என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    கூகுளின் ஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஏற்கனவே டெஸ்க்டாப் வெர்ஷனில் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #Gmail #Apps


    கூகுளின் மேம்படுத்தப்பட்ட ஜிமெயில் தளத்தில் புதிய கான்ஃபிடென்ஷியல் மோட் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை டெஸ்க்டாப் தளத்தில் மட்டும் வழங்கப்பட்டு இருந்த நிலையில், இந்த அம்சம் ஆன்ட்ராய்டு தளத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. 

    சர்வெர் சைடு அப்டேட் என்பதால் புதிய அம்சம் அனைவருக்கும் கிடைக்க சில காலம் ஆகும் என்றே தெரிகிறது. கான்ஃபிடென்ஷியல் மோட் மூலம் அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பின் தானாக அழிந்து விடும். ஜிமெயில் அல்லாத அக்கவுனட்களில் மின்னஞ்சலை திறக்க பிரத்யேக லின்க் அனுப்பப்படும்.

    ஜிமெயில் பயனர்களுக்கு மின்னஞ்சல்கள் வழக்கமான மின்னஞ்சல்களை போன்றே வரும். கான்ஃபிடென்ஷியல் மோட் பயன்படுத்த மின்னஞ்சலை கம்போஸ் செய்து மேலே காணப்படும் மெனுவில் உள்ள புதிய கான்ஃபிடென்ஷியல் மோட் அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும். 

    இவ்வாறு செய்ததும் ஜிமெயில் சார்பில் குறிப்பிட்ட கால அளவை நிர்ணயித்து, மின்னஞ்சலை இயக்க பாஸ்வேர்டு செட் செய்ய வேண்டுமா என்றும் கோரும். கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்தால் வேலை முடிந்தது. மின்னஞ்சலை அனுப்பியதும் அதனை மாற்ற முடியாது. 
    கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தின் கோ எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Android9Pie #Google


    கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) இயங்குதளத்தை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. புதிய வகை இயங்குதளம் என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன்களிலும் புதிய இயங்குதளம் சீராக இயங்கும் படி பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் கூகுள் சமீபத்தில் அறிமுகம் செய்த ஆன்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தின் கோ எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய ஆன்ட்ராய்டு 9 பை (கோ எடிஷன்) இயங்குதளத்தில் கூடுதலாக 500 எம்பி ஸ்டோரேஜ், வேகமான பூட் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    ஆன்ட்ராய்டு பை (கோ எடிஷன்) தளத்தில் வெரிஃபைடு பூட் போன்ற பாதுகாப்பு அம்சம், டேட்டா பயன்பாட்டை டிராக் செய்யும் டேஷ்போர்டு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆப்டிமைஸ் செய்யப்பட்ட ஓ.எஸ். உடன் கோ எடிஷன் செயலிகளும் அறிமுகம் செய்யப்பட்டன. 



    இந்த செயலிகள் கோ எடிஷன் ஸ்மார்ட்போன்களுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்படுகின்றன. அதன்படி யூடியூப் கோ செயலியை இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். மேலும் கூகுள் கோ செயலியில் இணையப்பக்கங்களை மிக எளிமையாக படிக்க ஏதுவாக ஒவ்வொரு வார்த்தையும் அடையாளப்படுத்தப்படுகிறது. மேப்ஸ் கோ செயிலியில் நேவிகேஷன் வசதி சேர்க்கப்பட்டுள்ளதால், பயனர்கள் மிக எளிமையாக தங்களக்கு தெரியாத பகுதிகளுக்கு சென்றுவர முடியும்.

    இதேபோன்று அசிஸ்டண்ட் கோ செயலியில் கூடுதலாக ஸ்பானிஷ், பிரேசிலியன் போர்ச்சுகீசு மற்றும் இந்தோனேசிய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இத்துடன் ப்ளூடூத், கேமரா, ஃபிளாஷ்லைட் மற்றும் ரிமைன்டர்களுக்கான வசதிகளும் சேர்க்கப்படுகின்றன. ஆன்ட்ராய்டு கோ எடிஷனுக்கான ஆன்ட்ராய்டு மெசேஜஸ் செயலி 50% சிறியதாகவும், போன் செயலியில் காலர் ஐடி மற்றும் ஸ்பேம் கண்டறியும் வசதி போன்றவை வழங்கப்படுகிறது.

    ஆன்ட்ராய்டு பை (கோ எடிஷன்) இந்த ஆண்டின் பிற்பாதியில் வெளியிடப்பட இருக்கிறது. #Android9Pie #Google
    பிளாக்பெரி கீ2 எல்.இ. ஸ்மார்ட்போனின் விவரங்கள் கடந்த மாதம் வலைதளத்தில் லீக் ஆனது. இம்முறை இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் சிறப்பம்சம் சார்ந்த விவரங்கள் கிடைத்திருக்கிறது. #BlackBerry


    அதன்படி கீ2 எல்.இ. ஸ்மார்ட்போனில் 4.5 இன்ச் 1620x1080 பிக்சல் டிஸ்ப்ளே, 3:2 ஆப்கெட் ரேஷியோ, 4-அடுக்கு க்வெர்டி பேக்லிட் கீபோர்டு, ஸ்பேஸ் பாரில் கைரேகை சென்சார், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 4 ஜிபி ரேம், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.



    பிளாக்பெரி கீ2 எல்.இ. எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 4.5 இன்ச் 1620x1080 பிக்சல் 3:2 டிஸ்ப்ளே 433 PPI
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
    - அட்ரினோ 509 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 4-அடுக்கு க்வெர்டி கீபோர்டு பேக்லிட் கீபோர்டு, கேபாசிட்டிவ் டச்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - ஸ்பேஸ் பாரில் கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    பிளாக்பெரி கீ2 எல்.இ. ஸ்மார்ட்போன் பிளாக், ரெட், புளு மற்றும் காப்பர் நிறங்களில் கிடைக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் ஐ.எஃப்.ஏ. 2018 விழாவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #BlackBerry #smartphone
    போல்ட் ஆடியோ நிறுவனம் இந்தியாவில் புதிய வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய மாடலின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #headphones


    போல்ட் ஆடியோ நிறுவனம் இந்தியாவில் புதிய வயர்லெஸ் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் ஹெட்பேன்ட் மற்றும் இயர்கப்களில் ஸ்வெட்-ப்ரூஃப் செய்யப்பட்டு ப்ரோட்டீன் லெதர் மூலம் மறைக்கப்பட்டுள்ளது. மேலும் இவை 2 வெவ்வேறு நிலைகளில் மடங்கும் என போல்ட் தெரிவித்துள்ளது.

    இத்துடன் ஹெட்போன்களில் இன்-லைன் கன்ட்ரோல்கள் இருப்பதால், மியூசிக், வால்யூம் கன்ட்ரோல், மற்றும் அழைப்புகளை ஏற்க முடியும். டூயல் மோட் வசதியில் இயங்குகிறது. இதனால் சார்ஜ் குறைவாக இருக்கும் போது ஆக்சிலரி கேபிள் கொண்டு பயன்படுத்த முடியும். 

    போல்ட் கியூ ஹெட்போன் ஐ.ஓ.எஸ்., ஆன்ட்ராய்டு மற்றும் பிளாக்பெரி இயங்குதளங்களில் வேலை செய்யும். ஒரு முறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் ஸ்டான்ட்-பை மற்றும் 8 முதல் 10 மணி நேர பிளேபேக் வழங்கும் என போல்ட் தெரிவித்துள்ளது. வயர்லெஸ் ஹெட்போனில் உள்ள ப்ளூடூத் ஆடியோ டீகோட் தொழில்நுட்பம் சிறப்பான ஆடியோ டிரான்ஸ்மிஷன் செய்கிறது.

    புதிய போல்ட் கியூ ஹெட்போனில் CSR 8635 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. ஹெச்.டி. தரத்தில் ஆடியோ வழங்குவதோடு 3D அகௌஸ்டிக் டிரைவர்களும் வழங்கப்பட்டுள்ளது. இதன் இன்-லைன் கன்ட்ரோல்கள் மற்றும் பில்ட்-இன் மைக்ரோபோன் கொண்டு இசையை கேட்பதோடு, அழைப்புகளையும் ஏற்க முடியும்.

    இதனுடன் அடிக்கடி சிக்கிக் கொள்ளாத வகையிலான கேபிள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் போல்ட் கியூ ஹெட்போன் விலை ரூ.1,710 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், மிந்த்ரா தளத்தில் ரூ.1,449 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. #headphones #Wireless
    ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Oppo #smartphone


    ஒப்போ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் PBEM00, PBET00 மாடல் நம்பர்களுடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட மாடல்களும், சற்று விலை குறைந்த வெர்ஷன் PAGM00, PAGT00 மாடல் நம்பர்களுடன் பின்புற கைரேகை சென்சார் கொண்ட மாடல்கள் உருவாகின்றன.

    அந்த வகையில் ஒப்போ ஆர்17 ஸ்மார்ட்போனின் முதல் போஸ்டர் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய ஆர்17 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா மாட்யூல்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கின்றன. கிரேடியன்ட் வடிவமைப்பு கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 10 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.



    ஒப்போ ஆர்17 மாடலின் மற்றொரு படத்தில் F9/F9 ப்ரோ போன்ற நாட்ச், பின்புறம் டூயல் கேமரா செட்டப் செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கிறது. இதிலும் கிரேடியன்ட் வடிவமைப்பு கொண்டுள்ளது. ஒப்போ ஆர்17 மாடலில் ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஒப்போ மாடல்களில் 6.3 இன்ச், 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எனினும் புதிய ஸ்மார்ட்போன்கள் TENAA மூலம் சான்று பெறும் போது இவற்றின் முழு விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சாம்சங் கேலக்ஸி வாட்ச் அந்நிறுவனத்தின் அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை சொடர்ந்து பார்ப்போம். #GalaxyWatch


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் நியூ யார்க் நகரில் நடைபெற்ற அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 46எம்.எம். மற்றும் 42எம்.எம். ஆப்ஷன்களில் 1.3 இன்ச் மற்றும் 1.2 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் கேலக்ஸி வாட்ச் வட்ட வடிவ சூப்பர் AMOLED ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

    டைசன்-சார்ந்த வியரபிள் பிளாட்ஃபார்ம் 4.0 மூலம் இயங்கும் கேலக்ஸி வாட்ச் 5ATM+IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட், மிலிட்டரி தர டியூரபிலிட்டி கொண்டுள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்த வரை என்.எஃப்.சி. மற்றும் மாக்னெடிக் செக்யூர் டிரான்ஸ்மிஷன் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சாம்சங் பே மூலம் மொபைல் பேமென்ட் செய்ய முடியும். மேலும் பில்ட்-இன் ஸ்பீக்கர் இருப்பதால் வாய்ஸ் மெசிஜிங், மியூசிக் மற்றும் ஜி.பி.எஸ். போன்றவற்றை பயன்படுத்தலாம்.

    பயனரின் மன அழுத்தத்தை டிராக் செய்யவும், மூச்சு பயிற்சி சார்ந்த பரிந்துரைகளை வழங்கும் புதிய டிராக்கர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மேம்படுத்தப்பட்ட ஸ்லீப் டிராக்கர் உறக்கத்தை டிராக் செய்கிறது. இத்துடன் வீட்டிலேயே செய்யக்கூடிய 21 உடற்பயிற்சிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய வாட்ச்-இல் மொத்தம் 39 உடற்பயிற்சிகள் உள்ளன.



    சாம்சங் கேலக்ஸி வாட்ச் சிறப்பம்சங்கள்

    – 1.2-இன்ச் / 1.3-இன்ச் 360×360 பிக்சல் வட்ட வடிவம் கொண்ட சூப்பர் AMOLED ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே
    – கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
    – 1.15 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் எக்சைனோஸ் 9110 பிராசஸர்
    – 768 எம்பி (ப்ளூடூத்) / 1.5 ஜிபி ரேம் (எல்.டி.இ)
    – 4 ஜிபி மெமரி
    – டைசன் சார்ந்த வியரபிள் ஓ.எஸ். 4.0
    – 5ATM + IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட், MIL STD 810G
    – 3ஜி/எல்.டி.இ. (ஆப்ஷன்), ப்ளூடூத் 4.2, வைபை, என்.எஃப்.சி., ஏ-ஜி.பி.எஸ்.
    – 472 எம்.ஏ.ஹெச். (46 எம்.எம்.) / 270 எம்.ஏ.ஹெச். (42 எம்.எம்.) பேட்டரி
    – வயர்லெஸ் சார்ஜிங் வசதி

    சாம்சங் கேலக்ஸி வாட்ச் 43 எம்.எம். வெர்ஷன் சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 349.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.24,070) என்றும், 42 எம்.எம். மிட்நைட் பிளாக் மற்றும் ரோஸ் கோல்டு வெர்ஷன்கள் விலை 329.99 டாலர்கள் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.22,695) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் தற்சமயம் முன்பதிவு செய்யப்படும் கேலக்ஸி வாட்ச் விற்பனை ஆகஸ்டு 24-ம் தேதி துவங்குகிறது. கேலக்ஸி வாட்ச் எல்.டி.இ. வெர்ஷன் விற்பனை தேதி அறிவிக்கப்படவில்லை. #GalaxyUnpacked #GalaxyWatch
    சியோமியின் சப்-பிரான்டு போகோ இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. #pocophoneF1


    சியோமி நிறுவனத்தின் போகோ பிரான்டு இந்தியாவில் புதிய டீசரை வெளியிட்டுள்ளது. போகோபோன் எஃப்1 ஸ்மார்ட்போன் முதலில் வெளியிடப்பட இருக்கும் நிலையில், சியோமி இந்தியாவின் ஜெய் மணி, புதிய திட்டத்தில் பணியாற்றி வருவதாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    ஒப்போ நிறுவனத்தின் ரியல்மி சியோமிக்கு போட்டியாக துவங்கப்பட்டுள்ள நிலையில், சியோமியின் புதிய போகோ துவங்கப்படுவதாக கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் போகோபோன் என டீஸ் செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் போகோ என டீஸ் செய்யப்பட்டுள்ளது.

    சிறப்பம்சங்களை பொருத்த வரை போகோபோன் எஃப்1 மாடலில் 6.0 இன்ச் 19:9 ரக டிஸ்ப்ளே, நாட்ச் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், லிக்விட் கூலிங் வசதி, 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, டூயல் பிரைமரி கேமரா, ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக், பின்புறைம் கைரேகை சென்சார், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.



    சியோமி போகோபோன் எஃப்1 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்: 

    - 5.99 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
    - அட்ரினோ 630 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9.0
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm பிக்சல்
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 20 எம்பி செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இஷ வைபை, ப்லூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

    சியோமி போகோபோன் எஃப்1 ஸ்மார்ட்போனின் டீசர் மட்டுமே வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதன் வெளியீடு மற்றும் இதர விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Xiaomi #pocophoneF1
    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனின் லைவ் படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. இதில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் தெரியவந்துள்ளன. #Pixel3XL #smartphone


    கூகுள் பிக்சல் 3 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எனினும் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி வருகின்றன.

    முன்னதாக பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் 4-ம் தேதி அறிமுகமாகும் என்பதை கூகுள் தெரியாத்தனமாக அறிவித்தது, இந்நிலையில் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனின் விவரங்கள் லைவ் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இவை அன்பாக்சிங் அனுபவத்தை வழங்கும் படி ஸ்மார்ட்போன் பெட்டியில் உள்ளவற்றை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

    அதன்படி ஸ்மார்ட்போனுடன், யுஎஸ்பி டைப்-சி ரக ஹெட்போன்கள், யுஎஸ்பி டைப்-சி கேபிள், அடாப்டர், 3.5 எம்.எம். இல் இருந்து யு.எஸ்.பி. டைப்-சி டாங்கிள், இன்-இயர் ரக இயர்போன்கள் மற்றும் பேப்பர் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.



    வடிவமைப்பை பொருத்த வரை நாட்ச் ரக டிஸ்ப்ளே, கீழ்புறம் ஸ்டீரியோ ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. நாட்ச் இருப்பதோடு டிஸ்பளேவின் ஒரு ஓரத்தில் பேட்டரி இன்டிகேட்டர் வடது புறமாக மாற்றப்பட்டுள்ளது. நாட்ச் பகுதியில் செல்ஃபி கேமரா மற்றும் வழக்கமான சென்சார்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

    பின்புறம் ஒற்றை பிரைமரி கேமரா, கைரேகை சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ் மற்றும் கூகுள் லோகோ இடம்பெற்றுள்ளது. சிறப்பம்சங்களை பொருத்த வரை புதிய ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் 1440×2960 டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, ஆன்ட்ராய்டு பி இயங்குதளம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புகைப்படம் எடக்க தலைசிறந்த முறையில் அம்சங்கள் மேம்பட்டு, ஹார்டுவேர் தரப்பிலும் அதிகப்படியான அப்டேட் செய்யப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. விலை மற்றும் விற்பனை தவிர ஸ்மார்ட்போனின் பெரும்பாலான விவரங்கள் தற்சமயம் லீக் ஆகியுள்ளது. #Pixel3XL #smartphone
    எல்.ஜி. நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக ஜி7 தின்க் பிளஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #LGG7ThinQ


    எல்.ஜி. நிறுவனத்தின் ஜி7 பிளஸ் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஜி7 பிளஸ்  தின்க் ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் QHD பிளஸ் 19.5:9 ஃபுல் விஷன் எல்சிடி சூப்பர் பிரைட் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மூலம் பாதுகாக்கப்படும் எல்.ஜி. ஜி7 பிளஸ்  தின்க் ஸ்மார்ட்போனில் பாலிஷ் செய்யப்பட்ட மெட்டல் ரிம், IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், ஒரு அறையில் எங்கு இருந்தாலும் குரலை அங்கீகரித்து, புரிந்து கொள்ளும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

    மற்ற ஸ்மார்ட்போன்களை விட இருமடங்கு அதிக ஒலியெழுப்பும் வகையில் பூம்பாக்ஸ் ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் DTS:X இருப்பதால் விர்ச்சுவல் 3D சவுன்டு, இயர்போன்களில் அதிகபட்சம் 7.1 சேனல் ஆடியோ மற்றும் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் Hi-Fi குவாட் DAC தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.



    எல்.ஜி. ஜி7 பிளஸ்  தின்க் சிறப்பம்சங்கள்

    – 6.1 இன்ச் 3120×1440 பிக்சல் 19.5:9 ஃபுல் விஷன் சூப்பர் பிரைட் IPS டிஸ்ப்ளே
    – கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    – ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
    – அட்ரினோ 630 GPU
    – 6 ஜிபி ரேம்
    – 128 ஜிபி மெமரி
    – மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    – ஆன்ட்ராய்டு 8.0 (ஓரியோ) மற்றும் எல்.ஜி. UX
    – ஹைப்ரிட் டூயல் சிம்
    – 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.6
    – 16 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.9, எல்இடி ஃபிளாஷ்
    – 8 எம்பி செல்ஃபி கேமரா, f/1.9
    – கைரேகை சென்சார்
    – பிரத்யேக கூகுள் அசிஸ்டன்ட் பட்டன்
    – வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் IP68
    – MIL-STD 810G சான்று
    – 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    – 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    – க்விக் சார்ஜ் 3.0, வயர்லெஸ் சார்ஜிங்

    எல்.ஜி. ஜி7 பிளஸ்  தின்க் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.39,990 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஆகஸ்டு 10 தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் புதிய எல்.ஜி. ஜி7 பிளஸ்  தின்க் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 6, அசுஸ் சென்ஃபோன் 5இசட், விவோ நெக்ஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. #LGG7ThinQ #smartphone
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ2 கோர் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் மற்றும் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் வெளியாக இருக்கின்றன. #samsunggalaxy #Smartphones
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் சில தினங்களில் வெளியாக இருக்கும் நிலையில், அந்நிறுவனத்தின் மேலும் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் வெளியாக இருக்கின்றன. கேலக்ஸி ஜெ2 கோர் சாம்சங் நிறுவனத்தின் முதல் ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனாகவும், கேலக்ஸி ஏ8 ஸ்டார் மாடல் ஒன்றாக அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஜெ2 கோர் மற்றும் கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆகலாம் என கூறப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் முறையே SM-J260 மற்றும் SM-G8850 என்ற மாடல் நம்பர்களுடன் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி ஜெ2 கோர் சிறப்பம்சங்கள்:

    சாம்சங் கேலக்ஸி ஜெ2 கோர் ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் முதல் ஆன்ட்ராய்டு கோ சாதனமாக இருக்கும் என கூறப்படுகிறது. எனினும் மற்ற ஆன்ட்ராய்டு கோ சாதனங்கள் போன்று இல்லாமல், புதிய சாதனம் டச்விஸ் யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டு இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போனில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா, 2600 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது.


    சாம்சங் கேலக்ஸி ஏ8 ஸ்டார் சிறப்பம்சங்கள்:

    கேலக்ஸி ஏ8 ஸ்டார் ஸ்மார்ட்போன் ஏற்கனவே பலமுறை இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. அதன்படி கிடைத்திருக்கும் தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் 6.28 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ், 220x1080 பிக்சல் இன்ஃபைனைட் டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7885 அல்லது ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் 4ஜிபி அல்லது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், 16 எம்பி + 24 எம்பி டூயல் கேமரா செட்டப், டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ், 24 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு, ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்படலாம். #samsunggalaxy #Smartphones
    ரிலையன்ஸ் ஜியோ அறிவித்திருக்கும் புதிய ரிலையன்ஸ் ஜியோ டிஜிட்டல் பேக் பயனர்களுக்கு 2 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்குகிறது. #RelianceJio #offers


    ஜியோ நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு புதிய ஆட்-ஆன் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பயனர்கள் ஏற்கனவே பயன்படுத்தும் சலுகையுடன் 2 ஜிபி வரை கூடுதல் டேட்டா பெற முடியும். மைஜியோ செயலியில் காணப்படும் இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

    ஆகஸ்டு 6-ம் தேதி வரை வழங்கப்படும் இந்த சலுகையில் கூடுதல் டேட்டா, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அன்லிமிட்டெட் காலிங் மற்றும் எஸ்.எம்.எஸ். சலுகைகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஜியோ டிஜிட்டல் சலுகை பிரீபெயிட் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது, மேலும் இவர்கள் ஏற்கனவே ரீசார்ஜ் சலுகையை ஆக்டிவேட் செய்திருக்க வேண்டும்.



    மைஜியோ செயலியில் குறிப்பிடப்பட்டு இருக்கும் தகவல்களின் படி சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது, மேலும் இதற்கான வேலிடிட்டி ஆகஸ்டு 6 வரை மட்டுமே. 

    கூடுதல் டேட்டா அனைத்து வாய்ஸ் மற்றும் டேட்டா சலுகைகளுக்கும் வழங்கப்படுகிறதா என்ற விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை, எனினும் இதுகுறித்து வெளியாகியிருக்கும் புகைப்படங்களின் படி ரூ.399 ரீசார்ஜ் சலுகையில் கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இதுதவிர சலுகையில் கூடுதல் சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ போன் மான்சூன் ஹங்காமா சலுகையை அறிவித்தது. இதில் பயனர்கள் தங்களது பழைய ஃபீச்சர்போனினை எக்சேஞ்ச் செய்து புதிய ஜியோபோனினை ரூ.501 விலையில் வாங்க முடியும் என அறிவிக்கப்பட்டது. இந்த தொகையும் முழுமையாக திரும்ப பெறமுடியும்.
    சியோமி நிறுவனத்தின் புதிய ஃபியூஷன் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சியோமி ஃபியூஷன் போன்களில் அதிநவீன ஸ்மார்ட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.#Xiaomi


    இந்தியாவில் மலிவு விலையில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்தே பிரபலமான சியோமி தற்சமயம் க்வின் 1 மற்றும் க்வின் 1 எஸ் ஃபீச்சர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. யுபின் எனும் கிரவுட்ஃபன்டிங் தளம் மூலம் புதிய மொபைல் போன்களை சியோமி அறிமுகம் செய்துள்ளது.

    வழக்கமான ஃபீச்சர் போன் போன்றில்லாமல், சியோமி மொபைலில் மேம்படுத்தப்பட்ட ல்மார்ட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ரியல்-டைம் மொழி மாற்றம் செய்யும் வசதியை இந்த மொபைல் போன்கள் கொண்டுள்ளது. இதன் க்வின் 1எஸ் மாடலில் 4ஜி கனெக்டிவிட்டி கொண்டுள்ளது.



    சியோமி க்வின் 1 சிறப்பம்சங்கள்:

    - 2.8 இன்ச் QVGA 240x320 பிக்சல் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
    - டூயல்-கோர் மீடியாடெக் MT6260A சிப்செட்
    - 8 எம்பி ரேம்
    - 16 எம்பி இன்டெர்னல் மெமரி
    - வைபை, ப்ளூடூத்
    - யுஎஸ்பி டைப்-சி போர்ட்
    - 1480 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி க்வின் 1எஸ் சிறப்பம்சங்கள்:

    - 2.8 இன்ச் QVGA 240x320 பிக்சல் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
    - டூயல்-கோர் ஸ்ப்ரெட்ரம் SC9820E சிப்செட்
    - 256 எம்பி ரேம்
    - 512 எம்பி ரேம்
    - 4ஜி வோல்ட்இ, வைபை ஹாட்ஸ்பாட், ப்ளூடூத்
    - யுஎஸ்பி டைப்-சி போர்ட்
    - 1480 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி க்வின் 1 மற்றும் க்வின் 1எஸ் ஸ்மார்ட்போன்களில் 17 மொழிகளை சப்போர்ட் செய்யும் வசதி, மெஷின் லெர்னிங் சார்ந்து இயங்கும் மொழி மாற்றம் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பில்ட்-இன் இன்ஃப்ராரெட் பிளாஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மொபைலை சர்வதேச ரிமோட் போன்று பயன்படுத்தலாம். 

    கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு நிறங்களில் கிடைக்கும் சியோமி க்வின் 1 மற்றும் க்வின் 1எஸ் ஸ்மார்ட்போன்களின் விலை CNY 199 (இந்திய மதிப்பில் ரூ.1,990) மன நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×