என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஐபோன் எஸ்இ
    X
    ஐபோன் எஸ்இ

    4.7 இன்ச் ஹெச்டி ரெட்டினா டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் எஸ்இ அறிமுகம்

    ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் எஸ்இ மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் இந்திய விலை விவரங்களை பார்ப்போம்.



    ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் எஸ்இ மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஐபோன் எஸ்இ 2016 ஆம் ஆண்டு ஆப்பிள் வெளியிட்ட ஐபோன் எஸ்இ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். 

    புதிய ஐபோன் எஸ்இ மாடலில் 4.7 இன்ச் ஹெச்டி ரெட்டினா ஸ்கிரீன், ஹாப்டிக் டச், டச் ஐடி கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஐபோன் 11 மாடலில் வழங்கப்பட்டு இருந்த ஏ13 பயோனிக் சிப்செட் புதிய ஐபோன் எஸ்இ மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.

    கிளாஸ் மற்றும் அலுமினியம் டிசைன் கொண்டிருக்கும் புதிய ஐபோன் எஸ்இ மாடலில் புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 7 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி திறன் பற்றி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இது ஐபோன் 8 மாடல் வழங்கும் அளவிலான பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐபோன் எஸ்இ

    ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020 சிறப்பம்சங்கள்

    - 4.7 இன்ச் 1334x750 பிக்சல் IPS 326 ppi டிஸ்ப்ளே
    - ஏ13 பயோனிக் பிராசஸர்
    - 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்
    - ஐஓஎஸ் 13
    - டூயல் சிம்
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP67)
    - 12 எம்பி வைடு ஆங்கில் கேமரா, f/1.8, OIS, ட்ரூ டோன் ஃபிளாஷ்
    - 7 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - டச் ஐடி கைரேகை சென்சார்
    - பில்ட் இன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்
    - ஜிகாபிட் தர 4ஜி எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத் 5
    - லித்தியம் அயன் பேட்டரி
    - கியூஐ வயர்லெஸ் சார்ஜிங்
    - 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020 மாடல் பிளாக், வைட் மற்றும் பிராடக்ட் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 64 ஜிபி மாடல் ரூ. 42,500, 128 ஜிபி ரூ. 47,800 மற்றும் 256 ஜிபி ரூ. 58,300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
    Next Story
    ×