search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    விரைவில் மூன்று ஐபோன்களை வெளியிடும் ஆப்பிள்
    X

    விரைவில் மூன்று ஐபோன்களை வெளியிடும் ஆப்பிள்

    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீடு மற்றும் ஐபோன் மாடல்கள் சார்ந்த விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #iphone


    ஆப்பிள் நிறுவனம் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள்: ஐபோன் 9, ஐபோன் 11 மற்றும் ஐபோன் 11 பிளஸ் மாடல்களை செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    இவற்றில் ஐபோன் 9 மாடல் ஆப்பிளின் என்ட்ரி-லெவல் மாடலாக இருக்கும் என்றும், இதில் ஐபோன் X போன்ற 6.1 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன். ஃபேஸ் ஐடி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஐபோன் 11 மற்றும் 11 பிளஸ் மாடல்கள் ஐபோன் X2 மற்றும் ஐபோன் X பிளஸ் மாடல்களில் முறையே 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் OLED டிஸ்ப்ளேக்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    சிறப்பம்சங்களை பொருத்த வரை புதிய ஐபோன்களில் மேம்படுத்தப்பட்ட கேமரா செட்டப், 7nm A11 சிப்செட், புத்தம் புதிய யு.எஸ்.பி.-சி சார்ஜர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் 2018 ஆப்பிளின் விலை குறைந்த மாடலாக ஐபோன் 9 இருக்கும் என கூறப்படுகிறது. 



    ஏற்கனவே வெளியான தகவல்களின் படி 2018 ஐபோன்களில் ஆப்பிள் பென்சில் சப்போர்ட், அதிகபட்சம் 512 ஜிபி மெமரி வழங்கப்படும் என கூறப்பட்டது. எனினும் இந்த அம்சங்கள் சாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி நோட்9 அம்சங்களை போன்றே இருக்கிறது.

    புதிய OLED மாடல்கள் பட்ஜெட் ரக மாடல்களை விட விலை அதிகமாக இருக்கும் என்றும் பட்ஜெட் ரக 6.1 இன்ச் ஐபோன் விலை 699 முதல் 749 டாலர்கள் முதல் துவங்கலாம் என கூறப்படுகிறது. ஐபோன் X 2018 மற்றும் ஐபோன் X பிளஸ் மாடல்களின் விலை முறையே 899 முதல் 949 மற்றும் 999 டாலர்கள் முதல் துவங்கும் என தெரிகிறது.

    2018 ஐபோன்கள் செப்டம்பர் 12-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு செப்டம்பர் 22-ம் தேதி முதல் விற்பனை துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×