search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கூகுள்
    X
    கூகுள்

    இணையத்தில் லீக் ஆன பிக்சல் 6 சீரிஸ் விவரங்கள்

    கூகுள் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் புதிய பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு இத்தனை ஆண்டுகள் தொடர் அப்டேட் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    கூகுள் நிறுவனம் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி அதன் அம்சங்களை வெளிப்படுத்தி இருக்கின்றன. 

    அவ்வாறு பிக்சல் 6 மாடலில் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, இரட்டை கேமரா சென்சார்களும் பிக்சல் 6 ப்ரோ மாடலில் 6.67 இன்ச் வளைந்த AMOLED டிஸ்ப்ளே, மூன்று கேமரா சென்சார்களும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் கூகுள் பிரத்யேகமாக உற்பத்தி செய்யும் வைட்சேப்பல் பிராசஸர் வழங்கப்பட இருக்கின்றன.

     பிக்சல் 6 ரென்டர்

    இரு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் கொண்டிருக்கும் என்றும் இவற்றுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மென்பொருள் அப்டேட் வழங்க கூகுள் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 4 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட், 5 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட் அல்லது 5 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    தற்போது விற்பனையில் இருக்கும் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு மூன்று ஆண்டுகள் மென்பொருள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகின்றன. 5 ஆண்டுகளுக்கு அப்டேட் வழங்கும் பட்சத்தில், அப்டேட் வழங்குவதில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு இணையான நிறுவனமாக கூகுள் இருக்கும்.

    Next Story
    ×