என் மலர்
புதிய கேஜெட்டுகள்
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நம் அன்றாட பணிகளை செய்யும் பொறுப்பை ரோபோட்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. அவ்வாறு நம் வீட்டை சுத்தம் செய்யும் சிறிய ரோபோட் தான் ஐ ரோபோ 900. #Robots
நவீன உலகில் மனிதனின் வேலைப் பளுவைக் குறைப்பதில் எந்திர மனிதனின் (ரோபோக்களின்) பங்கு அதிகமாகி வருகிறது. கடினமான பணிகளுக்கு மட்டுமின்றி இப்போது வீடுகளில் பயன்படுத்தக்கூடிய ரோபோக்களும் வந்துவிட்டன.
அந்த வரிசையில் வந்திருக்கும் வீடுகளை சுத்தப்படுத்தும் அதிநவீன ரோபோ ‘ஐ ரோபோட் 900’ சீரிஸ். அனைத்து வகையான தரைத்தளங்களையும், தரை விரிப்புகளையும் இது சுத்தப்படுத்தும். தரையில் சிதறிக்கிடக்கும் மிக மெல்லிய செல்லப் பிராணிகளின் முடிகளைக்கூட இது சுத்தம் செய்யும்.
இதில் அதிக அழுக்கு உள்ள பகுதிகளை உணரும் ‘சென்சார்’ உள்ளது. இதனால் அழுக்கு அதிகம் உள்ள பகுதிகளில் தீவிரமாக செயல்பட்டு சுத்தப்படுத்தும். அதேபோல குப்பைகளை உறிஞ்சும் பகுதியில் நூல், உரோமங்கள் எந்திரத்திற்குள் சிக்காத வகையிலான நுட்பமும் இதில் உள்ளது. இதனால் உறிஞ்சும் பகுதி அடைத்துக் கொள்ளும் பிரச்சினையும் இதில் ஏற்படாது. அறையின் முழு அளவையும் உணர்ந்து இது அனைத்து இடங்களுக்கும் நகர்ந்து சென்று சுத்தப்படுத்தும்.
இந்த ரோபோவை நீங்கள் எங்கிருந்தபடியும் இயக்க முடியும். ஒரு வேளை கோடை விடுமுறைக்கு வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்புகிறீர்கள். நீங்கள் வருவதற்கு முன்பு வீட்டை சுத்தப்படுத்த விரும்பினால், பயணத்தின்போதே இந்த ரோபோவுக்கு கட்டளையிட்டால் அது வீட்டை சுத்தப்படுத்திவிடும்.
வட்ட வடிவில் இருப்பதால் இது அனைத்து பகுதிகளுக்கும் எளிதில் செல்ல முடியும். இதை பத்திரமாக வைக்க அதிக இடம் தேவையில்லை. கட்டிலுக்குக் கீழ் பகுதியிலேயே இதை வைத்துவிடலாம். ஐ ரோபோட் 900 சீரிஸ் அமேசான் வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ஐ ரோபோட் 900 விலை ரூ. 64,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், இது சலுகை விலையில் ரூ.43,239 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன்களில் வெப்பநிலை அறிந்து கொள்வதை போன்று வெள்ள பாதிப்புகளையும் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. #smartphone #WeatherForecast
ஸ்மார்ட்போன்களில் வெப்பநிலை, காற்றழுத்தம் போன்றவற்றை டிராக் செய்யக் கூடிய நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் வெள்ளம் போன்ற பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும் வானிலையை முன்கூட்டியே கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் இதர இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே கண்டறிய ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
"நம் ஸ்மார்ட்போன்களில் உள்ள சென்சார்கள் நம் சுற்றுச்சூழல் மற்றும் ஈர்ப்பு விசை மற்றும் புவியின் காந்த புலம், காற்றழுத்தம், வெப்பநிலைகள், ஒலி அளவுகள் மற்றும் பலவற்றை தொடர்ந்து டிராக் செய்து வருகிறது," என மூத்த ஆராயாச்சியாளரும், டெல் அவிவ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியருமான காலின் பிரைஸ் தெரிவித்தார்.

கோப்பு படம்
"உலகம் முழுக்க சுமார் 300 முதல் 400 கோடி ஸ்மார்ட்போன்களில் இந்த தகவல்கள் பரவிக்கிடக்கின்றன. இந்த தகவல் கொண்டு வானிலையை மிக துல்லியமாக டிராக் செய்து மற்ற இயற்கை பேரழிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியும்," என அவர் மேலும் தெரிவித்தார்.
ஆய்வின் ஒரு பகுதியாக நான்கு ஸ்மார்ட்போன்களை கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் வைத்து, அதன் டேட்டாவை கொண்டு சூறாவளி போன்றவற்றை கணிக்க பயன்படுத்தினர், இவை கடலில் ஏற்படும் புயலுக்கு இணையானது. இவற்றுடன் இவர் லண்டனை சேர்ந்த வெதர்சிக்னல் எனும் செயலியையும் பயன்படுத்தினர்.
ஸ்மார்ட்போன்களால் வானிலை அறிக்கையை உடனுக்குடன் வழங்கக்கூடிய நிலையில், மக்கள் வானிலை விவரங்களை க்ளவுட் மூலம் செயலியில் அதனை தெரிந்து கொள்கின்றனர். இந்த தகவல்களை கொண்டு ஆபத்தான பகுதிகளை கண்டறிந்து அவர்களுக்கு முன்கூட்டியே தகவல்களை வழங்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். #smartphone #WeatherForecast
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை பிரான்ட் ஆன யு டெலிவென்ச்சர்ஸ் நீண்ட இடைவெளிக்கு பின் புதிய ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது. #smartphone
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை பிரான்டான யு டெலிவென்ச்சர்ஸ் இந்திய சந்தையில் மிகவேகமாக பிரபலமானது. தற்சமயம் கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளிக்கு பின் யு பிரான்டு ட்விட்டரில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
யு பிரான்டு அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் போடப்பட்டிருக்கும் பதிவில் புதிய யு பிரான்டு ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதி செய்துள்ளது. ஆன்லைன் பிரான்டான யு முன்னதாக யு யுரேகா 2 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
அதிரடி டீசர்களை வெளியிடுவதில் பெயர்போன யு பிரான்டு இடைவெளிக்குப் பின் களமிறங்கி இருப்பது புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய ஸ்மார்ட்போன் யு ஏஸ் என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

எனினும் புதிய யு ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பதால், வரும் நாட்களில் ஸ்மார்ட்போன் சார்ந்த விவரங்கள் ட்விட் மூலம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை பிரான்டு யு 2014-ம் ஆண்டு துவங்கப்பட்டது. யு பிரான்டின் முதல் ஸ்மார்ட்போனாக யு யுரேகா அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. பின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் யு யுரேகா 2 ஸ்மார்ட்போனில் மெட்டல் பாடி கொண்ட 5.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே, 2.5D கிளாஸ் கொண்டுள்ளது.
இத்துடன் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட், 16 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, கைரேகை சென்சார், 3930 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் க்விக் சார்ஜ் 3.0, 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டிருந்தது. இந்தியாவில் யுரேகா ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்டது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. #GalaxyA8Star
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ8 ஸ்டார் என அழைக்கப்படுகிறது.
6.28 இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 6 ஜிபி ரேம், 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 24 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, ஸ்மார்ட் பியூட்டி, ப்ரோ லைட்டிங் மற்றும் ஏ.ஆர். ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.
அனைத்து வித வெளிச்சங்களுக்கும் ஏற்ப தானாக மாற்றிக் கொள்ளும் என்பதால் புதிய டூயல் கேமரா அமைப்பை இன்டெலிகேம் என சாம்சங் அழைக்கிறது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போனில் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ8 ஸ்டார் சிறப்பம்சங்கள்:
- 6.28 இன்ச் FHD பிளஸ் 1080x2220 பிக்சல் FHD+ சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்
- அட்ரினோ 512 GPU
- 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7
- 24 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
- 24 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
- சாம்சங் பே
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கும் நிலையில், இதன் விலை ரூ.34,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் ஆகஸ்டு 27-ம் தேதி முதல் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் உருவாக்கி வரும் நோக்கியா X7 ஸ்மார்ட்போனின் புதிய புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #smartphone
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் சமீபத்தில் இரண்டு புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்த நிலையில், புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் விவரங்கள் லீக் ஆகியுள்ளது.
அதன்படி புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் X7 வேரியன்ட் என்றும் இதில் டிஸ்ப்ளே நாட்ச் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. ஃபாக்ஸ்கான் ஊழியர்களின் மூலம் கிடைத்திருக்கும் நோக்கியா X7 புதிய புகைப்படம் விடெக்கிராஃபி மூலம் வெளியாகியுள்ளது. அந்த வகையில் நோக்கியா X7 உற்பத்தி ஏற்கனவே துவங்கி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய X7 மாடலின் புகைப்படத்தின் படி இதன் டிஸ்ப்ளே நாட்ச் சமீபத்தில் அறிமுகமான நோக்கியா 5.1 பிளஸ் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. புதிய மாடலின் டிஸ்ப்ளே அளவு 6.0 இன்ச்-க்கும் அதிகமாவும், 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இதேபோன்று, புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் ஏற்கனவே நோக்கியா ஃபீனிக்ஸ் என்ற பெயரில் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட், 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, செய்ஸ் ஆப்டிக்ஸ் வழங்கப்படலாம் என கூறப்பட்டது.
புதிய 10என்.எம். ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 சிப் 2.2 ஜிகாஹெர்ட்ஸ் இரண்டு க்ரியோ 360 கார்டெக்ஸ் ஏ75 கோர்கள், 1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆறு க்ரியோ 360 கார்டெக்ஸ் ஏ55 கோர்களை கொண்டிருக்கிறது.
மேலும் நோக்கியா X7 அல்லது ஃபீனிக்ஸ் ஸ்மார்ட்போன் விலை CNY 2,000 (இந்திய விலை ரூ.20,400) என நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் இதன் அறிமுகம் செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படம் நன்றி: Vtechgraphy
இன்ஃபினிக்ஸ் மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவில் புதிய ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. #InfinixNote5
இன்ஃபினிக்ஸ் மொபிலிட்டி நிறுவனம் நோட் 5 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த நோட் 4 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும்.
5.99 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P23 சிப்செட், 4 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ். ஏ.ஐ. போர்டிரெயிட் மோட், 16 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
கிளாஸ் பேக் கொண்ட நோட் 5 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

இன்ஃபினிக்ஸ் நோட் 5 சிறப்பம்சங்கள்:
- 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் FHD+ 18:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P23 16nm பிராசஸர்
- ARM மாலி G71 MP2 GPU
- 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
- 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ், 1.25μm பிக்சல், f/2.0
- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- பாஸ்ட் சார்ஜிங் வசதி
இன்ஃபினிக்ஸ் நோட் 5 ஸ்மார்ட்போன் மிலன் பிளாக், பெர்லின் கிரே மற்றும் ஐஸ் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட இன்ஃபினிக்ஸ் நோட் 5 விலை ரூ.9,999 என்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி வெர்ஷன் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய இன்ஃபினிக்ஸ் நோட் 5 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 31-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 500 ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் ரூ.2,200 கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீடு மற்றும் ஐபோன் மாடல்கள் சார்ந்த விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #iphone
ஆப்பிள் நிறுவனம் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள்: ஐபோன் 9, ஐபோன் 11 மற்றும் ஐபோன் 11 பிளஸ் மாடல்களை செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவற்றில் ஐபோன் 9 மாடல் ஆப்பிளின் என்ட்ரி-லெவல் மாடலாக இருக்கும் என்றும், இதில் ஐபோன் X போன்ற 6.1 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன். ஃபேஸ் ஐடி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஐபோன் 11 மற்றும் 11 பிளஸ் மாடல்கள் ஐபோன் X2 மற்றும் ஐபோன் X பிளஸ் மாடல்களில் முறையே 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் OLED டிஸ்ப்ளேக்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை புதிய ஐபோன்களில் மேம்படுத்தப்பட்ட கேமரா செட்டப், 7nm A11 சிப்செட், புத்தம் புதிய யு.எஸ்.பி.-சி சார்ஜர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் 2018 ஆப்பிளின் விலை குறைந்த மாடலாக ஐபோன் 9 இருக்கும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே வெளியான தகவல்களின் படி 2018 ஐபோன்களில் ஆப்பிள் பென்சில் சப்போர்ட், அதிகபட்சம் 512 ஜிபி மெமரி வழங்கப்படும் என கூறப்பட்டது. எனினும் இந்த அம்சங்கள் சாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி நோட்9 அம்சங்களை போன்றே இருக்கிறது.
புதிய OLED மாடல்கள் பட்ஜெட் ரக மாடல்களை விட விலை அதிகமாக இருக்கும் என்றும் பட்ஜெட் ரக 6.1 இன்ச் ஐபோன் விலை 699 முதல் 749 டாலர்கள் முதல் துவங்கலாம் என கூறப்படுகிறது. ஐபோன் X 2018 மற்றும் ஐபோன் X பிளஸ் மாடல்களின் விலை முறையே 899 முதல் 949 மற்றும் 999 டாலர்கள் முதல் துவங்கும் என தெரிகிறது.
2018 ஐபோன்கள் செப்டம்பர் 12-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு செப்டம்பர் 22-ம் தேதி முதல் விற்பனை துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமியின் போகோ பிரான்டு எஃப்1 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்ட போகோ எஃப்1 விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #POCOPHONEF1 #POCOPHONE
சியோமியின் போகோ பிரான்டு இந்தியாவில் தனது முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 6.18 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே மற்றும் நாட்ச் கொண்டிருக்கும் போகோ எஃப்1 மாடலில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம் மற்றும் லிக்விட்கூல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் சார்ந்த MIUI மற்றும் போகோ லான்ச்சர் கொண்டுள்ளது. மேலும் போகோ எஃப்1 மாடலில் ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், 20 எம்பி செல்ஃபி கேமரா மற்றும், ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஐ.ஆர். ஃபேஸ் அனஅலாக் வசதி கொண்டிருக்கும் போகோ எஃப்1 மாடல் இருள் நிறைந்த இடங்களிலும் 0.4 நொடிகளில் அன்லாக் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போகோ எஃப்1 சிறப்பம்சங்கள்:
- 6.18 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
- அட்ரினோ 630 GPU
- 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி / 256 ஜிபி (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ், 1.4μm பிக்சல், சோனி IMX363 சென்சார்
- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் சென்சார்
- 20 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- கைரேகை சென்சார், ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டிராக் ஹெச்.டி., டூயல் ஸ்மார்ட் PA
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் பிளாக், ஸ்டீல் புளு மற்றும் ரோஸோ ரெட் போன்ற நிறங்களிலும், ஆர்மர்டு எடிஷன் மாடலும் கிடைக்கிறது. இவற்றுடன் சாஃப்ட் கேஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் போகோ எஃப்1 விலை:
போகோ எஃப்1 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடல் ரூ.20,999
போகோ எஃப்1 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் ரூ.23,999
போகோ எஃப்1 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் ரூ.28,999
போகோ எஃப்1 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் கெவ்லர் ஆர்மர்டு எடிஷன் ரூ.29,999
இந்தியாவில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் Mi.com வலைத்தளங்களில் ஆகஸ்டு 29-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு துவங்குகிறது. முதல் விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு ரூ.1000 தள்ளுபடியும், ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.8000 உடனடி சலுகைகள் மற்றும் 6000 ஜிபி கூடுதல் டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தபடி நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Nokia5
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போனினை நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனுடன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
மற்ற நோக்கியா போன்களை போன்றே இதுவும் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் தான். கடந்த வாரம் சீனாவில் X5 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போனில் 5.86 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P60 12nm சிப்செட், 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ ஓ.எஸ். வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் மற்றும் பியூட்டி மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. கிளாஸ் பேக், பின்புறம் கைரேகை சென்சார் கொண்டுள்ள புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

நோக்கியா 5.1 பிளஸ் சிறப்பம்சங்கள்:
- 5.86 இன்ச் 720x1520 பிக்சல் HD பிளஸ், 2.5D வளைந்த கிளாஸ், 19:9 ரக டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm சிப்செட்
- மாலி-G72 MP3 GPU
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, PDAF
- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
- 3060 எம்.ஏ.ஹெச். பேட்டரி
நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கும் நோக்கியா 5.1 பிளஸ் செப்டம்பர் மாதம் முதல் கிடைக்கும்.
நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனினை ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. #NokiaMobile
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதே ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் நோக்கியா X6 என்ற பெயரில் அறிமுகம் செயய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, நாட்ச், 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.
4ஜிபி ரேம் கொண்டிருக்கும் நோக்கியா 6.1 பிளஸ் மாடலில் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 16 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், 16 எம்பி செல்ஃபி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார், 2.5D வளைந்த கிளாஸ் பேக், மெட்டல் ஃபிரேம் மற்றும் 3060 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

நோக்கியா 6.1 பிளஸ் சிறப்பம்சங்கள்:
- 5.8 இன்ச் 2280x1080 பிக்சல் FHD பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm சிப்செட்
- அட்ரினோ 509 GPU
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.0um பிக்சல், EIS
- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.2um பிக்சல்
- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1.0um பிக்சல்
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3060 எம்.ஏ.ஹெச். பேட்டரி

இந்தியாவில் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் கிளாஸ் மிட்நைட் புளு, கிளாஸ் வைட் மற்றும் கிளாஸ் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. ப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் விற்பனைக்கு வரும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு 30-ம் தேதி முதல் விற்பனை துவங்க இருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளன.
விவோ நிறுவனத்தின் புதிய வி11 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Vivo
விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு டீசர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. விவோ வி9 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக உருவாகி இருக்கும் வி11 ப்ரோ புதிய ஸ்மார்ட்போன் செப்டம்பர் 6-ம் தேதி அறிமுகமாகிறது.

விவோ வெளியிட்டிருக்கும் புதிய டீசரின் படி ஸ்மார்ட்போனில் டிஸ்ப்ளே நாட்ச், ஃபுல் வியூ மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இதனுடன் டீசர் படத்தில் #UnlockTheAmazing ஹேஷ்டேக் இடம்பெற்றிருக்கிறது.
ஏற்கனவே வெளியான தகவல்களின் படி விவோ ஸ்மார்ட்போனில் 6.41 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 661 AIE சிப்செட், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 12 எம்பி + 5 எம்பி டூயல் பிரைமரி கேமராக்கள், 25 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்பட்டு இருந்தது.

சமீபத்தில் வெளியான புகைப்படம் ஒன்றில் புதிய விவோ ஸ்மார்ட்போனில் கிரேடியன்ட் பாடி கொண்டிருக்கும் என கூறப்பட்டது. முன்னதாக விவோ X23 ஸ்மார்ட்போனின் டீசரும் வெளியிடப்பட்டிருந்தது. இரு ஸ்மார்ட்போன்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வடிவமைப்பு மற்றும் பின்புறம் 3D அரோரா ஃபினிஷ் கொண்டிருக்கிறது.
விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #UnlockTheAmazing
விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதம் இந்தியாவில் வெளியாக இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #VivoV11 #smartphone
விவோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனினை செப்டம்பர் 6-ம் தேதி இந்தியாவில் வெளியிட இருக்கிறது. புதிய வெளியீட்டு நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை விவோ அனுப்பி வருகிறது.
இந்நிலையில், அழைப்பிதழில் 06.09.2018-ம் தேதி 11-ஐ அனுபவியுங்கள் என்ற வாசகம் ஆங்கில மொழியில் அச்சிடப்பட்டுள்ளது. அதன்படி விவோ வி11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் அந்நிறுவனம் அறிமுகம் செய்திருந்த விவோ வி9 மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இணையத்தில் லீக் ஆன விவரங்களின் படி புதிய விவோ ஸ்மார்ட்போனில் 6.41 இன்ச் FHD பிளஸ் வாட்டர் டிராப் போன்ற ஸ்கிரீன் டிசைன் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. இதே போன்ற அம்சம் ஒப்போ எஃப்9 (ப்ரோ) மாடலிலும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் ஸ்னாப்டிராகன் 660 AIE சிப்செட், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, புகைப்படங்களை எடுக்க 12 + 5 எம்பி டூயல் பிரைமரி கேமரா, 25 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் சமீபத்திய படத்தில் கிரேடியன்ட் பாடி வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதே போன்ற வடிவைப்பு கொண்ட விவோ X23 ஸ்மார்ட்போன் விரைவில் சீனாவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் மாத முதல் வாரத்தில் தெரியவரும்.






