search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஐபோன் 9 ரென்டர்
    X
    ஐபோன் 9 ரென்டர்

    ஐபோன் 9 பிளஸ் உருவாக்கும் ஆப்பிள்

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 9 பிளஸ் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.



    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 9 மாடல் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வந்தது. அந்த வரிசையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 9 பிளஸ் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    ஐபோன் 9 பிளஸ் மாடல் பற்றிய விவரங்கள் ஐ.ஒ.எஸ்.14 தளத்திற்கான குறியீடுகளில் தெரியவந்துள்ளது. புதிய ஐபோன் 9 மற்றும் ஐபோன் 9 பிளஸ் மாடல்கள் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மாடல்களுக்கு போட்டியாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் ஏ13 பயோனிக் சிப் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபோன் எஸ்.இ.2 ரென்டர்

    ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட் ஐபோன் 11 மற்றும் ஐபோன் 11 ப்ரோ மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஐபோன் 9 சீரிஸ் மாடல்களில் டாப்டிக் என்ஜின் கொண்ட ஹோம் பட்டன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. என்ட்ரி லெவல் ஐபோன் என்பதால் இதில் டச் ஐடி அம்சம் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    இத்துடன் ஆப்பிள் பே மற்றும் எக்ஸ்பிரஸ் டிரான்சிட் அம்சம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய என்ட்ரி லெவல் ஐபோன் சீரிஸ் ஐபோன் 9 சீரிஸ் மற்றும் ஐபோன் எஸ்.இ.2 போன்ற பெயர்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இது நான்காம் தலைமுறை ஐபேட் ப்ரோ சாதனத்துடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×