search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இன்ஸ்டாகிராம் கமென்ட்களில் எமோஜி ஷார்ட்கட் அறிமுகம்
    X

    இன்ஸ்டாகிராம் கமென்ட்களில் எமோஜி ஷார்ட்கட் அறிமுகம்

    இன்ஸ்டகிராம் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் அவ்வப்போது சேர்க்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக எமோஜி ஷார்ட்கட் சேர்க்கப்பட்டுள்ளது. #instagram #emojis



    இன்ஸ்டாகிராம் செயலியில் அவ்வப்போது புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியில் இம்முறை தனித்துவம் வாய்ந்த எமோஜி ஷார்ட்கட்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது. 

    இந்த அம்சத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் எமோஜி கீபோர்டின் மேல் வைக்கப்படும். ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் புதிய அம்சம் இன்னும் இரு தினங்களில் வழங்கப்பட இருக்கிறது.



    எனினும் இந்த அம்சம் கமென்ட்ஸ் பகுதியில் மட்டுமே வேலை செய்கிறது. அந்த வகையில் ஸ்டோரிக்கள் மற்றும் சொந்த போஸ்ட்களில் புதிய அம்சம் பயன்படுத்த முடியாது.

    செயலியை லாப நோக்கில் தொடர்ந்து இயங்கச் செய்ய பல்வேறு புதிய விஷயங்களை இன்ஸ்டாகிராம் முயன்று வருகிறது. இதேபோன்று இன்ஸ்டாகிராம் ஷாப்பிங் செய்வதற்கென பிரத்யேக செயலி ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியானது. ஐ.ஜி. ஷாப்பிங் என்ற பெயரில் இந்த செயலி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    பயனர்கள் இன்ஸ்டாவில் பின்தொடரும் பக்கம் அல்லது விற்பனையாளரிடம் இருந்து நேரடியாக பொருட்களை வாங்கிட முடியும் என கூறப்படுகிறது. முன்னதாக பெற்றோர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த ஏதுவாக பேரென்ட்ஸ் கைடு அறிமுகம் செய்தது. 

    இந்த கைடு கொண்டு தனியுரிமை, இன்டராக்ஷன்கள் அல்லது நேரத்தை இன்ஸ்டாகிராமில் எவ்வாறு இயக்க வேண்டும் போன்று மூன்று அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர ஸ்டோரிக்களில் இசையை அறிமுகம் செய்தது, இதில் ஸ்டோரியில் இசையை சேர்க்க முடியும். 
    Next Story
    ×