என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ்
    X
    சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ்

    இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் விலை திடீர் குறைப்பு

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் மாடலின் விலை குறைக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் விலை ரூ. 3000 வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி யு டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் மற்றும் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.

    விலை குறைப்பின் படி கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 28,999 இல் இருந்து ரூ. 3000 குறைக்கப்பட்டு ரூ. 25,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 8 ஜி.பி. ரேம் + 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 3000 குறைக்கப்பட்டு ரூ. 27,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ்

    கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, F/1.8 அப்ரேச்சர், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் செல்ஃபி எடுக்க 32 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதே கேமரா கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டிருக்கிறது.

    ஸ்மார்ட்போனின் பின்புறம் பிரத்யேக பேட்டன் மற்றும் ஹாலோகிராஃபிக் எஃபெக்ட் கொண்டிருக்கிறது. இத்துடன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×