search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் கேலக்ஸி ஏ32
    X
    சாம்சங் கேலக்ஸி ஏ32

    இணையத்தில் லீக் ஆன புது சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம் சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. தென் கொரிய நிறுவனமான சாம்சங் இந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி பெயரில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

    புதிய கேல்கஸி எம்33 5ஜி குறித்து சாம்சங் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் எஸ்.எம். எம்336பி எனும் பெயரில் உருவாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2022 ஆண்டில் தான் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

     சாம்சங் கேலக்ஸி ஏ32

    இந்த மாடலின் அம்சங்கள் பற்றிய விவரங்கள் தொடர்ந்து மர்மாகவே உள்ளது. முந்தைய கேலக்ஸி எம்32 5ஜி மாடல் சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடல் ஆகும். அந்த வகையில் புதிய கேலக்ஸி எம்33 5ஜி மாடல் கேலக்ஸி ஏ33 ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்டு மாடலாக இருக்கும் என தெரிகிறது. 
    Next Story
    ×