என் மலர்
புதிய கேஜெட்டுகள்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் எஸ் பென் வசதி கொண்டிருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ரெண்டர்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதில் 6.8 இன்ச் வளைந்த டிஸ்ப்ளே, குவாட் ஹெச்.டி. பிளஸ் அடாப்டிவ் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இத்துடன் புதிய கேமரா மாட்யூல், 108 எம்பி பிரைமரி கேமரா, பில்ட் இன் எஸ் பென் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 2200 அல்லது ஸ்னாப்டிராகன் 898 பிராசஸர் வழங்கப்படலாம். இந்தியாவில் இம்முறை கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல் ஸ்னாப்டிராகன் பிராசஸருடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. தற்போது கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா விவரங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், விரைவில் கேலக்ஸி எஸ்22 மற்றும் கேலக்ஸி எஸ்22 பிளஸ் மாடல்களின் ரெண்டர்களும் வெளியாகலாம்.
ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனில் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
ரியல்மி நிறுவனம் நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதில் 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யு.ஐ. 2 வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி பிளாக் அண்ட் வைட் கேமரா, 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

ரியல்மி நார்சோ 50ஏ அம்சங்கள்
- 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
- 1000 மெகாஹெர்ட்ஸ் ஏ.ஆர்.எம். மாலி ஜி 52 2 இ.இ.எம்.சி.2 ஜி.பி.யு.
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ரியல்மி யு.ஐ. 2 மற்றும் ஆண்ட்ராய்டு 11
- 50 எம்பி பிரைமரி கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 2 எம்பி பிளாக் அண்ட் வைட் கேமரா
- 8 எம்பி செல்பி கேமரா
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி
- 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 18 வாட் பாஸ்ட் சார்ஜிங், ரிவர்ஸ் சார்ஜிங்
ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன் ஆக்சிஜன் கிரீன் மற்றும் ஆக்சிஜன் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 11,499 என்றும் 4 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 12,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் கேலக்ஸி எப்42 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் 29 ஆம் தேதி அறிமுகமாகிறது.
வெளியீட்டு தேதியுடன் ஸ்மார்ட்போனின் சில அம்சங்களும் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச், மூன்று கேமரா சென்சார்கள், சதுரங்க வடிவம் கொண்ட கேமரா மாட்யூல் கொண்டிருக்கிறது.

இத்துடன் புல் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 12 5ஜி பேண்ட்களுக்கான சப்போர்ட், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் 2022 ஐபோன் மாடல் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. ஒட்டுமொத்த தோற்றத்தில் பெருமளவு மாற்றங்கள் இல்லை என்றபோதும், புதிய ஐபோன்களின் நாட்ச் முந்தைய மாடல்களில் இருப்பதை விட 20 சதவீதம் குறைவு ஆகும்.
அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கும் ஐபோன் 14 சீரிஸ் நாட்ச் இல்லாத டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ தெரிவித்துள்ளார். இந்த டிஸ்ப்ளே ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் வழங்கப்படலாம் என அவர் தெரிவித்து இருக்கிறார்.

ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் நாட்ச் டிஸ்ப்ளேவுக்கு மாற்றாக பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். இத்துடன் 48 எம்பி வைடு ஆங்கில் கேமராக்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஐபோன் 13 மினி ஐபோன் சீரிசில் கடைசி மினி மாடலாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஐபோன்கள் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் 5ஜி ஐபோன் எஸ்.இ. அறிமுகமாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்டிருக்கிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 20 மற்றும் எட்ஜ் 20 பியூஷன் ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இரு ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து எட்ஜ் 20 ப்ரோ மாடலை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தது. அந்த வரிசையில், தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 108 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 8 எம்பி டெலிபோட்டோ கேமரா, 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம்.

புதிய ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாத நிலையில், ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மட்டுமின்றி மோட்டோ டேப் 8 மாடலும் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.
ஒப்போ நிறுவனத்தின் புதிய ஏ16 ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ஏ16 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் ஸ்கிரீன், ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். மற்றும் கலர் ஓ.எஸ். 11.1 வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி டெப்த் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஒப்போ ஏ16 மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

ஒப்போ ஏ16 அம்சங்கள்
- 6.52 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்
- ஐ.எம்.ஜி. பவர் வி.ஆர். ஜி.இ.8320 ஜி.பி.யு.
- 4 ஜிபி எல்.பி.டி.டி.ஆர்.4எக்ஸ் ரேம்
- 64 ஜிபி இ.எம்.எம்.சி. 5.1 ஸ்டோரேஜ்
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் கலர் ஓ.எஸ். 11.1
- 13 எம்பி பிரைமரி கேமரா
- 2 எம்பி டெப்த் கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 8 எம்பி செல்பி கேமரா
- டூயல் சிம் ஸ்லாட்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன் பியல் புளூ மற்றும் க்ரிஸ்டல் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 13,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சியோமி 11 லைட் என்.இ. 5ஜி மாடல் இந்திய விலை மற்றும் நிறங்கள் பற்றிய விவரம் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இந்தியாவில் சியோமி 11 லைட் என்.இ. 5ஜி மாடல் செப்டம்பர் 25 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சியோமி 11 லைட் என்.இ. 5ஜி 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 21,999 என துவங்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி போன்ற வேரியண்ட்களிலும் கிடைக்கும் என தெரிகிறது.

இந்தியாவில் சியோமி 11 லைட் என்.இ. 5ஜி மாடல் வைட், பின்க், புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் புல் ஹெச்.டி. பிளஸ் 1080x2400 பிக்சல் ஆமோலெட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இன்பினிக்ஸ் நிறுவனம் ஹாட் 11 மற்றும் ஹாட் 11எஸ் என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது.
இன்பினிக்ஸ் நிறுவனம் ஹாட் 11 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் 6.6 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர், 13 எம்பி பிரைமரி கேமரா, டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் மாடலில் 6.78 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி88 பிராசஸர், 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், ஏ.ஐ. லென்ஸ், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

இரு மாடல்களிலும் 8 எம்பி செல்பி கேமரா, டூயல் எல்.இ.டி. பிளாஷ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இன்பினிக்ஸ் ஹாட் 11 மாடல் 7 டிகிரி பர்பில், போலார் பிளாக், எமரால்டு கிரீன் மற்றும் சில்வர் வேவ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 8,999 ஆகும்.
இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் மாடல் கிரீன் வேவ், 7 டிகிரி பர்பில், போலார் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.இதன் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 10,999 ஆகும்.
ரியல்மி நிறுவனத்தின் புதிய சி சீரிஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் சி25வை ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், யுனிசாக் டி610 பிராசஸர், மாலி ஜி52 ஜி.பி.யு., 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
இத்துடன் ரியல்மி யு.ஐ. சார்ந்த ஆண்ட்ராய்டு 11, 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி பிளாக் அண்ட் வைட் சென்சார், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ரியல்மி சி25வை 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

ரியல்மி சி25வை அம்சங்கள்
- 6.5 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்.டி. டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் யுனிசாக் டி610 பிராசஸர்
- மாலி-G52 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 11
- 50 எம்பி பிரைமரி கேமரா
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 2 எம்பி பிளாக் அண்ட் வைட் கேமரா
- 8 எம்பி செல்பி கேமரா
- பின்புறம் கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யு.எஸ்.பி.
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 18 வாட் சார்ஜிங்
ரியல்மி சி25வை மாடல் கிளேசியர் புளூ மற்றும் மெட்டல் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11,999 ஆகும். ரியல்மி சி25வை விற்பனை செப்டம்பர் 27 ஆம் தேதி துவங்குகிறது.
கூகுள் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் பிக்சல் 6 ப்ரோ மாடலில் 50 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ மாடல்கள் இந்த ஆண்டு இலையுதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் கூகுளின் சொந்த டென்சார் சிப்செட் கொண்டிருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்த நிலையில், புதிய பிக்சல் 6 ப்ரோ அம்சங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய பிக்சல் 6 ப்ரோ மாடலில் 6.71 இன்ச் 3120x1440 பிக்சல் வளைந்த பி.ஒ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, கூகுள் டென்சார் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இத்துடன் 50 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 48 எம்பி டெலிபோட்டோ கேமரா, 12 எம்பி செல்பி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், யு.எஸ்.பி. டைப்-சி, 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பிள் வாட்ச் 7 அதிரடி அப்டேட்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆப்பிள் நிறுவனம் தனது கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்வில் புதிய ஐபேட் மாடல்களை தொடர்ந்து ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 அறிமுகம் செய்தது. புதிய ஆப்பிள் வாட்ச் 7 நாள் முழுக்க பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

இத்துடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, இ.சி.ஜி. வசதி கொண்டுள்ளது. புதிய வாட்ச் 7 இதுவரை வெளியான வாட்ச் மாடல்களில் மிகவும் உறுதியான வடிவமைப்பை கொண்டுள்ளது. இத்துடன் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, அதிக வாட்ச் பேஸ்கள், ஐந்து அலுமினியம் நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஆப்பிள் வாட்ச் 7 விலை 399 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் வாட்ச் மாடலை தொடர்ந்து ஆப்பிள் பிட்னஸ் பிளஸ் சேவை அறிவிப்புகள் வெளியானது. இதில் பல்வேறு உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் சார்ந்த சேவைகள் இடம்பெற்றுள்ளன.
கூகுள் நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். ஸ்டேபில் வெளியீட்டு விவரம் வெளியாகி உள்ளது.
கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் அப்டேட் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஆண்ட்ராய்டு 12 ஐந்தாவது மற்றும் இறுதி பீட்டா ஒரு வாரத்திற்கு முன் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் கூகுள் தரவுகளில் ஆண்ட்ராய்டு 12 சோர்ஸ் கோட் அக்டோபர் 4 இல் வெளியாகும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதே தினத்தில் ஆண்ட்ராய்டு 12 ஸ்டேபில் அப்டேட் வெளியாகும் என தெரிகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி ஆண்ட்ராய்டு 11 வெளியிடப்பட்டது. பிக்சல் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான ஆண்ட்ராய்டு 12 வெளியீட்டு விவரம் வெளியாகும்.






