என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஜியோபாரத் B1 சீரிசின் கீழ் பட்டியலிடப்பட்டு உள்ளது.
    • புதிய ஃபீச்சர் போன் மாடலில் பெரிய டிஸ்ப்ளே, ஜியோபே செயலிக்கான சப்போர்ட் உள்ளது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் ஜியோபாரத் B1 சீரிஸ் ஃபீச்சர் போன் மாடலினை அறிமுகம் செய்தது. புதிய ஃபீச்சர் போன் ஜியோபாரத் V2 மற்றும் K1 கார்பன் மாடல்கள் வரிசையில் இணைந்துள்ளது. இந்த ஃபீச்சர் போன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஜியோபாரத் B1 சீரிசின் கீழ் பட்டியலிடப்பட்டு உள்ளது.

    அதன்படி இதே சீரிசில் மேலும் சில மாடல்கள் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்த ஃபீச்சர் போன் மாடலில் பெரிய டிஸ்ப்ளே, ஜியோபே செயலிக்கான சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை ஜியோபாரத் B1 மாடலில் 2.4 இன்ச் டிஸ்ப்ளே, மியூசிக் / வீடியோக்களை இயக்கும் வசதி, ஜியோசினிமா, ஜியோ சாவன் உள்ளிட்ட செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு உள்ளது. ஜியோ சாவன் செயலியின் மூலம் அதிகபட்சம் 8 கோடிக்கும் அதிகமான பாடல்களை கேட்க முடியும். இத்துடன் பில்ட்-இன் எஃப்.எம். ரேடியோ, 23 மொழிகளுக்கான வசதி வழங்கப்பட்டு உள்ளது.

     

    இந்த ஃபீச்சர் போன் மாடலில் ஜியோபே செயலி கொண்டு யு.பி.ஐ. பேமண்ட்களை மேற்கொள்ள முடியும். இத்துடன் கேமரா மூலம் கியூ.ஆர். பேமண்ட்களை மேற்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஜியோபாரத் B1 மாடலில் பின்புறம் கேமரா சென்சார் மற்றும் டார்ச் வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனில் 2000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஜியோபாரத் B1 மாடல் பிளாக் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,299 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளம் மற்றும் ஜியோ ஸ்டோர்களில் நடைபெறுகிறது. ஜியோபாரத் B1 மாடலில் புதிய மற்றும் பழைய ஜியோ சிம்களை பயன்படுத்த முடியும். ஜியோபாரத் மொபைலின் அனைத்து பலன்களையும் பெற பயனர்கள் ரூ. 123 அல்லது அதற்கும் அதிக தொகை செலுத்தி ரிசார்ஜ் செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

    • பிக்சல் 8a ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்.
    • வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 8 ஆயிரம் வரை தள்ளுபடி.

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் தான் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டன. பிக்சல் மற்றும் பிக்சல் 8 ப்ரோ என இரண்டு மாடல்கள் பிக்சல் 8 சீரிசில் இடம்பெற்று இருக்கின்றன. வரும் மாதங்களில் பிக்சல் 8a ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்த நிலையில், பிக்சல் 8 சீரிஸ் மாடல்களின் இந்திய விற்பனை துவங்கி இருக்கிறது. இந்திய சந்தையில் பிக்சல் 8 விலை ரூ. 75 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 82 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிக்சல் 8 ப்ரோ மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 06 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    கூகுள் பிக்சல் 8 மாடல் பயனர்கள் ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்சிஸ் மற்றும் கோடக் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 8 ஆயிரம் வரையிலான தள்ளுபடி பெற முடியும். இத்துடன் பிக்சல் 8 ப்ரோ வாங்கும் போது ரூ. 9 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிக்சல் 8 சீரிஸ் வாங்குவோர் கூகுள் பிக்சல் வாட்ச் 2 மாடலை ரூ. 19 ஆயரத்து 990 என்றும் கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடலை ரூ. 8 ஆயிரத்து 990 விலையில் வாங்கிட முடியும். 

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகிறது.
    • ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் ஏற்கனவே பலமுறை வெளியாகி இருக்கின்றன.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஓபன் எனும் பெயரில் அறிமுகமாகும் என்று தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் CAD ரெண்டர்களும் வெளியாகி இருக்கின்றன. இந்த மாதமே அறிமுகமாகும் என்று கூறப்படும் நிலையில், ஒன்பிளஸ் ஓபன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பிரஸ் ரெண்டர்கள் வெளியாகி உள்ளன.

    ஒன்பிளஸ் ஓபன் மாடலில் 31 பாகங்கள் குறைவாக இருப்பதால், இதன் எடை குறைவாக இருக்கும் என்றும் இது ஒப்போ ஃபைண்ட் N2 மாடலை விட 37 சதவீம் சிறியதாக இருக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனரும் ஏற்கனவே தெரிவித்து விட்டார். மேலும் ஒப்போ ஃபைண்ட் N3 மற்றும் ஒன்பிளஸ் ஓபன் மாடல்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான டிசைன் கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

     

    இந்த ஸ்மார்ட்போனில் 48MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 64MP டெலிஃபோட்டோ கேமரா, ஹேசில்பிலாட் பிராண்டிங் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 7.8 இன்ச் மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளே, 6.31 இன்ச் வெளிப்புற OLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 16 ஜி.பி. வரையிலான ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் ஓபன் மாடல் அக்டோபர் 19-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதன் விலை 1699 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 41 ஆயிரத்து 405 வரை நிர்ணயம் செய்யப்படலாம். இது சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃபோல்டு 5 மாடலை விட சற்றே குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    Photo Courtesy: winfuture

    • புதிய பிளே ஸ்டேஷன் 5 பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.
    • ஏற்கனவே விற்பனை செய்யப்படும் பி.எஸ்.5 கன்சோலை விட மெல்லியதாக இருக்கிறது.

    சோனி நிறுவனம் முற்றிலும் புதிய பிளே ஸ்டேஷன் 5 சாதனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 1 டி.பி. வரை பில்ட்-இன் ஸ்டோரேஜ் மற்றும் கழற்றக்கூடிய டிஸ்க் டிரைவ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த சாதனம் பி.எஸ். 5 ஸ்லிம் என்று அழைக்கப்படுகிறது.

    இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் பி.எஸ்.5 கன்சோலை விட மெல்லியதாக இருக்கிறது. கேமர்களின் மாறி வரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், புதிய பிளே ஸ்டேஷன் 5 பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்டு இருப்பதாக சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

     

    என்ன ஸ்பெஷல்?

    புதிய பி.எஸ். 5 ஸ்லிம் அதன் முந்தைய மாடலை விட 30 சதவீதம் சிறியதாகவும், 24 சதவீதம் வரை எடை குறைவாகவும் இருக்கிறது. டிஸ்க் டிரைவை பொருத்துவதற்கு சோனி நிறுவனம் இதன் பக்கவாட்டில் இடம் கொடுத்துள்ளது. இதனை விரும்பாதவர்கள், அதனை கழற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இதனை கழற்றினால், சைடு பேனலை பொருத்திக் கொள்ள வேண்டும்.

    பி.எஸ். 5 டிஜிட்டல் எடிஷன் வாங்குவோர், எதிர்காலத்தில் புளூ-ரே டிஸ்க் டிரைவை மட்டும் தனியாக வாங்கிக் கொள்ள முடியும். புதிய மாடலின் ஒவ்வொரு பக்கத்திலும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட்கள் வழங்கப்படுகின்றன.

    புதிய பி.எஸ். 5 ஸ்லிம் (டிரைவ் உடன்) மாடலின் விலை 499.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 41 ஆயிரத்து 600 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பி.எஸ். 5 டிஜிட்டல் எடிஷன் விலை 449.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 37 ஆயிரத்து 440 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அமெரிக்க சந்தைக்கான விலை ஆகும். அமெரிக்காவில் இதன் விற்பனை அடுத்த மாதம் துவங்குகிறது. இதைத் தொடர்ந்து உலகின் மற்ற நாடுகளிலும் இதன் விற்பனை துவங்க இருக்கிறது.

    • விவோ நிறுவனம் விவோ எக்ஸ் ஃபோல்டு 2 மாடலை அறிமுகம் செய்தது.
    • ரோலபில் ஸ்மார்ட்போன் பிரிவில் விவோ களமிறங்குவதாக தகவல்.

    விவோ நிறுவனம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விவோ எக்ஸ் ஃபோல்டு மாடலை அறிமுகம் செய்து மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் களமிறங்கியது. இதை தொடர்ந்து விவோ நிறுவனம் விவோ எக்ஸ் ஃபோல்டு 2 மாடலை அறிமுகம் செய்தது. இதில் மேம்பட்ட கேமரா மற்றும் புதிய பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து விவோ நிறுவனம் ரோலபில் ஸ்மார்ட்போன் பிரிவில் களமிறங்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விவோ மற்றும் டிரான்சிஷன் ஹோல்டிங்ஸ் நிறுவனங்கள் இணைந்து இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் விவோ நிறுவனத்தின் முதல் ரோலபில் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    சாம்சங் நிறுவனமும் ரோலபில் போனினை உருவாக்கி வருவதாக கூறப்படும் நிலையில், விவோ மற்றும் டிரான்சிஷன் நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் ரோலபில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரோலபில் போனில் உள்ள ஸ்கிரீன் ஒருபுறமாக நீண்டு மீண்டும் சுருண்டு கொள்ளும் என்று தெரிகிறது.

    ஐடெல், டெக்னோ மற்றும் இன்ஃபினிக்ஸ் போன்ற பிராண்டுகளை வைத்திருக்கும் டிரான்சிஷன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஃபேண்டம் அல்டிமேட் ப்ரோடோடைப் மாடலை காட்சிப்படுத்தியது. இந்த மாடல் 6.55 இன்ச் டிஸ்ப்ளேவில் இருந்து 7.11 இன்ச் வரை நீண்டது. இதன் டிஸ்ப்ளே 1596x2296 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது.

    • சியோமி நிறுவனம் ஸ்மார்ட் பன்டில் பெயரில் சிறப்பு சலுகை வழங்குகிறது.
    • சிறப்பு சலுகை ப்ளிப்கார்ட், அமேசான் வலைதளங்களிலும் வழங்கப்படுகிறது.

    சியோமி நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்திய சந்தையில் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. புதிய சலுகையின் கீழ் ரூ. 33 ஆயிரத்து 696 மதிப்புள்ள சாதனங்களை வங்கி சலுகைகள் சேர்த்து ரூ. 19 ஆயிரத்து 999 விலையில் வாங்கிக் கொள்ள முடியும். சியோமி நிறுவனத்தின் நான்கு சாதனங்களை பயனர்கள் மிக குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம்.

    சியோமி ஸ்மார்ட் டெக் பன்டிலில் வழங்கப்படும் சாதனங்கள்:

    ரெட்மி நோட் 12 5ஜி 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் மிஸ்டிக் புளூ, மேட் பிளாக், சன்ரைஸ் கோல்டு மற்றும் ஃபிராஸ்டெட் கிரீன்

    ரெட்மி வாட்ச் 3 ஆக்டிவ் சார்கோல் பிளாக், பிளாட்டினம் கிரே

    ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் பேஸ் பிளாக், ஏர் வைட்

    10000 எம்.ஏ.ஹெச். எம்.ஐ. பாக்கெட் பவர் பேங்க் ப்ரோ பிளாக்

    சியோமி அறிவித்து இருக்கும் நான்கு சாதனங்களின் விலை ரூ. 33 ஆயிரத்து 696 ஆகும். ஆனால் குறுகிய காலத்திற்கு இவற்றை ரூ. 21 ஆயிரத்து 999 விலையிலேயே வாங்கிட முடியும். இத்துடன் ஐ.சி.ஐ.சி.ஐ. கிரெடிட் கார்டுகள், ஐ.சி.ஐ.சி.ஐ. நெட் பேங்கிங் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரத்து 250 உடனடி தள்ளுபடி பெற முடியும். அதன்படி பயனர்கள் இவற்றை ரூ. 19 ஆயிரம் பட்ஜெட்டிலேயே வாங்கிட முடியும்.

    ஸ்மார்ட் பன்டில் தவிர பயனர்கள் ரெட்மி நோட் 12 5ஜி மாடலை ரூ. 13 ஆயிரத்து 749 விலையில் வாங்கிட முடியும். சிறப்பு சலுகை வழங்கும் விற்பனை தற்போது Mi வலைதளம், அமேசான், ஃப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற்று வருகிறது.

    • லாக்டு சாட்களுக்கு தனியே ஒரு பாஸ்வேர்டு செட் செய்து கொள்ளலாம்.
    • சாட் லாக் தனிப்பட்ட சாட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது.

    வாட்ஸ்அப் செயலியில் கடந்த மே மாதம் "சாட் லாக்" எனும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. பெயருக்கு ஏற்றார் போல் இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தங்களின் சாட்களை பாதுகாப்பான ஃபோல்டரில் தனியே வைத்துக் கொள்ள முடியும். தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய "சீக்ரெட் கோட்" அம்சம் உங்களின் லாக்டு சாட்-களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் உருவாக்கப்பட்டு இருக்கும் சீக்ரெட் கோட் அம்சம் கொண்டு உங்களின் லாக்டு சாட்களுக்கு தனியே ஒரு பாஸ்வேர்டு செட் செய்து கொள்ளலாம். இந்த அம்சம் கொண்டு லாக்டு சாட்களை சர்ச் பாரில் டைப் செய்து தேட முடியும். இதனால் சீக்ரெட் கோட்-ஐ லாக்டு சாட்-இல் டைப் செய்து கூடுதலாக இணைக்கப்பட்ட சாதனங்களிலும் தேட முடியும்.




     


    லாக்டு சாட்களுக்கு பாஸ்வேர்டு-ஆக எழுத்துக்கள் மட்டுமின்றி எமோஜிக்களையும் பயன்படுத்தலாம். புதிய அம்சம் கொண்டு லாக்டு சாட்களுக்கு பிரத்யேக பாஸ்வேர்டு உருவாக்கிக் கொள்ளலாம். ஏற்கனவே வாட்ஸ்அப்-இல் உள்ள ஆப் லாக் அம்சம் மூலம் கைரேகை, ஃபேஸ் அன்லாக் அல்லது பின் மூலம் பாதுகாக்கும் வசதி வழங்கப்படுகிறது.

    சாட் லாக் தனிப்பட்ட சாட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது, கஸ்டம் பாஸ்வேர்டு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதோடு எளிதில் தேடவும் வழிவகை செய்கிறது. சாட் லாக் அம்சம் அறிவிக்கப்பட்ட போதே, இது போன்ற அம்சத்தை வழங்குவதாக வாட்ஸ்அப் அறிவித்து இருந்தது.

    Photo Courtesy: WaBetaInfo

    • ஹெக்சா ஸ்கொயர் டிரேட்மார்க் பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருந்தது.
    • கேலக்ஸி S சீரிஸ் ஃபிளாக்ஷிப் மாடல்களில் 432MP சென்சார் வழங்கப்படலாம்.

    சாம்சங் நிறுவனத்தின் எதிர்கால ஸ்மார்ட்போன் மாடல்களில் அதிகபட்சம் 432MP கேமரா சென்சார் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதுவரை அறிமுகமான சாம்சங் ஸ்மார்ட்போன்களில் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் அதிகபட்சம் 200MP கேமரா சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் இரண்டு 432MP சென்சார்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இவை ISOCELL HW1 மற்றும் HW2 பிராண்டிங் கொண்டிருக்கின்றன. இவை இரண்டும் 1-இன்ச் சென்சார்கள் ஆகும். 108MP மற்றும் 200MP சென்சார்கள் வரிசையில், சாம்சங் செமிகண்டக்டர்ஸ் நிறுவனம் சற்றே அளவில் பெரிய சென்சார்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

    டிப்ஸ்டர் ரெவக்னஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் ISOCELL HW1 மற்றும் HW2 சென்சார்கள் இரண்டும் 432MP ரெசல்யூஷன் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் ஹெக்சா ஸ்கொயர் டிரேட்மார்க் பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருந்தது. இவற்றில் 36:1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம் வழங்கப்படலாம்.

    புதிய 432MP சென்சாரின் உற்பத்தி அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் துவங்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி 2025 அல்லது 2026-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் கேலக்ஸி S சீரிஸ் ஃபிளாக்ஷிப் மாடல்களில் 432MP சென்சார் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். 

    • ஏர்டெல் நிறுவனம் இரண்டு பிரத்யேக சலுகைகளை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • பயனர்கள் டேட்டா கட்டுப்பாடின்றி கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளிக்க முடியும்.

    ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் துவங்கிவிட்டது. நாடு முழுக்க கிரிக்கெட் ஆர்வம் சூடுபிடித்துள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனம் பயனர் தேவைகளை கருத்தில் கொண்டு இரண்டு பிரத்யேக சலுகைகளை அறிமுகம் செய்து இருக்கிறது. இவை பிரீபெயிட் பயனர்களுக்காக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் அதிவேக இணைய வசதி வழங்கப்படுகிறது.

    புதிய சலுகைகள் விலை ரூ. 99 மற்றும் ரூ. 49 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. ஏர்டெல் ரூ. 99 சலுகையில் இரண்டு நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் எவ்வித டேட்டா கட்டுப்பாடுகளும் இன்றி கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளிக்க முடியும். ரூ. 49 சலுகையில் 6 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

     

    இரு சலுகைகளிலும் டேட்டா தவிர வேறு எந்த பலன்களும் வழங்கப்படவில்லை. ஏர்டெல் ரூ. 49 சலுகையின் வேலிடிட்டி ஒரு நாள் ஆகும்.

    மொபைல் டேட்டா சலுகைகள் மட்டுமின்றி, ஏர்டெல் டி.டி.ஹெச். ஸ்டார் நெட்வொர்க் உடன் கூட்டணி அமைத்து கிரிக்கெட் பயனர்களுக்காக பிரத்யேக சலுகைகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் எளிதில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பிரிவு சேனல்களை தேர்வு செய்து கொள்ள முடியும். 

    • பிக்சல் 8 ப்ரோ மாடலில் பாலிஷ்டு அலுமினியம் ஃபிரேம், மேட் பேக் பிளாக் கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது.
    • பிக்சல் 8 ப்ரோ மாடலில் 5050 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பிக்சல் 8 மாடலில் 6.2 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் 8 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் குவாட் HD+ OLED டிஸ்ப்ளே, 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு உள்ளது.

    பிக்சல் 8 ப்ரோ மாடலில் பாலிஷ்டு அலுமினியம் ஃபிரேம், மேட் பேக் பிளாக் கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது. பிக்சல் 8 மாடலில் மெட்டல் ஃபினிஷ் மற்றும் பாலிஷ்டு கிளாஸ் பேக் உள்ளது. இரு மாடல்களிலும் டென்சார் G3 பிராசஸர், டைட்டன் M2 செக்யுரிட்டி சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 14 ஒ.எஸ். உள்ளது.

     

    இரு மாடல்களிலும் 50MP பிரைமரி கேமரா, பிக்சல் 8 மாடலில் 12MP அல்ட்ரா வைடு லென்ஸ், 48MP அல்ட்ரா வைடு லென்ஸ் உள்ளது. பிக்சல் 8 ப்ரோ மாடலில் 48MP டெலிஃபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. பிக்சல் 8 ஸ்மார்ட்போனில் 4575 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. பிக்சல் 8 ப்ரோ மாடலில் 5050 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    இந்திய சந்தையில் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் அப்சிடியன், ஹசெல் மற்றும் ரோஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 75 ஆயிரத்து 999 என்றும் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 82 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிக்சல் 8 ப்ரோ மாடல் அப்சிடியன் மற்றும் பே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    கூகுள் பிக்சல் 8 ப்ரோ மாடலின் 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 06 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • சாம்சங் கேலக்ஸி S23 FE மாடல் நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
    • கேலக்ஸி S23 FE மாடல் 50MP பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி S23 FE ஸ்மார்ட்போனினை ஒருவழியாக அறிமுகம் செய்தது. இதில் 6.4 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் அல்லது எக்சைனோஸ் 2200 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5.1 வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனிற்கு நான்கு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட், ஐந்து ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக சாம்சங் அறிவித்து இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 8MP டெலிபோட்டோ கேமரா, 10MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    சாம்சங் கேலக்ஸி S23 FE அம்சங்கள்:

    6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி ஒ டைனமிக் AMOLED டிஸ்ப்ளே

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

    ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர்

    அட்ரினோ 730 GPU

    ஆக்டா கோர் சாம்சங் எக்சைனோஸ் 2200 பிராசஸர்

    சாம்சங் எக்ஸ்-க்லிப்ஸ் 920 GPU

    8 ஜி.பி. ரேம்

    128 ஜிபி., 256 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யு.ஐ. 5

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS

    12MP அல்ட்ரா வைடு சென்சார்

    8MP டெலிபோட்டோ கேமரா, OIS

    10MP செல்ஃபி கேமரா

    வாட்டர் ரெசிஸ்டண்ட் IP68

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    5ஜி, 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.3

    4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    சாம்சங் கேலக்ஸி S23 FE மாடல் மின்ட், கிரீம், கிராஃபைட் மற்றும் பர்பில நிறங்களில் கிடைக்கிறது.

    • பிக்சல் 7a மாடல் கடந்த மே மாதம் நடைபெற்ற கூகுள் I/O நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • கூகுள் பிக்சல் 7a மாடல் மூன்று நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7a புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய நிற வேரியண்ட் இந்திய சந்தையில் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது. அதன்படி விரைவில் துவங்க இருக்கும் பிக் பில்லியன் டே சேல்-இல் பிக்சல் 7a புதிய நிற வேரியண்ட் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் பிக்சல் 7a மாடல் கடந்த மே மாதம் நடைபெற்ற கூகுள் I/O நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

    தற்போது கூகுள் பிக்சல் 7a மாடல் சீ, சார்கோல் மற்றும் ஸ்னோ என மூன்று நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இவற்றுடன் கோரல் நிற வேரியண்ட் விரைவில் இணைய இருக்கிறது. கோரல் நிற வேரியண்ட் இந்தியா தவிர மற்ற நாடுகளில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நிற வேரியண்டிற்கான டீசர் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

     

    இந்திய சந்தையில் கூகுள் பிக்சல் 7a மாடல் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 43 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல்-இல் இதன் விலை சற்று குறைக்கப்படவோ அல்லது அதிக சலுகைகள் வழங்கப்படவோ வாய்ப்புகள் உண்டு.

    அக்டோபர் 5-ம் தேதி கூகுள் பிக்சல் மாடல்களுக்கான சலுகை விவரங்களை ப்ளிப்கார்ட் அறிவிக்க இருக்கிறது. இதுதவிர கூகுள் நிறுவனம் பிக்சல் 8 சீரிஸ் மாடல்களை அக்டோபர் 4-ம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய பிக்சல் 8 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு அக்டோபர் 4-ம் தேதி துவங்குகிறது.

    ×