search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    நோக்கியா 5.3
    X
    நோக்கியா 5.3

    இந்திய வலைதளத்தில் நோக்கியா 5.3 மற்றும் நோக்கியா 5310

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 5.3 மற்றும் நோக்கியா 5310 மொபைல் போன் மாடல் இந்திய வலைதளத்தில் பட்டியலிடப்பட்டது.



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. நோக்கியா 8.3 5ஜி, நோக்கியா 5.3, நோக்கியா 1.3 மற்றும் நோக்கியா 5310 கிளாசிக் உள்ளிட்டவற்றை ஹெச்.எம்.டி. குளோபல் அறிமுகம் செய்தது. எனினும், இவற்றில் இரு மாடல்களை மட்டும் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது.

    அந்த வகையில் நோக்கியா 5.3 மற்றும் நோக்கியா 5310 மாடல்கள் நோக்கியா இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டது. நோக்கியா 5.3 5ஜி மற்றும் நோக்கியா 1.3 உள்ளிட்டவை எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போன் விலை இந்திய மதிப்பில் ரூ. 47794 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில் ஐகூ 3 மற்றும் ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி உள்ளிட்ட மாடல்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்த வாய்ப்புகள் குறைவே. இதனால் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் கடும் போட்டியை ஏற்படுத்தும் விலையில் அறிமுககம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    நோக்கியா 5310

    இத்துடன் நோக்கியா 5310 மொபைலையும் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 3 ஜி.பி. + 64 ஜி.பி., 4 ஜி.பி. + 64 ஜி.பி. மற்றும் 6 ஜி.பி. + 64 ஜி.பி. என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 2 எம்.பி. மேக்ரோ சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் நோக்கியா 5.3 விலை 189 யூரோக்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 15,000 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    Next Story
    ×