search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கேலக்ஸி எம்30எஸ்
    X
    கேலக்ஸி எம்30எஸ்

    கேலக்ஸி எம்30எஸ் புதிய வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக பிரபல மாடலாக இருக்கிறது. இந்தியாவில் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன் ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ளது. கேலக்ஸி எம்30எஸ் வெற்றியை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனை வெளியிட்டது. 

    இந்நிலையில், சாம்சங் தனது கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. புதிய கேலக்ஸி எம்30எஸ் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஓபல் பிளாக், சஃபையர் புளூ மற்றும் குவாட்ஸ் கிரீன் என மூன்று டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது.

    முன்னதாக கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை குறைக்கப்பட்டு ரூ. 12,999 என்றும், டாப் எண்ட் வேரியண்ட் விலை சாம்சங் தளத்தில் ரூ. 15,999 என குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விற்பனை மார்ச் 14-ம் தேதி அமேசான் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    கேலக்ஸி எம்30எஸ்

    சிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 10 என்.எம். பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. 1.5 இயங்குதளம் கொண்டிருக்கும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    பிளாஸ்டிக் மூலம் உருவாகியிருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் டூயல்-டோன் ஃபினிஷ், பிரத்யேக டூயல் சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், யு.எஸ்.பி. டைப்-சி வழங்கப்பட்டுள்ளது

    Next Story
    ×