என் மலர்
புதிய கேஜெட்டுகள்
ஐகூ நிறுவனத்தின் புதிய 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் வென்னிலா நிறத்தில் அறிமுகமாக இருக்கிறது.
ஐகூ 8 லெஜண்ட் இந்தியாவில் தீபாவளிக்கு முன் வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. பண்டிகை காலம் விரைவில் துவங்க இருக்கிறது. எனினும், ஐகூ இந்த ஸ்மார்ட்போனினை இன்னும் அறிமுகப்படுத்தவில்லை. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐகூ 8 லெஜண்ட் மாடலுடன் ஐகூ ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
வென்னிலா ஐகூ 8 மாடல் ஐகூ 8 லெஜண்ட் ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே சீன சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஐகூ 8 ப்ரோ மாடல்தான் இந்தியாவில் ஐகூ 8 லெஜண்ட் பெயரில் அறிமுகமாக இருக்கிறது.

சீன சந்தையில் ஐகூ 8 சீரிஸ் மாடல்கள் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிவிக்கப்பட்டன. இந்த மாடல்களில் சாம்சங்கின் இ5 அமோலெட் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் பிராசஸர், யு.எப்.எஸ். 3.1 ஸ்டோரேஜ், லிக்விட் விசி கூலிங், எல் வடிவ கேமரா பம்ப், கிம்பல், ஓ.ஐ.எஸ்., ஸ்டீரியோ ஸ்பீக்கர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பேஸ்புக் நிறுவனம் தனது மெசன்ஜர் செயலியில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.
பேஸ்புக் நிறுவனம் மெசன்ஜர் வீடியோ கால் மற்றும் மெசன்ஜர் ரூம்சில் குரூப் எபெக்ட்ஸ் எனும் அம்சத்தை வழங்கி இருக்கிறது. குரூப் எபெக்ட்ஸ் ஏ.ஆர். பில்டர் மற்றும் எபெக்ட்களை வழங்குகிறது. பயனர்கள் வீடியோ கால் பேசும் போது இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மெசன்ஜர் செயலியை தொடர்ந்து விரைவில் இன்ஸ்டாகிராம் சேவையிலும் இந்த அம்சம் வழங்கப்பட இருக்கிறது. வீடியோ கால் மேற்கொள்ளும் போது குரூப் எபெக்ட்ஸ் அம்சம் அனைவருக்கும் இயங்கும். இவை மல்டி பிளேயர் கேமிங் அனுபவத்தையும் வழங்குகிறது. முதற்கட்டமாக குரூப் எபெக்ட்ஸ் அம்சத்தில் 70-க்கும் அதிக எபெக்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

உலகம் முழுக்க குரூப் எபெக்ட்ஸ் அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. எனினும், அனைவருக்கும் இந்த அம்சம் கிடைக்க சில காலம் ஆகும் என்றே தெரிகிறது. இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிய மெசன்ஜர் செயலியில் வீடியோ கால் அல்லது ரூம் ஸ்டார்ட் செய்து எபெக்ட்ஸ் பகுதியில் உள்ள ஸ்மைலி முகத்தை க்ளிக் செய்ய வேண்டும். இங்கு குரூப் எபெக்ட்ஸ் ஆப்ஷன் இருக்கும்.
ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் ஐபோன் எஸ்.இ.3 எல்.சி.டி. டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ.3 எல்.சி.டி. டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. சக்திவாய்ந்த ஏ13 பயோனிக் சிப் மற்றும் குறைந்த விலை காரணமாக ஐபோன் எஸ்.இ. 2020 இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த வரிசையில், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்.இ.3 மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய ஐபோன் எஸ்.இ.2 ஐபோன் 8 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருந்தது.

புதிய ஐபோன் எஸ்.இ.3 ஐபோன் எக்ஸ்.ஆர். போன்ற டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த மாடல் நாட்ச் டிஸ்ப்ளே மற்றும் வளைந்த பிரேம் கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் பேஸ் ஐ.டி. அம்சம் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதன் கைரேகை சென்சார் போனின் பக்கவாட்டில் பொறுத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது.
மோட்டோரோலா நிறுவனம் உருவாக்கி வரும் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் நவம்பர் மாத வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருந்தன.
அதன்படி மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் எக்ஸ்.டி.2171-1 எனும் மாடல் நம்பரில் உருவாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சிப்ரஸ் 5ஜி எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. மேலும் மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் எப்.ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படலாம்.

புகைப்படங்களை எடுக்க 50 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
அசத்தல் அம்சங்களுடன் உருவாகி இருக்கும் ரெட்மி நோட் 11 சீரிஸ் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி நோட் 11 சீரிஸ் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. இதில் ரெட்மி நோட் 11 மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோ மாடல்கள் அக்டோபர் 28 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான டீசர்களையும் சியோமி வெளியிட்டு உள்ளது.
டீசரின்படி புதிய ஸ்மார்ட்போன் மேட் பினிஷ் செய்யப்பட்ட பிரேம் கொண்டிருக்கிறது. இத்துடன் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஐ.ஆர். சென்சார், இரண்டாவது ஸ்பீக்கர் வெண்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் புகைப்படங்களை எடுக்க மூன்று பிரைமரி கேமராக்கள், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, சற்றே வளைந்த திரை, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.
ரெட்மி நோட் 11 ப்ரோ மாடலில் 67 வாட் சார்ஜர் வழங்கப்படும் என தெரிகிறது. சீன சந்தையில் புதிய ரெட்மி நோட் சீரிஸ் விற்பனை நவம்பர் 1 ஆம் தேதி துவங்குகிறது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் வெளியாகும் என தெரிகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்22 சீரிஸ் மாடல்களை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், புதிய சாம்சங் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸ் பற்றிய விவரங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி வருகின்றன.
அதன்படி தற்போது வெளியாகி இருக்கும் தகவலில், கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல் வாட்டர் டிராப் நாட்ச் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பின்புற கேமராக்கள் தற்போது விற்பனை செய்யப்படும் சில கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களில் உள்ளதை போன்றே பொறுத்தப்படும் என தெரிகிறது.

இவைதவிர புதிய கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா பற்றிய இதர விவரங்கள் மர்மமாகவே இருக்கின்றன. முந்தைய தகவல்களில் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் சாம்சங்கின் கேலக்ஸி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு மாற்றாக உருவாக்கப்படுகிறது என கூறப்பட்டது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏர்பாட்ஸ் 3 அடாப்டிவ் இ.கியூ. எனும் அம்சம் கொண்டிருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் அன்லீஷ்டு நிகழ்வில் ஆப்பிள் மியூசிக் மற்றும் ஹோம்பாட் பற்றிய அறிவிப்புகளை தொடர்ந்து ஏர்பாட்ஸ் 3 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
ஏர்பாட்ஸ் ப்ரோ, மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ மேக்ஸ் மாடல்களில் புதிதாக ஸ்பேஷியல் ஆடியோ அம்சம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்ட ஏர்பாட்ஸ் 3 அறிமுகம் செய்யப்பட்டது. இதில் உள்ள புதிய சென்சார்கள் இசையின் அனுபவத்தை மேம்படுத்துகிறது.

மேலும் இது வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. புதிய ஏர்பாட்ஸ் 3 அனைவரின் காதுகளிலும் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் அடாப்டிவ் இ.கியூ. அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஏர்பாட்ஸ் 3 விலை 129 டாலர்கள் என துவங்குகிறது.
டி.சி.எல். நிறுவனம் பல்வேறு ஸ்மார்ட் அம்சங்கள் நிறைந்த கண்ணாடியை அறிமுகம் செய்து இருக்கிறது.
டி.சி.எல். தண்டர்பேர்டு ஸ்மார்ட் கிளாஸ் பாயினீர் எடிஷன் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் கிளாஸ்களில் மைக்ரோ எல்.இ.டி. டிஸ்ப்ளே, டி.சி.எல். உருவாக்கிய வேவ்-கைடு வழங்கப்பட்டு இருக்கிறது.
தோற்றத்தில் இந்த ஸ்மார்ட் கிளாஸ் சாதாரன கண்ணாடிகளை போன்றே காட்சியளிக்கிறது. இதில் இன்பில்ட் கேமரா உள்ளது. இந்த கண்ணாடி ஒரே சமயத்தில் பல்வேறு ஸ்கிரீன்களை ஒளிபரப்பும். இந்த ஸ்மார்ட் கிளாஸ் அழைப்புகளை மேற்கொள்வது, ஆக்மென்டெட் ரியாலிட்டியில் நேவிகேஷன் மற்றும் புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டுள்ளது.

தண்டர்பேர்டு ஸ்மார்ட் கிளாஸ் பாயினீர் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதன் விலை மற்றும் விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்த ஸ்மார்ட் கிளாஸ் முதற்கட்டமாக சீனாவிலும் அதன் பின் சர்வதேச சந்தைகளிலும் விற்பனைக்கு வருகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஒன்பிளஸ் 9ஆர்.டி. ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. வரும் வாரங்களில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது.
புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 9ஆர் மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகமாகிறது. ஒன்பிளஸ் 9ஆர்.டி. மாடலில் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் ஒன்பிளஸ் 9ஆர்.டி. விலை ரூ. 40 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 44 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன் ரூ. 42,999 துவக்க விலையில் அறிமுகமானது. சீனாவில் ஒன்பிளஸ் 9ஆர்.டி. விலை இந்திய மதிப்பில் ரூ. 38,400 என துவங்குகிறது.
ஒப்போ நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இசட் போல்டு 3 மாடலுக்கு போட்டியாக உருவாக்கப்படுகிறது.
ஒப்போ நிறுவனம் புதிதாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
புதிய ஒப்போ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 7.8 இன்ச் திரை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 50 எம்பி பிரைமரி கேமரா, 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார், கலர் ஓ.எஸ். 12 மற்றும் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ஒப்போவின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம்.
சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
சியோமி நிறுவனம் புதிய சிவி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இது சியோமியின் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன் ஆகும். தற்போது சியோமியின் எம்.ஐ. 12 சீரிஸ் மாடல்கள் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
புதிய சியோமி எம்.ஐ. 12 மாடல் முந்தைய ஸ்மார்ட்போன்களை விட எடை குறைவாக இருக்கும் என்றும் இதன் அம்சங்கள் முன்பை விட மேம்பட்டு இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 898 பிராசஸர் கொண்டிருக்கும். இந்த பிராசஸர் கொண்டு வெளியாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, மிக மெல்லிய பாடி, வளைந்த டிஸ்ப்ளே, அதிக ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, 50 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய இ சீரிஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் மோட்டோ இ40 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் டி700 பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மோட்டோ இ40 மாடலில் கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், ஐ.பி. 52 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

புதிய மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் பின்க் கிளே மற்றும் கார்பன் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9,499 ஆகும். இது ப்ளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.






