என் மலர்
மொபைல்ஸ்
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை அறிவிக்கப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை கடந்த வாரம் நடைபெற்ற ஆன்லைன் நிகழ்வில் அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் இவற்றின் இந்திய விலை ரெட் கேபிள் கிளபில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஒன்பிளஸ் 8 சீரிஸ் விலை ரூ. 41,999 துவங்கி டாப் எண்ட் ஒன்பிளஸ் 8 ப்ரோ விலை ரூ. 59,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 8 சீரிஸ் விலை விவரம்
ஒன்பிளஸ் 8 கிளேசியல் கிரீன் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 41,999
ஒன்பிளஸ் 8 ஆனிக்ஸ் பிளாக் மற்றும் கிளேசியல் கிரீன் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 44,999
ஒன்பிளஸ் 8 ஆனிக்ஸ் பிளாக், கிளேசியல் கிரீன், இன்டர்ஸ்டெல்லார் குளோ 12 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 49,999
ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆனிக்ஸ் பிளாக் மற்றும் கிளேசியல் கிரீன் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 54,999
ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆனிக்ஸ் பிளாக், கிளேசியல் கிரீன் மற்றும் அல்ட்ராமரைன் புளூ 12 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 59,999
ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அமேசான், ஒன்பிளஸ் இந்தியா வலைதளம் மற்றும் ஆஃப்லைன் சந்தையில் மே மாத முதல் விற்பனைக்கு வருகிறது.

ஒன்பிளஸ் 8 சிறப்பம்சங்கள்:
- 6.55 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 402 ppi 20:9 ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே
- 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
- 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 3.0 மெமரி
- 12 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி UFS 3.0 மெமரி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.0
- டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.75, OIS + EIS
- 16 எம்பி 116° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4, 4K வீடியோ
- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.45, EIS
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யுஎஸ்பி டைப் சி, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப் சி
- 4300 எம்ஏஹெச் பேட்டபி
- ராப் சார்ஜ் 30T ஃபாஸ்ட் சார்ஜிங்

ஒன்பிளஸ் 8 ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 6.78 இன்ச் 3168x1440 பிக்சல் குவாட் HD+ 120 ஹெர்ட்ஸ் 19.8:9 ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே
- 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
- 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி UFS 3.0 மெமரி
- 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி UFS 3.0 மெமரி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.0
- டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.78, OIS + EIS
- 48 எம்பி 119.7° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 8 எம்பி டெலிபோட்டோ கேமரா, f/2.44, OIS
- 5 எம்பி கலர் ஃபில்ட்டர் கேமரா, f/2.4
- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.45, EIS
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யுஎஸ்பி டைப் சி, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப் சி
- 4510 எம்ஏஹெச் பேட்டபி
- ராப் சார்ஜ் 30T ஃபாஸ்ட் சார்ஜிங்
- 30 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்
சியோமியின் ரெட்மி பிராண்டு ஸ்மார்ட்போன் விவரங்கள் சீன வலைதளத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
சியோமி நிறுவனம் கடந்த மாதம் ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருந்தது. எனினும், ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படவில்லை.
தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி சியோமி நிறுவனம் விரைவில் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் சீனாவின் TENAA வலைதளத்தில் லீக் ஆகியிருக்கிறது. ஏற்கனவே இதே ஸ்மார்ட்போன் சீனாவின் 3சி சான்றளிக்கும் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருந்தது குறிப்பித்தக்கது.
சமீபத்திய தகவல்களின் படி ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க நான்கு கேமரா செட்டப் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுதவிர 6.43 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி 1080x2340 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 4920 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என தெரிகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் பக்கவாட்டில் இல்லாமல் பின்புறமாக வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்த சீரிஸ் மற்ற இரு ஸ்மார்ட்போன்களை போன்று ரெட்மி நோட் 9 மாடலிலும் பன்ச் ஹோல் வடிவமைப்பு வழங்கப்படுகிறது.
தற்போதைய புகைப்படங்களில் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவின் மேல்புறம் இடதுபக்கத்தில் பன்ச் ஹோல் காணப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா சென்சாரும், முன்புறம் 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ 80 பிராசஸர் வழங்கப்படும் என்றும் இது 3 ஜிபி / 4 ஜிபி / 6 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் கிடைர்ரும் என தெரிகிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படலாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் எஸ்இ மாடலின் ரேம் மற்றும் பேட்டரி விவரங்கள் சீன வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் எஸ்இ ஒருவழியாக வெளியிடப்பட்டு விட்டது. புதிய ஐபோன் எஸ்இ மாடல் ஆப்பிள் நிறுவனத்தின் சிறிய ஐபோன் ஆகும்.
புதிய ஐபோன் எஸ்இ மாடலில் ஐபோன் 11 சீரிஸ்களில் வழங்கப்பட்ட ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. வடிவமைப்பு பார்க்க ஐபோன் 8 போன்று காட்சியளிக்கிறது. புதிய ஐபோன் எஸ்இ வெளியிடப்பட்டுவிட்ட நிலையிலும், அதன் ரேம் மற்றும் பேட்டரி திறன் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.
எனினும், சீன டெலிகாம் வலைதளத்தின் மூலம் புதிய ஐபோன் எஸ்இ ரேம் மற்றும் பேட்டரி விவரங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி ஆப்பிள் ஐபோன் எஸ்இ மாடலில் 3 ஜிபி ரேம் மற்றும் 1821 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 8 மாடலில் 2 ஜிபி ரேம், ஐபோன் 11 மாடலில் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.


இதேபோன்று பேட்டரியை பொருத்தவரை ஐபோன் 8 மாடலில் 1821 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய ஐபோன் எஸ்இ மாடலின் ரேம் ஐபோன் 8 மாடலை விட அதிகமாகவும், பேட்டரி ஒரே அளவிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஐபோன் எஸ்இ மாடலில் 4.7 இன்ச் ஹெச்டி ரெட்டினா ஸ்கிரீன், ஹாப்டிக் டச், டச் ஐடி கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஐபோன் 11 மாடலில் வழங்கப்பட்டு இருந்த ஏ13 பயோனிக் சிப்செட் புதிய ஐபோன் எஸ்இ மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.
கிளாஸ் மற்றும் அலுமினியம் டிசைன் கொண்டிருக்கும் புதிய ஐபோன் எஸ்இ மாடலில் புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 7 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி திறன் பற்றி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இது ஐபோன் 8 மாடல் வழங்கும் அளவிலான பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் எஸ்இ மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் இந்திய விலை விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஐபோன் எஸ்இ 2016 ஆம் ஆண்டு ஆப்பிள் வெளியிட்ட ஐபோன் எஸ்இ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
புதிய ஐபோன் எஸ்இ மாடலில் 4.7 இன்ச் ஹெச்டி ரெட்டினா ஸ்கிரீன், ஹாப்டிக் டச், டச் ஐடி கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஐபோன் 11 மாடலில் வழங்கப்பட்டு இருந்த ஏ13 பயோனிக் சிப்செட் புதிய ஐபோன் எஸ்இ மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.
கிளாஸ் மற்றும் அலுமினியம் டிசைன் கொண்டிருக்கும் புதிய ஐபோன் எஸ்இ மாடலில் புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 7 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி திறன் பற்றி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இது ஐபோன் 8 மாடல் வழங்கும் அளவிலான பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020 சிறப்பம்சங்கள்
- 4.7 இன்ச் 1334x750 பிக்சல் IPS 326 ppi டிஸ்ப்ளே
- ஏ13 பயோனிக் பிராசஸர்
- 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்
- ஐஓஎஸ் 13
- டூயல் சிம்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP67)
- 12 எம்பி வைடு ஆங்கில் கேமரா, f/1.8, OIS, ட்ரூ டோன் ஃபிளாஷ்
- 7 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
- டச் ஐடி கைரேகை சென்சார்
- பில்ட் இன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்
- ஜிகாபிட் தர 4ஜி எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத் 5
- லித்தியம் அயன் பேட்டரி
- கியூஐ வயர்லெஸ் சார்ஜிங்
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020 மாடல் பிளாக், வைட் மற்றும் பிராடக்ட் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 64 ஜிபி மாடல் ரூ. 42,500, 128 ஜிபி ரூ. 47,800 மற்றும் 256 ஜிபி ரூ. 58,300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விற்பனை மீண்டும் மாற்றப்பட்டு புதிய விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
லெனோவோவின் மோட்டோரோலா ஸ்மார்ட்போன் பிராண்டு மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்சமயம் விற்பனை தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி இருப்பதால் விற்பனை தேதி மாற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விற்பனை ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், ஏப்ரல் 15 ஆம் தேதி துவங்கும் என மோட்டோரோலா அறிவித்து இருந்தது. எனினும், நாட்டில் ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதால், மோட்டோரோலா ரேசர் விற்பனை தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.
அந்த வகையில் மோட்டோராலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விற்பனை 6 ஆம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலா ரேசர் என மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் மடங்கக்கூடிய OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை பாதியாக மடிக்க வழி செய்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் இரண்டாவது ஸ்கிரீன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஸ்கிரீனினை குவிக் வியூ எக்ஸ்டெர்னல் டிஸ்ப்ளே என அழைக்கிறது.
இதை கொண்டு நோட்டிஃபிகேஷன், மியூசிக், கூகுள் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை வேகமாக இயக்க முடியும். புகைப்படங்களை எடுக்க புதிய ஸ்மார்ட்போனில் ஒற்றை கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதை ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் பிரைமரி கேமரா போன்றும், மடிக்கப்பட்ட நிலையில் செல்ஃபி கேமரா போன்றும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மோட்டோரோலா ரேசர் 2019 சிறப்பம்சங்கள்:
– 6.2 இன்ச் QLED HD+ 876×2142 பிக்சல் மடிக்கக்கூடிய ஸ்கிரீன்
– 2.7 இன்ச் 600×800 பிக்சல் குவிக் வியூ டிஸ்ப்ளே
– ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர்
– 6 ஜி.பி. பேம்
– 128 ஜி.பி. மெமரி
– 16 எம்.பி. f/1.7 கேமரா
– 5 எம்.பி. கேமரா
– ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
– 2510 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிக் வசதி
– இசிம் வசதி
– ப்ளூடூத், 4ஜி எல்.டி.இ., வைபை
இந்தியாவில் மோட்டோரோலா ரேசர் 2019 விலை ரூ. 1,24,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எல்ஜி நிறுவனத்தின் புதிய சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெல்வெட் என அழைக்கப்பட இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
எல்ஜி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் சீரிசை சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது. புதிய சீரிஸ் முதல் ஸ்மார்ட்போன் மாடல் எல்ஜி வெல்வெட் என அழைக்கப்பட இருக்கிறது.
புதிய எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் பிரத்யேக வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் இதன் கேமரா சென்சார்கள் ரெயின்டிராப் வகையில் பொருத்தப்படுகிறது. புதிய வெல்வெட் சாதனம் பார்ப்பதற்கும் கையில் வைத்து பயன்படுத்தவும் பிரீமியம் அனுபவத்தை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது தோற்றத்தில் மற்ற ஸ்மார்ட்போன்களை விட வித்தியாசமாக இருக்கும். சிறப்பம்சங்களள் தற்போதைய வழக்கத்தையொட்டி இருக்கும் என கூறப்படுகிறது. தற்சமயம் பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஒரே வடிவமைப்பை தழுவி அதிக மாடல்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் நிலையில், எல்ஜி வெல்வெட் முற்றிலும் புதிதாக இருக்கும்.
மொபைல் சாதனங்களில் புதிய பிராண்டிங் பெறும் எல்ஜி நிறுவனத்தின் முதல் சீரிஸ் ஆக எல்ஜி வெல்வெட் இருக்கிறது. மேலும் ஸ்மார்ட்போன்களுக்கு எண் அடிப்படையில் பெயரிடும் வழக்கத்தை மாற்றி பிரபலம் மற்றும் கவர்ச்சிகர பெயர்களை சூட்ட எல்ஜி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய எல்ஜி வெல்வெட் அதிக மென்மையாகவும், பிரீமியம் அனுபவத்தை கொண்டது என்பதை தெரியப்படுத்தும் நோக்கில் சூட்டப்பட்டு இருப்பதாக எல்ஜி தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸ் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் விவரங்கள் மற்றும் ரென்டர்கள் கடந்த ஆண்டு வெளியானது. இதைத் தொடர்ந்து பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் புகைப்படம் வெளியாகி, புதிய மாடலில் பன்ச் ஹோல் OLED டிஸ்ப்ளே, பின்புற கைரேகை சென்சார், சதுரங்க வடிவில் கேமரா மாட்யூல், மெல்லிய பெசல் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதை தெரியப்படுத்தியது.
அந்த வரிசையில் தற்சமயம் புதிய பிக்சல் ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸ் புகைப்படம், ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
கூகுள் பிக்சல் 4ஏ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 5.81 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+OLED டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்
- அட்ரினோ 618 GPU, டைட்டன் எம் செக்யூரிட்டி சிப்
- 6 ஜிபி ரேம்
- 64 / 128 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு 10
- 12.2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், டூயல் பிடி ஆட்டோஃபோக்கஸ், OIS, EIS
- 8 எம்பி செல்ஃபி கேமரா, 84 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ்
- டூயல் சிம்
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 2 மைக்ரோபோன்கள்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப்-சி
- 3080 எம்ஏஹெச் பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் ஜஸ்ட் பிளாக் மற்றும் பார்லி புளூ நிறங்களில் வெளியாகும் என்றும் இதன் துவக்க விலை 399 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 30,280 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றிய புதிய விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் அறிமுகம் தள்ளிவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் வெளியீட்டில் மாற்றம் இருக்காது என கூறப்படுகிறது.
பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது நிகழ்வு திட்டங்களை மாற்றியமைத்து வருகின்றன. சாம்சங் தனது கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மாடல்களை ஏற்கனவே திட்டமிட்டப்படி ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி கொரியா ஹெரால்டு வெளியிட்டு இருக்கும் தகவல்களில் கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான அறிமுக நிகழ்வு பணிகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அறிமுக நிகழ்வில் மாற்றம் இருக்காது என்ற போதும், இது ஆன்லைன் மூலம் நடைபெறலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி ஃபோல்டு 2 ஸ்மார்ட்போன் மாடல்கள் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டு இருந்தது.
சமீபத்தில் கேலக்ஸி நோட் 20 பிளஸ் 5ஜி மாடல் கீக்பென்ச் தளத்தில் SM-N986U என்ற மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருவது தெரியவந்தது. கேலக்ஸி நோட் 20 பிளஸ் 5ஜி மாடலில் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர், 8 ஜிபி ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் ஜப்பானில் அறிமுகம் செய்தது. எனினும், இதன் விற்பனை ஜூன் மாதம் வரை துவங்காது. தற்சமயம் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
புதிய கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி ஸ்கிரீன், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆக்டாகோர் பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0 வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 25 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 3டி கிளாஸ்டிக் பாடி கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போனில் 3500 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ41 சிறப்பம்சங்கள்
- 6.1 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி-யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் பிராசஸர்
- 4 ஜிபி ரேம்
- 64 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0
- டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
- 8 எம்பி 123° அல்ட்ராவைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 5 எம்பி டெப்த் சென்சார், f/2.4
- 25 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- சாம்சங் பே
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 3500 எம்ஏஹெச் பேட்டரி
- 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போன் ப்ரிஸம் கிரஷ் பிளாக், ப்ரிஸம் கிரஷ் வைட், ப்ரிஸம் கிரஷ் புளு மற்றும் ப்ரிஸம் கிரஷ் ரெட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
சியோமி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனில் வாட்டர்ஃபால் டிஸ்ப்ளே பயன்படுத்துவதற்கான காப்புரிமை பெற விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் டிசைனிற்கான காப்புரிமையை பெற சீன காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்து இருக்கிறது. இந்த டிசைன் கொண்டு ஸ்மார்ட்போன்களில் வாட்டர்ஃபால் ரக டிஸ்ப்ளேக்களை பொருத்த முடியும். இந்த காப்புரிமை ஏப்ரல் 3 ஆம் தேதி சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.
காப்புரிமை விவரங்களின் படி சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனில் வாட்டர்ஃபால் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்பதை உணர்த்துகிறது. இது ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் சுமார் 60 சதவீதம் வரை ஸ்கிரீன் இருக்கும். வாட்டர்ஃபால் டிஸ்ப்ளே என்பது வளைந்த ஸ்கிரீன் ஆகும். இது ஸ்மார்ட்போனின் பக்கவாட்டு பகுதி வரை நீளும்.


புதிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை சியோமி நிறுவனம் 2019 செப்டம்பர் மாத வாக்கில் விண்ணப்பித்து இருந்தது. டிசைன் மட்டுமின்றி வாட்டர்ஃபால் டிஸ்ப்ளேவினை வித்தியாசமாக பயன்படுத்தும் நோக்கில் சியோமியின் புதிய காப்புரிமை விண்ணப்பம் அமைந்துள்ளது.
ப்ரோடோடைப் போனில் பக்கவாட்டு பகுதிகளில் நேவிகேஷன் கண்ட்ரோல் மற்றும் ஸ்டேட்டஸ் ஐகான் இன்டர்ஃபேஸ் காணப்படுகிறது. ஆப்டிமல் ஸ்கிரீன் பகுதியை சியோமி பயன்படுத்த பிரத்யேக யுஐ டிசைன் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவின் கீழ் கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 9.3 பியூர்வியூ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
நோக்கியா 9.3 பியூர்வியூ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் நோக்கியா 9.3 பியூர்வியூ ஸ்மார்ட்போன் 2020 இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனின் பெயர் பற்றி அதிக விவரங்கள் இணையத்தில் வெளியாகின. எனினும், இது நோக்கியா 9.3 பியூர்வியூ என அழைக்கப்படும் என கூறப்படுகிறது.

நோக்கியா 9.3 பியூர்வியூ இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ஹெச்எம்டி குளோபல் சார்பில் இதுபற்றி எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.
இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் நோக்கியா 9.3 பியூர்வியூ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ2020 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது குறைந்த விலை என்ட்ரி லெவல் ஐபோன் மாடலை இம்மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. வெளியீட்டிற்கு முன் புதிய ஐபோன் பெயரை ஆப்பிள் தனது வலைதளம் மூலம் ஏற்கனவே தெரியப்படுத்தி விட்டது. குறைந்த விலை ஐபோன் மாடல் ஐபோன் எஸ்இ 2020 என அழைக்கப்பட இருக்கிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் இது ஐபோன் 9 என அழைக்கப்படும் என கூறப்பட்டது. எனினும், ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் எஸ்இ மாடலுக்கு மேம்பட்ட வெர்ஷனை உருவாக்கி வருவதாக தெரிகிறது. புதிய மாடல் வளரும் நாடுகளை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானோருக்கு இது அவர்களுக்கு முதல் ஐபோனாக இருக்கும் என தெரிகிறது.

இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய ஐபோன் பார்க்க ஐபோன் 7 அல்லது ஐபோன் 8 சீரிஸ் போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. சிறப்பம்சங்களை பொருத்தவரை 4.7 இன்ச் எல்.சி.டி. பேனல், டச் ஐடி ஹோம் பட்டன், ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட், 3 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க ஒற்றை பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது. இத்துடன் டச் ஐடி பட்டன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக 2016 மார்ச் மாதத்தில் ஐபோன் 5எஸ் மாடலில் புதிய அம்சங்களை சேர்த்து ஐபோன் எஸ்இ மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
அந்த வரிசையில் ஐபோன் எஸ்இ 2020 மாடலில் ஐபோன் 11 மாடலில் ஐபோன் 7 ரக அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய ஐபோன் மாடல் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதன் விலை 399 டாலர்களில் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.






