என் மலர்
புதிய கேஜெட்டுகள்
மோட்டோரோலா நிறுவனத்தின் 2022 மோட்டோ ஜி பவர் ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ ஜி பவர் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.5 இன்ச் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் புகைப்படங்களை எடுக்க 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

புதிய மோட்டோ ஜி பவர் 2022 ஸ்மார்ட்போன் விலை 199.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 14,840 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது அமெரிக்காவில் அறிமுகமாகி இருக்கும் மோட்டோ ஜி பவர் 2022 மாடலின் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
மோட்டோ வாட்ச் 100 பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாகி இருக்கிறது. இதனை இ-பை-நௌ எனும் நிறுவனம் உற்பத்தி செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மோட்டோ வாட்ச் ஓ.எஸ். கொண்டிருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை புதிய மோட்டோ வாட்ச் 100 மாடலில் 1.3 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், 42 எம்.எம். அலுமினியம் கேசிங், இதய துடிப்பு மற்றும் எஸ்.பி.ஓ.2 மாணிட்டரிங், 26 ஸ்போர்ட் மோட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இத்துடன் 5 ஏ.டி.எம். தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், ஜி.பி.எஸ்., பெய்டூ, ப்ளூடூத் 5 எல்.இ. போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மொத்த எடை 45.8 கிராம் ஆகும். முழுமையாக சார்ஜ் செய்தால் இந்த ஸ்மார்ட்வாட்ச் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
மோட்டோ வாட்ச் 100 மாடல் கிளேசியர் சில்வர் மற்றும் பேண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 99.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 7,449 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் இந்த வாட்ச் மோட்டோவாட்ச் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.
சியோமி நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வழங்கப்படுகிறது.
சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இரு ஸ்மார்ட்போன்களும் அளவில் சிறியதாக இருக்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக ஐபோன் 12 மினி அறிவிக்கப்பட்டதும் சியோமி இதேபோன்ற மாடலை வெளியிட திட்டமிட்டது. எனினும், அசுஸ் நிறுவனம் சென்போன் 8 அறிமுகம் செய்து சியோமியை பின்னுக்கு தள்ளியது. இதைத் தொடர்ந்து எல்3 மற்றும் எல்3ஏ எனும் மாடல் நம்பர்கள் கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் விவரங்கள் கடந்த ஆண்டு வெளியாகின.

சியோமி நீண்ட காலமாக உருவாக்கி வரும் இரு ஸ்மார்ட்போன்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில் எல்3 மாடல் நம்பர் கொண்டு உருவாகி வரும் ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது.
சியோமியின் எல்3 மற்றும் எல்3ஏ மாடல்கள் பற்றிய இதர விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகும் என தெரிகிறது. சமீபத்தில் ரெட்மி நிறுவன பொது மேலாளர் லு வெய்பிங் சிறிய ஸ்கிரீன் கொண்ட பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் பற்றி வெய்போவில் பேசியிருந்தார்.
ஒப்போ நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அந்த மாதத்தில் அறிமுகமாகிறது.
ஒப்போ நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும், இந்த ஸ்மார்ட்போன் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மேலும் இதுபோன்ற சாதனம் உருவாக்கப்படுவதாகவும் ஒப்போ சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒப்போ நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 'பீகாக்' எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஒப்போ நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ரெனோ 7 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் மாத மத்தியில் அறிமுகம் செய்யப்படலாம்.
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனுடன் ஒப்போ நிறுவனம் மற்றொரு ஸ்மார்ட்போனினை உயர் ரக அம்சங்களுடன் உருவாக்கி வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 'பட்டர்பிளை' எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல் புது விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய சாம்சங் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே மற்றும் கேமரா அம்சங்கள் பற்றிய புது தகவல்கள் ட்விட்டரில் இடம்பெற்று இருக்கிறது.
அதன்படி புதிய கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலில் மேம்பட்ட 108 எம்பி கேமரா மோட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 108 எம்பி பிரைமரி கேமரா கொண்டு உருவாகிறது. இது ஐசோசெல் ஹெச்.எம்.4 அல்லது ஐசோசெல் ஹெச்.எம்.5 சென்சார்களில் ஒன்றாக இருக்கும் என தெரிகிறது.

மேலும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் இருப்பதை போன்றே வளைந்து இருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா மாடலை விட புதிய ஸ்மார்ட்போன் ஸ்கிரீன் அதிகளவு வளைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 2200 சிப்செட், ஆர்.டி.என்.ஏ. 2 கிராபிக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் எம்1 மேக்ஸ் சிப்செட் கொண்ட புது மேக்புக் ப்ரோ மாடல்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் புதிய தலைமுறை ஐமேக் மாடல்களை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஐமேக் மாடல் ஐமேக் ப்ரோ எனும் பெயரில் வெளியாகும் என தெரிகிறது. ப்ரோ பிராண்டிங் மூலம் ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்த 24 இன்ச் ஐமேக் மாடலை வித்தியாசப்படுத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய ஐமேக் ப்ரோ மாடல்களில் எம்1 ப்ரோ மற்றும் எம்1 மேக்ஸ் சிப்செட்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக ஆப்பிள் அறிமுகம் செய்த மேக்புக் ப்ரோ மாடல்களிலும் எம்1 ப்ரோ மற்றும் எம்1 மேக்ஸ் சிப்செட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஆப்பிள் தனது எம்1 ப்ரோ மற்றும் எம்1 மேக்ஸ் சிப்செட்களை சமீபத்திய நிகழ்வில் அறிமுகம் செய்தது. இரு சிப்செட்களும் சமீபத்திய மேக்புக் ப்ரோ மற்றும் மேக்புக் ஏர் லேப்டாப் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஒப்போ நிறுவனத்தின் புதிய ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
ஒப்போ நிறுவனம் விரைவில் புதிய ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனினை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய ஒப்போ ஏ95 மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. சமீபத்திய ரெண்டர்களின் படி புதிய ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனில் செவ்வக கேமரா மாட்யூல், மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
இத்துடன் ஸ்னாப்டிராகன் சிப்செட், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குளோயிங் ஸ்டேரி பிளாக் மற்றும் ரெயின்போ சில்வர் என இருவித நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்படுகிறது.

ஒப்போ ஏ95 ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் பிளாஷ் சார்ஜிங் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர் ஓ.எஸ். 11, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஹூவாய் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த புது ஸ்மார்ட்வாட்ச் பத்து நாட்களுக்கான பேக்கப் வழங்குகிறது.
ஹூவாய் வாட்ச் பிட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இதே ஸ்மார்ட்வாட்ச் ஆகஸ்ட் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஹூவாய் வாட்ச் பிட் பெரிய டிஸ்ப்ளே, 24x7 இதய துடிப்பு சென்சார், பத்து நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
ஹூவாய் வாட்ச் பிட் மாடலில் 1.64 இன்ச் விவிட் அமோலெட் டிஸ்ப்ளே, 97 வொர்க்-அவுட் மோட்கள், நாள் முழுக்க எஸ்.பி.ஓ2 டிராக்கிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆல்வேஸ் ஆன் வாட்ச் பேஸ்கள், 12 அனிமேட் செய்யப்பட்ட பிட்னஸ் பயிற்சிகள் உள்ளன.

இந்தியாவில் புதிய ஹூவாய் வாட்ச் பிட் விலை ரூ. 8990 ஆகும். இந்த ஸ்மார்ட்வாட்ச் விற்பனை நாளை (நவம்பர் 2) அமேசான் தளத்தில் துவங்குகிறது. புது ஸ்மார்ட்வாட்ச் வாங்குவோருக்கு அசத்தலான அறிமுக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரியல்மி நிறுவனத்தின் புதிய ஜிடி சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ரியல்மி நிறுவனம் சமீபத்தில் ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வரிசையில், ரியல்மி நிறுவனம் ஜிடி ப்ரோ மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய ஜிடி ப்ரோ வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் அடுத்த இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரங்கள் ஐ.எம்.இ.ஐ. வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது.

அதன்படி புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆர்.எம்.எக்ஸ்.3301 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது. விரைவில் இந்த ஸ்மார்ட்போனின் முழு விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ப்ரோ மாடல் என்பதால், இதில் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனை விட சில அப்கிரேடுகள் செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
லாவா நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக லாவா நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அந்த வரிசையில் 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட லாவா அக்னி 5ஜி நவம்பர் 9 ஆம் தேதி அரிமுகமாகிறது.
புதிய லாவா அக்னி 5ஜி ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், மெல்லிய பெசல்களை கொண்டிருக்கிறது. இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமராவுடன், மூன்று சென்சார்கள், முன்புறம் ஒற்றை செல்பி கேமரா வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர், 4 ஜிபி ரேம், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது. புதிய லாவா அக்னி 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்., 3.5 எம்எம் ஆடியோ ஜாக், கீழ்புறம் ஸ்பீக்கர் செட்டப் வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. தென் கொரிய நிறுவனமான சாம்சங் இந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி பெயரில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.
புதிய கேல்கஸி எம்33 5ஜி குறித்து சாம்சங் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் எஸ்.எம். எம்336பி எனும் பெயரில் உருவாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2022 ஆண்டில் தான் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

இந்த மாடலின் அம்சங்கள் பற்றிய விவரங்கள் தொடர்ந்து மர்மாகவே உள்ளது. முந்தைய கேலக்ஸி எம்32 5ஜி மாடல் சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடல் ஆகும். அந்த வகையில் புதிய கேலக்ஸி எம்33 5ஜி மாடல் கேலக்ஸி ஏ33 ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்டு மாடலாக இருக்கும் என தெரிகிறது.
லெனோவோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய டேப் கே10 மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
லெனோவோ நிறுவனம் டேப் கே10 மிட்-ரேன்ஜ் டேப்லெட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 10.3 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ பி22டி பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 8 எம்பி பிரைமரி கேமரா, பிளாஷ், 5 எம்பி செல்பி கேமரா, டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ, 7500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஆக்டிவ் பென் ஸ்டைலஸ் வசதி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய டேப்லெட் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுவதாக லெனோவோ தெரிவித்து உள்ளது.

லெனோவோ டேப் கே10 மாடல் அபிஸ் புளூ நிறத்தில் கிடைக்கிறது. இதன் உண்மையான விலை ரூ. 25 ஆயிரம் ஆகும். எனினும், புதிய டேப் கே10 எல்.டி.இ. 3 ஜிபி+32 ஜிபி மாடல் விலை ரூ. 13,999 என்றும், வைபை, 4 ஜிபி+64 ஜிபி விலை ரூ. 15,999, எல்.டி.இ. 4 ஜிபி+64 ஜிபி விலை ரூ. 16,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.






