என் மலர்
புதிய கேஜெட்டுகள்
ஐகூ நிறுவனம் உருவாக்கி வரும் புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் சான்று பெற்று இருக்கிறது.
ஐகூ நிறுவனத்தின் இசட்5எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் சீனாவின் டி.இ.என்.ஏ.ஏ. வலைதளத்தில் சான்று பெற்று இருக்கிறது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் ரக எல்.சி.டி. ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர், 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்டிருக்கும் என தெரிகிறது.

ஐகூ இசட்5எக்ஸ் 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
- 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் 120 ஹெர்ட்ஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர்
- மாலி ஜி68 எம்.சி.4 ஜிபியு
- 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
- 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒரிஜின் ஓ.எஸ். 1.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 50 எம்பி பிரைமரி கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 16 எம்பி செல்பி கேமரா
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ரெஸ் ஆடியோ
- 5ஜி எஸ்.ஏ. / என்.எஸ்.ஏ., டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 44 வாட் பாஸ்ட் சார்ஜிங்
ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி புதிய ஐபோன் எஸ்.இ. மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ.3 பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் இந்த மாடலின் கான்செப்ட் ரென்டர்கள் வெளியாகின. அதில் புதிய ஐபோன் முந்தைய எஸ்.இ. மாடலில் இருந்த சேசிஸ் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.
இத்துடன் ஐபோன் எஸ்.இ.3 மாடலில் 5ஜி கனெக்டிவிட்டி, ஏ15 பயோனிக் சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் எக்ஸ்60 5ஜி மோடெம் வழங்கப்படலாம். மற்ற அம்சங்களை பொருத்தவரை 4.7 இன்ச் டிஸ்ப்ளே, டச் ஐடி சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது.

ஐபோன் எஸ்.இ. 3 தோற்றம் முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. புதிய ஐபோன் வெளியீட்டு விவரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த மாடல் வரும் மாதங்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் 9ஆர்டி ஸ்மார்ட்போன் 50 எம்பி சோனி கேமரா சென்சார் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 9ஆர்டி ஸ்மார்ட்போனின் வெளியீட்டை புதிய டீசர் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறது. ஒன்பிளஸ் 9ஆர்டி மாடல் சீன சந்தையில் அக்டோபர் 13 ஆம் தேதி அறிமுகமாகிறது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் டீசர்களில் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் 50 எம்பி பிரைமரி கேமராவுடன் மூன்று லென்ஸ்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. டீசரை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் ட்விட்டரில் வெளியாகி இருக்கிறது.

அதன்படி ஒன்பிளஸ் 9ஆர்டி ஸ்மார்ட்போனின் பின்புறம் கிளாஸ் பினிஷ் கொண்டிருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 9ஆர்டி மாடலில் எப்.ஹெச்.டி. பிளஸ் 120 ஹெர்ட்ஸ் புளூயிட் அமோலெட் டிஸ்ப்ளே, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 65 வாட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
முந்தைய தகவல்களின்படி இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. எனினும், தற்போதைய தகவல்களின்படி இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் மற்றும் 12 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
விவோ நிறுவனத்தின் வி சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் புதிய நிறத்தில் இந்தியாவில் அறிமுகமாகிறது.
விவோ நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் விவோ வி21 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனத்தின் பிரீமியம் மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கிறது. இது சன்செட் டேசில், ஆர்க்டிக் வைட் மற்றும் டஸ்க் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 29,990 ஆகும்.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போன் அக்டோபர் 13 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இம்முறை இந்த ஸ்மார்ட்போன் புதிய நிறத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய நிறம் தவிர ஸ்மார்ட்போனின் அம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது. விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 29,990 என்றும் 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 32,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது.
சியோமி நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனத்தின் எம்.ஐ. மிக்ஸ் போல்டு ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி போல்டு சீரிஸ் போன்றே காட்சியளித்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சியோமி மற்றொரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
சியோமியின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3 மாடலுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது. இந்த மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மிக்ஸ் போல்டு 2-வை விட முற்றிலும் புதிதாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் அதிக ரிப்ரெஷ் ரேட், 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, அன்டர் டிஸ்ப்ளே கேமரா போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 12 பிரீ-இன்ஸ்டால் செய்து வழங்குகிறது.
கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 12 குறித்த அறிவிப்பை 2021 ஐ.ஒ. நிகழ்வில் வெளியிட்டது. பல்வேறு டெவலப்பர் பிரீவியூ, பீட்டா பில்டுகளை கடந்து தற்போது ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் பதிப்பை வெளியிட்டு இருக்கிறது. எனினும், இது ஆண்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் பிராஜக்ட் முறையில் வெளியாகி இருக்கிறது.
தற்போதைய அப்டேட் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு வெளியிடப்படவில்லை. வரும் வாரங்களில் ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் அப்டேட் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு வெளியிடப்படும் என கூகுள் அறிவித்து இருக்கிறது. எனினும், சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் அப்டேட் பிக்சல் 3, பிக்சல் 3ஏ, பிக்சல் 4, பிக்சல் 4ஏ, பிக்சல் 4ஏ 5ஜி, பிக்சல் 5 மற்றும் பிக்சல் 5ஏ ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படுகிறது. இதுதவிர விரைவில் அறிமுகமாக இருக்கும் பிக்சல் 6 சீரிஸ் மாடல்களில் ஆண்ட்ராய்டு 12 பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும்.
பிக்சல் ஸ்மார்ட்போன்கள் தவிர இந்த ஆண்டு இறுதியில் சாம்சங், ஒன்பிளஸ், ஒப்போ, சியோமி, ரியல்மி, டெக்னோ மற்றும் விவோ நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மேக்புக் ப்ரோ அந்த பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் எம்1-எக்ஸ் பெயரில் புதிய பிராசஸர் உருவாக்கி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த பிராசஸர் கொண்ட சாதனங்கள் வெளியீடு, உற்பத்தி சிக்கல் காரணமாக தள்ளி போனதாக கூறப்படுகிறது.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் எம்1-எக்ஸ் பிராசஸர் கொண்ட புதிய மேக்புக் ப்ரோ மாடல்களை அக்டோபர் மாதத்திலேயே அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அறிமுக நிகழ்வை தொடர்ந்து சில வாரங்களில் இதன் விற்பனை துவங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

புதிய மேக்புக் ப்ரோ மாடல்கள் முற்றிலும் புதிய டிசைன், 14 இன்ச் மற்றும் 16 இன்ச் அளவில் மினி எல்.இ.டி. ஸ்கிரீன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் பிளாட்-எட்ஜ் டிசைன், மேக்சேப் சார்ஜிங் போர்ட், ஹெச்.டி.எம்.ஐ. மற்றும் எஸ்.டி. கார்டு ரீடர் வழங்கப்படலாம்.
மேக்புக் தவிர பல்வேறு இதர சாதனங்களை அறிமுகம் செய்யவும் ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் மேக்புக் ப்ரோ மாடலை தொடர்ந்து மேம்பட்ட மேக் மினி, ஐமேக் மற்றும் ஐமேக் ப்ரோ மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் அதிக 5ஜி பேண்ட்களுக்கான வசதி கொண்டுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.7 இன்ச் ஒ.எல்.இ.டி. 10 பிட் கலர் ஸ்கிரீன், ஹெச்.டி.ஆர். 10 பிளஸ், 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 108 எம்பி பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 8 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ், 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 11 ஒ.எஸ். கொண்டிருக்கும் மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் மிட்நைட் ஸ்கை மற்றும் இரிடிசன்ட் கிளவுட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 36,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் அக்டோபர் 3 ஆம் தேதி துவங்குகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் முதல் டேப்லெட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்தது. இதில் 8 இன்ச் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், ஹீலியோ பி22டி பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ஆண்ட்ராய்டு 11, கிட்ஸ் மோட், மெட்டல் போன்ற வடிவமைப்பு, மோனோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ், 5100 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 5 எம்பி ஆட்டோபோக்கஸ் பிரைமரி கேமரா, 2 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

கனெக்டிவிட்டிக்கு 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ், வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி, 5100 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் சார்ஜிங் கொண்டிருக்கிறது. மோட்டோ டேப் ஜி20 பிளாட்டினம் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 10,999 என துவங்குகிறது. இதன் முன்பதிவு அக்டோபர் 2 ஆம் தேதி துவங்குகிறது.
சியோமி நிறுவனத்தின் புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மாரட்போன் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் சியோமி 11 லைட் என்.இ. 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.55 இன்ச் அமோலெட் டாட் டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், மொத்தத்தில் 12 5ஜி பேண்ட்களுக்கான ஆதரவு வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போனிற்கு மூன்று ஆண்டுகளுக்கு மென்பொருள் அப்டேட்கள், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை வழங்குவதாக சியோமி அறிவித்து உள்ளது. மிக-மெல்லிய வடிவமைப்பு கொண்டிருக்கும் சியோமி 11 லைட் என்.இ. 5ஜி மாடலில் புதிய பி.சி.பி. டிசைன், 1.88 எம்.எம். அளவில் மெல்லிய பெசல்கள் உள்ளன.

புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெலிமேக்ரோ கேமரா, 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. சியோமி 11 லைட் என்.இ. 5ஜி மாடல் 4250 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.
சியோமி 11 லைட் என்.இ. 5ஜி மாடல் டைமண்ட் டேசில், டஸ்கேனி கோரல், ஜாஸ் புளூ மற்றும் வினைல் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 26,999 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 28,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 2 ஆம் தேதி துவங்குகிறது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.7 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் 120 ஹெர்ட்ஸ் ஆமோலெட் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.1 வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி அம்சங்கள்
- 6.7 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் 1080x2400 பிக்சல் சூப்பர் ஆமோலெட் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர்
- அட்ரினோ 642L GPU
- 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
- 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. 3.1
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 64 எம்பி பிரைமரி கேமரா
- 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
- 5 எம்பி மேக்ரோ கேமரா
- 32 எம்பி செல்பி கேமரா
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ
- சாம்சங் பே
- 5ஜி எஸ்.ஏ. / என்.எஸ்.ஏ., டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 25 வாட் பாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் பிளேசிங் புளூ மற்றும் ஐசி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 29,999 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 31,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், இரு வேரியண்ட்களும் முறையே ரூ. 26,999 மற்றும் ரூ. 28,999 விலையில் குறுகிய காலக்கட்டத்திற்கு விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
ஐகூ நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி 5ஜி பிராசஸர் கொண்டிருக்கிறது.
ஐகூ நிறுவனத்தின் புதிய இசட்5 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.67 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ, 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

ஐகூ இசட்5 5ஜி அம்சங்கள்
- 6.67 இன்ச் 2400x1080 பிக்சல் புல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன்
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர்
- அட்ரினோ 642எல் GPU
- 8 ஜிபி /12 ஜிபி ரேம்
- 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஓ.எஸ். 12
- டூயல் சிம்
- 64 எம்பி பிரைமரி கேமரா
- 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 16 எம்பி செல்பி கேமரா
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
- 5ஜி எஸ்.ஏ./ என்.எஸ்.ஏ., டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 44 வாட் பாஸ்ட் சார்ஜிங்
ஐகூ இசட்5 5ஜி ஸ்மார்ட்போன் ஆர்க்டிக் டான் மற்றும் மிஸ்டிக் ஸ்பேஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 23,990 என்றும் 12 ஜிபி + 256 ஜிபி விலை ரூ. 26,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ஐகூ வலைதளங்களில் அக்டோபர் 3 ஆம் தேதி துவங்குகிறது.






