என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    வாடிக்கையாளர்கள் தங்களின் வீட்டில் இருந்தபடி மொபைல் போன் வாங்க விவோ நிறுவனம் புதிய திட்டத்தை துவங்கி இருக்கிறது.

     

    புதிய மொபைல் போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கென புதிய திட்டத்தை விவோ நிறுவனம் துவங்கி உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் வீட்டுக்குள் இருந்து கொண்டே புதிய போன் வாங்கிக் கொள்ள முடியும். நாடு முழுக்க பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் ஊரடங்கின் போது சில தளர்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், விவோ புதிய திட்டம் அமலாகி இருக்கிறது.

    விவோ நிறுவனத்தின் புதிய திட்டத்தின் படி மொபைல் போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களின் சந்தேகங்களை விவோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலோ அல்லது விவோ அதிகாரப்பூர்வ வலைதளங்களில் கேட்க முடியும். வாடிக்கையாளர்கள் சந்தேகங்களுக்கு விவோ அதிகாரி பதில் அளித்து, புதிய போன் வாங்குவதற்கான உதவியை வழங்குவர்.

    விவோ ஸ்மார்ட்போன்

    எஸ்எம்எஸ் சார்ந்த கனெக்டிவிட்டி மூலம் இயங்கும் புதிய திட்டம் மே 12 ஆம் தேதிக்குள் முழுமையாக அமலாகிவிடும் என விவோ இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இன்றும் ஆஃப்லைன் மூலமாகவே புதிய மொபைல் வாங்க நினைக்கின்றனர். 

    எனினும், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலும், ஊரடங்கு நிறைவுற்ற பின்பும் பல வாடிக்கையாளர்கள் வெளியில் வர தயக்கம் காட்டலாம். இதன் காரணமாகவே புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கமான வியாபாரத்தை நடத்த முடியும் என விவோ நிறுவனத்தின் நிபுன் மரியா தெரிவித்தார். 

    ஏதேனும் காரணத்திற்காக வெளியில் வராமல் புதிய போன் வாங்க நினைப்போருக்காக புதிய திட்டம் துவங்கப்பட்டு இருக்கிறது. வெளியில் சென்று புதிய போன் வாங்க நினைப்போரும் அவ்வாறு செய்ய முடியும்.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களின் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.



    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக ஐபோன் 12 சீரிஸ் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. 

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி 6.1 இன்ச், அளவில் ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ மற்றும் 6.7 இன்ச் அளவில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் என மொத்தம் மூன்று ஐபோன்கள் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய ஐபோன் 12 சீரிஸ் விலை விவரங்கள் தெரியவந்துள்ளது. 

    5.4 இன்ச் ஐபோன் 12 D52G எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாகவும், இதில் 5ஜி வசதி, இரண்டு கேமராக்கள் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதன் விலை 649 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 49,100 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    ஐபோன் 11 சீரிஸ்

    இத்துடன் 6.1 இன்ச் ஐபோன் 12 D53G எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாகவும் இதன் விலை 749 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 56,700 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 6.1 இன்ச் ஐபோன் 12 ப்ரோ D53P எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாகவும், இதில் மூன்று கேமராக்கள், லிடார் சென்சார் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    இதன் விலை 999 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 75,694 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 6.7 இன்ச் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் D54P எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாகவும், இதில் ஐபோன் 12 ப்ரோ போன்ற கேமராக்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் விலை 1099 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 83,200 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் விலை திடீரென குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் புதிய விலை விவரங்களை பார்ப்போம்.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், இதன் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பின் படி சாம்சங் கேலக்ஸி எம்21 விலை ரூ. 13,199 ஆக  மாற்றப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் ரூ. 12,999 எனும் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனின் விலை ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக அதிகரிக்கப்பட்டது. அந்த வகையில் இதன் புதிய விலை ரூ. 14,222 ஆக மாற்றப்பட்டது. இந்நிலையில் இதன் விலை தற்சமயம் ரூ. 13,199 ஆற மாறியிருக்கிறது. இது கேலக்ஸி எம்21 (4ஜிபி + 63 ஜிபி) மாடலுக்கானது ஆகும்.

    கேலக்ஸி எம்21 (6 ஜிபி + 128 ஜிபி) மாடல் விலை ரூ. 16,499 இல் இருந்து தற்சமயம் ரூ. 15,499 ஆக மாற்றப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த வேரியண்ட் ரூ. 14,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    கேலக்ஸி எம்21

    சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார், 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    பிளாஸ்டிக் பாடி, பிர்தயேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்களை கொண்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் விற்பனை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது.
      


    கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், இதன் விற்பனை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. அதன்படி ஜெர்மனியில் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் மே 22 ஆம் தேதி வோடபோன் ஜெர்மனி மூலம் விற்பனைக்கு வரு தாக கூறப்படுகிறது. 

    புதிய ஸ்மார்ட்போனிற்கான அறிமுக நிகழ்வு இதே தேதியில் நடைபெறுமா அல்லது முன்கூட்டியே நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. மே 12 முதல் 14 ஆம் தேதி வரை கூகுள் நிறுவனத்தின் ஐஒ டெவலப்பர் நிகழ்வு நடைபெற இருக்கிறது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் இந்த தேதிகளில் அறிமுகமாகலாம் என்றும் கூறப்படுகிறது.

    வோடபோன் ஜெர்மனி வலைதள தரவுகளின் படி பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் விற்பனை மே 22 முதல் துவங்கும் என கூறப்படுகிறது. ஜெர்மனியில் மே 22 ஆம் தேதி விற்பனைக்கு வரும் பட்சத்தில் அமெரிக்காவிலும் இதே தேதியில் பிக்சல் 4ஏ விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

    பிக்சல் 4ஏ லீக்

    முன்னதாக பிக்சல் 4 ஸ்மார்ட்போன் அக்டோபர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு பின் அக்டோபர் 24 ஆம் தேதி விற்பனை துவங்கியது. அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் மே 12 ஆம் தேதி அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.

    பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. சிறப்பம்சங்களை பொருத்த வரை பிக்சல் 4ஏ 5.81 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ், குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    புகைப்படங்களை எடுக்க 12.2 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 3080 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்படலாம்.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு 2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் 64 எம்பி பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் ஃப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ள நிலையில், தற்சமயம் கேலக்ஸி ஃபோல்டு 2 மாடலின் மீதான எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. 

    அந்த வகையில், இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய கேலக்ஸி ஃபோல்டு 2 தோற்றத்தில் முந்தைய மாடல் போன்று காட்சியளிக்கும் என்றும் இதில் சற்றே பெரிய திரை வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதுதவிர புதிய கேலக்ஸி ஃபோல்டு 2 மாடலின் கேமரா சென்சார்களும் மேம்படுத்தப்பட்டு இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

    கேலக்ஸி ஃபோல்டு

    அதன்படி கேலக்ஸி ஃபோல்டு 2 மாடலில் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் பிரைமரி சென்சார் 16 எம்பியில் இருந்து 64 எம்பி ஆக மாற்றப்படுகிறது. இத்துடன் 12 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் இவற்றில் டூயல் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் வசதி இருக்கும் என தெரிகிறது.

    சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு 2 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் கேலக்ஸி ஃபோல்டு 2 மாடல் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என இருவித மெமரி வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

    மேலும் கேலக்ஸி ஃபோல்டு 2 மாடலின் இரண்டாவது திரை சற்றே பெரியதாக இருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் நான்கு கேமரா செட்டப் கொண்டிருக்கும் என கூறப்பட்டு இருந்தது. தற்போதைய தகவல் இதனை முற்றிலும் மறுக்கும் விதத்தில் அமைந்து இருக்கிறது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    சாம்சங் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு தனது முதல் ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதனை சாம்சங் கேலக்ஸி ஜெ2 கோர் எனும் பெயரில் வெளியிட்டது. தற்சமயம் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பின் சாம்சங் கேலக்ஸி ஜெ2 கோர் 2020 எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய சாம்சங் கேலக்ஸி ஜெ2 கோர் 2020 ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் QHD TFT டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சாம்சங்கின் எக்சைனோஸ் 7570 குவாட்கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர 1 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. முந்தைய கேலக்ஸி ஜெ2 கோர் மாடலில் வெறும் 8 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி ஜெ2 கோர் 2020 மாடலில் 8 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, முன்புறம் 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ கோ இயங்குதளம் மற்றும் சாம்சங் ஸ்மார்ட் மேனேஜர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 2600 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    கேலக்ஸி ஜெ2 கோர் 2020

    சாம்சங் கேலக்ஸி ஜெ2 கோர் 2020 சிறப்பம்சங்கள்

    - 5.0 இன்ச் 540x960 பிக்சல் qHD PLS TFT டிஸ்ப்ளே
    - குவாட்கோர் எக்சைனோஸ் 7570 14nm பிராசஸர்
    - மாலி-T720 MP1 GPU
    - 1 ஜிபி ரேம்
    - 16 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்)
    - டூயல் சிம்
    - 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்
    - 2600 எம்ஏஹெச் பேட்டரி
    - மைக்ரோ யுஎஸ்பி

    சாம்சங் கேலக்ஸி ஜெ2 கோர் 2020 மாடல் புளூ, பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6299 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஊரடங்கு முடிந்ததும் துவங்கும் என தெரிகிறது.
    ஹெச்டிசி நிறுவனத்தின் புதிய மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் சீன வலைதளத்தில் லீக் ஆகியிருக்கிறது.



    ஹெச்டிசி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பயேமோ எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் ஹெச்டிசி டிசையர் 20 ப்ரோ எனும் பெயரில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போனின் பின்புற தோற்றம் பார்க்க சியோமி எம்ஐ10 போன்றே காட்சியளிக்கிறது. சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போன் சீன வலைதளத்தில் லீக் ஆகியிருக்கிறது. எம்10 மாடலில் உள்ளதை போன்றே இதன் பின்புறம் கேமரா மாட்யூல் இடதுபுறத்தில் பொருத்தப்படுகிறது.

    புதிய ஹெச்டிசி ஸ்மார்ட்போனின் முன்புறம் பார்க்க ஒன்பிளஸ் 8 போன்று காட்சியளிக்கும் என்றும் இதில் ஒற்றை பன்ச் ஹோல் கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஹெச்டிசி டிசையர் 20 ப்ரோ மாடலில் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் வழங்கப்படுவதாக தெரிகிறது.

    ஹெச்டிசி போன்

    கீக்பென்ச் வலைதள தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் மிட் ரேஞ்ச் மாடல்களை போன்ற புள்ளிகளை பெற்று இருக்கிறது. அந்த வகையில் இதன் விலை ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புள்ளிகளை வைத்து பார்க்கும் போது, இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 அல்லது சாம்சங் எக்சைனோஸ் 9611 பிராசஸர் வழங்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

    எனினும், இதில் குவால்காம் பிராசஸர் வழங்கப்படுவது பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. அந்த வகையில் இந்த மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 அல்லது அதற்கு இணையான பிராசஸர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புதிய ஹெச்டிசி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 700 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படலாம்.
    இந்திய சந்தையில் வெளியான இரண்டு மாதங்களுக்குள் அந்த ஸ்மார்ட்போன் மாடலின் விலையில் ரூ. 4 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது.



    இந்தியாவில் ஐகூ பிராண்டு தனது முதல் ஸ்மார்ட்போனாக ஐகூ 3 மாடலை 4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்களில் வெளியிட்டது. இந்தயாவில் இதன் விலை ரூ. 36,990 முதல் துவங்கியது. பின் ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக ஐகூ விலை உயர்த்தப்பட்டு ரூ. 38,990 ஆக மாற்றப்பட்டது.

    தற்சமயம் ஐகூ 3 4ஜி 8ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 34,990 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ. 34,990 என மாற்றப்பட்டுள்ளது. இதேபோன்று ஐகூ 3 5ஜி 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 44,990 என மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் ஐகூ 3 சீரிஸ் மாடல்களின் விலை ரூ. 4 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது.

    குறைக்கப்பட்ட புதிய விலை ஐகூ பிராண்டின் இ-ஸ்டோரில் மாற்றப்பட்டுள்ளது. எனினும், தற்சமயம் அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்பதால், இதனை தற்சமயம் வாங்க முடியும். ஊரடங்கு நிறைவுற்றதும், மாற்றப்பட்ட விலை ப்ளிப்கார்ட் தளத்திலும் அப்டேட் செய்யப்படலாம்.

    ஐகூ 3

    ஐகூ 3 / ஐகூ 3 5ஜி சிறப்பம்சங்கள்:

    - 6.44 இன்ச் 2400x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 20:9 E3 சூப்பர் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
    - அட்ரினோ 650 GPU
    - 8 ஜி.பி. LPDDR5 ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. (UFS 3.1) மெமரி 
    - 12 ஜி.பி. LPDDR5 ரேம், 256 ஜி.பி. (UFS 3.1) மெமரி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஐகூ யு.ஐ. 1.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.79, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
    - 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.46
    - 13 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.45
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4440 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 55 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ்

    ஐகூ 3 மற்றும் ஐகூ 3 5ஜி ஸ்மார்ட்போன்கள் வொல்கானோ ஆரஞ்சு, குவாண்டம் சில்வர், டொர்னாடோ பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான லிமிட்டெட் எடிஷன் பாப்-அப் பாக்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
      


    ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. இந்நிலையில், புதிய ஸ்மார்ட்போன்களுக்கான லிமிட்டெட் எடிஷன் பாப்-அப் பாக்ஸ் தற்சமயம் ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

    புதிய ஒன்பிளஸ் 8 லிமிட்டெட் எடிஷன் பாப் அப் பாக்ஸ் விலை ரூ. 45,999 என்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ லிமிட்டெட் எடிஷன் பாப் அப் பாக்ஸ் விலை ரூ. 60,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. லிமிட்டெட் எடிஷன் பாப்-அப் பாக்ஸ் பெட்டியில் ஸ்மார்ட்போனுடன் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட் (பிளாக்) மற்றும் கேஸ்கள் வழங்கப்படுகின்றன. 

    ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஆண்டு பாப்-அப் நிகழ்வுகளை நடத்தவில்லை என்பதால், ஸ்மார்ட்போனிற்கான அக்சஸரீக்களை தள்ளுபடி விலையில் வாங்க விரும்புவோருக்கு இது பயனுள்ளதாகவும், பாப் அப் நிகழ்வுக்கு மாற்றாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் 8 சீரிஸ் லிமிட்டெட் எடிஷன் பாப் அப் பாக்ஸ்

    ஒன்பிளஸ் 8 பாப் அப் பாக்ஸ் - ஒன்பிளஸ் 8 (8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி) மாடல் ஆனிக்ஸ் பிளாக் அல்லது கிளேசியல் கிரீன் நிறங்களில் ஒன்று, புல்லட்ஸ் வயர்லெஸ் இசட் (பிளாக்), சியான் பம்ப்பர் கேஸ் மற்றும் நைலான் பம்ப்பர் கேஸ் உள்ளிட்டவை ரூ. 45,999 விலையில் வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் 8 ப்ரோ பாப் அப் பாக்ஸ் - ஒன்பிளஸ் 8 ப்ரோ (12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி) மாடல் ஆனிக்ஸ் பிளாக் அல்லது கிளேசியல் கிரீன் நிறங்களில் ஒன்று, புல்லட்ஸ் வயர்லெஸ் இசட் (பிளாக்), சியான் பம்ப்பர் கேஸ் மற்றும் நைலான் பம்ப்பர் கேஸ் உள்ளிட்டவை ரூ. 60,999 விலையில் வழங்கப்படுகிறது.

    புதிய ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அமேசான், ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் மே மாதம் முதல் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. அந்த வகையில் லிமிட்டெட் எடிஷன் பாப் அப் பாக்ஸ் விற்பனையும் விரைவில் துவங்கும் என தெரிகிறது.
    மோட்டோரோலா நிறுவன்தின் மோட்டோரோலா எட்ஜ் மற்றும் எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.



    மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி மோட்டோரோலா எட்ஜ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. மோட்டோரோலா எட்ஜ் மற்றும் எட்ஜ் பிலஸ் 5ஜி ஸ்மா்ர்ட்போன் என இரு மாடல்கள் அறிமுகமாகி இருக்கின்றன. 

    இரு ஸ்மார்ட்போன்களிலும் 6.7 இன்ச் FHD+ OLED 21:9 எண்லெஸ் எட்ஜ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. எட்ஜ் மாடலில் ஸ்னாப்டிராகன் 765 ஜி பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. எட்ஜ் பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இரு மாடல்களிலும் 5ஜி வசதி வழங்கப்பட்டுள்ளது.

    மோட்டோரோலா எட்ஜ் பிளஸ்

    மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் சிறப்பம்சங்கள்

    - 6.7 இன்ச் 2520x1080 பிக்சல் FHD+ AMOLED ஹெச்டிஆர்10 பிளஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
    - அட்ரினோ 650 GPU
    - 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
    - டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 10
    - 108 எம்பி பிரைமரி கேமரா, F/1.8,  0.8μm, OIS, லேசர் ஆட்டோஃபோக்கஸ்
    - 16 எம்பி 117° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.4
    - 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், OIS
    - 25 எம்பி செல்ஃபி கேமரா
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - யுஎஸ்பி டைப்-சி ஆடியோ
    -ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப்-சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 5வாட் ரிவர்ஸ் சார்ஜிங்

    மோட்டோரோலா எட்ஜ்

    மோட்டோரோலா எட்ஜ் சிறப்பம்சங்கள்

    - 6.7 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ AMOLED ஹெச்டிஆர்10 பிளஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765 ஜி பிராசஸர்
    - அட்ரினோ 620 GPU
    - 4 ஜிபி / 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
    - டூயல் சிம்
    - ஆண்ட்ராய்டு 10
    - 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9, லேசர் ஆட்டோஃபோக்கஸ்
    - 16 எம்பி 117° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2
    - 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
    - 25 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப்-சி
    - 4500 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் தன்டர் கிரே மற்றும் ஸ்மோக்கி சங்கிரா நிறங்களில் கிடைக்கிறது. அமெரிக்காவில் இதன் விலை 999.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 76,445 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    மோட்டோரோலா எட்ஜ் ஸ்மார்ட்போன் சோலார் பிளாக் மற்றும் மிட்நைட் மஜெந்தா நிறுங்களில் கிடைக்கிறது. இதன் விலை 699 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 57,810 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    நுபியா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் நான்கு பிரைமரி கேமராக்கள், 5100 எம்ஏஹெச் பேட்டரியுடன் புதிய மிட்-ரேஞ்ச் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    இசட்டிஇ நிறுவனத்தின் நுபியா பிராண்டு தனது நுபியா பிளே ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனில் 6.65 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், லிக்விட் கூலிங் டியூப் மற்றும் ஸ்மார்ட்போன் வெப்பத்தை குறைக்கும் உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2  எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 12 எம்பி சென்சார் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பான கேமிங் அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் டச் கேம் ட்ரிகர் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    நுபியா பிளே

    நுபியா பிளே சிறப்பம்சங்கள்:

    - 6.65 இன்ச் 1080x2340 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
    - அட்ரினோ 620 GPU
    - 6 ஜிபி / 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
    - 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் நுபியா யுஐ 8.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்பி பிரைமரி கேமரா,  0.8μm, f/1.75, எல்இடி ஃபிளாஷ்
    - 8 எம்பி 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
    - 2 எம்பி மேக்ரோ
    - 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4
    - 12 எம்பி செல்ஃபி கேமரா
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - யுஎஸ்பி டைப் சி ஆடியோ, டிடிஎஸ்
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 5100 எம்ஏஹெச் பேட்டரி
    - 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    நுபியா பிளே ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் இதன் விலை 2399 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 26,095 முதல் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை 2999 யுவான், இந்திய திப்பில் ரூ. 32,535 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    ஒப்போ நிறுவனத்தின் புதிய ஏ52 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் நான்கு பிரைமரி கேமராக்கள், 8 ஜிபி ரேம், 5000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.



    ஒப்போ நிறுவனம் சத்தமில்லாமல் தனது புதிய ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD+ எல்சிடி டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் செல்ஃபி கேமரா, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 8 ஜிபி ரேம், கலர் ஒஎஸ் 7.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 3டி கிளாஸ் பேக் கொண்டிருக்கும் ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது.  

    ஒப்போ ஏ52

    ஒப்போ ஏ52 சிறப்பம்சங்கள்

    - 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
    -அட்ரினோ 610 GPU
    - 8 ஜிபி LPDDR4x ரேம்
    - 128 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம்
    - கலர் ஒஎஸ் 7.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
    - 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, PDAF, எல்இடி ஃபிளாஷ்
    - 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
    - 2 எம்பி டெப்த் சென்சார்
    - 2 எம்பி மேக்ரோ சென்சார், 1.75μm, f/2.4
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் புளு மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் இதன் விலை 1599 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 17,325 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×