search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Relame 2"

    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. #Realme2



    ஒப்போவின் துணை பிரான்ட் ஆன ரியல்மி புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் கடந்த சில தினங்களாக வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி 2 ஸ்மார்ட்போன் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனுடன் கால்மி சேவை அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த சேவையில் பயனர்களுக்கு இலவச பிக்கப் மற்றும் டெலிவரி வழங்குகிறது. இத்துடன் ரியல்மி 2 ஸ்மார்ட்போன் தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது.

    புதிய ரியல்மி 2 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன் 1520x720 பிக்சல் ரெசல்யூஷன், நாட்ச் ஸ்கிரீன் கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட டைமன்ட் கட் வடிவமைப்பு கொண்டுள்ள ரியல்மி 2 மாடல் அதிக பிரகாசமாக இருக்கிறது. 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என இருவித மெமரி வேரியன்ட்களில் கிடைக்கிறது.



    ரியல்மி 2 சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் 1520x720 பிக்சல் 18:9 ஃபுல்வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
    - 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி 
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - கலர் ஓஎஸ் 8.1 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ், f/2.2
    - 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, 1.12μm பிக்சல்
    - கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. ஓ.டி.ஜி.
    - 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இந்தியாவில் ரியல்மி 2 ஸ்மார்ட்போன் டைமன்ட் பிளாக், டைமன்ட் ரெட் மற்றும் டைமன்ட் புளு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. ரியல்மி 2 ஸ்மார்ட்போன் 3 ஜிபி வேரியன்ட் விலை ரூ.8,990 என்றும் 4 ஜிபி ரேம் வேரியன்ட் விலை ரூ.10,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    செப்டம்பர் 4-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. ரியல்மி 2 ஸ்மார்ட்போனின் டைமன்ட் புளு வெர்ஷன் அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.



    அறிமுக சலுகைகள்:

    - ரியல்மி 2 ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.750 தள்ளுபடி பெற முடியும்.
    - ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.4200 மதிப்புடைய உடனடி சலுகைகள் மற்றும் 120 ஜிபி கூடுதல் டேட்டா 
    - வட்டியில்லா மாத தவணை முறை வசதி
    - பேடிஎம் விமான பயணச்சீட்டுகள் மற்றும் லென்ஸ்கார்ட் சார்பில் பிரத்யேக சலுகைகள்
    இந்தியாவில் ரியல்மி 2 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Realme2


    ரியல்மி 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என ரியல்மி அறிவித்துள்ளது. முன்னதாக இதே சாதனம் ப்ளிப்கார்ட் தளத்தில் டீஸ் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ரியல்மி 1 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்டது.

    இம்முறை வெளியிட்டிருக்கும் தகவல்களில் ரியல்மி 2 விலை ரூ.10,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரியல்மி 2 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 28-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனைக்கு வருவதோடு மட்டுமின்றி சிறப்பம்சங்கள் சார்ந்து சில விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார், 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது.

    ரியல்மி 1 ஸ்மார்ட்போனில் 3410 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிசத்தக்கது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் டைமன்ட் ரெட், பிளாக் மற்றும் புளு நிறங்களில் டைமன்ட் கட் வடிவமைப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போவின் துணை பிரான்டாக ரியல்மி இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    சமீபத்தில் ரியல்மி மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து ரியல்மி 2 மாடலில் ஸ்னாப்டிராகன் சிப்செட் வழங்கப்பட இருப்தை உறுதி செய்திருந்தன, எனினும் எந்த சிப்செட் வழங்கப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. ரியல்மி 1 மாடலில் மீடியாடெக் ஹீலியோ P60 சிப்செட் வழங்கப்பட்டது.
    ×