என் மலர்
கணினி
இன்ஸ்டாகிராம் செயலியில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சோதனை துவங்கப்பட்ட அம்சம், கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியில் இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் ஸ்டோரீக்கள் ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டால் பயனர்களுக்கு தெரியப்படுத்தும் அம்சம் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது.
இந்த தகவல் குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில், ஃபேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் செயலி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்த அம்சத்திற்கான சோதனை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி ஸ்டோரீக்களை யாரேனும் ஸ்கிரீன்ஷாட் எடுத்தால், இதுகுறித்த தகவல் வழங்கப்படாது.
இதுகுறித்து பஸ்ஃபீட் வெளியிட்டிருக்கும் தகவல்களில் இன்ஸ்டாகிராம் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில், இந்த அம்சத்திற்கான சோதனை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தற்சமயம் ஸ்னாப்சாட் வழங்குவதை போன்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது குறித்து நோட்டிஃபிகேஷன் வழங்கப்படாது.

முன்னதாக சோதனை காலத்தில் ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டால், புஷ் நோட்டிஃபிகேஷன்கள் அனுப்பப்படாமல், சிறப்பு குறியீடு மூலம் பயனர்களுக்கு தெரியப்படுத்தப்படும் என கூறப்பட்டது. இது ஸ்னாப்சாட் சேவைக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது, ஸ்னாப் நிறுவன சேவையில் ஒவ்வொரு முறை ஸ்கிரீஷாட் எடுக்கப்படும் போதும் பயனருக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் தகவல் அனுப்பப்படும்.
இன்ஸ்டாகிராம் செயலியின் டைரக்ட் மெசேஜ் (Direct Message) சேவையில் பயனர்கள் ஸ்கிரீன்ஷாட் எடுத்தால், பயனர்களுக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்பப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் செயலியின் ஸ்டோரீக்களில் இருந்தே நேரடியாக ஷாப்பிங் செய்யும் வசதி சேர்க்கப்பட்டது. இதனால் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களில் தெரியும் சிறிய ஷாப்பிங் பேக் ஐகானை க்ளிக் செய்தே குறிப்பிட்ட பொருளின் முழு விவரங்களை அறிந்து கொண்டு ஷாப்பிங் செய்ய முடியும்.
ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஸ்மார்ட் சாதனங்களின் புரட்சி உங்களது வாழ்க்கை முறையை தொடர்ந்து மாற்றியமைத்து வருகிறது.
நமது அன்றாட வாழ்வில் நமக்கு தேவையான பல்வேறு அவசர தகவல்களில் துவங்கி, பொழுதுபோக்கு என எல்லாவற்றுக்கும் தீர்வு வழங்கும் அசாத்திய பணிகளை நமது கையடக்க சாதனங்கள் மிக சுலபமாக செய்து முடிக்கின்றன. வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் ஸ்மார்ட்போன் செய்யும் பணிகளில் பாதியை ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஃபிட்னஸ் டிராக்கர் போன்ற சாதனங்கள் பறித்துக் கொள்கின்றன.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள், சவுண்ட் சிஸ்டம்கள், மொபைல் மற்றும் இதர மின்சாதனங்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக ஜெப்ரானிக்ஸ் இருக்கிறது. இந்நிறுவனம் கையில் அணியக்கூடிய பொருட்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் 'ஸ்மார்ட் டைம் 200' என்று அழைக்கப்படும் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ஸ்மார்ட்போனினை ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்துடன் இணைந்து கொள்ள முடியும். இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தில் இன்பில்ட் ஸ்பீக்கர் மற்றும் மைக் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளை க்ளிக் செய்து வாட்ச் மூலம் பேசலாம். இதன் இன்பில்ட் ஸ்பீக்கர் பயனருக்கு வசதியாக இருக்கும் படி தேவையான அளவு ஒலியெழுப்புகிறது.
அழைப்புகள் சார்ந்த விவரம் மட்டுமின்றி எஸ்எம்எஸ், மின்னஞ்சல் மற்றும் பல்வேறு சேவைகளுக்கான நோட்டிஃபிகேஷன்களையும் இந்த ஸ்மார்ட்வாட்ச் வழங்குகிறது. இதில் வழங்கப்பட்டு இருக்கும் பீடோமீட்டர் அம்சம் நீங்கள் எத்தனை தூரம் நடந்திருக்கிறீர்கள் என்ற விவரத்தை வழங்கும். இத்துடன் உங்களது உறக்கம் சார்ந்த விவரங்களையும் டிராக் செய்து வழங்குகிறது.

ஸ்மார்ட் டைம் 200 சிறப்பம்சங்கள்:
- 2.71 செ.மீ டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
- நானோ சிம் ஸ்லாட் வசதி
- மைக்ரோ SD கார்டு ஸ்லாட்
- BT வயர்லெஸ் வசதி
- தொடு திரை வசதி
- இன்-பில்ட் ஸ்பீக்கர் & மைக் கொண்டது
- பீடோமீட்டர் மற்றும் ஸ்லீப் மானிட்டர்
- முன்பக்க கேமரா
ஸ்மார்ட் டைம் 200 சாதனத்தில் மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்க மைக்ரோ SD கார்டு வசதி வழங்கப்பட்டுள்ளது. 380 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஸ்மார்ட் டைம் 200 வட்டவடிவத்தில் 2.71 சென்டிமீட்டர் அளவில் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.
இத்துடன் மைக்ரோ சிம் / நானோ சிம் ஸ்லாட் வழங்கப்பட்டிருப்பதால் இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை ஒரு முழுமையான தனி சாதனமாகவும் பயன்படுத்த முடியும். இன்-பில்ட் ஸ்பீக்கர், முன்பக்க கேமரா, சவுண்ட் ரெகார்டர், பிரவுசர், ஃபைல் மேனேஜர் மற்றும் பல்வேறு அம்சங்களுடன் தொடுதிரை வசதி கொண்டிருக்கும் ஸ்மார்ட் டைம் 200 உங்களின் பொழுதுபோக்குக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் இருக்கிறது.
இந்தியாவில் ஜெப்ரானிக்ஸ் ஸ்மார்ட் டைம் 200 விலை ரூ.2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செவ்வகம் மற்றும் வட்ட வடிவம் கொண்ட ஸ்மார்ட் டைம் 200 சாதனத்தை இந்தியாவின் முன்னணி ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் கியூ எல்இடி, யுஹெச்டி, ஸ்மார்ட் கனெக்ட் மற்றும் ஜாய் கான்செர்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
சாம்சங் நிறுவனத்தின் 2018 தொலைகாட்சி மாடல்கள் - கியூ எல்இடி (QLED), மிட்-ரேஞ்ச் யுஹெச்டி (UHD) மற்றும் மேக் ஃபார் இந்தியா கான்செர்ட் சீரிஸ் டிவிக்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
புதிய தொலைகாட்சி மாடல்களில் தலைசிறந்த வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட திரை மற்றும் ஸ்மார்ட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. சாம்சங் புதிய கியூ எல்இடி டிவிக்களில் ஆம்பியன்ட் மோட் வழங்கப்பட்டு இருக்கிறது, இது நாள் முழுக்க பயனுள்ள தகவல்களை வழங்கி கொண்டிருக்கும். இந்த டிவி சுவரில் மிக நேர்த்தியாக பொருந்திக் கொண்டு காட்சிகளை சிறப்பாக ஒளிபரப்புகிறது.
இத்துடன் வெப்பநிலை விவரங்களை திரையில் வழங்குவதோடு, உங்களின் புகைப்படங்களை பேக்கிரவுன்டு புகைப்படங்களாக செட் செய்யும் வசதியை வழங்குகிறது.

இவற்றில் உள்ள ஒன் இன்விசிபிள் கனெக்ஷன், சிறிய கேபிள் பயனரின் பவர் மற்றும் ஏவி தகவல்களை டிவிக்கு கொண்டு செல்கிறது. அதிகபட்சம் 15 மீட்டர் நீலமாக இருக்கும் இந்த கேபிள் டிவியை டேட்டா அல்லது மின்சார இணைப்பு இருக்கும் இடத்தில் வைக்க வேண்டிய தேவையை போக்குகிறது.
இத்துடன் எஸ் வாய்ஸ் (S VOICE) உடன் உரையாட முடியும். மேலும் ஸ்மார்ட் திங்ஸ் ஆப் வழங்கப்பட்டு இருப்பதால், டிவியை மற்ற இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IOT) சாதனங்களுடன் இணைத்து, தகவல் பரிமாற்றம், நோட்டிஃபிகேஷன் மற்றும் ஸ்கிரீன் மிரரிங் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.
புதிய சாம்சங் யுஹெச்டி டிவிக்களில் சுப்பீரியர் ஹை-டைனமிக் ரேஞ்ச் (superior High Dynamic Range) மூலம் இயங்குகிறது. இவை மிக நுனுக்கமான பிரைட்னஸ், டீப் கான்ட்ராஸ்ட், காட்சிகளை அதிக தெளிவாக அவற்றின் இயற்கை நிறங்களில் பிரதிபலிக்கும். இதன் டைனமிக் க்ரிஸ்டல் கலர் தொழில்நுட்பம் அதிக தரத்தில் காட்சிகளை பார்க்க வழி செய்கிறது. யுஹெச்டி வேரியன்ட்களில் ரிமோட் கன்ட்ரோல், ஸ்மார்ட் ஹப் மற்றும் ஸ்மார்ட் கன்வெர்ஜன்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கான்செர்ட் சீரிஸ் மாடல்களில் ஸ்மார்ட் கான்செர்ட் மற்றும் ஜாய் கான்செர்ட் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. 2018 கான்செர்ட் சீரிஸ் டிவிக்களில் புதிய சவுன்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது ஹார்டுவேர் மற்றும் மென்பொருள்களை இணைந்து அதிக தரமுள்ள சினிமாடிக் அனுபவத்தை வழங்குகிறது. இதில் வழங்கப்படடு இருக்கும் 4 ஸ்பீக்கர்கள் ஒவ்வொன்றும் 10W சவுன்ட் வழங்குகிறது.
இத்துடன் ப்ளூடூத் சப்போர்ட் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் ஸ்மார்ட் ஹப் அம்சம் இணையத்தில் தரவுகளை வழங்கும் ஜியோ சினிமா, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற பல்வேறு சேவைகளில் உள்ள வீடியோக்களை பார்த்து ரசிக்க முடியும்.
புதிய 8 சாம்சங் கியூ எல்இடி டிவிக்கள் 55-இன்ச் முதல் 75-இன்ச் வரை கிடைக்கின்றன, இவற்றின் விலை ரூ.2,45,000 முதல் துவங்குகிறது. என்ட்ரி-லெவல் யுஹெச்டி மாடல் 7100 சீரிஸ் முதல் துவங்குகிறது. யுஹெச்டி டிவி விலை ரூ.64,900 முதல் துவங்குகிறது. ஸ்மார்ட் கான்செர்ட் மற்றும் ஜாய் கான்செர்ட் டிவி மாடல்கள் விலை ரூ.27,500 முதல் துவங்குகிறது.
கார்மின் விவோஆக்டிவ் 3 மியூசிக் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் அம்சங்கள் மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
கார்மின் நிறுவனத்தின் விவோஆக்டிவ் 3 மியூசிக் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மியூசிக் மற்றும் ஜிபிஎஸ் வசதி கொண்டிருக்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச்-இல் அதிகபட்சம் 500 பாடல்களை பிரபல மியூசிக் ஸ்ட்ரீமிங் தளங்களில் இருந்து டவுன்லோடு செய்ய முடியும்.
விவோஆக்டிவ் 3 அறிமுகம் செய்யப்பட்ட போது வழங்கப்பட்ட ஃபிட்னஸ் அம்சம், கார்மின் பே கான்டாக்ட்லெஸ் பேமென்ட் உள்ளிட்டவை புதிய சாதனத்திலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

கார்மின் விவோஆக்டிவ் 3 சிறப்பம்சங்கள்:
- 1.2 இன்ச் 240x240 பிக்சல் ஃபுல்-கலர் கார்மின் க்ரோமா டிஸ்ப்ளே
- வாட்டர் ரெசிஸ்டன்ட் (5 ATM)
- ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் வசதி
- ஸ்டெப் கவுன்ட்டர், மூவ் பார்
- ஆட்டோ கோல்
- ஸ்லீப் மானிட்டரிங், கலோரி உள்ளிட்ட உடல் அசைவுகளை டிராக் செய்யும் வசதி
- மியூசிக் ஸ்டோரேஜ்: அதிகபட்சம் 500 பாடல்களை பதிவு செய்யும் வசதி
- பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட ஜிபிஎஸ் மற்றும் ஸ்போர்ட் செயலிகள்
ஸ்மார்ட்வாட்ச் மோடில் ஏழு நாட்கள் பேக்கப் வழங்குவதோடு, ஜிபிஎஸ் மற்றும் மியூசிக் மோடில் 5 மணி நேர பேக்கப், மியூசிக் இல்லாமல் ஜிபிஎஸ் மோடில் 13 மணி நேர பேக்கப் வழங்கும் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
விவோஆக்டிவ் 3 மியூசிக் பிளாக் சிலிகான் 20மில்லிமீட்டர் பேன்ட் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் இந்த சாதனம் வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது. இதன் விலை 299.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.20,265) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியில் ஷாப்பிங் செய்வதற்கான வசதி ஃபீட்களில் இருந்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கலிஃபோர்னியா:
இன்ஸ்டாகிராம் செயலியில் ஷாப்பிங் செய்யும் வசதி ஃபீட்களில் இருந்து ஸ்டோரீக்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களில் தெரியும் சிறிய ஷாப்பிங் பேக் ஐகானை க்ளிக் செய்து குறிப்பிட்ட பொருளின் முழு விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.
அடிடாஸ் முதல் அரிட்சா வரை, உலகின் பிரபல பிரான்டு பொருட்களை பயனர்கள் இனி இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களில் ஷாப் செய்ய முடியும். புதிய ஸ்டைல் மற்றும் டிரென்ட் சார்ந்த விவரங்களை அறிந்து கொள்ளவே பலர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதாக இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய ஆய்வின் படி இன்ஸ்டாகிராம் வாசிகள், அவ்வப்போது ஸ்டோரீக்களை பார்த்து அவர்கள் விரும்பும் பிரான்டுகளின் புதிய பொருட்கள் சார்ந்த விவரங்களை தெரிந்து கொள்வதாக தெரிவித்துள்ளனர். பல்வேறு பிரான்டுகளும் தங்களது பொருட்களின் விவரங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது பயனர்களுக்கு பயன் தரும் வகையில் உள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியின் சமீபத்திய அப்டேட் சென்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களில் தேர்வு செய்யப்பட்ட பிரான்டு பொருட்களை வாங்கிட முடியும்.
ஃபேஸ்புக் தளத்தில் மெமரீஸ் எனும் புதிய பக்கம் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கலிஃபோர்னியா:
ஃபேஸ்புக் தளத்தில் மெமரீஸ் (Memories) என்ற பெயரில் புதிய பக்கம் திறக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய மெமரீஸ் பக்கத்தில் பயனர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொண்ட போஸ்ட், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை நினைவு கூற முடியும்.
ஃபேஸ்புக்கில் முன்னதாக வழங்கப்பட்டிருந்த ஆன் திஸ் டே (On This Day) அம்சத்தை தினமும் 9 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மெமரீஸ் பக்கம் இதே அம்சத்திற்கான புதிய நீட்சியாக பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த அம்சம் பயனர்களை மனதளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது தெரியவந்தது.
அந்த வகையில் ஆன் திஸ் டே அம்சம் மேம்படுத்தப்பட்டு, பயனர்கள் தங்களின் கடந்த கால நினைவுகளை மீண்டும் திரும்ப பார்ப்பதை மிக எளிமையாக்குகிறது. புதிய மெமரீஸ் பக்கத்தில் ஆன் திஸ் டே (On This Day), ஃப்ரென்ட்ஸ் மேட் ஆன் திஸ் டே (Friends Made On This Day), ரீகேப்ஸ் ஆஃப் மெமரீஸ் (Recaps of Memories), மெமரீஸ் யூ மே ஹேவ் மிஸ்டு (Memories You May Have Missed) போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
புதிய மெமரீஸ் ஆப்ஷனில் வழங்கப்பட்டு இருக்கும் ஒவ்வொரு ஆப்ஷனிலும் குறிப்பிட்ட தேதியில் கடந்த ஆண்டுகளில் நீங்கள் பதிவிட்ட போஸ்ட்கள், புகைப்படங்களை பார்க்க முடியும். இத்துடன் மெமரீஸ் பகுதியில் கடந்த வாரம் நீங்கள் தவற விட்ட போஸ்ட்களை உங்களுக்கு பட்டியலிடும்.
இந்தியாவில் அமேசான் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
அமேசான் இந்தியா தனது எக்கோ மற்றும் எக்கோ டாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் விலையை குறைத்திருக்கிறது.
இந்தியாவில் அமேசான் எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர் தற்சமயம் ரூ.8,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது, முன்னதாக இதன் விலை ரூ.9,999 என்ற வகையில் தற்சமயம் ரூ.1000 குறைக்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று அமேசான் எக்கோ டாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் விலை 8% குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.4,099 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அமேசான் எக்கோ ஸ்பாட் மற்றும் எக்கோ பிளஸ் ஸ்பீக்கர்களின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை. இவை முறையே ரூ.12,999 மற்றும் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இரண்டு எக்கோ ஸ்பீக்கர்களை ஒன்றாக வாங்குவோருக்கு ரூ.1,000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனினும் அமேசான் எக்கோ பிளாக் மற்றும் கிரெ நிறங்களை தேர்வு செய்வோருக்கு மட்டுமே இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஃப்லைன் ஸ்டோர்களில் இரண்டு சாதனங்களின் விலை குறைப்பு குறித்து எவ்வித தகவலும் இல்லை.

முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அமேசான் நிறுவனம் எக்கோ டாட், எக்கோ மற்றும் எக்கோ பிளஸ் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்து, இவை இந்தியா முழுக்க முன்னணி ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் விற்பநை செய்யப்படும் என அறிவித்தது. புதிய ஸ்பீக்கர்களில் வாய்ஸ் கன்ட்ரோல் வசதி வழங்கப்பட்டிருக்கிறது.
அமேசான் எக்கோ ஸ்பீக்கர்கள் அலெக்சா டிஜிட்டல் அசிஸ்டண்ட் மூலம் இயங்குகிறது. இவை வெப்பநிலையை அறிந்து கொண்டு தெரிவிப்பது, ரிமைன்டர் வசதியை செட் செய்தால் சரியான நேரத்தில் நினைவூட்டும். இத்துடன் ஸ்போர்ட்ஸ் ஸ்கோர், ஷாப்பிங் லிஸ்ட் மற்றும் பல்வேறு தகவல்களை வழங்கும்.
பாட்டு கேட்க நினைத்தால், அமேசான் பிரைம் மியூசிக், சாவன் மற்றும் இதர சேவைகளில் இருந்து உங்களுக்கு விருப்பமான பாடல்களை இயக்கும். ஸ்மார்ட் பல்பு மற்றும் ஸ்விட்ச் போன்றவற்றுடன் இணைத்து விட்டால் அவற்றையும் டிஜிட்டல் அசிஸ்டன்ட் இயக்கும்.
ஜிமெயில் ஆன்டராய்டு செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. புதிய அம்சம் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
ஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டு வருகிறது. இவை மின்னஞ்சல்களில் வலது மற்றும் இடது புறமாக ஸ்வைப் செய்து அவற்றின் ஆக்ஷன்களை கஸ்டமைஸ் செய்கிறது.
ஆன்ட்ராய்டு தளத்தின் புதிய வெர்ஷன் 8.5.20-வில் கிடைக்கும் இந்த வசதி, வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்டில் கிடைக்குமா அல்லது இது சர்வெர் சார்ந்த அப்டேட்டா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் ஜிமெயில் பயனர்கள் இனி வலது மற்றும் இடது புற ஸ்வைப்களுக்கான கன்ட்ரோல்களை மாற்றியமைக்க முடியும்.
ஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியில் வழக்கமாக இருபுறமும் ஸ்வைப் செய்தால் மின்னஞ்சல்கள் ஆர்ச்சிவ் செய்யப்படும். ஆன்ட்ராய்டு போலீஸ் மூலம் முதலில் கண்டறியப்பட்ட இந்த அம்சம் மே 30-ம் தேதி வாக்கில் வெளியிடப்பட்ட சமீபத்திய அப்டேட் மூலம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அம்சத்தை இயக்க ஜிமெயில் ஆன்ட்ராய்டு செயலியின் செட்டிங்ஸ் -- ஜெனரல் செட்டிங்ஸ் -- ஸ்வைப் ஆக்ஷன்ஸ் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷன்களில் ஆர்ச்சிவ், டெலீட், மார்க் ஆஸ் ரீட்/ அன்ரீட், மூவ் டூ மற்றும் ஸ்னூஸ் போன்ற ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
புதிய அப்டேட் மூலம் ஜிமெயில் இந்த அம்சத்தை அதிகம் தெரிவிக்கவில்லை என்றாலும், பிழை திருத்தங்கள் மற்றும் மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் ஜிமெயில் தளத்தில் மிகப்பெரிய அப்டேட் வழங்கப்பட்டது. அந்த வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய வடிவமைப்பு மாற்றம் செய்யப்பட்டது. இதே அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு இமெயில் ஷார்ட்கட்கள், ஸ்மார்ட் ரிப்ளை, கான்ஃபிடென்ஷியல் மோட் மற்றும் நேட்டிவ் ஆஃப்லைன் மோட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டது.
சியோமி நிறுவனத்தின் MIUI 10 குளோபல் வெளீயீடு இந்தியாவில் நேற்று நடைபெற்றது. இதில் MIUI 10 தளத்துக்கான இந்திய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன.
புதுடெல்லி:
சியோமி நிறுவனத்தின் MIUI 10 குளோபல் வெளியீடு ரெட்மி வை2 ஸ்மார்ட்போனுடன் நேற்று நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. புதிய MIUI 10 தளத்தில் செயல்திறன் மேம்படுத்தப்பட்டு, ஜெஸ்ட்யூர்கள் கொண்ட ஃபுல் ஸ்கிரீன் அனுபவம், இயற்கை ஒலி, ஆம்பியன்ட் நாய்ஸ், செயற்கை நுண்ணறிவு மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
வழக்கம்போல இம்முறையும் புதிய MIUI 10 தளத்தில் இந்திய பயனர்களுக்கென விசேஷ அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பயனர்கள் நேரடியாக கேமரா ஆப் மூலம் பேடிஎம் கியூஆர் கோடுகளை ஸ்கேன் செய்ய முடியும், அதிநவீன இணைய வசதி, மெசேஜிங் சேவையில் க்விக் மெனுக்கள், Mi மியூசிக் மற்றும் Mi வீடியோ செயலிகளில் பாடல்கள் மற்றும் வீடியோக்களை பிராந்திய மொழிகளில் பயன்படுத்தும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
புதிய MIUI 10 தளத்தில் கேமரா ஆப் பேடிஎம் கியூஆர் கோடுகளை ஸ்கேன் செய்து நேரடியாக பேடிஎம் ஆப் மூலம் செக்-அவுட் செய்யும் வசதியை வழங்குகிறது.

மெசேஜிங் க்விக் மெனு
எஸ்எம்எஸ் சென்டர் ஐடி மற்றும் காலர் ஐடி அம்சங்கள் ஏற்கனவே MIUI தளத்தில் கிடைக்கிறது. எஸ்எம்எஸ் சென்டர் ஐடி தற்சமயம் 65% ஐடென்டிஃபை ரேட் கொண்டுள்ளது. MIUI 10 தளத்தில் வங்கிகளில் இருந்து வரும் மெசேஜ்களுக்கு ரிப்ளை பட்டன்கள் நீக்கப்பட்டு க்விக் மெனு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றை க்ளிக் செய்யும் போது குறிப்பிட்ட வலைத்தளங்கள், செயலிகள் அல்லது அருகாமையில் உள்ள ஏடிஎம் மையங்களை கூகுள் மேப்ஸ் மூலம் பார்க்க முடியும்.
இந்த அம்சம் உங்களுக்கு வரும் குறுந்தகவலை யார் அனுப்புகின்றார்கள் என்பதன் அடிப்படையில் வேறுபடும். தற்சமயம் க்விக் மெனு இந்தியாவில் 100-க்கும் அதிக சேவைகளுக்கு கிடைக்கிறது.
MIUI 10 தளத்தில் உங்களுக்கு வரும் ரயில் டிக்கெட் எஸ்எம்எஸ்-களை தானாக அறிந்து கொண்டு, அவற்றில் உள்ள தகவல்களை சிறப்பான முறையில் கார்டுகளாக மாற்றிவிடும்.

பிரவுசர்களில் வெப் ஆப்
ப்ரோகிரெசிவ் வெப் ஆப் சப்போர்ட் ப்ளிப்கார்ட், ஓலா, ஓயோ மற்றும் இதர சேவைகளை செயலிகளை பயன்படுத்துவதை போன்றே இயக்க முடியும். இதற்கு நீங்கள் கூடுதலாக எதையும் டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. இந்த அம்சம் இந்தோனேஷியாவிலும் வழங்கப்படுகிறது.
சியோமி நேற்று (ஜூன் 7, 2018) அறிமுகம் செய்த MIUI 10 பீட்டா ஜூன் 14-ம் தேதி முதல் வெளியிடப்படுகிறது. இதன் ஸ்டேபிள் வெளியீடு செப்டம்பர் மாத வாக்கில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களின் தகவல்களை சீன நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டதாக அறிவித்துள்ள நிலையில், பயனர் தகவல்களை சேகரிக்கவுமில்லை, சேமிக்கவுமில்லை என ஹூவாய் அறிவித்துள்ளது.
பீஜிங்:
சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் தகவல்களை சேகரிக்கவும் இல்லை அவற்றை சேமிக்கவும் இல்லை என அறிவித்துள்ளது.
முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களின் தகவல்களை ஹூவாய் உள்பட நான்கு சீன நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டதை ஒப்புக் கொண்டிருந்தது. அமெரிக்க புலனாய்வு அமைப்புகளால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அறிவிக்கப்பட்ட ஹூவாய் நிறுவனத்துடன் தகவல் பரிமாற்றம் செய்தது, ஃபேஸ்புக் மீது மீண்டும் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
சீனாவை சேர்ந்த ஹூவாய், லெனோவோ, ஒப்போ மற்றும் டிசிஎல் போன்ற நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் நிறுவனம், தனது பயனர் தகவல்களை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தமிட்டிருக்கிறது. எனினும் இந்த ஒப்பந்தங்களின் கீழ் வழங்கப்பட்ட தகவல்கள் கட்டுப்பாடுகளுடன் ஃபேஸ்புக் சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டன என ஃபேஸ்புக் நிறுவனத்தின் மொபைல் ஒப்பந்த பிரிவுக்கான துணை தலைவர் ஃபிரான்சிஸ்கோ வரெலா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்த அறிக்கை, நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட செய்தி குறிப்புக்கு பதில் அளிக்கும் வகையில் வெளியிடப்பட்டது. டைம்ஸ் பத்திரிக்கை செய்தியில் ஃபேஸ்புக் எவ்வாறு அதன் பயனர்களின் தகவல்களை மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வழங்கியது என்ற விவரங்கள் இடம்பெற்றிருந்தது.

கோப்பு படம்
ஹூவாய், லெனோவோ, ஒப்போ மற்றும் டிசிஎல் போன்ற சீன நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் டேட்டா பகிர்ந்து கொள்வது குறித்த ஒப்பந்தங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்த வழி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வகை ஒப்பந்தங்களின் மூலம் 2007-ம் ஆண்டு முதல் ஃபேஸ்புக் தளத்தை மொபைலில் பயன்படுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் போடப்பட்டிருக்கின்றன.
"ஹூவாய் மற்றும் டிசிஎல் போன்ற நிறுவனங்களுடன் ஃபேஸ்புக் ஏபிஐ - அப்ளிகேஷன் ப்ரோகிராமிங் இன்டர்ஃபேஸ் தகவல்களை பகிர்ந்து கொண்ட விவகாரம் சட்ட ரீதியாக அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஃபேஸ்புக் தனது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை சீன சர்வர்களுக்கு வழங்கவில்லை என்பதை எவ்வாறு விளக்கும் என அறிந்து கொள்ள விரும்புகிறேன்," என புலனாய்வு பிரிவு துணை தலைவர் மார்க் வார்னர் தெரிவித்துள்ளார்.
ஹூவாய் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தங்களின் படி வாடிக்கைாயளர்களின் தகவல்கள் ஹூவாய் சர்வர்களில் சேமிக்கப்படாமல், வாடிக்கையாளர் சாதனத்தில் தான் சேமிக்கப்பட்டது என்றும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வரெலா தெரிவித்தார்.
ஹூவாய் சார்பில் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள் பயனர் சேவையை மேம்படுத்தும் நோக்கம் கொண்டது என ஹூவாய் தெரிவித்துள்ளது. “மற்ற முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களை போன்றே ஹூவாய் நிறுவனமும் ஃபேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து தளத்தின் சேவைகளை பயனர்களுக்கு மிக எளிமையாக வழங்கப்பட்டன,” என ஹூவாய் நிறுவன செய்தி தொடர்பாளர் ஜோ கெல்லி தெரிவித்துள்ளார்.
“ஹூவாய் நிறுவனம் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் தகவல்களை கேகரித்து, சேமிக்கவில்லை.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த ஆப் டெவலப்பர் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆப்பிள் டிசைன் விருது வென்றிருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கலிஃபோர்னியா:
சென்னையை சேர்ந்த ஆப் டெவலப்பர் ஸ்டார்ட்-அப் வேப்பிள்ஸ்டஃப் (WapleStuff) ஆப்பிள் டிசைன் விருது 2018 வென்றுள்ளது. கலிஃபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் நடைபெற்று வரும் ஆப்பிள் 2018 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் இதற்கான அறிவிப்பு வெளியானது.
கேல்ஸி (Calzy) என்ற கால்குலேட்டர் செயலிக்காக வேப்பிள்ஸ்டஃப் இந்த விருதை வென்றுள்ளது. மேக், ஐபோன், ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களில் இந்த செயலி கிடைக்கிறது. 2018 ஆப்பிள் டிசைன் விருது மொத்தம் 10 செயலிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.159 விலையில் கிடைக்கும் கால்ஸி ஆப் ஐஓஎஸ் 10.0 மற்றும் அதற்கும் புதிய இயங்குதளங்களில் கிடைக்கிறது. பிளே ஸ்டோரில் 5 புள்ளிகளுக்கு 4.7 புள்ளிகளை பெற்றிருக்கிறது. கால்ஸி செயலியில் வரும் மெமரி ஏரியா அம்சம், அதிகப்படியான எண்களை சேமித்து வைத்து, பல்வேறு கால்குலேட்டிங் செஷன்களில் பயன்படுத்த முடியும்.

ஆப்பிள் 2018 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதியை டெவலப்பர்களுக்கு அறிவித்தது. புதிய ஏஆர் கிட் 2 மல்டிமீடியா இன்டராக்ஷன்களை தனித்துவம் மிக்கதாகவும், சுவாரஸ்யமாகவும் மாற்றப்பட்டுள்ளது. இத்துடன் மெஷர் எனும் புதிய செயலி கேமராவில் பொருட்களின் அளவுகளை கண்டறிய வழி செய்கிறது.
இத்துடன் அடோப் கிரியேட்டிவ் கிளவுட் மற்றும் ஐஓஎஸ் தளங்களில் டெவலப்பர்களுக்கு ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி எடிட்டிங்-இல் சிறப்பான அனுபவத்தை பெற முடியும். இந்த ஆண்டு டெவலப்பர் நிகழ்வில் ஹார்டுவேர் சார்ந்த எவ்வித அறிவிப்புகள் இன்றி முழுமையான மென்பொருள் விழாவாக அமைந்தது.
2018 ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வில் ஐஓஎஸ் 12 இயங்குதளத்துடன் வாட்ச் ஓஎஸ் 5, டிவி ஓஎஸ் 5 மற்றும் மேக் ஓஎஸ் மோஜேவ் உள்ளிட்ட இயங்குதளங்களும் அறிவிக்கப்பட்டன. இத்துடன் சிரி வாய்ஸ் அசிஸ்டன்ட் அதிகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் சுமார் 1000 கோடி ரிக்வஸ்ட்களை சிரி பெறுவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
கம்யூடெக்ஸ் 2018 நிகழ்வில் குவால்காம் நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்னாப்டிராகன் 850 பிராசஸரை அறிமுகம் செய்துள்ளது. #Windows10 #Snapdragon850
தைபே:
தாய்வான் நாட்டு தலைநகரில் நடைபெறும் கம்ப்யூடெக்ஸ் 2018 நிகழ்வில் குவால்காம் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 850 மொபைல் சிப்செட்-ஐ அறிமுகம் செய்தது. விண்டோஸ் 10 சாதனங்களுக்கான உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய பிராசஸர் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என குவால்காம் தெரிவித்துள்ளது.
10என்எம் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் ஸ்னாப்டிராகன் 850 சிப்செட் க்ரியோ 385 சிபுயு மற்றும் 8 கோர்களையும் அதிகபட்சம் 2.95 ஜிகாஹெர்ட்ஸ் கிளாக் வேகம் கொண்டிருக்கிறது. இந்த சிப்செட் செயல்திறன் வேகத்தை 30 சதவிகிதம் வரை அதிகரித்தும், பேட்டரி திறனை 20 சசதவிகிதம் வரை அதிகரித்தும், 20 சதவிகித வேகமான ஜிகாபிட் எல்டிஇ வேகம் வழங்குகிறது.
புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 850 சிப்செட் அதிக ஃபிடிலிட்டி பில்ட்-இன் ஆடியோ, விர்ச்சுவல் சரவுன்டு சவுன்டு, aptX ஹெச்டி சப்போர்ட் கொண்டுள்ளது. இத்துடன் அல்ட்ரா ஹெச்டி தரத்தில் அதிக துல்லியமான தரவுகளை பிளேபேக் செய்யவும், 4K வீடியோ பதிவு செய்யும் வசதி உள்ளிட்டவற்றை வழங்குகிறது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லெர்னிங் தொழில்நுட்பங்களுக்கு பெரும்பாலான நிறுவனங்கள் முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், குவால்காம் தனது புதிய பிராசஸரில் இதற்கான வசதியை வழங்குகிறது. இத்துடன் மைக்ரோசாஃப்ட் மெஷின் லெர்னிங் எஸ்டிகே சேவையை பயன்படுத்த டெவலப்பர்களுக்கு வழி செய்கிறது.
ஸ்னாப்டிராகன் 850 பிராசஸரில் குவால்காம் நிறுவனம் ஸ்மார்ட்போன் உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு புதிய அமைப்புகள் மூலம் மெல்லிய மற்றும் அதிநவீன வடிவமைப்புகளுக்கு வழி செய்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 850 சிப்செட் கொண்டு இயங்கும் விண்டோஸ் 10 சாதனங்கள் வரும் மாதங்களில் சந்தையில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெச்பி, அசுஸ் மற்றும் இதர நிறுவனங்கள் முதற்கட்ட ஆல்வேஸ் கனெக்ட்டெட் கணினிகளை வெளியிட்ட நிலையில், குவால்காம் ஸ்னாப்டிராகன் 850 கொண்டு வெளியாகும் சாதனங்களை எந்த நிறுவனங்கள் வெளியிடும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.






