search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒன்பிளஸ் 7டி ப்ரோ
    X
    ஒன்பிளஸ் 7டி ப்ரோ

    இணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் 8 ப்ரோ விவரங்கள்

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் பிரஸ் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. இதில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகியுள்ளது.



    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு விரைவில் நடைபெற இருக்கிறது. வரும் வாரங்களில் இந்த ஆண்டிற்கான ஸ்மார்ட்போன் மாடல்களை ஒன்பிளஸ் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த வகையில் இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 மாடல்கள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதே நிகழ்வில் ஒன்பிளஸ் 8 லைட் மாடலும் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    எனினும், ஒன்பிளஸ் 8 ப்ரோ ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் புகைப்படங்களும் இணைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஆன்லீக்ஸ் மற்றும் ஐகீக்ஸ் பிளாக் மூலம் வெளியாகி இருக்கும் ரென்டர்களின் படி புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் கேமரா டிஸ்ப்ளேவின் இடதுபுற ஓரத்தில் வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் 8 ப்ரோ லீக்

    இத்துடன் ஸ்மார்ட்போனின் கீழ்புறம் ஸ்பீக்கர் கிரில், பின்புறம் குவாட் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. இவை  ஒன்பிளஸ் 7 டி ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே பொருத்தப்பட்டு இருக்கிறது. நான்கில் மூன்று கேமராக்கள் செங்குத்தாகவும், மற்றொரு கேமரா தனியாகவும், அதன் கீழ் டூயல் டோன் எல்.இ.டி. ஃபிளாஷ் காணப்படுகிறது.

    ஸ்மார்ட்போனின் பின்புறம் புதிய  ஒன்பிளஸ் லோகோ நடுப்புறத்தில் கேமரா சென்சார்களின் கீழ் காணப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் கீழ்புறத்திலும் பிராண்டிங் சேர்க்கப்பட்டு இருக்கிறது. ரென்டர்களில் அலெர்ட் ஸ்லைடர் மற்றும் வல்யூம் ராக்கர் உள்ளிட்டவை ஸ்மார்ட்போனின் இடதுபுறத்தில் காணப்படுகிறது.

    ஸ்மார்ட்போன் கீழ் சிம் டிரே, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் மற்றும் மோனோ ஸ்பீக்கர் கிரில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய  ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5ஜி கனெக்டிவிட்டி, 48 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார், IP86 வாட்டர் ப்ரூஃப் வசதி, 4510 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் வையர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்
    Next Story
    ×