என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    லெனோவோ யோகா டூயட் 7i
    X
    லெனோவோ யோகா டூயட் 7i

    ரூ. 29 ஆயிரம் பட்ஜெட்டில் கழற்றக்கூடிய லேப்டாப் அறிமுகம்

    லெனோவோ நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புது லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

    லெனோவோ நிறுவனம் இந்தியாவில் இரண்டு கழற்றக்கூடிய லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்தது. இவை யோகா டூயட் 7i மற்றும் ஐடியாபேட் டூயட் 3ஐ என அழைக்கப்படுகின்றன. 

    லெனோவோ யோகா டூயட் 7i மாடலில் கழற்றும் வசதி, பேக்லிட் ப்ளூடூத் 5 கீபோர்டு வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிக்-ஸ்டான்டு வழங்கப்படுகிறது. இதனை டேப்லட் மற்றும் லேப்டாப் என இருவிதங்களில் பயன்படுத்த முடியும்.

    இதில் லெனோவோ வாய்ஸ் அசிஸ்டண்ட், பேஷியல் லாக்-இன், 11th Gen இன்டெல் கோர் ஐ5 பிராசஸர், இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ், டால்பி ஆடியோ, டால்பி விஷன் போன்ற அம்சங்கள் உள்ளன. 

    லெனோவோ ஐடியாபேட் டூயட் 3i

    கழற்றக்கூடிய ப்ளூடூத் 5 கீபோர்டு கொண்ட முதல் ஐடியாபேட் லேப்டாப் மாடலாக ஐடியாபேட் டூயட் 3ஐ அறிமுகமாகி இருக்கிறது. இதில் இன்டெல் செலரான் பிராசஸர், இன்டெல் UHD கிராபிக்ஸ், 10.3 இன்ச் FHD IPS பேனல் டிஸ்ப்ளே, 4 ஜிபி மெமரி உள்ளது. இதில் உள்ள பேட்டரி அதிகபட்சம் 7 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.

    லெனோவோ யோகா டூயட் 7i விலை ரூ. 79,999 மற்றும் ஐடியாபேட் டூயட் 3ஐ விலை ரூ. 29,999 ஆகும். இரு மாடல்களின் விற்பனை ஜூலை 12 ஆம் தேதி லெனோவோ மற்றும் அமேசான் வலைதளங்களில் துவங்குகிறது.

    Next Story
    ×