் டூயட் 3ஐ விலை ரூ. 29,999 ஆகும். இரு மாடல்களின் விற்பனை ஜூலை 12 ஆம் தேதி லெனோவோ மற்றும் அமேசான் வலைதளங்களில் துவங்குகிறது.

    சியோமி நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கி இருக்கிறது.

    சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புது பிஷாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி புது ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 895 பிராசஸர் மற்றும் 200 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த கேமரா சென்சாரை சாம்சங் உருவாக்கி வருகிறது.

     சியோமி ஸ்மார்ட்போன்

    200 எம்பி கேமரா சென்சார் முதன் முதலில் சாம்சங் ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங்கின் அடுத்த தலைமுறை பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் 200 எம்பி சென்சார் வழங்கப்படாது என கூறப்படுகிறது. 

    இதற்கான காரணம் வெளியாகவில்லை. எனினும், கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலில் அதிக மெகாபிக்சல் கேமராவை வழங்குவதோடு, பெரிய பிக்சல் அளவை வழங்க சாம்சங் முடிவு செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் 200 எம்பி கேமராவுடன் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போனினை சியோமி வெளியிடலாம். 
    அமேசான் நிறுவனம் அதிக சலுகை மற்றும் தள்ளுபடியுடன் பொருட்களை விற்பனை செய்யும் பிரைம் டே சேல் தேதியை அறிவித்து இருக்கிறது.

    அமேசான் பிரைம் டே சேல் இம்முறை ஜூலை 26 ஆம் தேதி துவங்குகிறது. ஜூலை 26 நள்ளிரவு 12 மணிக்கு துவங்கி, ஜூலை 27 ஆம் தேதியுடன் இந்த சிறப்பு விற்பனை நிறைவு பெறுகிறது. சிறப்பு விற்பனையில் பல்வேறு பிரிவில் ஏராளமான பொருட்களுக்கு தள்ளுபடி, சலுகை, சேமிப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    சிறப்பு சலுகைகள் மட்டுமின்றி ஒரே நாளில் சுமார் 300-க்கும் அதிக பொருட்கள் அமேசானில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. முன்னதாக இந்த பிரைம் டே சேல் ஜூன் மாதத்திலேயே நடத்த அமேசான் திட்டமிட்டது. எனினும், கொரோனாவைரஸ் தொற்று காரணமாக பிரைம் டே சேல் ஒத்திவைக்கப்பட்டது.

    தற்போது தேதி உறுதிப்படுத்தப்பட்டு பிரைம் டே சேல் இரண்டு நாட்களுக்கு நடைபெற இருக்கிறது. இந்த சிறப்பு விற்பனை பிரைம் சந்தா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படுகிறது. சிறப்பு சலுகைகள் மட்டுமின்றி வங்கி சலுகைகள், மாத தவணை வசதி போன்றவையும் இந்த விற்பனையில் வழங்கப்படுகிறது. 
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. சில தினங்களுக்கு முன் பெயர் குறிப்பிடாமல் சியோமி, புது ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கான டீசரை வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த மாடல் ரெட்மி நோட் 10டி 5ஜி என தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறது. 

     சியோமி டீசர்

    தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 10 5ஜி போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில் இதே மாடல் இந்தியாவில் ரெட்மி நோட் 10டி 5ஜி பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 10டி 5ஜி மற்றும் போக்கோ எம்3 ப்ரோ 5ஜி மாடல்கள் இடையே அதிக வித்தியாசம் இருக்காது என கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் அறிமுகமான ரெட்மி நோட் 10டி 5ஜி மாடலின் மற்றொரு வெர்ஷனாகவே போக்கோ எம்3 ப்ரோ 5ஜி இங்கு அறிமுகம் செய்யப்பட்டது.
    சாம்சங் நிறுவனம் விரைவில் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனின் புது வேரியண்டை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சாம்சங் கேலக்ஸி ஏ52 இந்த ஆண்டு அந்நிறுவனம் வெளியிட்டதில் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் இந்த ஸ்மார்ட்போனின் மற்றொரு வேரியண்டை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

     சாம்சங் கேலக்ஸி ஏ52

    கேலக்ஸி ஏ52 புது வேரியண்ட் SM-A528B எனும் மாடல் நம்பர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ52எஸ் 5ஜி பெயரில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பி.ஐ.எஸ். சான்று பெற்றுவிட்டதால், விரைவில் இது வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

    சாம்சங் கேலக்ஸி ஏ52 5ஜி மாடல் அம்சங்கள் முந்தைய ஏ52 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும். எனினும், இதில் வித்தியாசமான கேமரா செட்டப், பெரிய பேட்டரி, அதிவேக பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 ஏ.ஐ. பிராசஸர் கொண்டிருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு 2 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 ஏ.ஐ. பிராசஸர் கொண்டிருக்கும் என அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏ.ஐ. சார்ந்த பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கும். இதற்காக ஒன்பிளஸ் மற்றும் மீடியாடெக் நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி இருக்கின்றன.

     ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி

    இந்த பிராசஸரின் செயல்திறன் டிமென்சிட்டி 1200-ஐ விட வித்தியாசமானதாக இருக்கும் என இரு நிறுவனங்களும் தெரிவித்து இருக்கின்றன. ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி மாடல் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் புகைப்படங்களை மிக தெளிவாக எடுக்க வழி செய்யும். இதுதவிர பயன்பாட்டின் போது சிறப்பான அனுபவம் கிடைக்கும் என ஒன்பிளஸ் தெரிவித்து உள்ளது.  

    புதிய ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. முந்தைய வழக்கப்படி புது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனும் அமேசான் தளத்திலேயே விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  
    பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேம் கூகுள் பிளே ஸ்டோர் டவுன்லோட்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    கிராப்டான் நிறுவனம் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா கேமினை ஆண்ட்ராய்டு தளங்களுக்கென கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிட்டது. முன்னதாக இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி மொபைல் கேமின் புது வடிவமாக அறியப்படும் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் டவுன்லோட்களில் அசத்தி வருகிறது.

     பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா

    இதுவரை பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் கேமினை கூகுள் பிளே ஸ்டோரில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோட் செய்துள்ளனர். விரைவில் இந்த கேமின் ஐஒஎஸ் வெர்ஷனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கிராப்டான் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. எனினும், சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

    இந்தியாவில் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் கேமினை குறைந்தபட்சம் ஆண்ட்ராய்டு 5.1.1 மற்றும் 2 ஜிபி ரேம் கொண்ட சாதனங்களில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன் பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் Early Access ஜூன் மாத வாக்கில் வெளியிடப்பட்டது.  
    ×