என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    ஒப்போ நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான சந்தை மெல்ல வளர்ந்து வருகிறது. தற்போது சாம்சங் நிறுவனம் மூன்று தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. ஒப்போ நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில், ஒப்போ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒப்போ போல்டு எனும் பெயரில் விற்பனைக்கு அறிமுகமாகும் என தெரிகிறது.

     ஒப்போ போல்டு

    கீக்பென்ச் விவரங்களின் படி புதிய ஒப்போ போல்டு ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 அல்லது ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் பிராசஸர், 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஒப்போ போல்டு மாடலில் 8 இன்ச் ஓ.எல்.இ.டி. எல்.டி.பி.ஓ. பேனல், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    மேலும் இதில் 50 எம்.பி. பிரைமரி கேமரா, 16 எம்.பி. வைடு ஆங்கில் லென்ஸ், 13 எம்.பி. கேமரா, 32 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்படலாம்.
    ரெட்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் அமெரிக்க வலைதளத்தில் இட்மபெற்று இருக்கிறது.


    அமெரிக்காவின் எப்.சி.சி. வலைதளத்தில் ரெட்மி 10 (2022) ஸ்மார்ட்போன் விவரங்கள் இடம்பெற்று இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 128 ஜிபி மெமரி என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

    இதே ஸ்மார்ட்போன் யூரேசியன் எகனாமிக் கமிஷன், ஐ.எம்.டி.ஏ., டி.கே.டி.என்., எஸ்.டி.பி.பி.ஐ., டி.யு.வி. ரெயின்லாந்து செர்டிஃபிகேஷன் என பல்வேறு வலைதளங்களில் இடம்பெற்று இருந்தது. புதிய ரெட்மி 10 (2022) மாடல் இந்தியாவில் ரெட்மி 10 பிரைம் (2022) ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. 

     ரெட்மி ஸ்மார்ட்போன்

    மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த எம்.ஐ.யு.ஐ. 12.5 கொண்டிருக்கும். இத்துடன் 50 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. சென்சார், 2 எம்.பி. லென்ஸ் வழங்கப்படுகிறது. ஐ.எம்.இ.ஐ. டேட்டாபேஸ் வலைதளத்திலும் இரு ரெட்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் இடம்பெற்று இருந்தன. இரு மாடல்களும் இந்தியாவில் அறிமுகமாகும் என்றே கூறப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டு உருவாகி வருகிறது.


    ஒன்பிளஸ் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ, அந்நிறுவனத்தின் அடுத்த தலைமுறை சாதனங்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், ஒன்பிளஸ் 10 சீரிசில் இந்த பிராசஸர் வழங்கப்படுமா என்பதை அவர் குறிப்பிடவில்லை.

    பீட் லௌ அறிவிப்பை தொடர்ந்து புதிய ஒன்பிளஸ் 10 சீரிஸ் மாடல்களில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என்றே இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஸ்னாப்டிராகன் பிராசஸரை முடிந்தவரை ஆப்டிமைஸ் செய்யும் பணிகளில் ஒன்பிளஸ் மென்பொருள் மற்றும் வன்பொருள் பிரிவினர் ஈடுபட்டு வருவதாக பீட் லௌ தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சாதனத்தின் மென்பொருள் அனுபவம் சீராக இருக்கும்.

     ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1

    முந்தைய வழக்கப்படி, ஒன்பிளஸ் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. அந்த வகையில் புதிய குவால்காம் சிப்செட் கொண்டு அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் ஒன்பிளஸ் 10 இடம்பெறும் என்றே தெரிகிறது. சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் மார்ச் அல்லது ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகமாகலாம்.
    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய எட்ஜ் எஸ்30 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.


    மோட்டோரோலா எட்ஜ் எஸ்30 ஸ்மார்ட்போன் விவரங்கள் அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. புதிய எட்ஜ் எஸ்30 விவரங்கள் அன்டுடு பென்ச்மார்கிங் வலைதளத்திலும் இடம்பெற்று இருக்கிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி மோட்டோரோலா எட்ஜ் எஸ்30 மாடலில் 4700 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 

     மோட்டோரோலா எட்ஜ்

    மற்ற அம்சங்களை பொருத்தவரை 6.78 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் பிராசஸர் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8.8 எம்.எம். அளவில் உருவாகி இருப்பதாகவும், இதன் மொத்த எடை 202 கிராம் என்றும் கூறப்படுகிறது.
    ஒப்போ நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.


    ஒப்போ நிறுவனம் டேப்லெட் மற்றும் மடிக்கக்கூடிய சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஒப்போ டேப்லெட் மாடல் சீன சந்தை மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியாவில் ஒப்போ நிறுவனத்தின் முதல் டேப்லெட் மாடல் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களின் படி ஒப்போ நிறுவனத்தின் முதல் டேப்லெட் மாடல் ஒப்போ பேட் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 11 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 13 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 12 சார்ந்த கலர் ஓ.எஸ். 12 வழங்கப்படலாம்.
    ரெட்மி பிராண்டின் நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


    ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் கொண்ட ஒற்றை வேரியண்டில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த ஸ்மார்ட்போன் காஸ்மிக் பர்பில், பிராஸ்ட் வைட், டீப் சீ புளூ மற்றும் ஷேடோ பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    தற்போது ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புது வேரியண்ட் தவிர ரெட்மி நோட் 10எஸ் மாடல் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

     ரெட்மி நோட் 10எஸ்

    அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 10எஸ் மாடலில் 6.43 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 13 எம்.பி. செல்பி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், 6 ஜிபி, 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 11 சார்ந்த எம்.ஐ.யு.ஐ. 12.5 ஒஎஸ் கொண்டிருக்கும் ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் 64 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. டெப்த் மற்றும் 2 எம்.பி. போர்டிரெயிட் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ரெட்மி நோட் 10எஸ் 6 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 14,999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 16,499 என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய 8 ஜிபி + 128 ஜிபி ரூ. 18,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஐகூ நிறுவனத்தின் புதிய 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    சிப்செட் குறைபாடு காரணமாக ஐகூ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாது என்றே தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐகூ 9 சீரிஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

    இந்தியாவில் ஐகூ 9 சீரிஸ் மாடல்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய ஐகூ 9 சீரிஸ் மாடல்களில் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஐகூ 9 சீரிசில்- ஐகூ 9 மற்றும் ஐகூ 9 ப்ரோ / லெஜண்ட் போன்ற மாடல்கள் இடம்பெறும் என தெரிகிறது.

     ஐகூ ஸ்மார்ட்போன்

    முன்னதாக ஐகூ நிறுவனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்ட பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருந்தது. இந்த மாடல் ஐகூ 9 அல்லது ஐகூ 9 ப்ரோ மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. ஐகூ 9 மாடல்களில் அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஆண்ட்ராய்டு 12 மற்றும் புதிய ஐகூ யு.ஐ., 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம்.
    ரெட்மி நிறுவனத்தின் புதிய நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
    ரெட்மியின் புதிய நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.6 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், வேரியபில் ரிப்ரெஷ் ரேட், 16 எம்.பி. செல்பி கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 810 சிப்செட், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
    புகைப்படங்களை எடுக்க 50 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     ரெட்மி நோட் 11டி 5ஜி

    ரெட்மி நோட் 11டி 5ஜி அம்சங்கள்

    - 6.6 இன்ச் 1080x2400 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர் 
    - மாலி-ஜி57 எம்.சி.2 ஜி.பி.யு.
    - 6 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி 
    - 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்.ஐ.யு.ஐ. 12.5
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 50 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ்
    - 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
    - 16 எம்.பி. செல்பி கேமரா
    - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யு.எஸ்.பி. டைப் சி
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்டார்டஸ்ட் வைட், அக்வாமரைன் புளூ மற்றும் மேட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 16,999, 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 17,999, 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    அறிமுக சலுகையாக ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் விலை ரூ. 1000 தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த தள்ளுபடி சில வாரங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. கூடுதலாக வங்கி சார்ந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    குவால்காம் நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் பிராசஸருடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.


    குவால்காம் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சிப்செட்-ஐ விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய பிராசஸர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 என அழைக்கப்பட இருக்கிறது. 

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடல் புதிய பிரசாஸர் கொண்டு அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் சியோமி மற்றும் மோட்டோரோலா நிறுவன மாடல்களில் இந்த பிரசாஸர் முதலில் வழங்கப்படும் என கூறப்பட்டது.

     ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

    முந்தைய மாடல்களை போன்று இல்லாமல், ஒன்பிளஸ் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்கள் மார்ச் அல்லது ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன.

    அம்சங்களை பொருத்தவரை புதிய ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் வளைந்த குவாட் ஹெச்.டி. பிளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 8 ஜிபி அல்லது 12 ஜிபி ரேம், 128 ஜிபி அல்லது 256 ஜிபி மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி வைடு சென்சார், 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். 12, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 125 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

    கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    கூகுள் நிறுவனம் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இரு ஸ்மார்ட்போன்களும் கூகுளின் சொந்த டென்சார் சிப்செட் கொண்டிருக்கின்றன. புதிய பிக்சல் 6 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகாது என்றும் அறிவிக்கப்பட்டுவிட்டது. 

    இந்த நிலையில், கூகுள் பிக்சல் 5ஏ போன்றே பிக்சல் 6ஏ மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. தோற்றத்தில் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் பிக்சல் 6 சீரிஸ் போன்றே காட்சியளிக்கின்றன. 

     கூகுள் பிக்சல் 6 சீரிஸ்

    புதிய பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனில் இரண்டு கேமரா சென்சார்கள், ஒற்றை எல்.இ.டி. பிளாஷ், பவர் பட்டன், வால்யூம் ராக்கர்கள் உள்ளன. இத்துடன் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.2 இன்ச் பிளாட் ஓ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, 12.2 எம்பி லென்ஸ், 16 எம்பி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. 

    இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்., 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் ஐபோன் 14 சீரிஸ் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. 2022 செப்டம்பர் மாத வாக்கில் ஆப்பிள் ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 மேக்ஸ் மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் யு.எஸ்.பி. 2.0 வேகத்தில் லைட்னிங் போர்ட் வழங்கி வருகிறது. ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

     ஐபோன்

    சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 13 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் ப்ரோ-ரெஸ் வீடியோக்களை படமாக்கும் போது அதிகளவு ஸ்டோரேஜை எடுத்துக் கொள்கின்றன. இதனால் ஐபோன்களில் இருந்து ப்ரோ-ரெஸ் வீடியோக்களை கணினியில் டிரான்ஸ்பர் செய்ய அதிக நேரம் ஆகிறது. 

    லைட்னிங் போர்ட்-க்கு மாற்றாக யு.எஸ்.பி. டைப் சி பயன்படுத்தினால் சிறிது நேரமே ஆகும். ஐபோன்கள் உள்பட அனைத்து சாதனங்களிலும் யு.எஸ்.பி. சி போர்ட் வழங்க ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தி வருகிறது. புதிய விதிகளை ஏற்றுக் கொள்ள மறுக்கும் பட்சத்தில் நிறுவனங்கள் அபராதம் செலுத்த நேரிடும். இதன் காரணமாக ஆப்பிள் புதிய ஐபோன் மாடல்களில் யு.எஸ்.பி. சி போர்ட் வழங்கலாம் என தெரிகிறது.
    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    சியோமி 12 அல்ட்ரா அந்நிறுவனத்தின் புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனாக உருவாகி வருகிறது. எம்ஐ11 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக உருவாகி இருக்கும் சியோமி 12 அல்ட்ரா 50 எம்பி பிரைமரி கேமரா, அதிநவீன ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    முன்னதாக சியோமி 12 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சியோமி நிறுவனம் லோகி மற்றும் தார் எனும் குறியீட்டு பெயர்களில் இரு ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இவை சியோமி 12 அல்ட்ரா மற்றும் சியோமி 12 அல்ட்ரா என்ஹான்ஸ்டு பெயர்களில் அறிமுகமாகும் என தெரிகிறது.

     சியோமி ஸ்மார்ட்போன்

    சியோமி 12 அல்ட்ரா மாடலில் 50 எம்பி சாம்சங் ஜி.என்.5 சென்சாருன் குவாட் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. இத்துடன் 2எக்ஸ் ஜூம் வசதியுடன் 48 எம்பி கேமரா, 5 எக்ஸ் ஜூம் வசதியுடன் 48 எம்பி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகமாகிறது.
    ×