search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    போக்கோ எக்ஸ்2
    X
    போக்கோ எக்ஸ்2

    நான்கு நாட்களுக்கு ஓபன் சேல் விற்பனைக்கு வரும் போக்கோ எக்ஸ்2

    போக்கோ பிராண்டின் புதிய போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் நான்கு நாட்களுக்கு ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.



    போக்கோ பிராண்டு தனது போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்தது. முன்னதாக ப்ளிப்கார்ட் தளத்தில் ஹெட் ஃபார் ரெட் விற்பனை நடைபெற்ற நிலையில், தற்சமயம் ஓபன் சேல் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனை மார்ச் 19 இல் துவங்கி மார்ச் 22 வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    இந்தியாவில் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. + 64 ஜி.பி., 6 ஜி.பி. + 128 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. + 256 ஜி.பி. மெமரி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும் இது மேட்ரிக்ஸ் பர்ப்பிள், அட்லான்டிஸ் புளூ மற்றும் ஃபீனிக்ஸ் ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    போக்கோ எக்ஸ்2 ஓபன் சேல்

    சிறப்பம்சங்களை பொருத்தவரை போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ரியாலிட்டி ஃபுளோ 120 ஹெர்ட்ஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், டூயல் பன்ச் ஹோல் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. சோனி சென்சார், 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. சூப்பர் மேக்ரோ மற்றும் 2 எம்.பி. போர்டிரெயிட் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 20 எம்.பி. கேமரா, 2 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 3டி வளைந்த ஃபிராஸ்ட்டெட் கிளாஸ் பாடி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
    Next Story
    ×