search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மோட்டோரோலா ரேசர்
    X
    மோட்டோரோலா ரேசர்

    மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் மார்ச் 16-ம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கிறது. 

    சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் மடிக்கக்கூடிய OLED 21:9 சினிமாவிஷன் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் இரண்டாவது ஸ்கிரீன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஸ்கிரீனினை குவிக் வியூ எக்ஸ்டெர்னல் டிஸ்ப்ளே என அழைக்கிறது. 

    இதை கொண்டு நோட்டிஃபிகேஷன், மியூசிக், கூகுள் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்களை வேகமாக இயக்க முடியும். புகைப்படங்களை எடுக்க புதிய ஸ்மார்ட்போனில் ஒற்றை கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதை ஸ்மார்ட்போன் திறக்கப்பட்ட நிலையில் பிரைமரி கேமரா போன்றும், மடிக்கப்பட்ட நிலையில் செல்ஃபி கேமரா போன்றும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மோட்டோரோலா ரேசர்

    மோட்டோரோலா ரேசர் சிறப்பம்சங்கள்:

    – 6.2 இன்ச் QLED HD+ 876×2142 பிக்சல் மடிக்கக்கூடிய ஸ்கிரீன்
    – 2.7 இன்ச் 600×800 பிக்சல் குவிக் வியூ டிஸ்ப்ளே
    – ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர்
    – 6 ஜி.பி. பேம்
    – 128 ஜி.பி. மெமரி
    – 16 எம்.பி. f/1.7 கேமரா
    – 5 எம்.பி. கேமரா
    – ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
    – 2510 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    – 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிக் வசதி
    – இசிம் வசதி
    – ப்ளூடூத், 4ஜி எல்.டி.இ., வைபை

    சர்வதேச சந்தையில் மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போனின் விலை 1499.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,07,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோரோலா ரேசர் ஸ்மார்ட்போன் இந்திய விலை வரும் நாட்களில் தெரியவரும்.
    Next Story
    ×