என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    எல்ஜி நிறுவனத்தின் வி40 தின்க் ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #LGV40ThinQ



    எல்ஜி நிறுவன ஸ்மார்ட்போன்கள் அந்நிறுவன வழக்கத்திற்கு மாறாக வெளியிடப்படுகிறது. எல்ஜி வி30 ஸ்மார்ட்போன் பலமுறை மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டன, ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் பல்வேறு வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் எல்ஜி வி40 தின்க் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.

    எல்ஜி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றாக எல்ஜி வி40 இருக்கிறது. சமீபத்தில் அக்டோபர் 3-ம் தேதி விழாவுக்கான அழைப்புகளை எல்ஜி வெளியிட்டது. இதனுடன் "Take 5" என்ற வாசகம் இடம்பெற்றிருந்ததை தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போனில் ஐந்து கேமரா செட்டப் வழங்கப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    வி40 சீரிஸ் அதிகளவு லீக் ஆகவில்லை என்றாலும், சிலமுறை இதன் விவரங்கள் வலைத்தளங்களில் தோன்றி இருக்கிறது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய எல்ஜி ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா சென்சார் மற்றும் இரண்டு செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.



    சமீபத்தில் லீக் ஆன வடிவமைப்பில் இதன் தோற்றம் பார்க்க எல்ஜி வி30 மாடலை போன்று காட்சியளித்தது. எனினும் புதிதாக நாட்ச் மற்றும் கூடுதல் கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    புதிய எல்ஜி வி40 தின்க் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் என்ற வகையில் இந்த மாடலில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 1440 பிக்சல் டிஸ்ப்ளே, குறைந்தபட்சம் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முந்தைய ஸ்மார்ட்போன் மாடல்கள் எதிர்பார்த்த வெற்றியை வழங்காத நிலையில், புதிய வி40 ஸ்மார்ட்போன் சந்தையில் எத்தகைய வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தனது ஸ்மார்ட்போன்களில் டீப் தின்க் பிளாட்ஃபார்ம் சேர்த்திருப்பதை எல்ஜி கடந்த ஆண்டு அறிவித்தது. 

    இந்நிலையில், சிங்குளர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஸ்மார்ட்போன்கள், தொலைகாட்சி, குளிர்ச்தான பெட்டிகள், குளிரூட்டிகள், ஸ்பீக்கர்கள் மற்றும் ரோபோட் உள்ளிட்டவற்றுக்கு வழங்க எல்ஜி திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் அக்டோபர் 11 கேலக்ஸி விழாவில் நான்கு கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை சாம்சங் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #smartphone



    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி சாதனம் அக்டோபர் 11-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    இதற்கென சாம்சங் வெளியிட்டிருக்கும் டீசரில் "4X fun" என்ற வார்த்தை மற்றும் தேதி இடம்பெற்றிருக்கிறது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவன வரலாற்றில் முதல் முறையாக நான்கு பிரைமரி கேமராக்கள் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    ஏற்கனவே டூயல் முன்பக்கம் மற்றும் பிரைமரி கேமராக்கள் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியிருந்தன. அதன்படி சமீபத்தில் வெளியான தகவல்களில் 2019 ஆண்டில் வெளியாக இருக்கும் கேலக்ஸி ஏ மாடலில் நான்கு கேமரா யூனிட் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    கேலக்ஸி ஏ மாடலில் வழங்கப்பட இருக்கும் மூன்று கேமரா யூனிட்களில் ஒன்று 32 எம்.பி. சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதேபோன்று கேலக்ஸி எஸ்10 மாடலில் மூன்று பிரைமரி கேமரா மற்றும் டூயல் செல்ஃபி கேமராக்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் டைப்-சி புல்லெட்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #OnePlus #earphones



    ஒன்பிளஸ் நிறுவனத்தின் டைப்-சி புல்லெட்ஸ் இன்-இயர் இயர்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய இயர்போன்கள் 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புல்லெட்ஸ் வி12 இயர்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடல் மட்டும் கிடையாது என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.

    புதிய இயர்போன்களில் பல்வேறு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு, சக்திவாய்ந்த ஆடியோ அனுபவம் மிகத்துல்லியமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்டல் வடிவமைப்பு, கேபிள் உள்ளிட்டவை அரமிட் ஃபைபர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் டைப்-சி புல்லெட்கள் இழுக்கப்படும் போது அதிக உறுதியாக இருக்கும்.

    சர்கஸ் லாஜிக் உடன் இணைந்து டி.ஏ.சி. கொண்டிருப்பதால் அதிக டைனமிக் ரேன்ஜ், சக்திவாய்ந்த பேஸ், சிகனல்-டு-நாய்ஸ் ரேஷியோ உள்ளிட்டவை கொண்டிருக்கிறது. டைப்-சி புல்லெட்கள் அனைத்து டைப்-சி போர்ட்களுடன் இணையும் வசதி கொண்டிருக்கிறது. இதனால் ஒன்பிளஸ் தவிர மற்ற மாடல்களுடனும் பயன்படுத்தலாம்.

    ஒன்பிளஸ் டைப்-சி புல்லெட்கள் அந்நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் மாடலான ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனுடன் வெளியிடப்படுகிறது. இதன் விலை ரூ.1,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒன்பிளஸ் 6டி மாடலில் ஹெட்போன் ஜாக் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வாட்ச் சீரிஸ் 4 அறிமுகம் செய்யப்பட்டது. மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளுடன் புதிய வாட்ச் அறிமுகமாகியுள்ளது. #AppleEvent #AppleWatch4



    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீட்டு விழாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்ற விழாவில் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய எஸ்4 சிப்செட், இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் வசதிகளை புதிய வாட்ச் கொண்டுள்ளது.

    இதய துடிப்பை துல்லியமாக கணக்கிடும் வசதிகளை கொண்டுள்ள வாட்ச் சீரிஸ் 4 டிஜிட்டல் கிரவுன் பல்வேறு கூடுதல் வசதிகளை வழங்குகிறது. புதிய எஸ்4 சிப்செட் முந்தைய மாடல்களை விட இருமடங்கு வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஜி.பி.எஸ். வேரியன்ட் விலை 399 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் செல்லுலார் வேரியன்ட் விலை 499 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 14-ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் வாட்ச் 4 செப்டம்பர் 21-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.
    ப்ர்ட்ரோனிக்ஸ் நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் ஹெட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Wireless #earphones



    போர்ட்ரோனிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிதாக வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஹார்மோனிக்ஸ் 208 என அழைக்கப்படும் புதிய ப்ளூடூத் ஸ்டீரியோ ஹெட்போன்கள் காம்பேக்ட் வடிவமைப்பு மற்றும் காந்த சக்தியில் ஒட்டிக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 



    போர்ட்ரோனிக்ஸ் ஹார்மோனிக்ஸ் 208 சிறப்பம்சங்கள்:

    - ப்ளூடூத் சாதனங்களுடன் இணைய ப்ளூடூத் 4.1 வசதி
    - ஒரே சமயத்தில் இரு சாதனங்களுடன் இணையும் வசதி
    - அழைப்பு, மியூசிக் கன்ட்ரோல்களுக்கு எளிய பட்டன்கள்
    - காதில் இருந்து எளிதில் கழன்று விடாத படி உருவாக்கப்பட்டுள்ளது
    - காந்த சக்தி கொண்ட ஸ்பீக்கரில் அகௌஸ்டிக் எக்கோ ரெடக்ஷன் தொழில்நுட்பம்
    - அழைப்புகளின் போது பின்னணி சத்தத்தை குறைக்கும் தொழில்நுட்பம்
    - 30 கிராம் எடை
    - 200 எம்.ஏ.ஹெச். பேட்டரி 

    போர்ட்ரோனிக்ஸ் ஹார்மோனிக்ஸ் 208 பிளாக், புளு மற்றும் ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், அமேசான் வலைத்தளத்தில் ரூ.2,099 விலையில் வாங்கிட முடியும்.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் 6டி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #OnePlus6T



    ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாக துவங்கிவிட்டன. புதிய 6டி ஸ்மார்ட்போனின் விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் சார்ந்த விவரம் ஒன்பிளஸ் மூலம் வெளியாகியுள்ளது.

    அதன்படி புதிய ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட இருப்பதை ஒன்பிளஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த அம்சத்தை ஒன்பிளஸ் ஸ்கிரீன் அன்லாக் என அழைக்க இருக்கிறது. புதிய அம்சம் பின்புறம் கைரேகை சென்சார் வழங்குவதற்கான தேவை இருக்காது என்பதை தெரிவித்துள்ளது. 

    அந்த வகையில் புதிய ஒன்பிளஸ் 6டி மாடலின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் வகையில் ஸ்கிரீன் அன்லாக் மற்றும் ஃபேஸ் அன்லாக் போன்ற அம்சங்கள் இருக்கும். புதிய தகவலை வழங்கி இருப்பதோடு, சென்சார் எப்படி இருக்கும் என்பதையும் ஒன்பிளஸ் ஸ்கிரீன்ஷாட் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: CNET

    நாள் முழுக்க பலமுறை ஸ்மார்ட்போன்களை அன்லாக் செய்கிறோம், ஸ்கிரீன் அன்லாக் இந்த வழிமுறை எண்ணிக்கையை குறைக்கிறது. கூடுதலாக ஃபேஸ் அன்லாக் வசதியை சேர்ப்பதன் மூலம், வாடிக்கையாளர்கள் மொபைலை அன்லாக் செய்ய ஆப்ஷன்கள் கிடைக்கும்," என ஒன்பிளஸ் அனுப்பியிருக்கும் மின்னஞ்சலில் தெரியவந்துள்ளது. 

    இத்துடன் அக்டோபர் 17 என்ற தேதியும் இடம்பெற்று இருப்பதால் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் இந்த தேதியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஸ்கிரீன் அன்லாக் பெயரில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களிலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் நிலையில், இந்த தொழில்நுட்பத்தை வழங்கும் விவோ ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஹூவாய் நிறுவன மாடல்களுடன் இணைந்திருக்கிறது.
    இன்ஸ்டகிராம் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் அவ்வப்போது சேர்க்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக எமோஜி ஷார்ட்கட் சேர்க்கப்பட்டுள்ளது. #instagram #emojis



    இன்ஸ்டாகிராம் செயலியில் அவ்வப்போது புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியில் இம்முறை தனித்துவம் வாய்ந்த எமோஜி ஷார்ட்கட்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது. 

    இந்த அம்சத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் எமோஜி கீபோர்டின் மேல் வைக்கப்படும். ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் புதிய அம்சம் இன்னும் இரு தினங்களில் வழங்கப்பட இருக்கிறது.



    எனினும் இந்த அம்சம் கமென்ட்ஸ் பகுதியில் மட்டுமே வேலை செய்கிறது. அந்த வகையில் ஸ்டோரிக்கள் மற்றும் சொந்த போஸ்ட்களில் புதிய அம்சம் பயன்படுத்த முடியாது.

    செயலியை லாப நோக்கில் தொடர்ந்து இயங்கச் செய்ய பல்வேறு புதிய விஷயங்களை இன்ஸ்டாகிராம் முயன்று வருகிறது. இதேபோன்று இன்ஸ்டாகிராம் ஷாப்பிங் செய்வதற்கென பிரத்யேக செயலி ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியானது. ஐ.ஜி. ஷாப்பிங் என்ற பெயரில் இந்த செயலி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    பயனர்கள் இன்ஸ்டாவில் பின்தொடரும் பக்கம் அல்லது விற்பனையாளரிடம் இருந்து நேரடியாக பொருட்களை வாங்கிட முடியும் என கூறப்படுகிறது. முன்னதாக பெற்றோர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த ஏதுவாக பேரென்ட்ஸ் கைடு அறிமுகம் செய்தது. 

    இந்த கைடு கொண்டு தனியுரிமை, இன்டராக்ஷன்கள் அல்லது நேரத்தை இன்ஸ்டாகிராமில் எவ்வாறு இயக்க வேண்டும் போன்று மூன்று அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர ஸ்டோரிக்களில் இசையை அறிமுகம் செய்தது, இதில் ஸ்டோரியில் இசையை சேர்க்க முடியும். 
    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 கேட்ஜெட்கள் செப்டம்பர் 12-ம் தேதி அறிமுகமாக இருக்கிறது. இவ்விழாவில் ஆப்பிள் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படும் கேட்ஜெட்களை தொடர்ந்து பார்ப்போம். #AppleEvent
    ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஆண்டின் மிகப்பெரிய நிகழ்வு இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கிறது. 2018 ஐபோன் மாடல்களின் அறிமுக நிகழ்வு செப்டம்பர் 12-ம் தேதி ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் ஆப்பிள் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படும் கேட்ஜெட்களின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ஐபோன் XS

    ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் சிறிய ஐபோன் மாடலாக ஐபோன் XS இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் OLED ஸ்கிரீன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐபோன் X மாடலின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் புதிய பிராசஸர், பெரிய பேட்டரி மற்றும் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபோன் XS மேக்ஸ்

    ஐபோன் XS மேக்ஸ் மாடல் இந்த ஆண்டு வெளியாக பெரிய ஐபோன் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இது சாம்சங்கின் கேலக்ஸி நோட் 9 மாடலுக்கு போட்டியாக இருக்கும் என்றும் இதில் 6.5 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றபடி ஆப்பிள் பென்சில் சப்போர்ட் மற்றும் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.



    ஐபோன் 9

    2018 ஐபோன் மாடல்களில் விலை குறைந்த மாடலாக ஐபோன் 9 இருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, ஒற்றை பிரைமரி கேமரா, டூயல் சிம் ஸ்லாட், புதிய நிறங்களில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4

    செப்டம்பர் 12 நிகழ்வில் ஆப்பிள் புதிய வாட்ச் சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி வட்ட வடிவம் கொண்ட பெரிய டையல், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, அதிக ரெசல்யூஷன் மற்றும் பல்வேறு அம்சங்கள் கொண்டிருக்கின்றன.  #AppleEvent
    ரேசர் போன் 2 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சீனாவின் பென்ச்மார்க்கிங் வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது. #RazerPhone2



    இந்தியாவில் ரேசர்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்தில் ரேசர் போன் 2 வெளியீடு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் சீன வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது.

    சீனாவின் அன்டுடு பென்ச்மார்க்கிங் வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ள விவரங்களில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் உறுதியாகியுள்ளது. அதன்படி ரேசர்போன் 2 மாடலில் 512 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படுகிறது. முந்தைய ரேசர் ஸ்மார்ட்போனில் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.



    இத்துடன் 5.7 இன்ச் QHD ஷார்ப் IGZO ஸ்கிரீன், குவால்காம் க்யூ-சின்க் வசதி வழங்கப்படுகிறது. ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் ரேசர்போன் 2 அன்டுடு தளத்தில் 2,83,397 புள்ளிகளை பெற்று இருக்கிறது. ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு, கேமரா மற்றும் பேட்டரி சார்ந்த தகவல்கள் அறியப்படவில்லை.

    முந்தைய ரேசர் போன் போன்று புதிய ரேசர் போன் 2 மாடலும் நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மற்ற ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான ரோக் போன், சியோமி பிளாக் ஷார்க் மற்றும் இதர மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆடியோ சாதனங்களை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனமான போல்ட் இந்தியாவில் புதிய இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. #Earphone



    ஆடியோ சாதனங்களை சுவாரஸ்ய அம்சங்களுடன் வழங்குவதில் பிரபல நிறுவனமாக அறியப்படும் போல்ட் ஆடியோ இந்தியாவில் புதிய வயர்டு இயர்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

    லூப் என அழைக்கப்படும் புதிய போல்ட் இயர்போன்களில் ஆங்கில்டு இயர் டிப்கள் மற்றும் பிரத்யேக இயர் லூப் ஃபாஸ்ட்னர் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. கெவ்லரின் கேபிள்களை கொண்டிருக்கும் இந்த இயர்போனின் ஸ்டேபிலைசர் சீரான ஆடியோ தரத்தை வழங்கும்.

    மேலும் இதில் உள்ள ஹை-ரிகிடிட்டி ஏ.எல். (High-rigidity AL) அலாய் ஹவுசிங்கள் தொடர் பயன்பாடுகளிலும் சிறப்பான அனுபவத்தை வழங்கும். இதன் சிலிகான் டிரான்ஸ்லூசென்ட் இயர் ஃபாஸ்ட்னர் காதுகளில் கச்சிதமாக பொருந்திக் கொண்டு அடிக்கடி கீழே விழாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் உடற்பயிற்சி செய்யும் போது சிறப்பான ஆடியோ உத்வேகத்துடன் பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்த முடியும்.

    கூடுதலாக இதில் 3.5 எம்.எம். கனெக்டர் வழங்கப்பட்டு இருப்பதோடு உயர் ரக அழைப்புகள் மற்றும் வாய்ஸ் கமான்ட் செய்ய ஏதுவாக இயர்போனில் பில்ட்-இன் கன்டெசர் மைக்ரோபோன் பொருத்தப்பட்டுள்ளது.



    போல்ட் ஆடியோ லூப் முக்கிய அம்சங்கள்:

    – உயர் ரக கேபிள் – ஆடியோ தரத்தை குறையாமல் பார்த்துக் கொள்கிறது
    – 3D சவுன்ட்- சின்க்ரோனைஸ் செய்யப்பட்டு மேம்பட்ட ஆடிட்டரி அனுபவம் வழங்க 3D அகௌஸ்டிக்ஸ்
    – 3.5 எம்.எம். கனெக்டர் – தங்க முலாம் பூசப்பட்ட சர்வதேச 3.5 எம்.எம். கனெக்டர்
    – பில்ட்-இன் மைக் – கன்டென்சர் மைக்ரோபோன் உயர் ரக அழைப்புகளுக்கு ஏதுவாக இருக்கும்
    – பில்ட்-இன் மைக்ரோ ஊஃபர்கள் – இயர்போனின் ஆடியோ தரம் மற்றும் ஒலியை சிறப்பாக வழங்குகிறது

    இந்தியாவில் புதிய போல்ட் ஆடியோ லூப் விலை ரூ.672 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, எனினும் மிந்த்ரா தளத்தில் ரூ.530 எனும் சிறப்பு விலையில் வாங்கிட முடியும்.
    ஐந்து கேமரா செட்டப் கொண்ட நோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #nokia9 #smartphone



    ஐந்து கேமரா சென்சார் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போனின் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் லீக் ஆகிவந்த நிலையில், இம்முறை ஸ்மார்ட்போனின் புகைப்படம் லீக் ஆகியுள்ளது.

    முன்னதாக வெளியான தகவல்களில் ஃபாக்ஸ்கான் இந்த ஸ்மார்ட்போனினை வடிவமைத்து உற்பத்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்சமயம் ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் புகைப்படம் சீனாவில் லீக் ஆகி இருக்கிறது.

    புதிய ப்ரோடோடைப் புகைப்படத்தில் TA-1094 என்ற மாடல் நம்பர் இடம்பெற்றிருக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 9 என்ற பெயரில் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    பின்புறம் ஐந்து கேமரா லென்ஸ் 1-1-3 என்ற அடிப்படையில் பொருத்தப்பட்டு ஒன்றில் எல்.இ.டி. ஃபிளாஷ் இடம்பெற்றுள்ளது. பின்புறம் வட்ட வடிவில் சீராக ஐந்து கேமரா லென்ஸ் மட்டும் காணப்படும் நிலையில், கைரேகை சென்சார் இடம்பெறவில்லை.

    அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் போன்று 3டி ஃபேஸ் அன்லாக் அல்லது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.9 இன்ச் குவாட் ஹெச்.டி. OLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 8 ஜிபி ரேம் மற்றும் OZO ஆடியோ உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    சமீபத்தில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் பியூர் வியூ பிரான்டை கைப்பற்றியது. இதே பிரான்டினை நோக்கியா விற்பனையை மைக்ரோசாஃப்ட் கைப்பற்றியதும் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    விவோ நிறுவனத்தின் வி11 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அம்சங்கள் மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #VivoV11Pro



    விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 6.41 இன்ச் FHD சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 1.76 மில்லிமீட்டர் மெல்லிய பெசல்கள், 91.27% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ கொண்டுள்ளது.

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 660 AIE மற்றும் 6 ஜிபி ரேம், 12 எம்பி பிரைமரி கேமரா, F/1.8 அப்ரேச்சர், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. சீன் டிடெக்ஷன், 25 எம்பி செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டி அம்சம், ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    விவோ வி11 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.41 இன்ச் 1080x2340 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED 19.5:9 டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 14nm பிராசஸர்
    - அட்ரினோ 512 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - ஃபன்டச் ஓ.எஸ். 4.5 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 12 எம்பி டூயல் பிடி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ், f/1.8, 1/2.8 சென்சார், 1.28 μm 
    - 5 எம்பி இரண்டாவது கேமரா, f/2.4
    - 25 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3,400 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போன் ஸ்டேரி நைட் பிளாக் மற்றும் டேஸ்லிங் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.25,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள வி11 ப்ரோ விற்பனை அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. விவோ வி11 ப்ரோ முன்பதிவு செப்டம்பர் 6-ம் தேதி துவங்கி, விற்பனை செப்டம்பர் 120ம் தேதி முதல் விற்பனை துவங்குகிறது.
    ×