என் மலர்
மொபைல்ஸ்
ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் மொபைல் போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 இல் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
அந்த வகையில் நோக்கியா 2.3, நோக்கியா 110, நோக்கியா 6.2, நோக்கியா 7.2, நோக்கியா 105, நோக்கியா 2.2, நோக்கியா 4.2, நோக்கியா 3.2 மக்கும் நோக்கியா 9 பியூர் வியூ உள்ளிட்ட மாடல்களின் விலை உயர்த்தப்படுகிறது.
விலை உயர்வின் படி நோக்கியா 2.3 விலை ரூ. 7585 என்றும், நோக்கியா 110 விலை ரூ. 1684 என்றும், நோக்கியா 6.2 ரூ. 13168 என்றும் நோக்கியா 7.2 ரூ.16330 என மாற்றப்பட்டுள்ளது. இவற்றில் நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 மாடல்களின் விலை சமீபத்தில் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நோக்கியா 105, நோக்கியா 2.2, நோக்கியா 4.2 மற்றும் நோக்கியா 3.2 மாடல்கள் முறையே ரூ. 1053, ரூ. 6320, ரூ. 10008 மற்றும் ரூ. 8428 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா 9 பியூர்வியூ மாடல் ரூ. 2678 விலை உயர்த்தப்பட்டு ரூ. 52,677 என மாற்றப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 பிளஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேல்கஸி நோட் 20 பிளஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. கேலக்ஸி நோட் 20 பிளஸ் மாடல் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகியிருக்கிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் SM-N986U மாடல் நம்பரில் உருவாகி வருகிறது.
இதில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் கேலக்ஸி நோட் 20 பிளஸ் மாடலில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 8 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் 12 ஜி.பி. மற்றும் 16 ஜி.பி. ரேம் வெர்ஷன்களும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் கோனா எனும் பெயர் கொண்ட மதர்போர்டு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதன் சி.பி.யு. ஃபிரீக்வன்சி 3.09 ஜிகாஹெர்ட்ஸ் என கூறப்படுகிறது.
தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் கேலக்ஸி நோட் 20 பிளஸ் அமெரிக்க வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் SM-N976U எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.
கீக்பென்ச் தளத்தில் நடைபெற்ற சோதனையில் இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோரில் 985 புள்ளிகளையும் மல்டி கோரில் 3220 புள்ளிகளை பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் நிலையில் இருப்பதால் இதுபற்றிய கூடுதல் விவரங்கள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
இந்தியாவில் ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்கள் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு ஐபோன் 11 சீரிஸ், ஐபோன் 8 சீரிஸ், ஐபோன் 7 சீரிஸ், ஐபோன் XR மற்றும் ஐபோன் XS உள்ளிட்டவற்றுக்கு அமலாகி உள்ளது.
இந்தியாவில் மொபைல் போன்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி வரி 12 இல் 18 சதவீதமாக உயர்த்தப்பட்டதை தொடர்ந்து ஐபோன்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட மாடல்களின் விலையை கடந்த மாதம் ஆப்பிள் உயர்த்தியது. இறக்குமதி உயர்வு காரணமாக விலை உயர்த்தப்பட்டது.

விலை உயர்வின் படி என்ட்ரி லெவல் ஐபோன் 7 32 ஜி.பி. மாடல் விலை ரூ. 29,900 இல் இருந்து ரூ. 31,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டாப் எண்ட் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் 512 ஜி.பி. மாடல் விலை ரூ. 1,43,200 இல் இருந்து தற்சமயம் ரூ. 1,50,800 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களின் விலையும் முந்தைய மாடலை விட 5.3 சதவீதம் அதிகம் ஆகும்.
ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக ஐபோன்களுக்கான வரி 5.15 சதவீதத்தில் இருந்து 5.3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களின் எம்ஆர்பி விலையில் விற்பனை செய்து வந்தாலும், சில மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் சற்றே குறைந்த விலையில் ஐபோன்களை விற்பனை செய்கின்றன. மேலும் ஆன்லைனிலும் குறைந்த விலையில் ஐபோன்களை வாங்கிட முடியும்.
ஆப்பிள் தவிர போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலையும் ரூ. 1000 உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதுதவிர சாம்சங், ஒப்போ, விவோ, ரியல்மி, ரெட்மி மற்றும் ஐகூ என பெரும்பாலான நிறுவனங்களும் தங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கின்றன.
மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
லெனோவோவின் மோட்டோரோலா ஸ்மார்ட்போன் பிராண்டு மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் முதல் விற்பனையை நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி இருக்கிறது.
“இந்தியாவில் மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விற்பனை ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், தற்சமயம் இது ஏப்ரல் 15 ஆம் தேதி துவங்கும் என மோட்டோரோலா அறிவித்து இருக்கிறது. நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு உத்தரவை பின்பற்றும் வகையில், மோட்டோரோலா ஆன்லைன் விற்பனையாளர்கள் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்ய கேட்டுக் கொள்கிறோம்,” என லெனோவோ மொபைல் குழும இந்திய தலைவரும் மோட்டோரோலா மொபிலிட்டி நிர்வாக இயக்குனருமான பிரசாந்த் மணி தெரிவித்து இருக்கிறார்.
மோட்டோரோலா ரேசர் என மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் மடங்கக்கூடிய OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை பாதியாக மடிக்க வழி செய்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் இரண்டாவது ஸ்கிரீன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஸ்கிரீனினை குவிக் வியூ எக்ஸ்டெர்னல் டிஸ்ப்ளே என அழைக்கிறது.
இதை கொண்டு நோட்டிஃபிகேஷன், மியூசிக், கூகுள் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை வேகமாக இயக்க முடியும். புகைப்படங்களை எடுக்க புதிய ஸ்மார்ட்போனில் ஒற்றை கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதை ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் பிரைமரி கேமரா போன்றும், மடிக்கப்பட்ட நிலையில் செல்ஃபி கேமரா போன்றும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மோட்டோரோலா ரேசர் 2019 சிறப்பம்சங்கள்:
– 6.2 இன்ச் QLED HD+ 876×2142 பிக்சல் மடிக்கக்கூடிய ஸ்கிரீன்
– 2.7 இன்ச் 600×800 பிக்சல் குவிக் வியூ டிஸ்ப்ளே
– ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர்
– 6 ஜி.பி. பேம்
– 128 ஜி.பி. மெமரி
– 16 எம்.பி. f/1.7 கேமரா
– 5 எம்.பி. கேமரா
– ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
– 2510 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிக் வசதி
– இசிம் வசதி
– ப்ளூடூத், 4ஜி எல்.டி.இ., வைபை
இந்தியாவில் மோட்டோரோலா ரேசர் 2019 விலை ரூ. 1,24,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் சர்வதேச சந்தையில் ஏப்ரல் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்வு ஆன்லைன் ஸ்டிரீமிங் மூலம் நடைபெற இருக்கிறது.
இதே விழாவில் ஒன்பிளஸ் 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக ஒன்பிளஸ் வெளியிட்ட தகவல்களில் அதன் அடுத்த ஸ்மார்ட்போன் மாடல்களில் குவாட் ஹெச்.டி. பிளஸ் OLED ஃபுளூயிட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என தெரிவித்து இருந்தது.
இதுதவிர ஒன்பிளஸ் சமீபத்திய அறிவிப்பில் ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், எக்ஸ்55 5ஜி மோடெம் வழங்கப்படும் என தெரிவித்தது.

ஒன்பிளஸ் 8 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 6.55 இன்ச் FHD+ ஃபுளுயிட் AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3டி பாதுகாப்பு
- 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 8 ஜி.பி. LPDDR4X ரேம், 256 ஜி.பி. மெமரி (UFS 3.0)
- 12 ஜி.பி. LPDDR4X ரேம், 256 ஜி.பி. மெமரி (UFS 3.0)
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒ.எஸ். 10.0
- டூயல் சிம்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 0.8μm பிக்சல், OIS, EIS
- 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
- 2 எம்.பி. கேமரா
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ax, ப்ளூடூ் 5.1, ஜி.பி.எஸ்.
- யு.எஸ்.பி. டைப் சி
- 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ராப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங் (5V/6A)
ஒன்பிளஸ் 8 ப்ரோ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 6.78 இன்ச் குவாட் HD+ 120Hz ஃபுளுயிட் AMOLED டிஸ்ப்ளே
- 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 8 ஜி.பி. LPDDR5 ரேம், 256 ஜி.பி. மெமரி (UFS 3.0)
- 12 ஜி.பி. LPDDR5 ரேம், 256 ஜி.பி. மெமரி (UFS 3.0)
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒ.எஸ். 10.0
- டூயல் சிம்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.78, 0.8μm பிக்சல், OIS, EIS
- 48 எம்.பி. சென்சார் 120° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.44
- 5 எம்.பி. டெப்த் சென்சார்
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- வாட்டர் ரெசிஸ்டண்ட்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ax, ப்ளூடூ் 5.1, ஜி.பி.எஸ்.
- யு.எஸ்.பி. டைப் சி
- 4510 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ராப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங் (5V/6A)
- 3 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்
ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்வு இந்திய நேரப்படி ஏப்ரல் 14 இரவு 8.30 மணிக்கு நேரலை துவங்க இருக்கிறது. நேரலை வீடியோ ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்று்ம் யூடியூபில் காண முடியும்.
சர்வதேச சந்தையில் ஸ்மார்ட்போன் விற்பனை பிப்பவரி மாத வாக்கில் சுமார் 38 சதவீதம் குறைந்து இருப்பதாக சமீபத்திய ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
சர்வதேச அளவில், பிப்ரவரி மாதத்தில் ஸ்மார்ட்போன் விற்பனை 38 சதவீதம் குறைந்துள்ளது என கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி மாதத்தில், உலகில் மொத்தம் 6.18 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆகி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் விற்பனை 9.92 கோடியாக இருந்தது. கொரோனா வைரஸ் உலக வியாபாரத்தை உலுக்கியதே இதற்கு முக்கிய காரணம் என கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் நிறுவனம் கூறுகிறது.

சர்வதேச அளவில் சாம்சங், சியோமி, விவோ, ஒப்போ, ஹானர், உள்ளிட்ட வேறு பல முன்னணி நிறுவனத்தின் பிராண்டுகள் ஆன்லைனில் தமது விற்பனையை விரிவுபடுத்தி வருகின்றன. 2022-ல் ஸ்மார்ட்போன்களில் டேட்டா பயன்பாடு மாதம் ஒன்றுக்கு சராசரியாக (3.5 ஜிகாபைட்டில் இருந்து) 17.5 ஜிகாபைட்டாக அதிகரிக்கும் என சிஸ்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நடப்பு 2020-ம் ஆண்டின் இடைப்பகுதியில் வணிகரீதியில் 5ஜி சேவை தொடங்கி விடும் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். அடுத்த 6 ஆண்டுகளில் (2025-ஆம் ஆண்டுக்குள்) தொடர் பயன்பாட்டில் 92 கோடி செல்போன் இணைப்புகள் இருக்கும் என்றும், அதில் 8.8 கோடி 5ஜி இணைப்புகள் இருக்கும் என்றும் செல்போன் சேவை நிறுவனங்களின் சங்கம் (ஜி.எஸ்.எம்.ஏ) மதிப்பீடு செய்து இருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் பிரஸ் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. இதில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகியுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது. வரும் வாரங்களில் இந்த ஆண்டிற்கான ஸ்மார்ட்போன் மாடல்களை ஒன்பிளஸ் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 மாடல்கள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதே நிகழ்வில் ஒன்பிளஸ் 8 லைட் மாடலும் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
எனினும், ஒன்பிளஸ் 8 ப்ரோ ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் புகைப்படங்களும் இணைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஆன்லீக்ஸ் மற்றும் ஐகீக்ஸ் பிளாக் மூலம் வெளியாகி இருக்கும் ரென்டர்களின் படி புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் கேமரா டிஸ்ப்ளேவின் இடதுபுற ஓரத்தில் வழங்கப்படுகிறது.

இத்துடன் ஸ்மார்ட்போனின் கீழ்புறம் ஸ்பீக்கர் கிரில், பின்புறம் குவாட் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. இவை ஒன்பிளஸ் 7 டி ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே பொருத்தப்பட்டு இருக்கிறது. நான்கில் மூன்று கேமராக்கள் செங்குத்தாகவும், மற்றொரு கேமரா தனியாகவும், அதன் கீழ் டூயல் டோன் எல்.இ.டி. ஃபிளாஷ் காணப்படுகிறது.
ஸ்மார்ட்போனின் பின்புறம் புதிய ஒன்பிளஸ் லோகோ நடுப்புறத்தில் கேமரா சென்சார்களின் கீழ் காணப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் கீழ்புறத்திலும் பிராண்டிங் சேர்க்கப்பட்டு இருக்கிறது. ரென்டர்களில் அலெர்ட் ஸ்லைடர் மற்றும் வல்யூம் ராக்கர் உள்ளிட்டவை ஸ்மார்ட்போனின் இடதுபுறத்தில் காணப்படுகிறது.
ஸ்மார்ட்போன் கீழ் சிம் டிரே, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் மற்றும் மோனோ ஸ்பீக்கர் கிரில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5ஜி கனெக்டிவிட்டி, 48 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார், IP86 வாட்டர் ப்ரூஃப் வசதி, 4510 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் வையர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்
ரெட்மியின் புதிய கே சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் போக்கோ எஃப்2 பெயரில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
ரெட்மி கே30 4ஜி ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு, பின் போக்கோ எக்ஸ்2 பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் போக்கோ எஃப்2 பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய MIUI கேமரா குறியீடுகளில் இதுபற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் போக்கோ எஃப்2 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் ஃபிளாக்ஷிப் லெவல் சிறப்பம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எக்ஸ்.டி.ஏ. டெவலப்பர்கள் MIUI பீட்டா பதிப்பின் MI கேமரா செயலியிலுனுள் ரெட்மி கே30 ப்ரோ மற்றும் போக்கோ பிராண்டு வார்த்தைகள் இடம்பெற்று இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர். இதில் ரெட்மி கே30 ப்ரோ லிமின் எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதோடு, ஷாட் ஆன் போக்கோ போன் எனும் தகவல் இடம்பெற்றுள்ளது.

போக்கோ பிராண்டிங் கொண்டிருப்பதால், ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் போக்கோ பிராண்டிங்கில் வெளியாகும் என்பகை உணர்த்தும் வகையில் அமைந்து இருக்கிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போனில் பாப் அப் செல்ஃபி கேமரா, ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 64 எம்.பி. குவாட் கேமரா சென்சார், 4700 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஹெச்.டி.ஆர். 10 டிஸ்பளே வழங்கப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனத்தின் Mi 10 ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
சியோமி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் Mi 10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் 31-ம் தேதி அறிமுகம் செய்ய இருந்தது. முன்னதாக Mi 10 ஸ்மார்ட்போன் சீரிஸ் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்சமயம் நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக Mi 10 சீரிஸ் வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாக சியோமி நிறுவன இந்திய தலைவர் மனு குமார் ஜெயின் அறிவித்து இருக்கிறார். புதிய அறிவிப்பை அவர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.


இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் Mi 10 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக 108 எம்.பி. கேமரா இருக்கிறது. இதுதவிர Mi 10 ஸ்மார்ட்போனில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு இருக்கும் நிலையில், சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 27-ம் தேதி அறிமுகமாக இருக்கிறது.
முன்னதாக ரியல்மி மற்றும் விவோ போன்ற நிறுவனங்களும் தங்களது ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்வுகளை ஒத்திவைப்பதாக அறிவித்தன. இதுதவிர பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது நிகழ்வுகளை ரத்து செய்தும், ஒத்திவைப்பதாக அறிவித்து வருகின்றன.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. வரையிலான ரேம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார், 5 எம்.பி. மேக்ரோ கேமரா மற்றும் 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ31 சிறப்பம்சங்கள்:
- 6.4 இன்ச் 2400x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி65 பிராசஸர்
- ARM மாலி-G52 GPU
- 4 ஜி.பி. LPDDR4x ரேம், 64 ஜி.பி. மெமரி
- 6 ஜி.பி. LPDDR4x ரேம், 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீடிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ், f/2.0
- 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா, f/2.2
- 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4
- 5 எம்.பி.மேக்ரோ சென்சார், f/2.4
- 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
- கைரேகை சென்சார்
- சாம்சங் பே
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டால்பி அட்மோஸ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் ப்ரிசம் கிரஷ் பிளாக், ப்ரிசம் கிரஷ் புளூ, ப்ரிசம் கிரஷ் ரெட் மற்றும் ப்ரிசம் கிரஷ் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 5.3 மற்றும் நோக்கியா 5310 மொபைல் போன் மாடல் இந்திய வலைதளத்தில் பட்டியலிடப்பட்டது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. நோக்கியா 8.3 5ஜி, நோக்கியா 5.3, நோக்கியா 1.3 மற்றும் நோக்கியா 5310 கிளாசிக் உள்ளிட்டவற்றை ஹெச்.எம்.டி. குளோபல் அறிமுகம் செய்தது. எனினும், இவற்றில் இரு மாடல்களை மட்டும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது.
அந்த வகையில் நோக்கியா 5.3 மற்றும் நோக்கியா 5310 மாடல்கள் நோக்கியா இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டது. நோக்கியா 5.3 5ஜி மற்றும் நோக்கியா 1.3 உள்ளிட்டவை எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போன் விலை இந்திய மதிப்பில் ரூ. 47794 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில் ஐகூ 3 மற்றும் ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி உள்ளிட்ட மாடல்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்த வாய்ப்புகள் குறைவே. இதனால் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் கடும் போட்டியை ஏற்படுத்தும் விலையில் அறிமுககம் செய்யப்படலாம் என தெரிகிறது.

இத்துடன் நோக்கியா 5310 மொபைலையும் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 3 ஜி.பி. + 64 ஜி.பி., 4 ஜி.பி. + 64 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. + 64 ஜி.பி. என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 2 எம்.பி. மேக்ரோ சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நோக்கியா 5.3 விலை 189 யூரோக்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 15,000 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 மற்றும் கேலக்ஸி எஸ்20 பிளஸ் மாடல்களுக்கு கேஷ்பேக் மற்றும் எக்சேன்ஜ் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் மாடல்களுக்கு கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு ரூ. 6000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும்.
கேலக்ஸி எஸ்20 மற்றும் கேலக்ஸி எஸ்20 பிளஸ் மாடல்களுக்கு கேஷ்பேக் சலுகை மார்ச் 31 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அப்கிரேடு போனஸ் சலுகையும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் மாடல்களை வாங்குவோர் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் இயர்போனினை தள்ளுபடி விலையில் வாங்கி கொள்ள முடியும்.

அப்கிரேடு போனஸ் சலுகையின் கீழ் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் மாடல்களை வாங்குவோர் தங்களது பழைய ஸ்மார்ட்போனினை கொடுத்து அதிகபட்சம் ரூ. 5000 வரை தள்ளுபடி பெற முடியும். இதுதவிர கேலக்ஸி எஸ்20 சீரிஸ் மாடல்கள் ஒன்பது மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியிலும் கிடைக்கிறது.
கேலக்ஸி எஸ்20 மற்றும் கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் ரூ. 11,990 மதிப்புள்ள கேலக்ஸி பட்ஸ் பிளஸ் வயர்லெஸ் இயர்பட்சை ரூ. 3,999 விலையில் வாங்கி கொள்ளலாம். இதுதவிர பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இருமடங்கு டேட்டா சலுகையும் வழங்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்20 மாடல் 128 ஜி.பி. வெர்ஷன் ரூ. 66,999 விலையிலும், கேலக்ஸி எஸ்20 பிளஸ் மாடல் ரூ. 73,999 விலையிலும் துவங்குகிறது.






