என் மலர்
புதிய கேஜெட்டுகள்
ஆப்பிள் வாட்ச் சாதனத்திற்கு என ஆப்பிள் புதிய காப்புரிமைகளை பெற்றிருப்பது சமீபத்திய தகவல்களில் தெரியவந்துள்ளது. #AppleWatch
ஆப்பிள் பதிவு செய்திருக்கும் இரண்டு காப்புரிமைகளில் வளைந்த ஓரங்களுடன் பெரிய ஆப்பிள் வாட்ச் டிஸ்ப்ளேக்கள், OLED டிஸ்ப்ளேக்களுக்கு ஆன்டி-பர்ன்-இன் தீர்வு உள்ளிட்டவை கோரப்பட்டுள்ளது.
காப்புரிமை விண்ணப்பத்தின் படி, டிஸ்ப்ளேவில் முழுமையான பிக்சல்கள் மற்றும் முழுமையான அளவு கொண்ட பிக்சல்களில் தேர்வு செய்யப்பட்ட ஆன்டி-அலைசிங் பிக்சல்கள் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பிக்சல்கள் OLED அல்லது LCD பிக்சல்களாகவோ அல்லது பெரிய டிஸ்ப்ளே பிக்சல்களை கொண்டிருக்கலாம்.
இதன் மூலம் ஆப்பிள் வாட்ச் புதிய எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் இது 15% பெரிய டிஸ்ப்ளேக்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். ஆப்பிள் காப்புரிமை விண்ணபம் 20180246363 “Pixel Array Antialiasing to Accommodate Curved Display Edges,” தலைப்பில் 2018 இரண்டாவது காலாண்டு வாக்கில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
ஏப்ரல் 2018-இல் ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்த காப்புரிமை வழங்கப்பட்டது, இதன் மூலம் ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் வட்டம் அல்லது வளைந்த டிஸ்ப்ளே இன்டர்ஃபேஸ் வழங்க முடியும். பர்ன்-இன் பிழையை சரி செய்ய ஆப்பிள் காப்புரிமையில் புதிய தகவல் இடம்பெற்றுள்ளது.
சில தினங்களுக்கு முன் 2018 ஆப்பிள் நிகழ்வினை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் படி செப்டம்பர் 12-ம் தேதி காலை 10.00 மணி்க்கு ஆப்பிள் தலைமையகத்தில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெற இருக்கிறது.
இவ்விழாவில் ஆப்பிள் நிறுவனம் 6.5 இன்ச் OLED ஐபோன் X பிளஸ், மேம்படுத்தப்பட்ட 5.8 இன்ச் OLED ஐபோன் X, 6.1 இன்ச் எல்.சி.டி. ஐபோன் மாடல், ஐ.ஓ.எஸ். 12 புதிய ஏ12 பிராசஸர் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Redmi6A #Redmi6pro
சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரெட்மி 6, ரெட்மி 6ஏ மற்றும் ரெட்மி 6 ப்ரோ என அழைக்கப்படும் மூன்று ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி உள்ளன.
ரெட்மி 6ஏ மாடலில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ A22 பிராசஸர், 2 ஜிபி ரேம், 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, ஏ.ஐ. போர்டிரெயிட் மோட், ஏ.ஐ. பியூட்டிஃபை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி 6ஏ சிறப்பம்சங்கள்:
- 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ A22 12nm பிராசஸர்
- பவர் வி.ஆர். GE GPU
- 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், PDAF, f/2.2, EIS
- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் கிரே, புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது.

ரெட்மி 6 சிறப்பம்சங்கள்:
- 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12nm பிராசஸர்
- பவர் வி.ஆர். GE8320 GPU
- 3 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 1.25μm பிக்சல், PDAF, f/2.2
- 5 எம்பி இரண்டாவது கேமரா
- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
- கைரேகை சென்சார், ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
ரெட்மி 6 ஸ்மார்ட்போன் கிரே, புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

ரெட்மி 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 5.84 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 14nm பிராசஸர்
- அட்ரினோ 506 GPU
- 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
- 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், சோனி IMX486, 1.25μm பிக்சல், PDAF, f/2.2, EIS
- 5 எம்பி இரண்டாவது கேமரா, சாம்சங் S5K5E8, 1.12um பிக்சல், f/2.2
- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
- கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
இந்தியாவில் ரெட்மி 6 ப்ரோ ரெட், புளு, கோல்டு மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
ரெட்மி 6 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி வேரியன்ட் விலை ரூ.7,999 என்றும் 64 ஜிபி வேரியன்ட் விலை ரூ.9,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் Mi.com தளத்தில் மட்டும் செப்டம்பர் 10-ம் தேதி பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம், 16 ஜிபி வேரியன்ட் விலை ரூ.5,999 என்றும் 32 ஜிபி ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் Mi.com தளத்தில் மட்டும் செப்டம்பர் 19-ம் தேதி பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,999 என்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. க்ளியர் கேஸ் உடன் கிடைக்கும் ரெட்மி 6 ப்ரோ மாடல் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை செப்டம்பர் 11-ம் தேதி துவங்குகிறது.
சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். #Samsung
சாம்சங் நிறுவனத்தின் சிறப்பு திட்டங்களில் ஒன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த சில ஆண்டுகளாக சாம்சங் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டு வருகிறது.
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீடு சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் வெளியீட்டு விவரத்தை சாம்சங் நிறுவன மொபைல் பிரிவு தலைமை செயல் அதிகாரி கோ டாங் ஜின் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதன்படி சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறும் போது, புதிய சாதனம் பயனர்கள் பிரவுசிங் அல்லது வேறு ஏதேனும் செய்யும் போது மொபைல் திறக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

சாம்சங் மடிக்கக்கூடிய சாதனம் குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில், விரைவில் புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகலாம் என தெரிகிறது. மேலும் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற இருக்கும் சாம்சங் டெவலப்பர் நிகழ்வில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2018-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு நிலவரப்படி சாம்சங் நிறுவன வளர்ச்சி முந்தைய ஆண்டை விட 20% வீழ்ச்சி அடைந்துள்ளது. அந்த வகையில் மொபைல் போன் சந்தையில் தனது நிலையை உறுதிப்படுத்த சாம்சங் திட்டமிட்டு வருகிறது.
இத்துடன் பட்ஜெட் ரக பிரிவில் அதிக தொழில்நுட்பத்தை சற்றே குறைந்த விலையில் வழங்க சாம்சங் முடிவு செய்வதாக கூறப்படுகிறது. ஹூவாய், ஒன்பிளஸ் மற்றும் இதர சீன நிறுவனங்களின் வரவு காரணமாக சந்தையில் சாம்சங் நிறுவனம் கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருகிறது.
ஹானர் பிரான்டு புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Honor7S
ஹூவாய் துணை பிரான்டான ஹானர் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
மே மாதத்தில் சீன சந்தையில் வெளியிடப்பட்ட ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன் தற்சமயம் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1440 பிக்சல், ஃபுல் வியூ டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் MT6739 சிப்செட், 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, PDAF, எல்.இ.டி. ஃபிளாஷ், முன்பக்கம் 5 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய ஹானர் 7எஸ் மாடலில் ஐ ப்ரோடெக்ஷன் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனில் தரவுகளை படிக்கும் போது டிஸ்ப்ளேவில் நீல நிற ஃபில்ட்டரை சேர்க்கும்.

ஹானர் 7எஸ் சிறப்பம்சங்கள்:
- 5.45 இன்ச் 1440x720 பிக்சல் 18:9 TFT ஃபுல் வியூ டிஸ்ப்ளே
- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்
- பவர் வி.ஆர். ரோக் GE8100 GPU
- 2 ஜிபி ரேம்
- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.1
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், PDAF
- 5 எம்பி முன்பக்க கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- 4ஜி எல்.டிஇ, வைபை, ப்ளூடூத்
- ஃபேஸ் அன்லாக்
- 3020 எம்.ஏ.ஹெச். பேட்டரி

இந்தியாவில் ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன் விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹானர் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கும் ஹானர் 7எஸ் பிளாக், புளு மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. ஹானர் 7எஸ் மாடலின் முதல் ஃபிளாஷ் விற்பனை செப்டம்பர் 14-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு நடைபெறுகிறது.
எல்ஜி நிறுவனத்தின் க்யூ ஸ்டைலஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #smartphone
எல்ஜி நிறுவனத்தின் க்யூ ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எல்ஜி கடந்த ஆண்டு அறிமுகம் செய்திருந்த ஸ்டைலஸ் 3 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும்.
புதிய க்யூ ஸ்டைலஸ் மாடலில் 6.2 இன்ச் FHD பிளஸ் ஃபுல் விஷன் டிஸ்ப்ளே, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் சிப்செட், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
எல்ஜி ஸ்மார்ட்போனில் MIL-STD 810G சான்று பெற்ற ராணுவ தரம் கொண்ட டியூரபிலிட்டி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

எல்ஜி க்யூ ஸ்டைலஸ் பிளஸ் சிறப்பம்சங்கள்:
- 6.2 இன்ச் 18:9 FHD+ 2160x1080 பிக்சல் 18:9 ஃபுல் விஷன் 389ppi 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் MT6750S பிராசஸர்
- மாலி T860 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி மெமரி
- மெமரியை நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், PDAF
- 8 எம்பி முன்பக்க கேமரா
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி 2.0
- 3,300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
எல்ஜி க்யூ ஸ்டைலஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் அரோரா பிளாக் மற்றும் மொரக்கன் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 5-ம் தேதி முதல் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் ரூ.21,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இசட்.டி.இ. நுபியா பிரான்டு உலகின் அதிநவீன அணியக்கூடிய ஸ்மார்ட்போனினை ஐ.எஃப்.ஏ. 2018 விழாவில் டீஸ் செய்துள்ளது. #smartphone
இசட்.டி.இ. நிறுவனத்தின் நுபியா பிரான்டு உலகின் அதிநவீன அணியக்கூடிய ஸ்மார்ட்போனின் டீசரை ஐ.எஃப்.ஏ. 2018 விழாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நுபியா α என அழைக்கப்படுகிறது. புதிய சாதனம் வெறும் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி இது புதிய வகை ஆகும். புதிய சாதனம் குறித்த வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
வீடியோவில் சாதனத்தை மணிக்கட்டில் அணிந்து கொள்வது போன்றும், பெரிய வளைந்த OLED தொடுதிரை, முன்க்கம் கேமரா மற்றும் மைக்ரோபோன், இருபுறங்களிலும் பட்டன்கள் இடம்பெற்றிருக்கிறது. பின்புறம் சார்ஜிங் பின்கள் மற்றும் இதய துடிப்பு சென்சார் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் மெட்டல் ஸ்டிராப், பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சாதனத்தின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் விற்பனை குறித்து இசட்.டி.இ. எவ்வித தகவலையும் வழங்கவில்லை. இம்முறை வெளியிட்டிருக்கும் வீடியோவின் படி சாதனம் கான்செப்ட் வடிவில் இல்லை என்பது மட்டும் தெளிவாகியுள்ளது.
வீடியோவில் புதிய சாதனம் பார்க்க நன்றாக காட்சியளிக்கும் நிலையில், இதன் பேட்டரி பேக்கப் விவரங்கள் அறியப்படவில்லை. வழக்கமான எல்இடி மற்றும் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் நாள் முழுக்க பேட்டரி பேக்கப் வழங்குவதில்லை.
அந்த வகையில் புதிய சாதனம் குறித்த மற்ற விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்க்ப்படுகிறது.
புதிய அணியக்கூடிய ஸ்மார்ட்போனின் டீசர் வீடியோவை கீழே காணலாம்..,
எல்ஜி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #smartphone
எல்ஜி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட்போன் எல்ஜி கேன்டி என அழைக்கப்படுகிறது. மாற்றக்கூடிய பேக் கவர் கான்செப்ட் கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் செப்டம்பர் 1-ம் தேதி முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5.0 இன்ச் ஹெச்.டி. ஆன்-செல் டச் டிஸ்ப்ளே, 720x1280 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 294ppi பிக்சல் டென்சிட்டி கொண்டுள்ளது. 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரண்டு கேமராக்களிலும் புகைப்படங்களை ஜிஃப் போன்று மாற்றும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

எல்ஜி கேன்டி சிறப்பம்சங்கள்:
- 5.0 இன்ச் ஹெச்.டி. ஆன்-செல் டச் டிஸ்ப்ளே
- 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர்
- 2 ஜிபி ரேம்
- 16 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- எல்.டி.இ., வைபை. ப்ளூடூத், யுஎஸ்பி 2.0 டைப்-சி
- 2500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
இந்தியவில் எல்ஜி கேன்டி ஸ்மார்ட்போன் சில்வர், புளு மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் பேக் கவர்களை மாற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. புதிய எல்ஜி கேன்டி ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 1-ம் தேதி முதல் துவங்குகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீட்டு விழா தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2018 ஐபோன் மாடல்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #iPhoneXS #AppleWatch
ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீட்டு விழா செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய ஐபோன் மாடல்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
இம்முறை 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் OLED ஸ்கிரீன் கொண்ட ஐபோன்களின் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது. இவை ஐபோன் XS என அழைக்கப்படலாம் என்றும் இவை புதிதாக தங்க நிற ஆப்ஷன் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களின் படி அனைத்து ஐபோன் மாடல்களிலும் நாட்ச், ஃபேஸ் ஐடி சார்ந்த ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் புதிய ஏ12 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

புதிய ஐபோன் மாடல்களுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 புகைப்படங்களும் லீக் ஆகியுள்ளது. அதன்படி புதிய வாட்ச் மாடல்களில் பெரிய எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது முந்தைய வாட்ச் சீரிஸ் 3 மாடல்களை விட 15% பெரியதாகவும், டிஸ்ப்ளேவை சுற்றி மெல்லிய பெசல்களை கொண்டுள்ளது.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் அதிக விவரங்களை கொண்ட புதிய ஃபேஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த அனலாக் ஃபேஸ் நேரத்தை சுற்றி மொத்தம் எட்டு விவரங்களை காண்பிக்கும் வசதி கொண்டுள்ளது. இத்துடன் சைடு பட்டன் மற்றும் டிஜிட்டர் கிரவுன் இடையே புதிய ஓட்டை காணப்படுகிறது. இது பெரும்பாலும் இரண்டாவது மைக்ரோபோனாக இருக்கும் என கூறப்படுகிறது.

இத்துடன் புதிய டிஜிட்டல் கிரவுன் மற்றும் சைடு பட்டன் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இன்னும் சில வாரங்களில் ஐபோன் XS மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 சார்ந்த அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகி விடும்.
செப்டம்பர் 12 ஆப்பிள் விழாவில் மூன்று புதிய ஐபோன் மாடல்கள், ஆப்பிள் வாட்ச் 4, ஆப்பிள் ஏர்பவர், ஏர்பாட்ஸ் 2 உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #iPhoneXS #AppleWatch
புகைப்படம் நன்றி: 9to5mac
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ2 கோர் ஆன்ட்ராய்டு ஓரியோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #smartphone
சாம்சங் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங்கின் முதல் ஆன்ட்ராய்டு ஓரியோ ஸ்மார்ட்போனாக கேலக்ஸி ஜெ2 கோர் மாடல் வெளியாகி இருக்கிறது.
5.0 இன்ச் qHD TFT டிஸ்ப்ளே, சாம்சங் எக்சைனோஸ் 7570 குவாட்-கோர் 14 என்.எம். பிராசஸர், 1 ஜிபி ரேம், 8 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
புதிய கேலக்ஸி ஜெ2 கோர் ஸ்மார்ட்போனில் சாம்சங்கின் ஸ்மார்ட் மேனேஜர் வழங்கப்பட்டுள்ளதால், ஸ்மார்ட்போனில் போதுமான அளவு மெமரி கொண்டிருப்பதை உறுதி செய்து, ஸ்மார்ட்போனின் வேகத்தை சீராக வைக்கும். பட்ஜெட் போன் என்பதால் கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி போன்றவை வழங்கப்படவில்லை.

சாம்சங் கேலக்ஸி ஜெ2 கோர் சிறப்பம்சங்கள்:
- 5.0 இன்ச் 540x960 பிக்சல் qHD TFT டிஸ்ப்ளே
- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் எக்சைனோஸ் 7570 14nm பிராசஸர்
- மாலி-T720 MP1 GPU
- 1 ஜிபி ரேம்
- 8 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்)
- டூயல் சிம் ஸ்லாட்
- 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 2600 எம்.ஏ.ஹெச். பேட்டரி
சாம்சங் கேலக்ஸி ஜெ2 கோர் ஸ்மார்ட்போன் கோல்டு, புளு மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் கேலக்ஸி ஜெ2 கோர் விலை ரூ.6,190 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க அனைத்து விற்பனை மையங்கள் மற்றும் சாம்சங் இஷாப் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மார்கியூ பிரான்டு புத்தம் புதிய வாஷிங் மெஷின்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Flipkart
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக அறியப்படும் ப்ளிப்கார்ட் இந்தியாவில் புத்தம் புதிய வாஷிங் மெஷின் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. ப்ளிப்கார்ட்டின் லேபெல் பிரான்டு மார்கியூ பெயரில் விளம்பரப்படுத்தப்படும் புதிய வாஷிங் மெஷின்கள் பண்டிகை கலத்தில் விற்பனைக்கு வருகிறது.
புதிய வாஷிங் மெஷின் மாடல்கள் வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் தேவையாக இருக்கும் சிறப்பான தரம், அதிநவீன தொழில்நுட்பம், அனைவரும் வாங்கக் கூடிய விலை மற்றும் குறைவான மின்சார பயன்பாடு உள்ளிட்டவற்றை குறைக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரூ.6,999 எனும் துவக்க விலையில் கிடைக்கும் வாஷிங் மெஷின்கள் 6.5 மற்றும் 7.5 கிலோ என இருவித கொள்ளலவுகளில் கிடைக்கிறது. ப்ளிப்கார்ட்டின் மார்கியூ வாஷிங் மெஷின்கள் நடுத்தர குடும்பங்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய அளவாக இவை இருக்கின்றன.
முன்பக்கம் முழுமையான ஆட்டோமேடிக் ரேன்ஜ் துவங்கி, செமி ஆட்டோமேடிக் மற்றும் டாப் லோடு வாஷிங் மெஷின்கள் அனைவரும் வாங்கக்கூடிய விலையில் அப்கிரேடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. #Realme2
ஒப்போவின் துணை பிரான்ட் ஆன ரியல்மி புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் கடந்த சில தினங்களாக வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி 2 ஸ்மார்ட்போன் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனுடன் கால்மி சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த சேவையில் பயனர்களுக்கு இலவச பிக்கப் மற்றும் டெலிவரி வழங்குகிறது. இத்துடன் ரியல்மி 2 ஸ்மார்ட்போன் தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது.
புதிய ரியல்மி 2 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன் 1520x720 பிக்சல் ரெசல்யூஷன், நாட்ச் ஸ்கிரீன் கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட டைமன்ட் கட் வடிவமைப்பு கொண்டுள்ள ரியல்மி 2 மாடல் அதிக பிரகாசமாக இருக்கிறது. 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என இருவித மெமரி வேரியன்ட்களில் கிடைக்கிறது.

ரியல்மி 2 சிறப்பம்சங்கள்:
- 6.2 இன்ச் 1520x720 பிக்சல் 18:9 ஃபுல்வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
- அட்ரினோ 506 GPU
- 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
- 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- கலர் ஓஎஸ் 8.1 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்பி பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ், f/2.2
- 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, 1.12μm பிக்சல்
- கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. ஓ.டி.ஜி.
- 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி
இந்தியாவில் ரியல்மி 2 ஸ்மார்ட்போன் டைமன்ட் பிளாக், டைமன்ட் ரெட் மற்றும் டைமன்ட் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. ரியல்மி 2 ஸ்மார்ட்போன் 3 ஜிபி வேரியன்ட் விலை ரூ.8,990 என்றும் 4 ஜிபி ரேம் வேரியன்ட் விலை ரூ.10,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 4-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. ரியல்மி 2 ஸ்மார்ட்போனின் டைமன்ட் புளு வெர்ஷன் அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

அறிமுக சலுகைகள்:
- ரியல்மி 2 ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.750 தள்ளுபடி பெற முடியும்.
- ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.4200 மதிப்புடைய உடனடி சலுகைகள் மற்றும் 120 ஜிபி கூடுதல் டேட்டா
- வட்டியில்லா மாத தவணை முறை வசதி
- பேடிஎம் விமான பயணச்சீட்டுகள் மற்றும் லென்ஸ்கார்ட் சார்பில் பிரத்யேக சலுகைகள்
எல்ஜி நிறுவனத்தின் ஜி7 ஒன், ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன், ஜி7 ஃபிட் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #lgg7
எல்ஜி நிறுவனம் ஜி7 ஒன், ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன், ஜி7 ஃபிட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. எல்ஜி ஜி7 ஒன் ஸ்மார்ட்போனில் ஸ்டாக் ஆன்ட்ராய்டு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்களிலும் 6.1 இன்ச் QHD பிளஸ் 19:5:9 ஃபுல் விஷன் எல்.சி.டி. சூப்பர் பிரைட் டிஸ்ப்ளே, IP68 தரச் சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட், MIL-STD 810G ரானுவ உறுதித்தன்மை, ஹைஃபை குவாட் டி.ஏ.சி., 8 எம்பி செல்ஃபி கேமரா, 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, க்விக் சார்ஜ் 3.0 வழங்கப்பட்டுள்ளது.
எல்ஜி ஜி7 ஒன் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்ன்ப்டிராகான் 835 சிப்செட், ஜி7 ஃபிட் மாடலில் ஸ்னாப்டிராகன் 821 சிப்செட், 4 ஜிபி ரேம் வழஹ்கப்பட்டுள்ளது. ஜி7 ஒன் மாடலில் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், 16 எம்பி பிரைமரி கேமரா F/1.6 அப்ரேச்சர், ஜி7 ஃபிட் மாடலில் 16 எம்பி பிரைமரி கேமரா, F/2.2 அப்ரேச்சர் கொண்டுள்ளது.

எல்ஜி ஜி7 ஒன் சிறப்பம்சங்கள்:
- 6.1 இன்ச் 3120x1440 பிக்சல் 19.5:9 ஃபுல் விஷன் சூப்பர் பிரைட் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
- அட்ரினோ 540 GPU
- 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.6, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/1.9
- கைரேகை சென்சார், பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
- வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 32-பிட் மேம்படுத்தப்பட்ட ஹைஃபை குவாட் டி.ஏ.சி.
- பூம்பாக்ஸ் ஸ்பீக்கர், எஃப்.எம். ரேடியோ
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, க்விக் சார்ஜ் 3.0

எல்.ஜி. ஜி7 ஃபிட் சிறப்பம்சங்கள்:
- 6.1 இன்ச் 3120x1440 பிக்சல் 19.5:9 ஃபுல் விஷன் சூப்பர் பிரைட் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 சிப்செட்
- அட்ரினோ 530 GPU
- 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் எல்ஜி UX
- 16 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/1.9
- கைரேகை சென்சார்
- வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 32-பிட் மேம்படுத்தப்பட்ட ஹைஃபை குவாட் டி.ஏ.சி.
- பூம்பாக்ஸ் ஸ்பீக்கர், எஃப்.எம். ரேடியோ
- 4ஜி எல்.டி.இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, க்விக் சார்ஜ் 3.0
எல்ஜி ஜி7 ஒன் புதிய அரோரா பிளாக் மற்றும் புதிய மொராக்கன் புளு நிறங்களில் கிடைக்கிறது, எல்ஜி ஜி7 ஃபிட் புதிய பிளாட்டினம் கிரே மற்றும் புதிய அரோரா பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இரண்டு புதிய எல்ஜி மாடல்களும் இந்த வாரம் துவங்க இருக்கும் ஐ.எஃப்.ஏ. விழாவில் வெளியிடப்படுகிறது. இவற்றின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் வெளியிடப்படலாம்.






