search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    இந்தியாவில் இந்த பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்.. சூப்பர் டீசர் வெளியிட்ட ஐகூ
    X

    இந்தியாவில் இந்த பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்.. சூப்பர் டீசர் வெளியிட்ட ஐகூ

    • ஐகூ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் வெளியீடு.
    • ஐகூ 12 ஸ்மார்ட்போனில் அதிநவீன பிராசஸர் வழங்கப்படுகிறது.

    ஐகூ நிறுவனத்தின் புதிய ஐகூ 12 ஸ்மார்ட்போன் நவம்பர் 7-ம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அந்த வகையில், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் இது என ஐகூ பிராண்டு தெரிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி, சார்ஜிங் வேகம் பற்றிய தகவல்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. ஐகூ 12 சீன வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், இதன் இந்திய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஐகூ 12 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் E7 AMOLED ஸ்கிரீன், 1.5K ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 24 ஜி.பி. ரேம், 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ், 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 64MP 3x டெலிஃபோட்டோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×