என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ஃப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புதிய நிறத்தில் விற்பனை செய்யப்படுகிறது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ஃப்ளிப் ஸ்மார்ட்போன் மிரர் கோல்டு எனும் புதிய நிறத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி இசட் ஃப்ளிப் இதுவரை மிரர் பிளாக் மற்றும் மிரர் பர்ப்பிள் நிறங்களில் மட்டும் விறப்னை செய்யப்பட்டு வந்தது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டைனமிக் AMOLED 2636x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் இந்த டிஸ்ப்ளேவினை இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் என அழைக்கிறது. இதில் மிக மெல்லிய கிளாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை 200,000 அதிக முறை மடிக்க முடியும்.

    கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனின் வெளி்ப்புறம் 1.1 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே 300x112 ரெசல்யூஷனில் வழங்கப்பட்டுள்ளது. இதன் கவர் டிஸ்ப்ளே மோட்டோரோலா ரேசர் மாடலை போன்றே நோட்டிஃபிகேஷன்களை காண்பிக்கிறது. இதில் பிரத்யேக ஃபிளெக்ஸ் மோட் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன் செயலிகளை பாதியாக பிரித்து, கீழ்புறம் கண்ட்ரோல்கள் கொண்டுள்ளது.

    சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப்

    மற்ற அம்சங்களை பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் ஆக்டா கோர் பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமராக்கள்: 12 எம்.பி. வைடு ஆங்கில் கேமரா, f/1.8, 12 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2 வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 10 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4 வழங்கப்பட்டுள்ளது.

    இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப் ஸ்மார்ட்போன் விலை ரூ. 1,09,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை சாம்சங் மற்றும் அமேசான் வலைதளங்களில் நடைபெறுகிறது. புதிய மிரர் கோல்டு ஃபினிஷ் வேரியண்ட் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 5310 ஃபீச்சர் போன் மற்றும் நோக்கியா 1.3 ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் 5310 ஃபீச்சர் போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 2ஜி ஃபீச்சர் போனில் எம்.பி.3 பிளேயர், எஃப்.எம். ரேடியோ மற்றும் முன்புறம் டூயல் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. தோற்றத்தில் புதிய ஃபீச்சர் போன் நோக்கியாவின் பிரபல 5310 எக்ஸ்பிரஸ் மியூசிக் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

    புதிய ஃபீச்சர் போன் முந்தைய நோக்கியா மாடல்களை போன்றே நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நோக்கியா 5310

    நோக்கியா 5310 சிறப்பம்சங்கள்:

    - 2.4 இன்ச் 320x240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
    - எம்.டி.6260ஏ பிராசஸர்
    - 8 எம்.பி. ரேம்
    - 16 எம்.பி. இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - சிங்கிள் / டூயல் சிம்
    - சீரிஸ் 30+ ஒ.எஸ்.
    - வி.ஜி.ஏ. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - 2ஜி (900/1800), வைபை 802.11 b/g/n, ப்ளூடூத் 3.9, மைக்ரோ யு.எஸ்.பி.
    - 1200 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    நோக்கியா 5310 ஃபீச்சர் போனுடன் நோக்கியா 1.3 ஆண்ட்ராய்டு 10 (கோ எடிஷன்) ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 5.71 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், குவாட் கோர் ஸ்னாப்டிராகன் 215 பிராசஸர், 1 ஜி.பி. ரேம், 8 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா, 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    நோக்கியா 1.3

    நோக்கியா 1.3 சிறப்பம்சங்கள்:

    - 5.7 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே
    - 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 215 பிராசஸர்
    - அட்ரினோ 308 GPU
    - 1 ஜி.பி. ரேம்
    - 16 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 10 (கோ எடிஷன்)
    - சிங்கிள் / டூயல் சிம்
    - 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா
    - 3.5 எம்.எம். ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி.
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    நோக்கியா 1.3 ஸ்மார்ட்போன் சியான், சார்கோல் மற்றும் சேண்ட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 95 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 7575) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அடுத்த மாதம் துவங்குகிறது.

    நோக்கியா 5310 ஃபீச்சர் போன் வைட் மற்றும் ரெட், பிளாக் மற்றும் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 39 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 3,115) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை விரைவில் துவங்குகிறது.

    போக்கோ பிராண்டின் புதிய போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் நான்கு நாட்களுக்கு ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.



    போக்கோ பிராண்டு தனது போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்தது. முன்னதாக ப்ளிப்கார்ட் தளத்தில் ஹெட் ஃபார் ரெட் விற்பனை நடைபெற்ற நிலையில், தற்சமயம் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனை மார்ச் 19 இல் துவங்கி மார்ச் 22 வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    இந்தியாவில் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. + 64 ஜி.பி., 6 ஜி.பி. + 128 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. + 256 ஜி.பி. மெமரி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும் இது மேட்ரிக்ஸ் பர்ப்பிள், அட்லான்டிஸ் புளூ மற்றும் ஃபீனிக்ஸ் ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    போக்கோ எக்ஸ்2 ஓபன் சேல்

    சிறப்பம்சங்களை பொருத்தவரை போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ரியாலிட்டி ஃபுளோ 120 ஹெர்ட்ஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், டூயல் பன்ச் ஹோல் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. சோனி சென்சார், 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. சூப்பர் மேக்ரோ மற்றும் 2 எம்.பி. போர்டிரெயிட் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 20 எம்.பி. கேமரா, 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 3டி வளைந்த ஃபிராஸ்ட்டெட் கிளாஸ் பாடி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 9 பிளஸ் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.



    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 9 மாடல் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வந்தது. அந்த வரிசையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 9 பிளஸ் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    ஐபோன் 9 பிளஸ் மாடல் பற்றிய விவரங்கள் ஐ.ஒ.எஸ்.14 தளத்திற்கான குறியீடுகளில் தெரியவந்துள்ளது. புதிய ஐபோன் 9 மற்றும் ஐபோன் 9 பிளஸ் மாடல்கள் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மாடல்களுக்கு போட்டியாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் ஏ13 பயோனிக் சிப் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபோன் எஸ்.இ.2 ரென்டர்

    ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட் ஐபோன் 11 மற்றும் ஐபோன் 11 ப்ரோ மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஐபோன் 9 சீரிஸ் மாடல்களில் டாப்டிக் என்ஜின் கொண்ட ஹோம் பட்டன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. என்ட்ரி லெவல் ஐபோன் என்பதால் இதில் டச் ஐடி அம்சம் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    இத்துடன் ஆப்பிள் பே மற்றும் எக்ஸ்பிரஸ் டிரான்சிட் அம்சம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய என்ட்ரி லெவல் ஐபோன் சீரிஸ் ஐபோன் 9 சீரிஸ் மற்றும் ஐபோன் எஸ்.இ.2 போன்ற பெயர்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இது நான்காம் தலைமுறை ஐபேட் ப்ரோ சாதனத்துடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ6எஸ் 2020 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் ஹெச்.டி. பிளஸ் மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

    பின்புறம் கைரேகை சென்சார் கெண்டிருக்கும் மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    மோட்டோரோலா இ6எஸ்

    மோட்டோ இ6எஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.1 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ்+ 19.5:9 மேக்ஸ் விஷன் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
    - 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
    - 650 மெகாஹெர்ட்ஸ் IMG பவர் வி.ஆர். GE8320 GPU
    - 2 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 (பை)
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - பி2ஐ வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 5 வாட் சார்ஜிங்

    மோட்டோ இ6எஸ் ஸ்மார்ட்போன் பீகாக் புளூ மற்றும் சன்ரைஸ் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. வரும் வாரங்களில் இதன் விற்பனை துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா சி2 ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா சி2 4ஜி ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த நோக்கியா சி1 3ஜி போனின் மேம்பட்ட மாடல் ஆகும்.

    புதிய நோக்கியா சி2 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், குவாட் கோர் யுனிசாக் பிராசஸர், 1 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை (கோ எடிஷன்) இயங்குதளம், 5 எம்.பி. பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.

    நோக்கியா சி2

    நோக்கியா சி2 சிறப்பம்சங்கள்

    - 5.7 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்ச்ஸ் குவாட்கோர் யுனிசாக் பிராசஸர்
    - 1 ஜி.பி. ரேம்
    - 16 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை (கோ எடிஷன்) இயங்குதளம்
    - சிங்கிள் / டூயல் சிம்
    - 5 எம்.பி. ஆட்டோபோக்கஸ் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
    - எஃப்.எம். ரேடியோ, கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
    - மைக்ரோ யு.எஸ்.பி.
    - 2800 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    புதிய நோக்கியா சி2 ஸ்மார்ட்போன் சியான் மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை விவரங்கள் மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என தெரிகிறது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் மார்ச் 16-ம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கிறது. 

    சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் மடிக்கக்கூடிய OLED 21:9 சினிமாவிஷன் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் இரண்டாவது ஸ்கிரீன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஸ்கிரீனினை குவிக் வியூ எக்ஸ்டெர்னல் டிஸ்ப்ளே என அழைக்கிறது. 

    இதை கொண்டு நோட்டிஃபிகேஷன், மியூசிக், கூகுள் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை வேகமாக இயக்க முடியும். புகைப்படங்களை எடுக்க புதிய ஸ்மார்ட்போனில் ஒற்றை கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதை ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் பிரைமரி கேமரா போன்றும், மடிக்கப்பட்ட நிலையில் செல்ஃபி கேமரா போன்றும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மோட்டோரோலா ரேசர்

    மோட்டோரோலா ரேசர் சிறப்பம்சங்கள்:

    – 6.2 இன்ச் QLED HD+ 876×2142 பிக்சல் மடிக்கக்கூடிய ஸ்கிரீன்
    – 2.7 இன்ச் 600×800 பிக்சல் குவிக் வியூ டிஸ்ப்ளே
    – ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர்
    – 6 ஜி.பி. பேம்
    – 128 ஜி.பி. மெமரி
    – 16 எம்.பி. f/1.7 கேமரா
    – 5 எம்.பி. கேமரா
    – ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
    – 2510 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    – 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிக் வசதி
    – இசிம் வசதி
    – ப்ளூடூத், 4ஜி எல்.டி.இ., வைபை

    சர்வதேச சந்தையில் மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போனின் விலை 1499.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,07,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போன் இந்திய விலை வரும் நாட்களில் தெரியவரும்.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக பிரபல மாடலாக இருக்கிறது. இந்தியாவில் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன் ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளது. கேலக்ஸி எம்30எஸ் வெற்றியை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனை வெளியிட்டது. 

    இந்நிலையில், சாம்சங் தனது கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. புதிய கேலக்ஸி எம்30எஸ் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஓபல் பிளாக், சஃபையர் புளூ மற்றும் குவாட்ஸ் கிரீன் என மூன்று டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது.

    முன்னதாக கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை குறைக்கப்பட்டு ரூ. 12,999 என்றும், டாப் எண்ட் வேரியண்ட் விலை சாம்சங் தளத்தில் ரூ. 15,999 என குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விற்பனை மார்ச் 14-ம் தேதி அமேசான் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    கேலக்ஸி எம்30எஸ்

    சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 10 என்.எம். பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. 1.5 இயங்குதளம் கொண்டிருக்கும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் மூலம் உருவாகியிருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் டூயல்-டோன் ஃபினிஷ், பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப்-சி வழங்கப்பட்டுள்ளது

    6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி. மூன்று கேமரா சென்சார் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்



    சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனினை மார்ச் 16-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இது கடந்த மாதம் சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கும் சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, FHD பிளஸ் ரெசல்யூஷன் மற்றும் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு சென்சார் மற்றும் டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது.

    கேலக்ஸி எம்21 வெளியீட்டு விவரம்

    இத்துடன் 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் மற்றும் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. 

    முன்னதாக வெளியான தகவல்களில் SM-M215F மாடல் நம்பர் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியானது. அதில் புதிய ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 9611 பிராசஸர், மாலி G72MP3 GPU கொண்டிருக்கும் என கூறப்பட்டது. மெமரியை பொருத்தவரை 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0 வழங்கப்படலாம்.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன.



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் மார்ச் 19-ம் தேதி புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்வில் நோக்கியா 8.2 5ஜி, என்ட்ரி லெவல் நோக்கியா சி2, நோக்கியா 5.3 உள்ளிட்ட மொபைல் போன்களை ஹெச்.எம்.டி. குளோபல்  அறிமுகம் செய்யலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி நோக்கியா 5.3 ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் 18.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    நோக்கியா 5.3 லீக்

    இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 அல்லது ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வழங்கப்படலாம். மேலும் அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. சென்சார், இரண்டு 8 எம்.பி. சென்சார்கள் மற்றும் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.

    மற்ற நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்கள் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் சார்கோல் மற்றும் சியான் நிறங்களில் வெளியாகலாம் என தெரிகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 13,300 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் 48 எம்.பி. மூன்று பிரைமரி கேமராவுடன் விரைவில் வெளியாக இருக்கிறது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் மார்ச் 16-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சாம்சங் வெளியிட்ட கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக இருக்கும் 48 எம்.பி. பிரைமரி கேமரா புதிய கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனிலும் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    இத்துடன் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் 20 எம்.பி. செல்ஃபி கேமரா, 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் இதில் ஆக்டா கோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    கேலக்ஸி எம்31

    கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இளைஞர்களை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டவை ஆகும். இந்த சீரிஸ் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வரிசையில் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    கடந்த மாதம் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்த நிலையில், இது சாம்சங்கின் புதிய கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போனாக அறிமுகமாக இருக்கிறது. ஏற்கனவே சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன் ஆன்லைன் விற்பனையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.
    ஒப்போ நிறுவனத்தின் ஃபைண்ட் எக்ஸ்2 மற்றும் ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 48 எம்.பி. மூன்று கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது.



    ஒப்போ நிறுவனம் ஃபைண்ட் எக்ஸ்2 மற்றும் ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 6.7 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஃபைண்ட் எக்ஸ்2 சீரிஸ் மாடல்களில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5ஜி வசதி, வேப்பர் சேம்பர் லிக்விட் கூலிங், மல்டிலேயர் கிராஃபைட் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஃபைண்ட் எக்ஸ்2 மாடலில் 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 3 செ.மீ. மேக்ரோ மோட், 13 எம்.பி. டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ மாடலில் 48 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 13 எம்.பி. பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 மாடலில் 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரியும், ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ மாடலில் 4260 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் 65 வாட் சூப்பர் VOOC 2.0 சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ் வழங்கப்பட்டுள்ளது.

    ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 மற்றும் ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ

    ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 மற்றும் ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.7 இன்ச் 3168x1440 பிக்சல் குவாட் ஹெச்.டி. + OLED 2.5D வளைந்த கிளாஸ்
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
    - 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
    - அட்ரினோ 650 GPU
    - 8 ஜி.பி. / 12 ஜி.பி. LPDDR4x ரேம்
    - ஃபைண்ட் எக்ஸ் 2 - 128 ஜி.பி. / 256 ஜி.பி. UFS 3.1 மெமரி
    - 12 ஜி.பி. LPDDR4x ரேம்
    - ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ 256 ஜி.பி. UFS 3.0 மெமரி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர் ஒ.எஸ். 7.1
    - டூயல் சிம்
    - ஃபைண்ட் எக்ஸ்2 - 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, எல்.இ.டி. ஃபிளாஷ், OIS + EIS
    - 12 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2, 3 செ.மீ. மேக்ரோ
    - 13 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4
    - ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ - 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 7P லென்ஸ் எல்.இ.டி. ஃபிளாஷ், OIS + EIS
    - 48 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2, 3 செ.மீ. மேக்ரோ
    - 13 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/3.0, OIS
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4
    - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
    - யு.எஸ்.பி. டைப்-சி, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்மி அட்மோஸ்
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1
    - ஃபைண்ட் எக்ஸ்2 - 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 65 வாட் சூப்பர் VOOC 2.0 ஃபிளாஷ் சார்ஜ்
    - ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ - 4260 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 65 வாட் சூப்பர் VOOC 2.0 ஃபிளாஷ் சார்ஜ்

    ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் செராமிக் பேக், ஓசன் மற்றும் கிளாஸ் பேக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 1130 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 83,320) என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 793 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 58,575) என்றும் 256 ஜி.பி. மெமரி மாடல் 865 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 63,910) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் செராமிக் பேக், ஆரஞ்சு மற்றும் வெகன் லெதர் பேக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1356 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1,00,535) மற்றும் 1010 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 74,850) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ×