என் மலர்
மொபைல்ஸ்
டெக்னோ பிராண்டின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் முழு விவரங்களை பார்ப்போம்.
டெக்னோ ஸ்மார்ட்போன் பிராண்டு இந்தியாவில் இரண்டு பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. டெக்னோ கேமான் 15 மற்றும் கேமான் 15 ப்ரோ பெயரில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள் புகைப்பட அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

டெக்னோ கேமான் 15 சிறப்பம்சங்கள்:
- 6.55 இன்ச் ஹெச்.டி. டாட்-இன் டிஸ்ப்ளே
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஹை ஒ.எஸ். 6.0.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- 48 எம்.பி. பிரைமரி கேமரா,
- 5 எம்.பி. 115° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
- 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ், அல்ட்ரா நைட் லென்ஸ், f/1.79
- 16 எம்.பி. ஏ.ஐ. செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

டெக்னோ கேமான் 15 ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 6.53 இன்ச் எஃப்.ஹெச்.டி. பிளஸ் 2340x1080 பிக்சல் ஃபுல் வியூ டிஸ்ப்ளே
- 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
- 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம்
- ஹை ஒ.எஸ். 6.0.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- 48 எம்.பி. பிரைமரி கேமரா
- 5 எம்.பி. 115° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
- 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ், அல்ட்ரா நைட் லென்ஸ், f/1.79
- 32 எம்.பி. பாப் அப் செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
டெக்னோ கேமான் 15 ப்ரோ ஸ்மார்ட்போன்: ஐஸ் ஜாடைட் மற்றும் ஓபல் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு ரூ. 3499 மதி்ப்புள்ள ப்ளூட்த் ஸ்பீக்கர்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
டெக்னோ கேமான் 15 ஸ்மார்ட்போன்: ஷௌல் கோல்டு, ஃபேசினேட்டிங் பர்ப்பிள் மற்றும் டார்க் ஜேட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களும் பிப்ரவரி 25-ம் தேதி விற்பனைக்கு வருகிறது.
ரியல்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. டூயல் அல்ட்ராவைடு செல்ஃபி கேமரா வழங்கப்பட இருப்பதை அந்நிறுவனம் புதிய டீசரில் தெரிவித்துள்ளது.
ரியல்மி பிராண்டின் புதிய எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களை அந்நிறுவனம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் புதிய ஸ்மார்ட்போனின் முன்புறம் டூயல் செல்ஃபி கேமரா வழங்கப்படும் என ரியல்மி பிராண்டு புதிய டீசரில் தெரிவித்துள்ளது.
இவற்றில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, 105 டிகிரி அல்ட்ராவைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்படுகிறது. அல்ட்ராவைடு ஆங்கில் கேமராவின் ரெசல்யூஷனை ரியல்மி இதுவரை அறிவிக்கவில்லை. புதிய ரியல்மி எர்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை அந்நிறுவனம் பிப்ரவரி 24-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஏற்கனவே வெளியிட்ட தகவல்களில் ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் நான்கு பிரைமரி கேமராக்கள் வழங்கப்படும் என ரியல்மி தெரிவித்தது. எனினும், இதில் சாம்சங் சென்சார் வழங்கப்படுமா அல்லது சோனி சென்சார் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதுதவிர ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 20x சூம் வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த ஸ்மார்ட்போன் அல்ட்ராவைடு கேமரா மூலம் வீடியோக்களை போர்டிரெயிட் பிளர் செய்து எடுக்கும் அம்சம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் இதில் பிர்தயேக நைட் மோட் வழங்கப்படலாம் என்றும் இதில் 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் டிஸ்ப்ளே அதிகபட்சம் 90 ஹெர்ச்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரஸ்ட் ரெட் மற்றும் மாஸ் கிரீன் நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை ரியல்மி எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யு.ஐ., 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. புதிய விலை விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவில் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரெட்மி நோட் 8 பேஸ் வேரியண்ட் விலையை உயர்த்தியது. இதைத் தொடர்ந்து ரெட்மி நோட் 8 ப்ரோ 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை மட்டும் தற்சமயம் குறைக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி ரெட்மி நோட் 8 ப்ரோ பேஸ் வேரியண்ட் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ரெட்மி நோட் 8 ப்ரோ 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. வேரியண்ட் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல்களின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி முறையே ரூ. 15,999 மற்றும் ரூ. 17,999 விலையில் வி்ற்பனை செய்யப்படுகின்றன.
குறைக்கப்பட்ட புதிய விலை அமேசான் இந்தியா மற்றும் Mi அதிகாரப்பூர்வ வலைதளங்களில் மாற்றப்பட்டு விட்டது. இந்தியாவில் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஷேடோ பிளாக், காமா கிரீன், ஹாலோ வைட் மற்றும் எலெக்ட்ரிக் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் விலை குறைப்பு தற்காலிக அறிவிப்பா அல்லது நிரந்தரமாக விலை குறைக்கப்பட்டு இருக்கிறதா என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன் மற்றும் ஹெச்.டி.ஆர். வசதி, மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, 1/1.7″ சாம்சங் GW1 சென்சார் மற்றும் ISOCELL பிளஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 120 அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. கேமரா கொண்டிருக்கிறது.
முன்புறம் 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 3டி வளைந்த கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
டூயல் கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஐடெல் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஐடெல் நிறுவனம் இந்தியாவில் புதிய என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1560 பிக்சல் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே, ஆக்டா கோர் யுனிசாக் எஸ்.சி.9863ஏ பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 8 எம்.பி. பிரைமரி கேமரா, 0.08 எம்.பி. டெப்த் சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ், முன்புறம் 5 எம்.பி. கேமரா, வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.ஐ. பியூட்டி மோட், போர்டிரெயிட் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

ஐடெல் விஷன் 1 சிறப்பம்சங்கள்
- 6.0 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1560 பிக்சல் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் யுனிசாக் எஸ்.சி.9863ஏ பிராசஸர்
- 2 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 8 எம்.பி. பிரைமரி கேரமா
- 0.08 எம்.பி. டெப்த் சென்சார்
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
கிரேடியேஷன் புளூ மற்றும் கிரேடியேஷன் பர்ப்பிள் என இரு நிறங்கலில் கிடைக்கும் ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 5499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனை ரீடெயில் பெட்டியில் ஸ்மார்ட்போனுடன் ரூ. 799 மதிப்புள்ள ப்ளூடூத் ஹெட்போன் வழங்கப்படுகிறது. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2200 மதிப்புள்ள கேஷ்பேக், 25 ஜி.பி. 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20, கேலக்ஸி எஸ்20 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை அறிவிக்கப்பட்டது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20, கேலக்ஸி எஸ்20 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடல்கள் சில தினங்களுக்கு முன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களின் இந்திய விலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவும் துவங்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்20 4ஜி எல்.டி.இ. 8 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி காஸ்மிக் கிரே மற்றும் கிளவுட் புளூ நிற வேரியண்ட் விலை ரூ. 66,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் 4ஜி எல்.டி.இ. 8 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி காஸ்மிக் கிரே, காஸ்மிக் பிளாக் மற்றும் கிளவுட் புளூ நிற வேரியண்ட் விலை ரூ. 73,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா 4ஜி எல்.டி.இ. 8 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி காஸ்மிக் கிரே வேரியண்ட் விலை ரூ. 92,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், இவற்றின் விநியோகம் மார்ச் 6-ம் தேதி முதல் துவங்குகிறது.

அறிமுக சலுகைகள்
கேலக்ஸி எஸ்20 பிளஸ் மற்றும் எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வோர் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் இயர்போனை ரூ. 1999 விலையில் பெற முடியும். இதேபோன்று கேலக்ஸி எஸ்20 மாடலை முன்பதிவு செய்வோர் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் இயர்போனை ரூ. 2999 விலையில் பெறலாம்.
புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்து ரூ. 48,100 வரை சலுகை பெற முடியும்.
இந்தியாவில் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் தற்சமயம் 128 ஜி.பி. வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஹைப்ரிட் சிம் ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் 4ஜி எல்.டி.இ. வெர்ஷன்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில் சாம்சங் எக்சைனோஸ் 990 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளன.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ20எஸ் மற்றும் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகமான கேலக்ஸி ஏ20எஸ் 3 ஜி.பி. ரேம் + 32 ஜி.பி. மெமரி மற்றும் 4 ஜி.பி. ரேம் + 64 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் வெளியிடப்பட்டது.
இதுவரை 3 ஜி.பி. ரேம் மாடல் ரூ. 10,999 விலையிலும் 4 ஜி.பி. ரேம் மாடல் ரூ. 13,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் கேலக்ஸி ஏ30எஸ் 4 ஜி.பி. ரேம் மாடல் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு ரூ. 12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனின் 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 16,100 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 54,900 விலையிலும், கேலக்ஸி எஸ்10 பிளஸ் 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 17,100 குறைக்கப்பட்டு ரூ. 61,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று கேலக்ஸி எஸ்10இ 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 8000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 47,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை ஏற்கனவே சாம்சங் மற்றும் அமேசான் இந்தியா வலைதளங்களில் மாற்றப்பட்டு விட்டது.

கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் சாம்சங் எக்சைனோஸ் 9 சீரிஸ் 9820 பிராசஸர், டைனமிக் AMOLED டிஸ்ப்ளே, அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடல்களில் 12 எம்.பி. டூயல் பிக்சல் மற்றும் டூயல் அப்ரேச்சர் பிரைமரி சென்சார், 16 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ், 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்10இ மாடலில் டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்படவில்லை.
இவற்றில் 10 எம்.பி. டூயல் பிக்சல் செல்ஃபி கேமராவும், கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் இரண்டாவது 8 எம்.பி. சென்சார் வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்10, எஸ்10 பிளஸ், மற்றும் எஸ்10இ மாடல்களில் முறையே 3400 எம்.ஏ.ஹெச்., 4100 எம்.ஏ.ஹெச். மற்றும் 3100 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி TFT ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு மற்றும் 5 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் 3டி கிளாஸ் பேக் மற்றும் கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட்கள், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனத்தின் புதிய Mi 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 108 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனத்தின் புதிய Mi 10 மற்றும் Mi 10 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இவற்றில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வளைந்த AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 மோடெம், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 வழங்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போனின் பின்புறம் 3டி கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹை-ரெஸ் ஆடியோ வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 108 எம்.பி. சாம்சங் சென்சார், 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, 20 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டுள்ளது.
சியோமி Mi 10 ஸ்மார்ட்போனில் 4780 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் Mi 10 ப்ரோ மாடலில் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 50 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 30 வாட் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

சியோமி Mi 10 / Mi 10 ப்ரோ சிறப்பம்சங்கள்:
- 6.67 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ AMOLED 19.5:9 HDR10 + 90Hz டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
- அட்ரினோ 650 GPU
- 8 ஜி.பி. LPPDDR5 ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. UFS 3.0 மெமரி
- 12 ஜி.பி. LPPDDR5 ரேம், 256 ஜி.பி. / 512 ஜி.பி. UFS 3.0 மெமரி
- டூயல் சிம்
- MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
- 108 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm, f/1.69, OIS, 8P லென்ஸ் எல்.இ.டி. ஃபிளாஷ்
- 12 எம்.பி. 1/2.6-இன்ச் 2PD சென்சார், 1.4um
- 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், OIS
- 20 எம்.பி. 117° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
- 20 எம்.பி. செல்ஃபி கேமரா
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 5ஜி SA/NSA டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- Mi 10- 4780 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் QC 4+ / PD3.0 வயர் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 10 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்
- Mi 10 ப்ரோ- 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 50 வாட் QC 4+ / PD3.0 வயர், 30 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 10 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங்
சியோமியின் Mi 10 ஸ்மார்ட்போன் டைட்டானியம் பிளாக், ஐஸ் புளூ மற்றும் பீச் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 3999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 40,920) என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 4299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 43,990) என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 4699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 48,080) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சியோமி Mi 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஸ்டாரி புளூ மற்றும் பியல் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 4999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 51,150) என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 5499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 56,270) என்றும் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை 5999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 61,370) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இரு சியோமி ஸ்மார்ட்போன்களும் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என சியோமி இந்தியா தலைவர் மனு ஜெயின் தெரிவித்தார். மேலும், இரு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் உருவாக்குவதற்கான வசதிகள் இல்லை. இவற்றை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதால், விலை சற்று அதிகமாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்20 மற்றும் கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் முன்பதிவு செய்யப்படுகின்றன.
சாம்சங் நிறுவனத்தின் 2020 ஃபிளாக்ஷிப் கேலக்ஸி எஸ்20 மற்றும் கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இரு ஸ்மார்ட்போன்களில் முறையே 6.2/6.7 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் தேர்வு தெய்யப்பட்ட சந்தைகளுக்கு ஏற்ப ஸ்னாப்டிராகன் 865 மற்றும் எக்சைனோஸ் 990 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர இவற்றின் 5ஜி மாடல்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் X55 / எக்சைனோஸ் மோடெம் 5123 வழங்கப்படுகிறது. இன் டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் மாடல்களில் ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0 வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் சாம்சங்கின் பிக்ஸ்பி, சாம்சங் ஹெல்த் மற்றும் சாம்சங் பே உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி எஸ்20 மாடலில் 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரமைரி கேமரா, OIS, 12 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ், 64 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், OIS வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்20 பிளஸ் மாடலில் கூடுதலாக டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 10 எம்.பி. டூயல் பிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8K வீடியோ பதிவு செய்யும் வசதியும் இடம்பெற்று இருக்கிறது.
இத்தனை அம்சங்களை சக்தியூட்ட 4000 எம்.ஏ.ஹெச். மற்றும் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 மற்றும் கேலக்ஸி எஸ்20 பிளஸ் சிறப்பம்சங்கள்:
- கேலக்ஸி எஸ்20 - 6.2 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 3200x1440 பிக்சல் டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
- கேலக்ஸி எஸ்20 பிளஸ் - 6.7 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 3200x1440 பிக்சல் டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், அட்ரினோ 650 GPU
- ஆக்டா கோர் சாம்சங் எக்சைனோஸ் 990 பிராசஸர், ARM மாலி-G77MP11 GPU
- கேலக்ஸி எஸ்20 – 8 ஜி.பி. / 12 ஜி.பி. (5ஜி) LPDDR5 ரேம், 128 ஜி.பி. மெமரி (UFS 3.0)
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- கேலக்ஸி எஸ்20 பிளஸ் - 8 ஜி.பி. / 12 ஜி.பி. (5ஜி) LPDDR5 ரேம், 128 ஜி.பி. /256 (5ஜி) / 512 ஜி.பி. (5ஜி) மெமரி (UFS 3.0)
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0
- சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம்
- 12 எம்.பி. டூயல் பிக்சல் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, சூப்பர் ஸ்பீடு டூயல் பிக்சல் AF, OIS
- 64 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 76° FoV, f/2.0, OIS, ஹைப்ரிட் ஆப்டிக் சூம் 3X
- 12 எம்.பி. 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
- 10 எம்.பி. டூயல் பிக்சல் செல்ஃபி கேமரா, f/2.2
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
- ஏ.கே.ஜி. டியூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
- அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார்
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. 3.1
- கேலக்ஸி எஸ்20 - 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி / 3880 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், வ.ர்லெஸ் பவர் ஷேர்
- கேலக்ஸி எஸ்20 பிளஸ் - 4,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி / 4370 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், வ.ர்லெஸ் பவர் ஷேர்
சாம்சங் கேலக்ஸி எஸ்20 ஸ்மார்ட்போன் கிளவுட் புளூ, காஸ்மிக் கிரே மற்றும் கிளவுட் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போன் காஸ்மிக் கிரே, கிளவுட் புளூ, காஸ்மிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இரு ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ30எஸ் மற்றும் ஏ50எஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. பின் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இதன் விலை முதல் முறையாக குறைக்கப்பட்டு ரூ. 19,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய விலை குறைப்பின் படி கேலக்ஸி ஏ50எஸ் ரூ. 2500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 17,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 17,499 விலையிலும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் ரூ. 2000 குறைக்கப்பட்டு ரூ. 19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, புதிய எக்சைனோஸ் 7 சீரிஸ் 9611 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 32 எம்.பி. செல்ஃபி கேமரா, 8 எம்.பி. 123 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.
லாவா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 4120 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 19:9 ரக டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
லாவா நிறுவனம் இந்தியாவில் புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. லாவா இசட்53 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே, யுனாசாக் எஸ்.சி.9832இ குவாட் கோர் பிராசஸர், 1ஜி.பி. ரேம், 8 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் கொண்டிருக்கும் லாவா இசட்53 ஸ்மார்ட்போனினை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, குஜராத்தி, உருது, பெங்காலி, மராத்தி என எட்டு இந்திய மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் 4120 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

லாவா இசட்53 சிறப்பம்சங்கள்:
- 6.1 இன்ச் 1280x600 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் SC9832E பிராசஸர்
- மாலி 820MP1 GPU
- 1 ஜி.பி. ரேம்
- 16 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- டூயல் சிம்
- 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
- 4120 எம்.ஏ.ஹெச். பேட்டரி
லாவா இசட்53 ஸ்மார்ட்போன் ப்ரிசம் ரோஸ் மற்றும் ப்ரிசம் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 4829 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் மாடலின் விலை குறைக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் விலை ரூ. 3000 வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி யு டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் மற்றும் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.
விலை குறைப்பின் படி கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 28,999 இல் இருந்து ரூ. 3000 குறைக்கப்பட்டு ரூ. 25,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 8 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 3000 குறைக்கப்பட்டு ரூ. 27,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, F/1.8 அப்ரேச்சர், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் செல்ஃபி எடுக்க 32 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதே கேமரா கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டிருக்கிறது.
ஸ்மார்ட்போனின் பின்புறம் பிரத்யேக பேட்டன் மற்றும் ஹாலோகிராஃபிக் எஃபெக்ட் கொண்டிருக்கிறது. இத்துடன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி8, மோட்டோ ஜி8 பவர் மற்றும் மோட்டோ எட்ஜ் பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன்களை பிப்ரவரி 23-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதே விழாவில் மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், தற்சமயம் அதன் சிறப்பம்சங்கள் லீக் ஆகி இருக்கிறது. ஸ்டைலஸ் சாதனத்துடன் அறிமுகமாகும் முதல் மோட்டோரோலா ஸ்மார்ட்போனாக இந்த மாடல் இருக்கிறது.
இம்முறை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மற்றும் 128 ஜி.பி. என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனில் 6.36 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, இடதுபுற ஓரத்தில் பன்ச் ஹோல் வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. அதில் இந்த ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என்றும் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி சென்சார், 16 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. மேக்ரோ கேமரா வழங்கப்படுகிறது. முன்புறம் 25 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம். மோட்டோ ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இத்துடன் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் மற்றும் ஸ்டைலஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
புகைப்படம் நன்றி: @evleaks






