search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங்
    X
    சாம்சங்

    விரைவில் இந்தியா வரும் 48 எம்.பி. மூன்று பிரைமரி கேமரா கொண்ட கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்

    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் 48 எம்.பி. மூன்று பிரைமரி கேமராவுடன் விரைவில் வெளியாக இருக்கிறது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் மார்ச் 16-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சாம்சங் வெளியிட்ட கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக இருக்கும் 48 எம்.பி. பிரைமரி கேமரா புதிய கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனிலும் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    இத்துடன் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் 20 எம்.பி. செல்ஃபி கேமரா, 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் இதில் ஆக்டா கோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    கேலக்ஸி எம்31

    கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இளைஞர்களை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டவை ஆகும். இந்த சீரிஸ் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வரிசையில் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    கடந்த மாதம் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்த நிலையில், இது சாம்சங்கின் புதிய கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போனாக அறிமுகமாக இருக்கிறது. ஏற்கனவே சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன் ஆன்லைன் விற்பனையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.
    Next Story
    ×