search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கேலக்ஸி எம்21
    X
    கேலக்ஸி எம்21

    6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி. மூன்று கேமரா சென்சார் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

    6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 48 எம்.பி. மூன்று கேமரா சென்சார் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்



    சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனினை மார்ச் 16-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இது கடந்த மாதம் சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கும் சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, FHD பிளஸ் ரெசல்யூஷன் மற்றும் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு சென்சார் மற்றும் டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது.

    கேலக்ஸி எம்21 வெளியீட்டு விவரம்

    இத்துடன் 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் மற்றும் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. 

    முன்னதாக வெளியான தகவல்களில் SM-M215F மாடல் நம்பர் கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியானது. அதில் புதிய ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 9611 பிராசஸர், மாலி G72MP3 GPU கொண்டிருக்கும் என கூறப்பட்டது. மெமரியை பொருத்தவரை 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0 வழங்கப்படலாம்.
    Next Story
    ×