search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப்
    X
    சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப்

    மீண்டும் விற்றுத்தீர்ந்த கேலக்ஸி இசட் ஃப்ளிப்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ஃப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இரண்டாவது விற்பனையில் உடனடியாக விற்றுத் தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் ஃப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இரண்டாவது விற்பனையும் நிமிடங்களில் நிறைவுற்று விட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 28-ம் தேதி காலை 11 மணிக்கு துவங்கிய இரண்டாவது விற்பனை மதியத்திற்குள் நிறைவடைந்ததாக சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிப்ரவரி 28-ம் தேதி முன்பதிவு செய்தவர்களுக்கு சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப் ஸ்மார்ட்போன் மார்ச் 2-ம் தேதி விநியோகம் செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கேலக்ஸி இசட் ஃப்ளிப் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1,09,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டைனமிக் AMOLED 2636x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் இந்த டிஸ்ப்ளேவினை இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் என அழைக்கிறது. இதில் மிக மெல்லிய கிளாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை 200,000 அதிக முறை மடிக்க முடியும்.

    சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப்

    கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனின் வெளி்ப்புறம் 1.1 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே 300x112 ரெசல்யூஷனில் வழங்கப்பட்டுள்ளது. இதன் கவர் டிஸ்ப்ளே மோட்டோரோலா ரேசர் மாடலை போன்றே நோட்டிஃபிகேஷன்களை காண்பிக்கிறது. இதில் பிரத்யேக ஃபிளெக்ஸ் மோட் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன் செயலிகளை பாதியாக பிரித்து, கீழ்புறம் கண்ட்ரோல்கள் கொண்டுள்ளது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் ஆக்டா கோர் பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமராக்கள்: 12 எம்.பி. வைடு ஆங்கில் கேமரா, f/1.8, 12 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2 வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 10 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4 வழங்கப்பட்டுள்ளது.

    இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×