என் மலர்
மொபைல்ஸ்
ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய விற்பனை தேதி அறிவிக்கப்பட்டது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற ஆன்லைன் நிகழ்வில் அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்சமயம் இவற்றின் இந்திய விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மே 29 ஆம் தேதி அமேசான் மற்றும் விற்பனை மையங்களில் விற்பனைக்கு வருகிறது. இதனை ஒன்பிளஸ் தனது ரெட் கேபிள் கிளபில் அறிவித்துள்ளது. இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 8 சீரிஸ் விலை ரூ. 41,999 துவங்கி டாப் எண்ட் ஒன்பிளஸ் 8 ப்ரோ விலை ரூ. 59,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 8 சிறப்பம்சங்கள்:
- 6.55 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 402 ppi 20:9 ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே
- 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
- 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 3.0 மெமரி
- 12 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி UFS 3.0 மெமரி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.0
- டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.75, OIS + EIS
- 16 எம்பி 116° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4, 4K வீடியோ
- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.45, EIS
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யுஎஸ்பி டைப் சி, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப் சி
- 4300 எம்ஏஹெச் பேட்டபி
- ராப் சார்ஜ் 30T ஃபாஸ்ட் சார்ஜிங்

ஒன்பிளஸ் 8 ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 6.78 இன்ச் 3168x1440 பிக்சல் குவாட் HD+ 120 ஹெர்ட்ஸ் 19.8:9 ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே
- 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
- 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி UFS 3.0 மெமரி
- 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி UFS 3.0 மெமரி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.0
- டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.78, OIS + EIS
- 48 எம்பி 119.7° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 8 எம்பி டெலிபோட்டோ கேமரா, f/2.44, OIS
- 5 எம்பி கலர் ஃபில்ட்டர் கேமரா, f/2.4
- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.45, EIS
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யுஎஸ்பி டைப் சி, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப் சி
- 4510 எம்ஏஹெச் பேட்டபி
- ராப் சார்ஜ் 30T ஃபாஸ்ட் சார்ஜிங்
- 30 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2020 மாடலின் இந்திய விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2020 கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 42,500 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சில தினங்களுக்கு முன் ஹெச்டிஎஃப்சி வங்கி கார்டுகளுக்கு ரூ. 3600 கேஷ்பேக் அறிவிக்கப்பட்டது.
தற்சமயம் இந்தியாவில் ஐபோன் எஸ்இ 2020 மே 20 தேதி மதியம் 12 மணி முதல் விற்பனை செய்யப்படும் என ப்ளிப்கார்ட் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆப்பிள் விநியோகஸ்தரான ரெடிங்டன் புதிய ஐபோன் நாடு முழுக்க சுமார் 3500-க்கும் மேற்பட்ட விற்பனை மையங்களில் கிடைக்கும் என தெரிவித்திருந்தது.

அந்த வகையில் ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்களும் இதே தேதியில் புதிய ஐபோன் விற்பனையை துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஐபோன் எஸ்இ மாடலில் 4.7 இன்ச் ஹெச்டி ரெட்டினா ஸ்கிரீன், ஹாப்டிக் டச், டச் ஐடி கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஐபோன் 11 மாடலில் வழங்கப்பட்டு இருந்த ஏ13 பயோனிக் சிப்செட் புதிய ஐபோன் எஸ்இ மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.
கிளாஸ் மற்றும் அலுமினியம் டிசைன் கொண்டிருக்கும் புதிய ஐபோன் எஸ்இ மாடலில் புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 7 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி திறன் பற்றி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இது ஐபோன் 8 மாடல் வழங்கும் அளவிலான பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
64 எம்பி குவாட் கேமரா, 4700 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட போக்கோ எஃப்2 ப்ரோ ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
போக்கோ பிராண்டு சர்வதேச சந்தையில் ஃபிளாக்ஷிப் போக்கோ எஃப்2 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் இ3 சூப்பர் AMOLED ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5ஜி SA/NSA, ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 மோடெம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்பி டெலி மேக்ரோ லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 20 எம்பி பாப்-அப் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதிலுள்ள பில்ட் இன் எல்இடி 5 நிறங்களை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.

போக்கோ எஃப்2 ப்ரோ சிறப்பம்சங்கள்
- 6.67 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ E3 AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 3.1 மெமரி
- 8 ஜிபி LPPDDR5 ரேம், 256 ஜிபி UFS 3.1 மெமரி
- டூயல் சிம்
- MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- 64 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.69
- 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
- 2 எம்பி டெப்த் லென்ஸ், 1.75 μm
- 5 எம்பி மேக்ரோ லென்ஸ்
- 20 எம்பி செல்ஃபி கேமரா
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
- 5ஜி SA/NSA டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 4700 எம்ஏஹெச் பேட்டரி
- 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
போக்கோ எஃப்2 ப்ரோ ஸ்மார்ட்போன் நியான் புளூ, ஃபோண்டம் வைட், எலெக்ட்ரிக் பர்ப்பிள் மற்றும் சைபர் கிரே நிறங்களில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் இதன் 6 ஜிபி, 128 ஜிபி மாடல் விலை 499 யூரோ, இந்திய மதிப்பில் ரூ. 40,740 என்றும், 8 ஜிபி, 256 ஜிபி மாடல் விலை 599 யூரோ, இந்திய மதிப்பில் ரூ. 48,870 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹூவாயின் ஹானர் பிராண்டு இந்திய சந்தையில் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஹூவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் FHD+ நோ-நாட்ச் எல்சிடி ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கிரின் 810 பிராசஸர், 6 ஜிபி ரேம், லிக்விட் கூலிங் தொழில்நுட்பம், ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த EMIUI 9.1, ஹூவாய் மொபைல் சர்வீசஸ், ஹூவாய் ஆப்கேலரி ஆப் வழங்கப்பட்டுள்ளது.
கூகுள் சேவைகள் இல்லாததால், ஹானர் 9எக்ஸ் ப்ரோ மாடலில் ஹூவாய் பிரவுசர், ஹூவாய் கிளவுட், ஹூவாய் வீடியோ, ஹூவாய் மியூசிக், ஹூவாய் தீம்ஸ் மற்றும் இதர செயலிகள் வழங்கப்பட்டுள்ளன. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 16 எம்பி பாப்-அப் செல்ஃபி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

ஹானர் 9எக்ஸ் ப்ரோ சிறப்பம்சங்கள்
- 6.59 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ 19.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் கிரின் 810 பிராசஸர்
- ARM மாலி-G52 MP6 GPU
- 6 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் EMUI 9.1.1, HMS
- டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 1/2″ சென்சார், 0.8μm, f/1.8
- 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், f/2.4
- 2 எம்பி டெப்த் கேமரா, f/2.4
- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப்-சி
- 4000 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் ஃபாண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுவதால், முதல் விற்பனையின் போது ஹானர் 9எக்ஸ் ப்ரோ ரூ. 14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை மே 21 மற்றும் மே 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2020 மாடலுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் தனது விலை குறைந்த ஐபோன் மாடலை ரூ. 42,500 விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. மற்ற ஆப்பிள் சாதனங்களை விட இதன் விலை குறைவு தான். எனினும், இதன் விலை மீண்டும் குறைந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி புதிய ஐபோன் மாடலுக்கு கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. புதிய சலுகையின் படி வாடிக்கையாளர்கள் ஐபோன் எஸ்இ மாடலை ரூ. 38,900 விலையில் வாங்கிட முடியும். ஹெச்டிஎஃப்சி கார்டு வைத்திருப்போர் இச்சலுகையை பெறலாம்.

அதன்படி ஹெச்டிஎஃப்சி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்துவோர் புதிய ஐபோன் எஸ்இ மாடலை வாங்கும் போது ரூ. 3600 வரை கேஷ்பேக் பெறலாம். அதன்படி ரூ. 42,500 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஐபோன் எஸ்இ 64 ஜிபி பேஸ் வேரியண்ட்டை வாடிக்கையாளர்கள் ரூ. 38,900 விலையில் வாங்கிட முடியும்.
இந்தியாவில் இன்னும் ஐபோன் எஸ்இ விற்பனை துவங்கப்படவில்லை. எனினும், ப்ளிப்கார்ட் தளத்தில் இதன் விற்பனையை உணர்த்தும் வகையில் டீசர் வெளியிடப்பட்டது. அந்த வகையில் இதன் விற்பனை விரைவில் துவங்கும் என தெரிகிறது.
ரியல்மியின் நார்சோ பிராண்டு ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ. 8499 துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரியல்மி பிராண்டின் புதிய நார்சோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. அதன்படி நார்சோ 10 மற்றும் நார்சோ 10ஏ என இரு ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகமாகி இருக்கின்றன. ரியல்மி நார்சோ 10 மாடலில் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரியும், ரியல்மி 10ஏ மாடலில் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரியும் வழங்கப்பட்டுள்ளது.
ரியல்மி 10 சீரிஸ் மாடல்களில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, ஹெச்டி ரெசல்யூஷன், மினி டிராப் நாட்ச் வழங்கப்பட்டுள்ளது. நார்சோ 10 மாடலில் 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, நார்சோ 10ஏ மாடலில் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டுள்ளது. ரியல்மி 10 மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், தட் வைட், தட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது.
நார்சோ 10ஏ மாடல் ஹீலியோ ஜி70 பிராசஸர் சோ வைட், மற்றும் சோ புளூ நிறங்களில் கிடைக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 10 சார்ந்து இயங்கும் ரியல்மி யுஐ வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க நார்சோ 10 மாடலில் 48 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி அல்ட்ராவைடு லென்ஸ், 2 எம்பி பிளாக் அண்ட் வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
நார்சோ 10ஏ மாடலில் 12 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரு சாதனங்களிலும் 1080 பிக்சல் வீடியோக்களை படமாக்கும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது.
ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. நார்சோ 10ஏ மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி, ஒடிஜி ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 2 நானோ சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார், ஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத் 5, கைரோமீட்டர் மற்றும் இதர சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.
4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 10 விலை ரூ. 11,999 என்றும், 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்ட நார்சோ 10ஏ ஸ்மார்ட்போன் விலை ரூ. 8499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நார்சோ 10 ஸ்மார்ட்போன் விற்பனை மே 18 ஆம் தேதியும், நார்சோ 10ஏ விற்பனை மே 22 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இவை ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போனின் ப்ரோமோ வீடியோ இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் ப்ரோமோ வீடியோ இணையத்தில் லீக் ஆகியுள்ளது. ப்ரோமோ வீடியோவில் லைவ் கேமரா அம்சம் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் நேரலை வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர முடியும்.
முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. இது கேலக்ஸி ஏ21 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.

இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின்படி கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 13 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி , எக்சைனோஸ் 850 பிராசஸர், கைரேகை சென்சார், என்எஃப்சி, ப்ளூடூத் 5 மற்றும் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்டவை வழங்கப்படலாம்.
பாப் அப் கேமரா, கிரின் 810 பிராசஸர் கொண்ட ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
ஹூவாயின் ஹானர் பிராண்டு ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்துவிட்டது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் FHD பிளஸ் நோ-நாட்ச் எல்சிடி டிஸ்ப்ளே, கிரின் 810 பிராசஸர், 6 ஜிபி ரேம், NINE லிக்விட் கூலிங் வசதி வழங்கப்படுகிறது. இதில் ஆண்ட்ராய்டு பை சார்ந்த EMUI 9.1 ஹூவாய் மொபைல் சர்வீசஸ் சேவையுடன் வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார், 16 எம்பி பாப் அப் செல்பி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

ஹானர் 9எக்ஸ் ப்ரோ சிறப்பம்சங்கள்
- 6.59 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் கிரின் 810 பிராசஸர்
- ARM மாலி MP6 GPU
- 6 ஜிபி ரேம்
- 256 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் EMUI, HMS
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
- 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், f/2.4
- 2 எம்பி டெப்த் கேமரா, f/2.4
- 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 4000 எம்ஏஹெச் பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
இந்தியாவில் புதிய ஹானர் 9எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.15 ஆயிரத்தில் துவங்கி ரூ. 20 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய ஹானர் ஸ்மார்ட்போனில் கூகுள் பிளே சர்வீஸ் மற்றும் பிளே ஸ்டோருக்கு மாற்றாக ஹூவாய் ஆப் கேலரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ரியல்மி பிராண்டின் புதிய நார்சோ 10 சீரிஸ் ஸ்மார்ட்போனின் புதிய இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரியல்மி நார்சோ 10 மற்றும் நார்சோ 10ஏ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மே 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுக நிகழ்வு யூடியூபில் நேரலை செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கிறது.
தற்போதைய காலக்கட்டத்தில் இந்த ஸ்மார்ட்போன் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் வசிப்போர் வாங்க முடியும். இந்தியாவில் ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10 ஆயிரத்தில் துவங்கி ரூ.15 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய நார்சோ சீரிஸ் அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என்றும் இது ஜெனரேஷன் இசட் பிரிவுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வருவதாக ரியல்மி தெரிவித்துள்ளது. ஏற்கனவே ரியல்மி பிராண்டு ப்ரோ சீரிஸ், எக்ஸ் சீரிஸ், சி சீரிஸ், யு சீரிஸ் உள்ளிட்டவற்றில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது.
இதுவரை ஆங்கில எழுத்துக்களை தழிவியே ஸ்மார்ட்போன் சீரிஸ் இருந்து வரும் நிலையில், புதிய சீரிஸ் பெயர் வித்தியாசமாக இருக்கிறது. தற்போதைய டீசர்களின் படி புதிய ஸ்மார்ட்போன்கள் வெவ்வேறு நிறங்களில் வெளியாகும் என தெரிகிறது.
எல்ஜி நிறுவனத்தின் வெல்வெட் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எல்ஜி நிறுவனத்தின் புதிய வெல்வெட் சீரிஸ் ஸ்மார்ட்போன் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தென் கொரிய சந்தையில் அறிமுகமாகி இருக்கும் எல்ஜி வெல்வெட் மே 15 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மே 8 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் சினிமா ஃபுல்விஷன் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி ஆக்டாகோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
முன்புறம் 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. புதிய எல்ஜி ஸ்மார்ட்போன் 4300 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

எல்ஜி வெல்வெட் சிறப்பம்சங்கள்
- 6.8 இன்ச் சினிமா ஃபுல் விஷன் டிஸ்ப்ளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி ஆக்டாகோர் பிராசஸர்
- அட்ரினோ 620 GPU
- 8 ஜிபி ரேம்
- 128 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 48 எம்பி பிரைமரி கேமரா
- 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா
- 5 எம்பி டெப்த் சென்சார்
- ஆண்ட்ராய்டு 10
- டூயல் சிம்
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை
- யுஎஸ்பி டைப்-சி
- 4300 எம்ஏஹெச் பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்
எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அரோரா வைட், அரோரா கிரே, அரோரா கிரீன் மற்றும் இல்யூஷன் சன்செட் நிறங்களில் கிடைக்கிறது. தென் கொரியாவில் இதன் விலை 899,800 வொன், இந்திய மதிப்பில் ரூ. 55,780 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, பக்கவாட்டில் பாப் அப் கேமரா கொண்ட கேமிங் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
லெனோவோ நிறுவனத்தின் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய கேமிங் ஸ்மார்ட்போன் லீஜியன் பிராண்டிங்கின் கீழ் வெளியாக இருக்கிறது.
இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், கேமிங் சார்ந்த பிரச்சனையை தீர்க்க இரண்டு அம்சங்கள் வழங்கப்படுகிறது. இவை ஸ்மார்ட்போனின் இருபுறங்களில் ஏற்படும் வெப்பநிலையை சரிசெய்ய உதவும் என கூறப்படுகிறது.
கேமிங்கின் போது சார்ஜிங் வேகம் குறைக்கப்பட்டு இருப்பதாக லெனோவோ தெரிவித்துள்ளது. புதிய கேமிங் ஸ்மார்ட்போனில் 90 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் இரண்டாவது யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

பயனர்கள் கேமிங்கின் போதும் சுலபமாக சார்ஜ் செய்யவே இரண்டாவது சார்ஜிங் போர்ட் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் கேம் பேட்கள் மற்றும் வயர்லெஸ் இயர்பட்ஸ் உள்ளிட்டவற்றை லெனோவோ அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட்போனுடன் ப்ரோடெக்டிவ் கேஸ் ஒன்றும் வழங்கப்படலாம்.
லெனோவோ லீஜியன் ஸ்மார்ட்போனை 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 30 நிமிடங்களே போதுமானதாக இருக்கும் என லெனோவோ தெரிவித்துள்ளது. இதில் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம். இதன் பாப்-அப் கேமரா மாட்யூல் ஸ்மார்ட்போனின் வலது புறத்தில் காணப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
சியோமி நிறுவனம் தனது Mi 10 5ஜி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் மே 8 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெற இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 31 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சியோமி Mi 10 5ஜி ஸ்மார்ட்போன் சீன சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் Mi 10 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக 108 எம்.பி. கேமரா இருக்கிறது.
இதுதவிர Mi 10 ஸ்மார்ட்போனில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு இருக்கும் நிலையில், சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 27-ம் தேதி அறிமுகமாக இருக்கிறது.

சியோமி Mi 10 சிறப்பம்சங்கள்:
- 6.67 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ AMOLED 19.5:9 HDR10 + 90Hz டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 8 ஜி.பி. LPPDDR5 ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. UFS 3.0 மெமரி
- 12 ஜி.பி. LPPDDR5 ரேம், 256 ஜி.பி. / 512 ஜி.பி. UFS 3.0 மெமரி
- டூயல் சிம்
- MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- 108 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm, f/1.69, OIS, 8P லென்ஸ் எல்.இ.டி. ஃபிளாஷ்
- 12 எம்.பி. 1/2.6-இன்ச் 2PD சென்சார், 1.4um
- 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், OIS
- 20 எம்.பி. 117° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
- 20 எம்.பி. செல்ஃபி கேமரா
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 5ஜி SA/NSA டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- 4780 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் QC 4+ / PD3.0 வயர் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 10 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்






