என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 5ஜி ஸ்மார்ட்போன் விலை மற்றும் மெமரி ஆப்ஷன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகிறது. புது ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில், ரெட்மி நோட் 10டி 5ஜி மாடல் ஒற்றை மெமரி ஆப்ஷனில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

     சியோமி ரெட்மி நோட் 10டி 5ஜி

    புதிய ரெட்மி நோட் 10டி 5ஜி மாடல் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஆப்ஷனில் கிடைக்கும் என்றும் இதன் விலை ரூ. 14,999 என்றும் கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் முதல் விற்பனைக்கு சியோமி அறிமுக சலுகைகளை வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் அமேசான்  தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு இந்த ஸ்மார்ட்போன் புளூ, கிரீன், கிரே மற்றும் சில்வர் நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    கூகுள் நிறுவனம் நீண்ட காலமாக வழங்கி வந்த இலவச சேவையில் திடீர் கட்டுப்பாடுகளை அறிவித்து இருக்கிறது.


    கூகுள் நிறுவனத்தின் வீடியோ கான்பரன்சிங் சேவையான கூகுள் மீட் இதுவரை வழங்கி வந்த வரம்பற்ற இலவச சேவையை நிறுத்திவிட்டது. இதன் காரணமாக கூகுள் மீட் சேவையை 60 நிமிடங்களை கடந்து பயன்படுத்த முடியாது. 

     கூகுள் மீட்

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று உச்சம் அடைந்ததால், கூகுள் மீட் க்ரூப் மீட்டிங் சேவை இலவசமாக வழங்கப்பட்டது. உலகளாவிய கூகுள் பயனர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற இது பேருதவியாக இருந்தது. கூகுள் மட்டுமின்றி ஜூம் சேவையிலும் பயனர்களுக்கு இலவச சேவை வழங்கப்பட்டது. 

    தற்போது கூகுள் தனது இலவச சேவையை நிறுத்தி இருக்கும் நிலையில், ஜூம் தொடர்ந்து இலவச சேவையை வழங்கி வருகிறது. முன்னதாக செப்டம்பர் 30, 2020 முதல் இலவச வரம்பற்ற க்ரூப் காலிங் வசதியை நீக்க கூகுள் திட்டமிட்டது. எனினும், இந்த தேதியை 31 மார்ச் 2021 மற்றும் ஜூன் 30, 2021 வரை நீட்டித்தது.
    ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.

    ஒப்போ ரெனோ 6 5ஜி மற்றும் ரெனோ 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இரு மாடல்களும் ஒப்போ நிறுவனத்தின் புது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆகும். முன்னதாக ரெனோ 6 சீரிஸ் மாடல்கள் சீன சந்தையில் மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டன. 

    இவற்றில் இரு வேரியண்ட்கள் தற்போது இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கின்றன. ஒப்போ ரெனோ 6 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர் ஒஎஸ் 11.3, 6.43 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

     ஒப்போ ரெனோ 6 ப்ரோ 5ஜி

    ஒப்போ ரெனோ 6 ப்ரோ 5ஜி மாடலில் 6.55 இன்ச் FHD+ வளைந்த AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க ரெனோ 6 5ஜி மாடலில் உள்ள சென்சார்களுடன் கூடுதலாக 2 எம்பி மோனோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    கனெக்டிவிட்டியை பொருத்தவரை இரு மாடல்களிலும் 5ஜி, வைபை 6, ப்ளூடூத் 5.2, ஜி.பி.எஸ். மற்றும் யு.எஸ்.பி. டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது. ரெனோ 6 5ஜி மாடலில் 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 65 வாட் சூப்பர்வூக் 2.0 பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. ரெனோ 6 ப்ரோ 5ஜி மாடலில் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 65 வாட் சூப்பர்வூக் 2.0 பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

    ஒப்போ ரெனோ 6 5ஜி விலை ரூ. 29,990 ஆகும். ரெனோ 6 ப்ரோ 5ஜி மாடல் விலை ரூ. 39,990 ஆகும். இரு மாடல்களும் ப்ளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல், விஜய் சேல்ஸ், க்ரோமா, ஒப்போ வலைதளம் மற்றும் இதர விற்பனை மையங்களில் கிடைக்கும்.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    சாம்சங் கேலக்ஸி ஏ22 ஸ்மார்ட்போன் இம்மாத துவக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ரூ. 18,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி ஏ22 வெளியீட்டை தொடர்ந்து இதே ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் உருவாகி வருவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

    அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் விற்பனை செய்யப்படுகிறது.

     சாம்சங் ஸ்மார்ட்போன்

    அம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன் யு.ஐ. 3.1, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

    புதிய ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 700 5ஜி பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது. ஐரோப்பாவில் கேலக்ஸி ஏ22 5ஜி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 20,100 ஆகும்.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு 2 ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு 2 ஸ்மார்ட்போன் ஜுலை 22 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை ஒன்பிளஸ் ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில், நார்டு 2 ஸ்மார்ட்போனின் புதிய ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

     நார்டு 2 ரென்டர்

    லீக் ஆகி இருக்கும் ரென்டர்களின் படி ஒன்பிளஸ் நார்டு 2 மாடலில் மிக மெல்லிய பெசல்கள், ஸ்கிரீனின் இடதுபுறத்தில் பன்ச் ஹோல் காணப்படுகிறது. முந்தைய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனில் இரட்டை செல்பி கேமராக்கள் வழங்கப்பட்டு இருந்தது. எனினும், புது ரென்டர்களின்படி நார்டு 2 ஸ்மார்ட்போனில் ஒற்றை செல்பி கேமரா வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

    இத்துடன் புது ஸ்மார்ட்போனின் இடதுபுறத்தில் வால்யூம் பட்டன்கள், வலதுபுறத்தில் பவர் பட்டன் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை புது நார்டு 2 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1200 ஏ.ஐ. பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் 8 ஜிபி / 12 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி வழங்கப்படும் என தெரிகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் இரு கேலக்ஸி இசட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.

    சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சாம்சங் விரைவில் வெளியிட இருக்கிறது.

     சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

    இரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. தற்போது இரு சாதனங்களின் தென் கொரிய விலை விவரங்கள் லீக் ஆகி உள்ளது. அதன்படி கேலக்ஸி இசட் போல்டு 3 விலை 1655 டாலர்களில் துவங்கி அதிகபட்சம் 1,741 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்திய மதிப்பில் ரூ. 1,23,241 முதல் ரூ. 1,29,645 ஆகும். 

    கேலக்ஸி இசட் ப்ளிப் 3 விலை 1,045 டாலர்களில் துவங்கி அதிகபட்சம் 1,110 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 77,816 துவங்கி ரூ. 82,657 வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
    சென்ஹெய்சர் நிறுவனத்தின் HD 25 லிமிடெட் எடிஷன் ஹெட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.


    சென்ஹெய்சர் HD 25 ஹெட்போனின் ஸ்பெஷல் புளூ லிமிடெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் ஹெட்போன்களில் புளூ இயர்பேட்கள் உள்ளன. அதிக சத்தமுள்ள பகுதிகளில் பயன்படுத்தும் போது இந்த ஹெட்போன்கள் சிறப்பான ஆடியோவை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.

     சென்ஹெய்சர் HD 25 ஸ்பெஷல் புளூ லிமிடெட் எடிஷன்

    இந்த ஹெட்போன் டி.ஜெ. மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும். மிக குறைந்த எடையில் உருவாகி இருக்கும் சென்ஹெய்சர் HD 25, ஆடியோவை ஒரே காதில் மட்டும் கேட்க செய்யும் வசதி கொண்டுள்து.  

    சென்ஹெய்சர் HD 25 ஸ்பெஷல் புளூ லிமிடெட் எடிஷன் விலை ரூ. 8,499 ஆகும். இது அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வட்டியில்லா மாத தவணை முறையிலும் இதனை வாங்கிக் கொள்ளலாம்.
    மோட்டோரோலா நிறுவனத்தின் இரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு இருக்கிறது.


    மோட்டோரோலா நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் 2019 முதல் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது மோட்டோரோலா ரேசர் 4ஜி மற்றும் ரேசர் 5ஜி என இரு மடிக்கக்கூடிய மாடல்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    இரு ஸ்மார்ட்போன்களுக்கான விலை குறைப்பு முன்பை போன்றே குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய விலை குறைப்பு ப்ளிப்கார்ட் தளத்திற்கு மட்டும் பொருந்தும்.

    வலைதள ஸ்கிரீன்ஷாட்

    விலை குறைப்பின் படி மோட்டோரோலா ரேசர் 5ஜி 8 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ. 89,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த மாடல் ரூ. 1,24,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மோட்டோரோலா ரேசர் 4ஜி 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 54,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் முந்தைய விலை ரூ. 1,49,999 ஆகும்.

    மோட்டோ ரேசர் 5ஜி மாடல் பாலிஷ் கிராபைட் நிறத்தில் கிடைக்கிறது. மோட்டோ ரேசர் 4ஜி மாடல் நாய்ர் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. விலை குறைப்பு மட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது அதிகபட்சமாக 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    அதிக மாற்றங்களுடன் புது ஐபேட் மினி மாடலை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் மற்றும் ஐமேக் சாதனங்களை அப்டேட் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இவற்றில் புது டிசைன் மட்டுமின்றி ஆப்பிள் சிலிகான் பிராசஸர்களையும் வழங்கி வருகிறது. சமீபத்தில் ஐபேட் ப்ரோ மாடலில் ஆப்பிள் எம்1 பிராசஸர் வழங்கப்பட்டது. 

    அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ஐபேட் மினி மாடலின் மேம்பட்ட வெர்ஷனை இந்த ஆண்டின் இலையுதிர்காலத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. புதிய ஐபேட் மினி 6 பெரிய டிஸ்ப்ளே கொண்ட ஆப்பிள் ஐமேக் மாடலுடன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

     ஐபேட்

    புதிய ஐபேட் மினி முற்றிலும் புது டிசைன், மிக மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் ஹோம் பட்டன் நீக்கப்படலாம் என்றும் தெரிகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் மிகப்பெரும் மாற்றங்களை பெறும் சாதனமாக புதிய ஐபேட் மினி இருக்கும் என கூறப்படுகிறது. 

    முன்னதாக இணையத்தில் லீக் ஆன விவரங்களின் படி புது ஐபேட் மினி 206.3mm x 137.8mm x 6.1mm அளவில் உருவாகி வருவதாக கூறப்பட்டது. மேலும் இந்த மாடல் சில்வர், பிளாக் மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
    சியோமியின் ரெட்மி பிராண்டு புதிய 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.

     
    சியோமியின் ரெட்மி பிராண்டு இந்தியாவில் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் ஜூலை 20 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் பலமுறை வெளியிடப்பட்டன. அந்த வரிசையில் தற்போது இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

     சியோமி ரெட்மி நோட் 10டி 5ஜி டீசர்

    ரெட்மி நோட் 10டி 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

    - 6.5 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 7nm பிராசஸர்
    - மாலி-G57 MC2 GPU
    - 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.2) மெமரி
    - 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
    - 2 எம்பி டெப்த் கேமரா
    - 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்பி கேமரா, f/2.0 
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ
    - டூயல் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.1 
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் கிரீன், புளூ, சில்வர் மற்றும் கிரே நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. 
    விவோ நிறுவனம் இந்தியாவில் இரு ஸ்மார்ட்போன்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    விவோ நிறுவனத்தின்  Y20A மற்றும் Y20G ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 1000 வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. புதிய விலை விவோ அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசான் தளங்களில் மாற்றப்பட்டு விட்டது.

    முன்னாதாக விவோ y21s மற்றும் y12s மாடல்களின் விலை ரூ. 500 வரை உயர்த்தப்பட்டது. விவோ y21s மாடலின் 2 ஜிபி விலை ரூ. 8,490 மற்றும் விவோ y12s 3 ஜிபி ரேம் விலை ரூ. 10,490 என மாற்றப்பட்டது.

     விவோ ஸ்மார்ட்போன்

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட விவோ y20a ரூ. 11,490 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போதைய விலை உயர்வு காரணமாக இதன் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,990 என மாறி இருக்கிறது.

    விவோ y20g ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி மாடல்கள் விலை முறையே 13,990 மற்றும் ரூ. 15,990 என மாறி இருக்கிறது. முன்னதாக இரு மாடல்களும் முறையே ரூ. 12,990 மற்றும் ரூ. 14,990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.   
    ரியல்மி நிறுவனம் உருவாக்கி வரும் புது டேப்லெட் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
    ரியல்மி பேட் சாதனம் விரைவில் வெளியாகும் என ரியல்மி ஏற்கனவே அறிவித்து இருந்தது. தற்போது இந்த மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. புகைப்படத்தில் உள்ள ரியல்மி பேட் சோதனை செய்யப்படுகிறது. தற்போது லீக் ஆகி இருக்கும் புகைப்படங்கள் தெளிவற்ற நிலையில் உள்ளது.

    கோப்புப்படம்

    லீக் ஆகி இருக்கும் புகைப்படங்களில் ரியல்மி பேட் கேமரா திறனை ரியல்மி நிறுவன ஊழியர் சோதனை செய்கிறார். புகைப்படங்களின்படி ரியல்மி டேப்லெட் அலுமினியம் அல்லது மெட்டல் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இதில் ஒற்றை கேமரா சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை ரியல்மி பேட் மாடலில் ஆண்ட்ராய்டு 11 ஒ.எஸ்., 4ஜி எல்.டி.இ. கனெக்டிவிட்டி, 64 ஜிபி மெமரி மற்றும் பெரிய டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிகிறது. விரைவில் ரியல்மி பேட் வெளியீட்டு விவரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×