என் மலர்
தொழில்நுட்பம்

கேலக்ஸி ஏ40
இன்ஃபினிட்டி யு டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமராக்களுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ51 மற்றும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டது.
அந்த வகையில் புதிய கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போன் இரு மாடல்களுக்கு இடையில் நிலை நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி யு டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. முந்தைய கேலக்ஸி 51 மற்றும் ஏ71 ஸ்மார்ட்போன்களில் இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. இவை செவ்வக கேமரா பம்ப்பினுள் செங்குத்தான பொருத்தப்படும் என கூறப்படுகிறது. கேமரா சென்சார்களின் கீழ் ஃபிளாஷ் பொருத்தப்படுகிறது.

இத்துடன் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் கிளாஸி வைட் மற்றும் மேட் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டு மெல்லிய வடிவமைப்பு மற்றும் மெட்டல் எட்ஜ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் கீழ்புறம் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், யு.எஸ்.பி. டைப் சி போர்ட், ஸ்பீக்கர் கிரில் உள்ளிட்டவை வழங்கப்படலாம். பக்கவாட்டில் பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் வலது புறத்தில் வழங்கப்படும் என தெரிகிறது.
மற்ற சிறப்பம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ41 ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படலாம். பின்புறம் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், 48 எம்.பி. மெயின் சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மற்ற இரு சென்சார்கள் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.
பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை என்பதால், இதில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 10, 4 ஜி.பி. ரேம், மீடியாடெக் ஹீலியோ பி65 ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story






