search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஐகூ 3 சீரிஸ்
    X
    ஐகூ 3 சீரிஸ்

    ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 12 ஜி.பி. ரேம் கொண்ட ஐகூ 3 சீரிஸ் அறிமுகம்

    ஐகூ பிராண்டின் புதிய ஐகூ 3 மற்றும் ஐகூ 3 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.



    ஐகூ பிராண்டின் புதிய  ஐகூ 3 மற்றும் ஐகூ 3 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இரு ஸ்மார்ட்போன்களில் 6.44 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 20:9 சூப்பர் AMOLED ஸ்கிரீன், 180 ஹெர்ட்ஸ் சூப்பர் டச் ரெஸ்பான்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இதன் டிஸ்ப்ளேவில் 16 எம்.பி. பன்ச் ஹோல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. LPDDR5 ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஐகூ யு.ஐ. 1.0 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 13 எம்.பி. 120° அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்.பி. டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் ஐகூ 3 சீரிஸ் ஸ்மார்ட்போன் 4440 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 55 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

    ஐகூ 3 சீரிஸ்

    ஐகூ 3 / ஐகூ 3 5ஜி சிறப்பம்சங்கள்:

    - 6.44 இன்ச் 2400x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 20:9 E3 சூப்பர் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
    - அட்ரினோ 650 GPU
    - 8 ஜி.பி. LPDDR5 ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. (UFS 3.1) மெமரி 
    - 12 ஜி.பி. LPDDR5 ரேம், 256 ஜி.பி. (UFS 3.1) மெமரி
    - ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஐகூ யு.ஐ. 1.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.79, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
    - 13 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.46
    - 13 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - 2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.45
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
    - 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1
    - யு.எஸ்.பி. டைப்-சி
    - 4440 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - 55 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ்

    ஐகூ 3 மற்றும் ஐகூ 3 5ஜி ஸ்மார்ட்போன்கள் வொல்கானோ ஆரஞ்சு, குவாண்டம் சில்வர், டொர்னாடோ பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. ஐகூ 3 4ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 36,990 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 39,990 என்றும் ஐகூ 3 5ஜி ஸ்மார்ட்போனின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 44,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மார்ச் 4 முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.
    Next Story
    ×