search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சியோமி காப்புரிமை புகைப்படம்
    X
    சியோமி காப்புரிமை புகைப்படம்

    வாட்டர்ஃபால் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனிற்கு காப்புரிமை பெறும் சியோமி

    சியோமி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனில் வாட்டர்ஃபால் டிஸ்ப்ளே பயன்படுத்துவதற்கான காப்புரிமை பெற விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் டிசைனிற்கான காப்புரிமையை பெற சீன காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்து இருக்கிறது. இந்த டிசைன் கொண்டு ஸ்மார்ட்போன்களில் வாட்டர்ஃபால் ரக டிஸ்ப்ளேக்களை பொருத்த முடியும். இந்த காப்புரிமை ஏப்ரல் 3 ஆம் தேதி சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

    காப்புரிமை விவரங்களின் படி சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனில் வாட்டர்ஃபால் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்பதை உணர்த்துகிறது. இது ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் சுமார் 60 சதவீதம் வரை ஸ்கிரீன் இருக்கும். வாட்டர்ஃபால் டிஸ்ப்ளே என்பது வளைந்த ஸ்கிரீன் ஆகும். இது ஸ்மார்ட்போனின் பக்கவாட்டு பகுதி வரை நீளும்.

    சியோமி காப்புரிமை புகைப்படம்
    சியோமி காப்புரிமை புகைப்படம்

    புதிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமையை சியோமி நிறுவனம் 2019 செப்டம்பர் மாத வாக்கில் விண்ணப்பித்து இருந்தது. டிசைன் மட்டுமின்றி வாட்டர்ஃபால் டிஸ்ப்ளேவினை வித்தியாசமாக பயன்படுத்தும் நோக்கில் சியோமியின் புதிய காப்புரிமை விண்ணப்பம் அமைந்துள்ளது. 

    ப்ரோடோடைப் போனில் பக்கவாட்டு பகுதிகளில் நேவிகேஷன் கண்ட்ரோல் மற்றும் ஸ்டேட்டஸ் ஐகான் இன்டர்ஃபேஸ் காணப்படுகிறது. ஆப்டிமல் ஸ்கிரீன் பகுதியை சியோமி பயன்படுத்த பிரத்யேக யுஐ டிசைன் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவின் கீழ் கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×