என் மலர்
மொபைல்ஸ்
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் விவரங்கள் அமேசான் தளத்தில் லீக் ஆகியிருக்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. கடந்த ஆண்டு ஒன்பிளஸ் 7டி மற்றும் ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நிலையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் 2020 ஸ்மார்ட்போன் மாடல்களாக ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 லைட் மாடல்கள் உருவாகி வருகின்றன.
அந்த வகையில் அமேசான் இந்தியா வலைதளத்தில் ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ மாடல்களுக்கான வலைதள பக்கங்களின் ஸ்கிரீன்ஷாட்கள் வெளியாகியுள்ளன. வலைதள பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட்கள் புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை உணர்த்தும் வகையில் அமைந்து இருக்கிறது.
அமேசான் இந்தியா வலைதளத்தில் ஸ்மார்ட்போன் உள்பட பல்வேறு பொருட்களுக்கு விளம்பர கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் புதிய பிரிவின் கீழ் மொபைல் போன்கள்: ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8 மாடல்களுக்கு 1 சதவீதம் விளம்பர கட்டணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ மாடல்களுக்கு அடுத்த இடத்தில் ஒன்பிளஸ் 7டி ப்ரோ, ஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரென், ஒன்பிளஸ் 7டி மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ போன்ற மாடல்கள் இடம்பிடித்திருக்கின்றன.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 8 ப்ரோ மாடலில் 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் மற்றும் 5ஜி வெர்ஷன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதே சிப்செட் ஒன்பிளஸ் 8 மாடலிலும் வழங்கப்படும் என தெரிகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ஃப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
சாம்சங் நிறுவனத்தின் 2020 கேலக்ஸி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. இந்நிலையில், கேலக்ஸி இசட் ஃப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஃப்ளிப் ஸ்மார்ட்போனின் வெளிப்புற டிஸ்ப்ளே ஃபோக்கஸ் டிஸ்ப்ளே என அழைக்கப்படும் என்றும் ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் இதன் டிஸ்ப்ளே 22:9 ரேஷியோ கொண்டிருக்கும் என தெரிகிறது.
இத்துடன் கேலக்ஸி ஃப்ளிப் ஸ்மார்ட்போனில் 12 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. முந்தைய மாடலை போன்று புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் 5ஜி வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்ப்ளே அளவுகளை பொருத்தவரை ஸ்மார்ட்போனின் முன்புறம் 1.05 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 22:9 ரேஷியோ டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில் 15 வாட் வையர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வயர்லெஸ் முறையில் 12 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.
கேலக்ஸி இசட் ஃப்ளிப் ஸ்மார்ட்போன் 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என்றும் இது 925 எம்.ஏ.ஹெச். மற்றும் 2375 எம்.ஏ.ஹெச். என இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி இசட் ஃப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மிரர் பிளாக் மற்றும் பர்ப்பிள் நிறங்களில் அறிமுகமாகும் என்றும் இதில் பிரிஸ்மேடிக் எஃபெக்ட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
புகைப்படம் நன்றி: Ishan Agrawal
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்.இ. 2 புதிய ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஐபோன் எஸ்.இ. 2 ஸ்மார்ட்போனின் புதிய ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய ஐபோனில் எல்.சி.டி. ஸ்கிரீன், 3டி டச் அம்சம் வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் ரெட் என மூன்று நிறங்களில் வெளியாக இருக்கிறது.
புதிய ஐபோன் எஸ்.இ. 2 பார்க்க ஐபோன் 8 போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கிறது. இதில் 4.7 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, பின்புறம் ஃபிராஸ்ட்டெட் கிளாஸ் பேக் வழங்கப்படுகிறது. ஐபோன் 8 மாடலில் கிளாஸி பேக் வழங்கப்பட்டது. புகைப்படங்களை எடுக்க ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் ஒற்றை பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.

பிரைமரி கேமராவில் 12 எம்.பி. சென்சாரும், முன்புறம் 7 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம். இத்துடன் ஐபோன் எஸ்.இ. 2 மாடலில் ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட் மற்றும் அதிக பேக்கப் வழங்கும் பேட்டரியை எதிர்பார்க்கலாம். புதிய ஐபோன் எஸ்.இ. 2 பெயரில் வெளியிடப்படுமா அல்லது ஐபோன் 9 பெயரில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
ஐபோன் எஸ்.இ. 2 இந்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என நீண்ட நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் புதிய ஐபோன் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படம் நன்றி: igeeksblog
48 எம்.பி. குவாட் கேமரா செட்டப், 6.5 இன்ச் FHD+ இன்ஃபினிட்டி ஒ AMOLED டிஸ்ப்ளே கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் இன்ஃபினிட்டி ஒ சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. 123 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ், 5 எம்.பி. மேக்ரோ கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ51 சிறப்பம்சங்கள்:
- 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி-ஒ சூப்பர் AMOLED ஸ்கிரீன்
- ஆக்டா கோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்
- மாலி-G72 GPU
- 6 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. ரேம்
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ரய்டு 10 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. 2.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
- 12 எம்.பி. 123 டிகிரி அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2
- 5 எம்.பி. மேக்ரோ கேமரா, f/2.2
- 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம், ஆடியோ ஜாக்
- எஃப்.எம். ரேடியோ
- டால்பி அட்மோஸ் வசதி
- சாம்சங் பே
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் புளூ, வைட், பிளாக் ப்ரிசம் கிரஷ் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 6 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 23,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 31-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ஃப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சாம்சங் நிறுவனம் 2020 ஆண்டிற்கான தனது முதல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸ் மாடல்களை பிப்ரவரி 11-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஆண்டு சாம்சங் கேலக்ஸி எஸ்20, கேலக்ஸி எஸ்20 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா என மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் கேலக்ஸி எஸ் சீரிஸ் மாடல்களுடன் சாம்சங் தனது இரண்டாம் தலைமுறை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி இசட் ஃப்ளிப் மாடலை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. கேலக்ஸி இசட் ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
தற்சமயம் வெளியாகி இருக்கும் ரென்டர்களில் புதிய ஸ்மார்ட்போன் கிளாம்ஷெல் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இதனை பார்க்க கடந்த ஆண்டு அறிமுகமான மோட்டோ ரேசர் போன்று காட்சியளிக்கிறது. இதன் டிஸ்ப்ளேவை சுற்றி பிளாஸ்டிக் பெசல்கள் வழங்கப்படுகின்றன.

புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் ஹின்ஜ் அமைப்பை சாம்சங் முந்தைய கேலக்ஸி ஃபோல்டு மாடலில் இருந்ததை விட மேம்படுத்தி இருக்கிறது. முந்தைய ஸ்மார்ட்போன் போன்றே கேலக்ஸி இசட் ஃப்ளிப் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவிலும் ஸ்கிரீனினை பாதுகாக்கும் மெல்லிய ஸ்கிரீன் ப்ரோடெக்டர் வழங்கப்படும் என தெரிகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி இசட் ஃப்ளிப் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படலாம். இதனை சாம்சங் இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் என அழைக்கும் என கூறப்படுகிறது. இந்த டிஸ்ப்ளே ஃபுல் ஹெச்.டி. ரெசல்யூஷனை சப்போர்ட் செய்யும் என தெரிகிறது. கேலக்ஸி நோட் 10 மாடலில் உள்ளதை போன்றே புதிய ஸ்மார்ட்போனிலும் பன்ச் ஹோல் கேமரா அமைப்பு வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட்போனின் பின்புறம் 1.06 இன்ச் 300x116 பிக்சல் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. வெளிப்புற டிஸ்ப்ளே டூயல் கேமரா சென்சார்களுக்கு அடுத்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. சிறிய டிஸ்ப்ளே ஆல்வேஸ் ஆன் மோட் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. இதில் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேலக்ஸி இசட் ஃப்ளிப் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் குவிக் சார்ஜ் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது.
புகைப்படம் நன்றி: WinFuture
போக்கோ பிராண்டின் புதிய எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அம்சங்கள் மற்றும் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
போக்கோ பிராண்டின் எக்ஸ்2 ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்தியாவில் பிப்ரவரி 4-ம் தேதி அறிமுகமாக இருக்கும் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 64 எம்.பி. பிரைமரி கேமரா, ஸ்னாப்டிராகன் பிராசஸர் வழங்கப்படுகிறது.

இத்துடன் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம், பாப்-அப் ரக செல்ஃபி கேமரா, பின்புறம் கேமரா சென்சார்களின் கீழ் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனில் எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்படலாம். மேலும் ஃபாஸ்ட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப் சி போர்ட், கீழ்புறம் லவுட்ஸ்பீக்கர், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்படுகிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் டீசர்களில் ஆன்டெனா கட்-அவுட்கள் எங்கும் காணப்படவில்லை என்பதால், போக்கோ எஃப்1 போன்றே இந்த ஸ்மார்ட்போனும் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனின் மற்ற விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் இரண்டு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் இரண்டு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலையில் ரூ. 3500 வரை குறைக்கப்பட்டுள்ளது.
நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் ரூ. 15,999 விலையில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் அறிமுகமான நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் ரூ. 18,599 விலையில் வெளியானது. இரு ஸ்மார்ட்போன்களும் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தில் வெளியாகி இருக்கின்றன.
விலை குறைப்பின் படி இந்தியாவில் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் விலை ரூ. 3500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 12,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 3,100 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 15,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 2,500 குறைக்கப்பட்டு ரூ. 17,099 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இரு ஸ்மார்ட்போன்களின் புதிய விலை விவரங்கள் ஏற்கனவே ப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் மாற்றப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர், 4 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 16 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. டெப்த் கேமரா, 8 எம்.பி. வைடு ஆங்கில் லென்ஸ், முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. கேமரா, 5 எம்.பி. சென்சார், 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடல் விலை இந்திய சந்தையில் நிரந்தரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
சியோமி நிறுவனத்தின் Mi ஏ3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் Mi ஏ3 ஸ்மார்ட்போன் இதுவரை ரூ. 12,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஸ்மார்ட்போனின் விலையில் ரூ. 1000 நிரந்தரமாக குறைக்கப்படுவதாக சியோமி அறிவித்துள்ளது. அந்த வகையில் சியோமி Mi ஏ3 (4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி) ரூ. 11,999 விலையிலும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்தவரை சியோமி Mi ஏ3 ஸ்மார்ட்போனில் 6.088 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர், அதிகபட்சமாக 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும் Mi ஏ3 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் வழங்கப்படும் என சியோமி அறிவித்திருந்தது. இந்நிலையில், இதற்கான ஆண்ட்ராய்டு 10 அப்டேட் அடுத்த மாதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Mi ஏ3 ஸ்மார்ட்போனில் ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.
இத்துடன் புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், f/1.79, 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. டெப்த் சென்சார், 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் செல்ஃபி கேமரா நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து 1.6μm பிக்சல்களை வழங்குகிறது.
3டி வளைந்த கிளாஸ் பேக் கொண்டிருக்கும் Mi ஏ3 மாடலில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்படுகிறது. Mi ஏ3 ஸ்மார்ட்போனில் 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் குவிக் சார்ஜ் 3.0 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐபோன் எஸ்.இ.2 உற்பத்தி மற்றும் வெளியீட்டு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எஸ்.இ. ஸ்மார்ட்போனினை 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. ஐபோன் எஸ்.இ. பார்க்க ஐபோன் 5எஸ் போன்ற வடிவமைப்பு கொண்டிருந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் எஸ்.இ.2 ஸ்மார்ட்போன் 2020-ம் ஆண்டு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் புதிய விலை குறைந்த ஐபோன் உற்பத்தி பிப்ரவரி மாதத்தில் துவங்கி, மார்ச் மாத துவக்கத்தில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
புதிய ஐபோன் 4.7 இன்ச் எல்.சி.டி. டிஸ்ப்ளே, நாட்ச்-லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 138.5x67.4x7.8 எம்.எம். அளவில் உருவாகி இருக்கும் என தெரிகிறது. தோற்றத்தில் ஐபோன் எஸ்.இ.2 பார்க்க ஐபோன் 8 போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.

மேலும் ஐபோன் எஸ்.இ.2 மாடலில் ஐபன் 8 மாடலில் இருந்த கிளாஸி பிளாக்கிற்கு மாற்றாக ஃபிராஸ்ட்டெட் கிளாஸ் பேக் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க ஒற்றை பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய ஐபோனில் டச் ஐ.டி. அம்சம் வழங்கப்படலாம்.
புதிய விலை குறைந்த ஐபோனில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏ13 பயோனிக் பிராசஸர், 3 ஜி.பி. ரேம் மற்றும் பெரிய பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்த ஐபோன் இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் 2020 ஐபோன் மாடல்களில் பெரிய கேமரா சென்சார்கள் மற்றும் மெல்லிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் 2020 ஐபோன் சீரிஸ் மாடல்களுக்கிடையே வெவ்வேறு வடிவமைப்புகளை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. உயர் ரக 6.7 இன்ச் மாடலில் மெல்லிய வடிவமைப்பு மற்றும் பெரிய கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இத்துடன் அறிமுகமாக இருக்கும் 6.1 இன்ச் மற்றும் 5.4 இன்ச் மாடல்களில் வெவ்வேறு கேமரா மாட்யூல்கள் வழங்கப்படலாம். ஆப்பிள் நிறுவனத்திற்கு உபகரணங்களை உற்பத்தி செய்யும் சீன நிறுவன வட்டாரங்களில் இருந்து புதிய விவரங்கள் வெளியானதாக கூறப்படுகிறது. புதிய விவரங்களுடன் ஒற்றுப்போகும் வகையில் மூன்று ஐபோன்களின் முப்பறிமான மாடல்களும் வெளியாகியுள்ளன.

6.7 இன்ச் ஐபோன் 7.4 எம்.எம். மெல்லியதாக இருக்கிறது. இது ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மாடலை விட 10 சதவீதம் மெல்லியதாகும். மேலும் இது ஐபோன் 11 ப்ரோ மாடலை சற்றே உயரமாகவும் இருக்கும் என தெரிகிறது. இதேபோன்று 5.4 இன்ச் மாடலின் உயரம் ஐபோன் எஸ்.இ. அளவில் இருக்கும் என்றும் 6.10 இன்ச் மாடல் ஐபோன் 11 மற்றும் ஐபோன் 11 ப்ரோ மாடல் அளவில் இருக்கிறது.
கேமராவை பொருத்தவரை 5.4 இன்ச் மற்றும் 6.1 இன்ச் மாடல்களில் இரட்டை கேமரா சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 6.1 இன்ச் ஐபோனில் மூன்று பிரைமரி கேமராக்களும், 6.7 இன்ச் மாடலில் மூன்று லென்ஸ்கள், ஐபோன் 11 ப்ரோ மாடலுடன் ஒப்பிடும் போது பெரிய சென்சார்கள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
நான்கு புதிய ஐபோன்களும் OLED ஸ்கிரீன்களை கொண்டிருக்கும் என்றும் இவற்றில் ஃபேஸ் ஐடி அம்சம் நிச்சயம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
புகைப்படம் நன்றி: macotakara
சியோமி நிறுவனத்தின் Mi 10 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள் தொடர்ந்து பார்ப்போம்.
சியோமி நிறுவனத்தின் Mi 10 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 11-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனின் டீசர் புகைப்படம் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. மேலும் புதிய Mi 10 ஸ்மார்ட்போன் Mi மிக்ஸ் ஆல்ஃபா கான்செப்ட் போன் போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும் என தெரிகிறது.
இதுதவிர Mi 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்களும் வெளியாகியுள்ளது. இதில் புதிய ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே மற்றும் நான்கு பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்பட்டு இருக்கிறது.

சியோமி Mi 10 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கேமரா சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளன. இதன் முன்புறம் வளைந்த டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
Mi 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் கீழ்புறத்தில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட், சிம் கார்டு ஸ்லாட், மைக்ரோபோன் மற்றும் லவுட் ஸ்பீக்கர் கிரில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கூடுதலாக மற்றொரு லவுட் ஸ்பீக்கர் கிரில், இரண்டு மைக்ரோபோன்கள் வழங்கப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் சியோமி Mi 10 ஸ்மார்ட்போனில் 108 எம்.பி. பிரைமரி சென்சாருடன் மொத்தம் நான்கு கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்பட்டது.
ஹானர் பிராண்டு சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கியுள்ளது. இதன் விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹானர் பிராண்டின் புதிய 9எக்ஸ் ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் FHD பிளஸ் நாட்ச் இல்லா டிஸ்ப்ளே, கிரின் 710எஃப் சிப்செட், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் EMUI 9.1 வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. போர்டிரெயிட் கேமரா, 16 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் சஃபையர் புளூ நிறங்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் இதன் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை நேற்று (ஜனவரி 19) துவங்கிய நிலையில், தற்சமயம் ஹானர் 9எக்ஸ் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஹானர் 9எக்ஸ் சிறப்பம்சங்கள்:
- 6.59 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ 19.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் கிரின் 710 எஃப் பிராசஸர்
- ARM மாலி-G51 MP4 GPU
- 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.1.1
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 0.8μm பிக்சல், f/1.8
- 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் சென்சார், f/2.4
- 2 எம்.பி. டெப்த் கேமரா, f/2.4
- 16 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா, f/2.2
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி






