என் மலர்
மொபைல்ஸ்
ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ரியல்மி பிராண்டு தனது புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனான ரியல்மி 6 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ரியல்மி 6 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. மோனோ சென்சார், 2 எம்.பி. மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போனின் பக்காவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ள ரியல்மி 6 ப்ரோ மாடலில் கிரேடியன்ட் பாலிகார்போனேட் பேக் கொண்டிருக்கிறது. இதில் பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் VOOC ஃபிளாஷ் சார்ஜ் வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி 6 சிறப்பம்சங்கள்:
- 6.6 இன்ச் 2400x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர்
- 800 மெகாஹெர்ட்ஸ் மாலி-G76 3EEMC4 GPU
- 4 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
- 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யு.ஐ. 1.0
- 64 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
- 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
- 2 எம்.பி. மேக்ரோ சென்சார்
- 2 எம்.பி. மோனோ சென்சார்
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 30 வாட் VOOC ஃபிளாஷ் சார்ஜ்
ரியல்மி 6 ஸ்மார்ட்போன் காமெட் புளூ, காமெட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14,999 என்றும் டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மார்ச் 11-ம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது.
லாவா நிறுவனத்தின் புதிய ஏ1 கலர்ஸ் மொபைல் போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
இந்திய மொபைல் போன் பிராண்டான லாவா ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஸ்பெஷல் எடிஷன் மொபைல் போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய மொபைல் லாவா ஏ1 கலர்ஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பாலிகார்பனைட் பாடி, இன்ஸ்டண்ட் டார்ச், ஆட்டோ கால் ரெக்கார்டிங் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிறப்பம்சங்களை பொருத்தவரை 1.8 இன்ச் டி.எஃப்.டி. டிஸ்ப்ளே, 128x160 பிக்சல் ரெசல்யூஷன், 0.3 எம்.பி. கேமரா, 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பேட்டரி மூன்று நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என லாவா தெரிவித்துள்ளது. இந்த மொபைலில் உள்ள டார்ச்சினை நேவிகேஷன் பட்டனை க்ளிக் செய்து ஆன் செய்யலாம். இத்துடன் காண்டாக்ட்களில் புகைப்படம் செட் செய்து கொள்ளும் வசதி, கால்குலேட்டர், ஸ்டாப்வாட்ச், காலெண்டர், அலாரம் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த மொபைலை ஆங்கிலம் உள்பட தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி, பஞ்சாபி மற்றும் குஜராத்தி என ஏழு மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. லாவா ஏ1 கலர்ஸ் லைட் புளூ, கிரீன் மற்றும் மெஜன்டா ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் லாவா ஏ1 கலர்ஸ் விலை ரூ. 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைலை வாங்குவோருக்கு நாடு முழுக்க ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஒரு வருடத்திற்கு ரீபிளேஸ்மென்ட் வாரண்டி வழங்கப்படுகிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதியினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் மார்ச் 19-ம் தேதி லண்டனில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா ரத்து செய்யப்பட்டதால், ஹெச்.எம்.டி. குளோபல் புதிய விழாவினை தனியே ஏற்பாடு செய்து இருக்கிறது.
இவ்விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8.3 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசரினை ஹெச்.எம்.டி. குளோவல் வெளியிட்டு இருந்தது. அதன்படி இதில் செய்ஸ் ஆப்டிக்ஸ், 4K யு.ஹெச்.டி. அல்ட்ரா வைடு வீடியோ சப்போர்ட், பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.
No Time To Wait. We have something very special lined up for you. #nokiamobilelivepic.twitter.com/xQAZWok0v6
— Juho Sarvikas (@sarvikas) March 3, 2020
இதுதவிர நோக்கியா 1.3, நோக்கியா சி2, நோக்கியா 5.3 மற்றும் நோக்கியா 400 4ஜி மொபைல் போன் மாடல்களையும் இதே விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் நோக்கியா 9 பியூர்வியூ, நோக்கியா 4.2, நோக்கியா 3.2, நோக்கியா 210 ஃபீச்சர் போன் மற்றும் நோக்கியா 1 பிளஸ் ஆண்ட்ராய்டு கோ எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட ஐபோன் மாடல்களின் விலை இந்தியாவில் திடீரென உயர்த்தப்பட்டது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து இறக்கமதி செய்யப்படும் பிரின்ட்டெட் சர்கியூட் போர்டு அசெம்ப்ளி (PCBA) பாகங்களுக்கான இறக்குமதி வரியை 10 இல் இருந்து 20 சதவீதமாக உயர்த்தியது.
இதேபோன்று மொபைல் போன் உபகரணங்களான டிஸ்ப்ளே பேனல், டச் பேனல், மைக்ரோபோன் மற்றும் ரிசீவர் உள்ளிட்டவற்றுக்கான இறக்குமதி வரியினை 15 இல் இருந்து 20 சதவீதமாக உயர்த்தியது. இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களின் விலையை உயர்த்துவதாக கூறப்படுகிறது.

ஐபோன் 7 மற்றும் ஐபோன் ஐபோன் எக்ஸ்.ஆர். மாடல்கள் இந்தியாவிலேயே உருவாக்கப்படுவதால் இவற்றின் விலை உயர்த்தப்படவில்லை. ஐபோன் 11, ஐபேட் மாடல்களின் விலையும் உயர்த்தப்படவில்லை. மற்ற ஐபோன் மாடல்களின் விலை 1.3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
உயர் ரக ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் 512 ஜி.பி. மாடலின் விலை ரூ. 1,41,900 இல் இருந்து தற்சமயம் ரூ. 1,43,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய ஐபோன் மாடல்களின் விலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் குறைக்கப்பட்டது.
ஐபோன் மாடல்களின் புதிய விலை விவரங்களை கீழே காணலாம்..,

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டது.
அந்த வகையில் புதிய கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போன் இரு மாடல்களுக்கு இடையில் நிலை நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி யு டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. முந்தைய கேலக்ஸி 51 மற்றும் ஏ71 ஸ்மார்ட்போன்களில் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. இவை செவ்வக கேமரா பம்ப்பினுள் செங்குத்தான பொருத்தப்படும் என கூறப்படுகிறது. கேமரா சென்சார்களின் கீழ் ஃபிளாஷ் பொருத்தப்படுகிறது.

இத்துடன் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் கிளாஸி வைட் மற்றும் மேட் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டு மெல்லிய வடிவமைப்பு மற்றும் மெட்டல் எட்ஜ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் கீழ்புறம் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், யு.எஸ்.பி. டைப் சி போர்ட், ஸ்பீக்கர் கிரில் உள்ளிட்டவை வழங்கப்படலாம். பக்கவாட்டில் பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் வலது புறத்தில் வழங்கப்படும் என தெரிகிறது.
மற்ற சிறப்பம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படலாம். பின்புறம் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், 48 எம்.பி. மெயின் சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மற்ற இரு சென்சார்கள் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.
பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை என்பதால், இதில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 10, 4 ஜி.பி. ரேம், மீடியாடெக் ஹீலியோ பி65 ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ஃப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இரண்டாவது விற்பனையில் உடனடியாக விற்றுத் தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ஃப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இரண்டாவது விற்பனையும் நிமிடங்களில் நிறைவுற்று விட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 28-ம் தேதி காலை 11 மணிக்கு துவங்கிய இரண்டாவது விற்பனை மதியத்திற்குள் நிறைவடைந்ததாக சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 28-ம் தேதி முன்பதிவு செய்தவர்களுக்கு சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப் ஸ்மார்ட்போன் மார்ச் 2-ம் தேதி விநியோகம் செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கேலக்ஸி இசட் ஃப்ளிப் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1,09,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டைனமிக் AMOLED 2636x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் இந்த டிஸ்ப்ளேவினை இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் என அழைக்கிறது. இதில் மிக மெல்லிய கிளாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை 200,000 அதிக முறை மடிக்க முடியும்.

கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனின் வெளி்ப்புறம் 1.1 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே 300x112 ரெசல்யூஷனில் வழங்கப்பட்டுள்ளது. இதன் கவர் டிஸ்ப்ளே மோட்டோரோலா ரேசர் மாடலை போன்றே நோட்டிஃபிகேஷன்களை காண்பிக்கிறது. இதில் பிரத்யேக ஃபிளெக்ஸ் மோட் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன் செயலிகளை பாதியாக பிரித்து, கீழ்புறம் கண்ட்ரோல்கள் கொண்டுள்ளது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் ஆக்டா கோர் பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமராக்கள்: 12 எம்.பி. வைடு ஆங்கில் கேமரா, f/1.8, 12 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2 வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 10 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4 வழங்கப்பட்டுள்ளது.
இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
ஹெச்.டி.சி. நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் நீண்ட இடைவெளிக்கு பின் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹெச்.டி.சி. நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பின் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹெச்.டி.சி. வைல்டுஃபயர் ஆர்70 மாடலில் 6.53 இன்ச் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி23 பிராசஸர், 2 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. சூப்பர் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்து. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

ஹெச்.டி.சி. வைல்டுஃபையர் ஆர்70 சிறப்பம்சங்கள்:
- 6.53 இன்ச் 1560x720 பிக்சல் 19.5:9 டிஸ்ப்ளே
- 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி23 பிராசஸர்
- 800 மெகாஹெர்ட்ஸ் ARM மாலி G71 MP2 GPU
- 2 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 2 எம்.பி. மேக்ரோ கேமரா, f/2.4
- 2 எம்.பி. டெப்த் கேமரா, f/2.4
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- மைக்ரோ யு.எஸ்.பி.
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்
புதிய ஹெச்.டி.சி. வைல்டுஃபையர் ஆர்70 ஸ்மார்ட்போன் அரோரா புளூ மற்றும் நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. விரைவில் இதன் விற்பனை துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி பிராண்டின் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ. 2000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ரியல்மி பிராண்டு ரியல்மி எக்ஸ்ட்ரா டேஸ் சிறப்பு விறப்னையை அறிவித்துள்ளது. இதில் ரியல்மி பிராண்டின் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலை குறைப்பு வழங்கப்படுகிறது. ரியல்மியின் சிறப்பு விற்பனை பிப்ரவரி 29-ம் தேதி நிறைவுறுகிறது.
சிறப்பு விற்பனையின் கீழ் ரியல்மி எக்ஸ், ரியல்மி எக்ஸ்.டி. மற்றும் ரியல்மி 5 ப்ரோ உள்ளிட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரியல்மி எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்சம் ரூ. 2000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ரியல்மி எக்ஸ்.டி. மாடல் விலை ரூ. 1000 வரை குறைக்கப்பட்டுள்ளது. ரியல்மி 5 ப்ரோ 5 ஜி.பி. மாடல் ரூ. 11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை குறைப்பு பற்றிய அறிவிப்பினை ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

விலை குறைப்பின்படி ரியல்மி எக்ஸ் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 14,999 விலையிலும், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை ரியல்மி அதிகாரப்பூர்வ வலைதளம், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் ஏற்கனவே மாற்றப்பட்டு இருக்கிறது.
ரியல்மி எக்ஸ்.டி. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 14,999 விலையிலும், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 15,999 விலையிலும், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பியல் புளூ மற்றும் பியல் வைட் நிறங்களில் கிடைக்கிறது.
இதேபோன்று ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல்களுக்கு எவ்வித விலை குறைப்பும் அறிவிக்கப்படவில்லை.
ஐகூ பிராண்டின் புதிய ஐகூ 3 மற்றும் ஐகூ 3 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஐகூ பிராண்டின் புதிய ஐகூ 3 மற்றும் ஐகூ 3 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இரு ஸ்மார்ட்போன்களில் 6.44 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 20:9 சூப்பர் AMOLED ஸ்கிரீன், 180 ஹெர்ட்ஸ் சூப்பர் டச் ரெஸ்பான்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதன் டிஸ்ப்ளேவில் 16 எம்.பி. பன்ச் ஹோல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. LPDDR5 ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஐகூ யு.ஐ. 1.0 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 13 எம்.பி. 120° அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்.பி. டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஐகூ 3 சீரிஸ் ஸ்மார்ட்போன் 4440 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 55 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

ஐகூ 3 / ஐகூ 3 5ஜி சிறப்பம்சங்கள்:
- 6.44 இன்ச் 2400x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 20:9 E3 சூப்பர் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 8 ஜி.பி. LPDDR5 ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. (UFS 3.1) மெமரி
- 12 ஜி.பி. LPDDR5 ரேம், 256 ஜி.பி. (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஐகூ யு.ஐ. 1.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.79, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
- 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.46
- 13 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
- 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.45
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4440 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 55 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ்
ஐகூ 3 மற்றும் ஐகூ 3 5ஜி ஸ்மார்ட்போன்கள் வொல்கானோ ஆரஞ்சு, குவாண்டம் சில்வர், டொர்னாடோ பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. ஐகூ 3 4ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 36,990 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 39,990 என்றும் ஐகூ 3 5ஜி ஸ்மார்ட்போனின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 44,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மார்ச் 4 முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.
ஹூவாய் நிறுவனம் மேட் எக்ஸ்.எஸ். மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ஹூவாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் மேட் எக்ஸ்.எஸ். மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஆன்லைன் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 6.6 இன்ச் OLED ஸ்கிரீன், முன்புறம் 6.38 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை திறக்கும் போது 8.0 இன்ச் ஸ்கிரீன் கிடைக்கிறது.
இதன் வடிவமைப்பு பார்க்க முந்தைய மேட் எக்ஸ் போன்றே காட்சியளிக்கிறது. முந்தைய ஸ்மார்ட்போன் போன்றே புதிய மாடலும் 5.4 எம்.எம். அளவு மெல்லியதாக இருக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை கிரின் 990 5ஜி பிராசஸர், ஆண்ட்ராய்டு மற்றும் EMUI 10 வழங்கப்பட்டுள்ளது. இதில் கூகுள் பிளே சேவைக்கு மாற்றாக ஹூவாய் மொபைல் சர்வீசஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பவர் பட்டனிலேயே பொருத்தப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போனில் 40 எம்.பி. பிரைமரி கேமரா, 16 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் ToF சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
இதன் பின்புற டிஸ்ப்ளே பயன்படுத்தி, பிரைமரி கேமரா கொண்டும் செல்ஃபி எடுக்க முடியும். 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டுள்ள மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போனில் 55 வாட் ஹூவாய் சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனை 0 முதல் 85 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களே போதுமானது.

ஹூவாட் மேட் எக்ஸ்.எஸ். சிறப்பம்சங்கள்:
- 6.6 இன்ச் 2480x1148 பிக்சல் 19.5:9 OLED டிஸ்ப்ளே (மடிக்கப்பட்ட நிலையில்)
- 6.38 இன்ச் 2480x892 பிக்சல் OLED 25:9 பின்புறம் பேக் பேனல் டிஸ்ப்ளே
- 8.0 இன்ச் 2480x2200 பிக்சல் OLED 8:7.1 டிஸ்ப்ளே (திறக்கப்பட்ட நிலையில்)
- ஹூவாய் கிரின் 990 5ஜி பிராசஸர்
- ARM மாலி-G76MP16 GPU, டூயல் பி்க் கோர் + டைனி கோர் NPU
- 8 ஜி.பி. LPDDR4x ரேம்
- 512 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் EMUI 10.0.1, HMS
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 40 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8
- 16 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2, 2.5 செ.மீ. மேக்ரோ
- 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, OIS
- ஹூவாய் TOF கேமரா
- கைரேகை சென்சார்
- டூயல் ஸ்பீக்கர்கள்
- 5ஜி மல்டி-மோட், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5 LE
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 55 வாட் சூப்பர்சார்ஜ்
ஹூவாய் மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போன் இன்டர்ஸ்டெல்லார் புளூ நிறத்தில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் இதன் விலை 2706 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1,95,425) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது.
ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் மூலம் நடைபெறும் என ஒன்பிளஸ் சமீபத்தில் அறிவித்தது. எனினும், புதிய ஸ்மார்ட்போன்கள் பற்றி எவ்வித தகவலும் வெளியாகவில்லை. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
புதிய தகவல்களின் படி ஒன்பிளஸ் இம்முறை மொத்தம் மூன்று ஸ்மார்ட்போன்களை வெளியிடும் என கூறப்படுகிறது. இவற்றில் ஒன்பிளஸ் 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் ஆப்ஷன் ஸ்கிரீன்ஷாட் வலைதளத்தில் வலம் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் HD2023 எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருகிறது.
பெயருக்கு ஏற்றார்போல் ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி வழங்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது. மேலும் இதில் QHD+ ரெசல்யூஷன் கொண்ட 6.65 இன்ச் ஃபிளுயிட் AMOLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 வழங்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 7 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களிடையே மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களின் படி பாப் அப் ரக செல்ஃபி கேமராவுக்கு மாற்றாக புதிய ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865, அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் UFS 3.0 அல்லது UFS 3.1 ஸ்டோரேஜ் மாட்யூல் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க புதிய ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா, 20 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 12 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் IP தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட், வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ஃபிளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விற்பனை நிமிடங்களில் முடிந்துவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் ஃபிளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ரூ. 1,09,999 விலையில் விற்பனை செய்யப் போவதாக அறிவித்தது. விலை அறிவிப்புடன் புதிய ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு துவங்கப்பட்டது. முதல் நாளில் காலை 11.00 மணிக்கு முன்பதிவு துவங்கியதை அடுத்து நிமிடங்களில் விற்றுத்தீர்ந்ததாக சாம்சங் அறிவித்துவிட்டது.
இதுதவிர சாம்சங் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் அனைத்து யூனிட்களும் விற்று தீர்ந்ததாக அந்நிறுவனம் அறிவித்தது. முன்பதிவின் போதே வாடிக்கையாளர்கள் முழு பணத்தை செலுத்த வேண்டும் என சாம்சங் தெரிவித்து இருந்தது. சாம்சங் இ ஸ்டோரில் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு பிரத்யேக விநியோகம் செய்யப்படும் என சாம்சங் அறிவித்தது.
அந்த வகையில் முதல் நாளில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போன் பிப்ரவரி 26-ம் தேதி விநியோகம் செய்யப்பட்டு விடும். இதன்பின் இரண்டாம் கட்ட முன்பதிவுகள் பிப்ரவரி 26-ம் தேதி துவங்கி அதற்கான விநியோகம் மார்ச் மாதத்தில் நடைபெறும் என தெரிகிறது.
சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு விபத்து காப்பீடு, ஒரு முறை ஸ்கிரீன் பாதுகாப்பு, ஒரு வருடத்திற்கு சாம்சங் கேர் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதில் ஒருமுறை ஸ்கிரீன் பாதுகாப்பு சேவை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வழங்கப்படுகிறது.

இதுதவிர நான்கு மாதங்களுக்கு யூடியூப் பிரீமியம் சேவைக்கான சந்தா மற்றும் அதிகபட்சம் 12 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டைனமிக் AMOLED 2636x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் இந்த டிஸ்ப்ளேவினை இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் என அழைக்கிறது. இதில் மிக மெல்லிய கிளாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை 200,000 அதிக முறை மடிக்க முடியும்.
கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனின் வெளி்ப்புறம் 1.1 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே 300x112 ரெசல்யூஷனில் வழங்கப்பட்டுள்ளது. இதன் கவர் டிஸ்ப்ளே மோட்டோரோலா ரேசர் மாடலை போன்றே நோட்டிஃபிகேஷன்களை காண்பிக்கிறது. இதில் பிரத்யேக ஃபிளெக்ஸ் மோட் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன் செயலிகளை பாதியாக பிரித்து, கீழ்புறம் கண்ட்ரோல்கள் கொண்டது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் ஆக்டா கோர் பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமராக்கள்: 12 எம்.பி. வைடு ஆங்கில் கேமரா, f/1.8, 12 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2 வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 10 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4 வழங்கப்பட்டுள்ளது.
இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.






